பிரபல நடிகையுடன் கமல் நடனமாடிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உலக நாயகனாக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றியடைந்தது. இவர் நேற்று முன்தினம் தனது 68 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். […]
Tag: ஆட்டம்
மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இசை வெளியீட்டுவிழா சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. இவற்றில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், பிரபு, நாசர், சரத்குமார், ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, ஷோபிதா, அதிதிராவ் உட்பட பலர் பங்கேற்றனர். இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் உட்பட பல்வேறு திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் ஏ.ஆர் ரஹ்மான் இசை கச்சேரி நடந்தது. அப்போது ஆயுத எழுத்து திரைப்படத்தில் இடம் […]
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் உலகளாவிய நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த போரால் பல ஆண்டுகளுக்கு நீட்டிக்க கூடிய உணவு பொருட்களில் நெருக்கடி ஏற்படும் என்று ஐநா சபை எச்சரித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் உக்ரைன் துறைமுகங்களில் இருந்து சமையல், எண்ணெய் மாவு பொருட்கள் ஏற்றுமதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்தப் போரின் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றது. இந்நிலையில் உக்ரேன் கார்கீவில் உள்ள பள்ளியில் இறுதியாண்டு கல்வியை முடித்த மாணவர்கள் பட்டம் […]
15வது ஐபிஎல் சீசன் போட்டி வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. அதில் லக்னோவின் இளம் அதிரடி ஆட்டக்காரர் ஆயுஷ் பதோனி, தன்னுடைய ஆட்டத்தால் ரசிகர்களை கவர்ந்துள்ளார். முதல் ஆட்டத்தில் 54 ரன்கள் குவித்த போது கேப்டன் கே.எல்.ராகுல் அவரை “Baby AB” என்று குறிப்பிட்டார். அதன்பின் சென்னை, ஹைதராபாத், டெல்லி என அனைத்து ஆட்டங்களிலும் அதிரடி காட்டி அணியின் மிக முக்கிய வீரராக உருவெடுத்துள்ளார். இப்போது இவருக்கு இந்திய t20 அணியில் வாய்ப்பு அளிக்க வேண்டுமா என்ற விவாதம் […]
நியூசிலாந்தில் போராட்டக்காரர்களை கலைக்க பயங்கர சத்தத்துடன் பாடல்கள் ஒலிக்கச் செய்த நிலையில், அதற்கு நடனமாடி காவல்துறையினரை வெறுப்பேற்றியிருக்கிறார்கள். நியூஸிலாந்தில் தடுப்பூசியை எதிர்க்கும் சிலர் நாடாளுமன்றத்திற்கு செல்லக்கூடிய சாலைகளுக்கு இடையில் வாகனங்களை நிறுத்திவிட்டு கூடாரங்கள் அமைத்து சுமார் 6 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். பலத்த மழையிலும் விடாமல் போராட்டம் நடத்துகிறார்கள். எனவே, காவல்துறையினர் அவர்களை கலைப்பதற்காக அதிகமான சத்தத்துடன் பாடல்களை ஒலிக்கச் செய்திருக்கிறார்கள். இதனால், சற்றும் பின் வாங்காத போராட்டக்காரர்கள் அந்த பாடலுக்கு நடனம் ஆடி […]
நடிகை தமன்னா புதிய பாடல் ஒன்றுக்கு செம ஆட்டம் போட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் தற்போது Bhola Shankar, F3, Gurthunda Seethakalam ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் வெளியான பாடல் ஒன்று நடிகை தமன்னா பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவரின் இந்த வீடியோ இணையத்தில் […]
பிக்பாஸ் பிரபலம் நடிகை யாஷிகா ஆனந்த் நீண்ட நாட்களுக்கு பிறகு குத்தாட்டம் போடும் வீடியோ சமூக வலைதளங்களில் இன்று வைரல் ஆகியுள்ளது. புஷ்பா படத்தில் இடம்பெற்ற சாமி… சாமி பாடலுக்கு பாவாடை தாவணியில் ஆடும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். தனது தோழியுடன் காரில் சென்ற போது நடந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர், 3 மாத ஓய்வுக்கு பின்னர் அதிலிருந்து மீண்டும் ஆக்டிவ் ஆகி உள்ளதை இந்த நடன வீடியோ மூலம் அவர் வெளிப்படுத்தியுள்ளார். இந்த வீடியோவை […]
