ஆந்திரா நெல்லூரில் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடந்த பொதுக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 7 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் நெல்லூர் கந்துக்கூரில் சந்திரபாபு நாயுடு தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இந்நிலையில் இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயம் அடைந்து 5 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். […]
Tag: ஆந்திரப்பிரதேசம்
நாடு முழுவதும் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் கல்வி நிறுவனங்களில் நேரடி முறையில் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் ஏப்ரல்1 (இன்று) முதல் ஆப்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட உள்ள நிலையில், அரைநாள் மட்டும் வேலை நாளாக பின்பற்ற அரசு முடிவு செய்துள்ளது. இந்த கல்வி ஆண்டில் பள்ளி வேலை நாட்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் கல்வித்துறை இந்த முடிவை எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் அதன்படி ஆந்திராவில் இன்று முதல் அரைநாள் மட்டுமே […]
செலவே செய்யாமல் விமானத்தில் நாட்டை சுற்றிய இளைஞரை தமிழரால் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆந்திரா மாநிலத்தில் இருக்கும் குண்டூர் பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவருக்கு விமானத்தில் பயணிப்பது மிகவும் பிடித்தமான ஒன்று. அதற்காக அவர் நாடு முழுவதும் விமானத்தில் சுற்றி உள்ளார். ஆனால் விமானத்திற்கான பயண கட்டணத்தை அவர் செலுத்தாமல் தன்னுடன் பயணம் செய்யும் சக பயணிகளை செலுத்த செய்துள்ளார். ஆன்லைனில் பயணத்திற்கான டிக்கெட்டை குறைந்த விலையில் வாங்கும் தினேஷ் வேண்டுமென்றே விமானநிலையத்தில் அதனை தொலைத்து விடுகிறார். […]
ஆந்திராவில் காதலன் பேசாததால் காதலி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலம் நெல்லூரிலுள்ள வி.வி நகரை சேர்ந்தவர் தான் இளம்பெண் ரம்யா. இவர் அங்கிருக்கும் தனியார் காலேஜில் இளங்கலை 2 ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். அதே நேரத்தில் ரம்யா சிவபார்கவ் என்ற இளைஞரை கடந்த சில மாதங்களாக மிகவும் தீவிரமாக காதலித்து வந்திருக்கிறார்.. உயிருக்கு உயிராக இருவரும் காதலித்து வந்த நிலையில் திடீரென காதலன் சிவபார்கவ் ரம்யாவுடன் பேசுவதை முற்றிலும் நிறுத்திக் […]
மயக்க மருந்து கொடுத்து காதலியை நிர்வாணமாக வீடியோ எடுத்த காதலன், தன்னுடைய நண்பருக்கு அந்தக்காட்சியை அனுப்பி, மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில், குண்டூர் மாவட்டத்தில் ஒரு கல்லூரியில் படித்துவரும் மாணவி ஒருவர், சக மாணவனுடன் நட்பாக பழகி வந்துள்ளார்.. நாளடைவில் இந்த நட்பு காதலாக மாற, இருவரும் அடிக்கடி தனிமையில் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளனர்.. அந்த வகையில், ஒரு நாள் தன்னுடைய காதலனை சந்திப்பதற்கு மாணவி, தனியாக சென்றுள்ளார். அப்போது, காதலன் மயக்க […]
ஆந்திரப்பிரதேசத்தில் புதிதாக 80 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,892ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 872ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையிலும், அதன் தாக்கம் கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் […]