Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் ஆணவக்கொலை…. வீடுகளுக்கு தீ வைப்பு… காதல் பிரச்சனையில் 4 வயது குழந்தை பலி…!!!

பாகிஸ்தான் நாட்டில் காதல் பிரச்சனையில் சண்டை ஏற்பட்டு 4 வயதுடைய பெண் குழந்தையை கொன்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் ஹைதராபாத் நகரத்தில் இளைஞர் ஒருவரும், ஒரு பெண்ணும் காதலித்திருக்கிறார்கள். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். எனவே, அந்த பெண்ணின் பெற்றோர் அதனை எதிர்த்திருக்கிறார்கள். இதனால் அந்த பெண் தன் வீட்டிலிருந்து வெளியேறி காதலரை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். அந்த சமயத்தில் தன் சகோதரியையும் அந்த பெண் அழைத்து சென்றிருக்கிறார். ஆனால் […]

Categories
அரசியல்

ஆணவக் கொலைகளை தடுக்க…!! சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்..!! தொல் திருமா கோரிக்கை…!!

ஆணவக்கொலைகளைத் தடுக்க சிறப்பு சட்டம் இயற்றவேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, கோகுல்ராஜ் கொலை வழக்கில் சிறப்பு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கது. இது பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக உள்ளது. இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வரவேற்கிறோம் என கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல் ஆணவக் கொலைகளை தடுப்பதற்கு சிறப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும் எனவும் இதனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நாகர்கோவில் அருகே சாதி ஆணவப் படுகொலை…!!

நாகர்கோவில் அருகே வேறு சாதி பெண்ணை காதலித்த இளைஞரை பெண்ணின் உறவினர்கள் கொலை செய்ததாக கூறி சடலத்தை பெற்றுக்கொள்ள உறவினர்கள் மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்நிகழ்விற்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தோவாளை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரும் காட்டுப் புதூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த காதலுக்கு பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

ச்ச… இப்படியெல்லாமா பண்ணுவாங்க… தண்டவாளத்தில் கிடந்த தலை… “விசாரணையில் வெளிவந்த பல திடுக்கிடும் தகவல்கள்”…!!

கர்நாடகாவில் மகளின் காதலனை பெற்றோர் ஆணவ கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்திற்கு உட்பட்ட கானாபூர் என்ற இடத்தில் கடந்த மாதம் 28ம் தேதி ரயில் தண்டவாளத்தில் இளைஞர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தது. தலை மற்றும் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த இளைஞர் 24 வயதான அர்பஸ் முல்லா என்பதும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்திருக்கலாம் எனவும் முதலில் கருதினர். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நீதிமன்றம் அதிரடி… 2003-ம் ஆண்டு நடந்த சம்பவம்… முருகேசன்- கண்ணகி ஆணவக்கொலை… குற்றவாளிகள் 13 பேர் யார் யார்?

புதுப்பேட்டையில் கடந்த 2003-ம் ஆண்டு நடைபெற்ற முருகேசன்- கண்ணகி ஆணவக்கொலை வழக்கில் 13 பேர் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் புதுப்பேட்டையில் கடந்த 2003ம் ஆண்டு முருகேசன்- கண்ணகி ஆகியோர் சாதி மாறி காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டனர்.. இதையடுத்து 2003 ஜூலை மாதம் 8ஆம் தேதி சாதி மாறி காதலித்து பதிவுத்திருமணம் செய்துகொண்டதால் கண்ணகி – முருகேசன் ஆகியோரின் காது, மூக்கு வழியாக விஷம் ஊற்றி உறவினர்கள் எரித்து […]

Categories
கடலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING : கண்ணகி – முருகேசன் தம்பதி ஆணவ கொலை… 13 பேர் குற்றவாளிகள்… நீதிமன்றம் அதிரடி!!

சாதி மறுப்பு திருமணம் செய்த கண்ணகி – முருகேசன் தம்பதி ஆணவ கொலை வழக்கில் 13 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குப்பநத்தம் புதுகாலனியை சேர்ந்த முருகேசன் மற்றும் கண்ணகி தம்பதி 2003 ஜூலை 8ஆம் தேதி உறவினர்களால் ஆணவ கொலை செய்யப்பட்டனர்.. மூக்கு காது வழியாக விஷயத்தை ஊற்றி 2 பேரையும் கொன்றதுடன் சடலங்களும் எரிக்கப்பட்டதாக  வழக்கு தொடரப்பட்டது.. ஆணவ கொலை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.. இந்த நிலையில் நீதிமன்றம் 13 […]

Categories
உலக செய்திகள்

எனக்கு இந்த திருமணம் வேண்டாம்…. சகோதரர் அளித்த பரபரப்பு வாக்குமூலம்…. காவல்துறையினர் தீவிர விசாரணை….!!

இத்தாலியில் இளம்பெண்ணை பெற்றோர்களே ஆணவக் கொலை செய்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இத்தாலியிலிருக்கும் Novellara என்ற பகுதியில் 18 வயதுள்ள saman Abbas என்ற பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருடைய பெற்றோர்களான Nazia shaheen மற்றும் shabbar Abbas என்பவர் பாகிஸ்தானிலிருக்கும் உறவினரை திருமணம் செய்து கொள்ளுமாறு saman Abbas ஸை வலியுறுத்தியுள்ளனர். ஆனால் அத்திருமணத்தை ஏற்க மறுத்த samman னை கடந்த ஏப்ரல் 30ம் தேதியிலிருந்து காணவில்லை. மேலும் இவர் காணாமல் […]

Categories
மாநில செய்திகள்

ஆணவக்கொலைகளை தடுக்க…. என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?…. உயர்நீதிமன்றம் கேள்வி…!!

ஆணவக்கொலைகளை தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசிடம் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தற்போது இந்தியாவில் ஆணவகொலைகள் அதிகரித்து வருகிறது. சமீபகாலமாக சாதிய ஆணவகொலைகள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஆவணக்கொலைகளை தடுப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் ஆணவக்கொலைகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது. எனவே இதற்கு கடுமையான சட்டங்களை இயற்றுமாறு பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் ஆணவ கொலைகளை தடுக்க உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஆந்தலாஜி” செப்டம்பர் 2020இல்…. தரமான சம்பவம் காத்திருக்கு….!!

ஆணவம் கொலையை மையமாக வைத்து பிரபல இயக்குநர்கள் இணைந்து திரைப்படம் ஒன்றை இயக்கி உள்ளனர். தமிழகத்தில் அவ்வப்போது மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்த கூடிய ஒரு விஷயம் என்னவென்றால் அது ஆணவக்கொலை தான். வருடத்திற்கு கட்டாயம் இப்படி ஒரு சம்பவம் தமிழகத்தில் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. தனக்குப் பிடித்த பெண்ணையோ, ஆணையோ சாதி மறுப்பு திருமணம் செய்ய முற்படும் போது அவர்கள் மிக தாழ்ந்த ஜாதியினர் ஆக இருக்கும் பட்சத்தில் இந்த ஆணவக்கொலை நிகழ்த்தப்படுகிறது. இதற்கு […]

Categories

Tech |