25 மாவட்ட வருவாய் அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி அமைந்து ஓராண்டு முடிவடைந்த நிலையில் பல்வேறு அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றன. நேற்று 37 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், 25 மாவட்ட வருவாய் அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது: ” விழுப்புரம் தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) ஜெயஸ்ரீ நெல்லை […]
Tag: ஆட்சியர்கள்
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலின் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்ட முதல்வரிடம் பொதுமக்கள் பல்வேறு புகார்களை தெரிவித்த நிலையில் சென்னை ஆட்சியர் திடீரென மாற்றப்பட்டார். இதன் தொடர்ச்சியாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு காண மாவட்ட ஆட்சியர்கள் அனைவரும் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று நேரடி ஆய்வு செய்ய […]
சென்னையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் காவல் அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் நடைபெறும் மாநாட்டில் ஆட்சியர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். வளர்ச்சிப் பணிகள் சட்ட ஒழுங்கு உள்ளிட்டவை தொடர்பாக இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டதில் விசேஷம் என்னவென்றால் அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் முதன்முறையாக வனத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர் என்பது கவனிக்கத்தக்க அம்சமாகும்.
சென்னையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் காவல் அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் நடைபெறும் மாநாட்டில் ஆட்சியர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், “மதநல்லிணக்க எதிராகச் செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்”. தமிழ்நாடு நம்பர் 1 ஆக வேண்டும் என்ற என்னுடைய கனவு திட்டத்தை உங்களை நம்பி ஒப்படைக்கிறேன். அதற்காக நீங்கள் நேர்மை அர்ப்பணிப்பு செயல்பட […]
சென்னையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் காவல் அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஆட்சியர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். அதில் பேசிய முதல்வர் ஸ்டாலின் பல்வேறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அதில் நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடன் அலுவலர் செயல்பட வேண்டும். முதலமைச்சரின் பிரிவில் வரும் புகார்களை 100 நாட்களில் தீர்க்க வேண்டும் என ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர், காவல் அதிகாரிகள், சார்பில் மாநாடு நடைபெறுகிறது. தலைமை செயலகத்தில் நடைபெறும் மாநாட்டில் ஆட்சியர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இதில் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக ஆட்சியர்கள் திகழவேண்டும். கொரோனோவை எதிர்கொண்டு வெற்றிகரமாக முற்றுப்புள்ளி வைத்து உள்ளோம் என ஆட்சியர்கள், காவல் அதிகாரிகள் மாநாட்டில் முதலமைச்சர் மு .க ஸ்டாலின் உரையாற்றியுள்ளார். சட்டம் ஒழுங்கு விஷயத்தில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளமாட்டேன். பெண்களுக்கு எதிரான குற்றங்களை அனுமதிக்கக் கூடாது […]
வெளிநாடுகளில் பரவிவரும் ஒமைக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவாமல் தடுக்க மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு காணொலிக் காட்சி மூலமாக நேற்று ஆலோசனை நடத்தினார். இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தனது மரபணுவில் தொடர்ச்சியாக மாற்றங்களை உருவாக்குவதன் மூலமாக புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் தோன்றுகிறது. அதன்படி தற்போது ஒமைக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ் தோன்றியுள்ளது. இந்த வைரஸ் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் […]
தமிழகத்திலும் ஒமைக்ரான் எனும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தின் புதிய வகை ஒமைக்ரான் கொரோனா வைரஸ் இல்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், கொரோனா இல்லை என்று பொதுமக்கள் கவனக்குறைவாக இருக்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார். இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை மேலும் அதிகரிக்க வேண்டும் என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து வங்கக்கடலில் உருவாக்கிய 2 காற்றழுத்த தாழ்வு பகுதி யின் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கியது. கடந்த மாதம் 25ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழையின் மூலம் தற்போது வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இயல்பை விட கூடுதலாக மழை பதிவாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் நீர்நிலைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வழிகின்றன. அதனால் பல மாவட்டங்களில் வெள்ள பாதிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து தமிழகத்தில் […]
தமிழகத்தில் மழைக்கு பிந்தைய நோய் தொற்றுகளை தடுக்க குடிநீரின் தரத்தை உறுதி செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், பருவ மழைக்கு முன்பு மழை பெய்யும் போது, மழைக்கு பின்பு என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது பற்றி ஏற்கனவே சுகாதாரத்துறை சார்பாக அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. மழை நீர் வடிந்த இடங்களில் பிளீச்சிங் பவுடர்கள் மற்றும் கிருமி நாசினி கொண்டு […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி போட தகுதியான நபர்களில், 73 சதவீதம் பேருக்கு, முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் தவணை தடுப்பூசி 35 சதவீதம் நபர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி கிடைத்திடும் வகையில், வாரம்தோறும் ஒரு சிறப்பு தடுப்பூசி முகாமுக்கு பதிலாக, இரண்டு சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதையடுத்து இதுவரை கொரோனா தடுப்பூசி போடாத மக்களின் பட்டியல், தெரு வாரியாகவும், […]
