கொரோனா ஊரடங்கு காரணமாக உணவின்றி தவிக்கும் ஆதரவற்றோருக்கு பழனியில் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பழனி பகுதியில் கொரோனா ஊரடங்கு காரணமாக உணவின்றி தவிக்கும் ஆதரவற்றோருக்கு தன்னார்வலர்கள் உணவு, குடிநீர் ஆகியவற்றை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி பழனி பேருந்து நிலைய பகுதியில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் திண்டுக்கல் மாவட்ட துணைத் தலைவர் சரவணன் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். அதில் ஆதரவற்றோர் 500 பேருக்கு […]
Tag: ஆதரவற்றோர்
முன்னணி நடிகர் சூர்யா ரசிகர்கள் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். தமிழகம் முழுவதும் கொரோனாவின் பரவல் மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது.இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பினும் கொரோனாவால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர், நடிகைகள், பல முக்கிய பிரமுகர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் சாலையோரம் இருக்கும் […]
நாகையில் குளிர்சாதன பெட்டி ஒன்று ஆதரவற்றோர்கள் பயன்படுத்தி கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ளது. நாகை நகரத்திற்கு உட்பட்ட சவுந்தரராஜ பெருமாள் கோவில் தென் மடவிளாகம், தேசிய மேல்நிலைப்பள்ளி, பழைய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களால் “அன்பு சுவர்” என்ற பெயரில் கொடுக்கப்படும் புதிய மற்றும் பழைய துணிகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆதரவற்றவர்கள் மற்றும் யாசகம் தேடுபவர்கள் இந்த அன்பு சுவரில் வைக்கப்படும் பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். இது நல்ல பயனுள்ளதாக அமைந்துள்ளது. இந்நிலையில் அரசு போக்குவரத்து கழக பணிமனை […]
சாலையோர மக்களை காப்பகத்தில் சேர்க்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக வருகின்ற ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த சூழ்நிலையில் பொதுமக்கள் அவரவர் வீட்டில் பாதுகாப்பாக இருக்கிறார்கள். ஆனால் வீடு இல்லாதவர்கள் சாலையோரம் திரிபவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. அதிலும் பொது இடங்களில் சுற்றித் திரியும் […]
ஊரடங்கு உத்தரவால் ஆதவற்றோர்களுக்கு மாநகராட்சி தன்னார்வலர்கள் உதவிகள் செய்தனர். கொரோனோவால் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள், வீடு இன்றி வாழும்ஏழைகள், ஆதரவின்றி சாலைகளில் இருந்த நபர்களுக்கு உதவிக்கரம் நீட்ட முடிவுசெய்தது திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம். அதன் அடிப்படையில் தன்னார்வலர்கள் கொண்ட இளைஞர்களை ஒருங்கிணைத்து, ஆதரவற்றவர்களை மீட்கும் பணி தொடங்கியது. இதுவரை 160 பேர் மீட்கப்பட்ட நிலையில், அனைவரும் மாநகராட்சி கல்லணை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். மனநலம் பாதிக்கப்பட்டகள் முதியவர்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் […]
ஊரடங்கு உத்தரவை ஓட்டி நாடு முழுவதும் 19 ஆயிரத்து 460 சிறப்பு முகாம்களில் 75 லட்சம் பேருக்கு இலவசமாக உணவு வழங்கப்படுகிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை தடுப்பதற்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு 21 நாட்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் பிற மாநிலங்களில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் திணறி வருகின்றனர். மேலும் இவர்களுக்கு உணவு, […]
சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு முடிதிருத்தம் செய்து உடை வழங்கிய காவல் உதவி ஆய்வாளருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் எதிரொலியாக நாடு முழுவதும் தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பேருந்து நிறுத்த நிழற்குடையில் ஆதரவற்றவர்கள் தஞ்சமடைந்திருந்தனர். இவர்களை கண்ட திருவெறும்பூர் காவல் உதவி ஆய்வாளர் நாகராஜ் அனைவரையும் ஆதரவற்றோர் காப்பகத்தில் சேர்க்க முடிவு செய்தார். இரண்டு முதியவர்கள் உட்பட 3 பேருக்கு முடி திருத்தம் செய்ய முயன்ற அவருக்கு, அந்த […]