ஆதிவாசி மக்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர் அருகே போஸ்பாரா பகுதியில் ஆதிவாசி மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆதிவாசி மக்களிடம் முதியோர் ஓய்வூதியம், சாதி சான்றிதழ் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் களுக்கான சான்றிதழ்களை அதிகாரிகள் பெற்றனர். இந்த கூட்டத்தில் கிராம உதவியாளர் பாக்கியலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் முகமது ஜாபர் ஷரீப், வருவாய் ஆய்வாளர் உமா உள்பட சில அதிகாரிகள் கலந்து கொண்டனர். […]
Tag: ஆதிவாசி மக்கள்
ஆதிவாசி மக்கள் தங்களுக்கு வீடு கட்டித் தருமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே கோட்டைமேடு ஆதிவாசி கிராமம் உள்ளது. இங்கு 10 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் தங்களுக்கு வீடு கட்டித் தருமாறு பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து 5 குடும்பங்களுக்கு மட்டும் வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது. ஆனால் மீதமுள்ள 5 குடும்பங்களுக்கு வீடு கட்டி கொடுக்கப்படவில்லை. இந்தப் பகுதியில் வசிக்கும் 10 வீடுகளுக்கும் மின் இணைப்பும் […]
ஆதிவாசி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே ஆதிவாசி குடியிருப்பு காலனி உள்ளது. இவர்களிடம் கோவை சரக டி.ஐ.ஜி முத்துசாமி குறைகளை கேட்டறிந்தார். இவர் ஆதிவாசி மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். அதன்பிறகு 38 குடும்பங்களுக்கு தண்ணீர் சேமிக்கும் பிளாஸ்டி டேங்குகளை டிஐஜி வழங்கினார். இதனையடுத்து டிஐஜி முத்துசாமி ஆதிவாசி மக்களிடம் உங்களுடைய குழந்தைகளை படிக்க வைக்க வேண்டுமெனக் கூறினார். அதன் பிறகு குழந்தை திருமணங்களை தவிர்க்க வேண்டுமெனவும் உங்களுடைய […]
மண் சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் மற்றும் பொலிஸாரின் கால்களில் விழுந்து ஆதிவாசி மக்கள் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு மாவட்டத்தில் முதலை மடை பஞ்சாயத்து, பரம்பிக்குளம் புலிகள் காப்பக வனப்பகுதியில் செம்மனம்பதி ஆதிவாசி கிராமம் இருக்கின்றது. கேரளாவில் இருந்து அந்த கிராமத்திற்கு வரவேண்டும் என்றால் கோவை மாவட்டம் பொள்ளாச்சி, சேத்துமடை வழியாக 80 கிலோ மீட்டர் தூரம் சுற்றி தான் அனைத்து வாகனங்களும் வர முடியும். […]