தமிழகத்தில்நரிக்குறவர் மற்றும் பழங்குடியினர் உள்ளிட்ட விழிம்பு நிலை மக்களுக்கு அரசின் சார்பாக அனைத்து உதவிகளையும் முழுமையாக வழங்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர் கிடக்கும் தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் தீபாவளி அன்று நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தை சேர்ந்த 282 நபர்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள், குடும்ப அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டைகள், ஜாதி சான்றிதழ்கள், நலவாரிய அட்டைகள், பயிற்சிக்கான ஆணைகள் மற்றும் வங்கிக் கடன் உதவிகள் ஆகியவற்றை வழங்கினார்.அது […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார்.அதுமட்டுமல்லாமல் மக்கள் தேவைகளை முன்னரே கண்டறிந்து அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் அரசு செய்து வருகிறது. அதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அனைத்து துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் இரண்டு வார காலத்திற்கு இருளர் மற்றும் குறவர் […]
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு உதவுமாறு தமிழ்நாட்டில் எல்லையோர மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் அறிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தற்போது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. முன்னதாக, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கேரளாவில் கனமழை பெய்தது. இந்த மழையால் கேரளாவில் 10- கும் மேற்பட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் கேரளாவில் மீண்டும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் கேரள மாநிலத்துக்கு […]
தமிழகம் கொரோனா பரவலை மற்ற மாநிலங்களை விட மிக விரைவாக கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இதற்கு மிக முக்கியக் காரணமாக தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்படுத்தி தடுப்பூசி முகாம் மூலம் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தியது. தமிழகத்தில் இதுவரை 5,12, 46 , 870 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு ஒரே நாளில் பல லட்ச நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனால் இந்த […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தில் மதம் சார்ந்த கட்டுப்பாடுகளை அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வரை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் பண்டிகை காலங்கள் வர இருப்பதால், விழாக்களை பொதுமக்கள் எளிய முறையில் தங்கள் வீடுகளில் கொண்டாட வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பொது போக்குவரத்தை மக்கள் பயன்படுத்த வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அது மே 23-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத பட்சத்தில், நேற்று முதல்வர் மருத்துவக் குழுவுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தளர்வுகள் இல்லாத […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருவதால், கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அது மே 23-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதில் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. ஆனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறைந்த கொரோனா பாதிப்பு, மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனா பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது ஸ்டாலின் “உங்கள் தொகுதியில் முதல்வர்” என்னும் திட்டத்தை அறிவித்திருந்தார். அது தற்போது செயல்பாட்டிற்கு வந்துள்ளது. தற்போது வரை சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவாரூர் மற்றும் தேனி ஆகிய ஆறு மாவட்டங்களில் இருந்து 549 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அந்த மனுக்களின் மீது முழுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டதை மக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக, கடந்த செவ்வாய்க்கிழமை 10 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். அது […]
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக ஆட்சி அமைத்தது. அப்போதிலிருந்தே பல்வேறு பதவிகளுக்கு உரிய நபர்களை நியமனம் செய்து வருகிறது. முதலில் தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக இறையன்பு நியமனம் செய்யப்பட்டார். அதன் பிறகு சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த பிரகாஷ் திறன் மேம்பாட்டு கழக இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக மாநகராட்சி ஆணையர் பதவியில் சுகந்தி சிங் பேடி நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் புதிய ஆட்சியர்களை […]
எந்தெந்த தொழில்களை படிப்படியாக தொடங்கலாம் என அறிக்கை அனுப்புங்கள் என மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கூறியதாவது, ” அரசின் நிவாரண உதவிகள் கிடைக்காமல் விடுபட்டவர்களை கண்டறிந்து வழங்குங்கள். நோய்த்தடுப்பு பகுதிகளில் நகரும் கழிப்பறை வசதிகளை மேற்கொள்ள வேண்டும். விளைபொருட்களை சந்தைக்கு கொண்டு செல்ல விவசாயிகளுக்கு தடை இருக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளார். 100 நாள் வேலைத்திட்டம், சமூக விலகலுடன் முகக் கவசம் அணிந்து நடைபெறுவதை உறுதி […]