சமீபகாலமாக அடிமட்ட பொறுப்பில் இருக்கும் திமுக நிர்வாகிகள் சிலர் பொதுமக்களை தாக்கிய கைதாவது, சாலையில் வாகனத்தை நிறுத்தி சண்டை போடுவது, குத்தாட்டம் போடுவது என்று செய்திகளில் சிக்குவது திமுகவுக்கும் முதல்வர் கட்டமைக்கும் இமேஜிக்கும் சிக்கலை உண்டாக்கும் என்கிற கருத்து அரசியல் விமர்சகர்களால் வைக்கப்படுகிறது. இன்று சமூக வலைத்தளங்களில் பரவும் ஒரு காணொளி கேலியுடன் விமர்சிக்கப்படுகிறது. அதில் கார் கதவைத் திறக்கிறார் கரை வேட்டி கட்டிய திமுக பிரமுகர். வயது 60க்கு மேல் இருக்கும். கார் கதவைத் திறக்கும்போதிறக்கும்போதே […]
பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்கள் ஒன்றாக ஆட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த சீரியலில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இடம்பெற்றுள்ள பாக்யா எனும் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்பட்டது. இந்நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் பாக்யா, ராதிகா, செல்வி, கோபி ஆகியோர் ஒன்றாக ஆட்டம் போட்ட […]
நாம் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகள் வீட்டிலுள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு அதுவும் நடந்து கொள்ளும். நாம் சந்தோஷமாக இருந்தால் அதுவும் சந்தோஷமாக இருக்கும், நாம் சோகமாக இருக்கும்போது நம்முடன் சேர்ந்து அதுவும் சோகமாக இருக்கும். செல்லப்பிராணிகளை வளர்க்கும் முதலாளிகள் கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி போன்ற விளையாட்டுகளை டிவியில் பார்க்கும்போது நமக்கு பிடித்தவர் கோல் அடித்து விட்டாளோ அல்லது நமக்கு பிடித்த அணி வென்று விட்டாளோ மகிழ்ச்சியில் துள்ளி குதிப்போம். அதைப் பார்க்கும் செல்லப்பிராணிகளும் அதேபோன்று நடனமாடி சந்தோசத்தை […]
மழை மற்றும் மோசமான சூழ்நிலை காரணமாக இந்தியா நியூசிலாந்து மோதும் உலக டெஸ்ட் சாம்பியன் இறுதிப் போட்டி தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தம்டனில் உள்ள ரோஸ் பவுல் ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் களம் காண்கின்றது. சவுத்தம்டனில் போட்டி நடக்கும் ஐந்து நாட்களுக்கு மழை குறுக்கீடு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்தது. முதல் நாளில் மழை கொஞ்சம் அதிகமாக […]
மகா சிவராத்திரி அன்று ஈஷா யோகா மையத்தில் பிரபல நடிகைகள் நடனம் ஆடி கொண்டாடியுள்ளனர். கோவையில் உள்ள ஈஷா யோக மையத்தில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டும் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது. உலகம் முழுவதும் இருக்கும் பல லட்சக்கணக்கான மக்கள் மகா சிவராத்திரியன்று இங்கு வருகை புரிந்து ஆதியோகி சிலை முன்பு வழிபட்டு செல்வர். ஆனால் இந்த வருடம் கொரோனா பெருந்தொற்று காரணமாக குறிப்பிட்ட […]
கொரோனாவில் இருந்து குணமடைந்த குடும்பம் மருத்துவமனையில் உற்சாக ஆட்டம் போட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டு விட்டால், எப்படிப்பட்ட மனிதர்களும் சிறிது நேரம் கதிகலங்கி போகிறார்கள். அதேசமயத்தில் சிகிச்சைக்குப் பின்னர் கொரோனாவில் இருந்து குணமடைகிற நேரத்தில், அவர்களுக்கு அது உற்சாக கொண்டாட்டம் ஆக மாறி விடுகின்றது. அவ்வகையில் மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு சம்பவம் அரங்கேறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அம்மாநிலத்தில் கொரோனா பாதிப்பு ஒரே குடும்பத்தினர் […]