உலகம் முழுவதும் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்று தான் கிறிஸ்துமஸ். ஒவ்வொரு வருடமும் இயேசுவின் பிறப்பு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி கொண்டாடப்படுவது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். இந்த நாள் 12 நாட்கள் தொடர்ச்சியாக கொண்டாடப்படுகிறது. இந்த தினம் இயேசுவின் பிறந்த தினம் தொடங்கி அடுத்த 12 நாட்கள் வரை நீடிக்கின்றது. இதனை அனைவரும் கொண்டாடி மகிழ்வது வழக்கம். அவ்வகையில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் ஆதரவற்ற குழந்தைகளை நட்சத்திர விடுதிக்கு அழைத்து வந்து கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடத்தப்பட்டுள்ளது. […]
Tag: ஆதரவற்ற குழந்தைகள்
இந்தியாவில் வருகிற அக்டோபர் 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பொதுமக்கள் புத்தாடைகள், இனிப்புகள் மற்றும் பட்டாசுகளை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன் பிறகு தமிழகத்தில் திரை பிரபலங்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆதரவற்ற குழந்தைகளுடன் இணைந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் உதவும் உள்ளங்கள் என்ற தொண்டு நிறுவனத்தின் சார்பில் வருடம் தோறும் தீபாவளி கொண்டாடப்படும். இந்த பண்டிகையானது ஆனந்த தீபாவளி என்ற பெயரில் கொண்டாடப்படும். […]
இந்தியாவில் கொரோனா பிரச்சினைக்கு பிறகு அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்து தவித்து வருகின்றனர். இதனால் கடந்த ஆண்டு மே மாதம் பிஎம் கேர்ஸ் ஃபார் சில்ரன் என்ற திட்டத்தை, இது போன்ற ஆதரவற்ற குழந்தைகளுக்காக மத்திய மோடி அரசு கொண்டு வந்துள்ளது. இதுபோன்ற பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு இத்திட்டத்தின் கீழ் சுகாதார ரீதியாகவும் மற்றும் கல்வி போன்ற விஷயங்களில் அரசு சார்பில் உதவி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி குழந்தையின் 18 வயது வரை […]
ஆப்கானிஸ்தானில் ஆதரவற்றோர் இல்லங்களில் வசித்து வரும் குழந்தைகளுடைய நிலைமை தற்போது நிலவி வரும் நிதி நெருக்கடியால் கேள்விக்குறியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு ஏற்கனவே இருந்த நிதியம் காலியாகிவிட்டதாகவும், பல லட்சம் டாலர் மதிப்பிலான நிதி உதவி பிற நாடுகளிலிருந்து வழங்கப்படுவது நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆதரவற்றோர் இல்லங்களில் வசித்து வரும் குழந்தைகளின் நிலைமை கேள்விக்குறியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நாட்டின் நிதி நிலைமை வரும் குளிர் காலங்களில் அதிகரிக்கும். எனவே […]
சென்னை அருகே திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள ஸ்ரீதேவி கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியராக செல்வகுமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கருனை கரங்கள் மற்றும் மதர் தெரசா பெயரின் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியை கடந்த 2004 ஆம் ஆண்டு தொடங்கி நடத்தி வருகின்றார். அதில் ஆதரவற்ற பொருளாதாரத்தில் பின்தங்கிய 170 குழந்தைகளை சேர்த்து பாதுகாத்து வருகின்றார். இந்த மாணவர்களுக்கு உதவும் நோக்கில் தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களுக்குச் சென்று அங்கு பேருந்து […]
தாய் மற்றும் தந்தையை அடுத்தடுத்த இழந்து ஆதரவற்ற நிலையில் உள்ள சிறுவன் தனது மாற்றுத்திறனாளி அக்காவை கவனித்துக் கொள்ள பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்திய சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மைசூர் மாவட்டம் ஆலனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் குமார் -மஞ்சுளா இந்த தம்பதிகளுக்கு அனுஷா(17) என்ற மகளும் ஆகாஷ் (15) என்ற மகனும் உள்ளனர். இதில் அனுஷா மூளை வளர்ச்சி குன்றிய நிலையில் உள்ளார். ஆகாஷ் அருகில் உள்ள அரசு பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து […]