மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவ நலத்துறை சார்பில் சுகாதார பேரவை கூட்டம் நடைபெற்றுள்ளது. தேனி மாவட்டம் மருத்துவ நலத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் சுகாதார பேரவை கூட்டம் பழனிசெட்டிபட்டியில் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமை தாங்கியுள்ளார். அப்போது ஆட்சியர் பேசும்போது, மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தியதால் 80% பிரசவங்கள் அரசு மருத்துவமனையிலே நடப்பதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து அனைத்து கிராமங்களிலும் மக்கள் பிரதிநிதிகளை […]
Tag: ஆட்சியர் வேண்டுகோள்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதன்படி சேலம் மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகள், அணைகள், கால்வாய்கள்,குளங்கள் மற்றும் ஏரிகளில் அதிக அளவு நீர் வரத்து ஏற்பட்ட முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. எனவே பாதுகாப்பு கருதி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து ஏற்காடு வட்டத்தில் கடந்த 10 நாட்களாக பெய்து வரும் கனமழை […]
மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ள நிலையில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளதவர்கள் தானாக முன்வந்து செலுத்திகொள்ள வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை மாபெரும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. இந்த தடுப்பூசி முகாம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற இருக்கும் நிலையில் தடுப்பூசி போட்டுகொள்ளாத பொதுமக்கள் தானாகவே முன்வந்து தடுப்பூசி செலுத்திகொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுவரை மாவட்டத்தில் 8,27,398 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இந்நிலையில் இரண்டாம் தவணை தடுப்பூசி […]