Categories
தேசிய செய்திகள்

“விருமன் பட பாணியில் நடு ரோட்டில் பைக்கில் கட்டியணைத்து டூயட்”… காதல் ஜோடி கைது…. போலீசிடம் சிக்கியது எப்படி….?

ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் அருகே உக்குநகர் பகுதியில் விருமன் பட பாணியில் ஒரு வாலிபர் தன்னுடைய காதலியை பைக்கின் பெட்ரோல் டேங்க் மீது அமர வைத்து கட்டி அணைத்தபடி சாலையில் சென்றுள்ளார். இந்த சம்பவத்தை அவ்வழியாக சென்ற ஒருவர் வீடியோ எடுத்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் சம்பந்தப்பட்ட காதல் ஜோடிகள் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதன் பிறகு காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் […]

Categories
உலக செய்திகள்

OMG… உறைந்த ஆற்றுக்குள் விழுந்து 3 இந்தியர்கள் பலி… சுற்றுலா சென்ற இடத்தில் நடந்த விபரீதம்….!!!!!!

ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த நாராயண முட்டனா- ஹரிதா தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. அமெரிக்காவில் அரிசோனா மாகாணம் சந்த்லர் நகரில் நாராயணா தனது குடும்பத்தினருடன்  வசித்து வருகிறார். இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு நாராயணா  முட்டனாவுடன் 3 குடும்பத்தினரை சேர்ந்த 11 பேருடன் கொகொனியோ நகரில் உள்ள ஆற்றுப்பகுதிக்கு சுற்றுலாவிற்கு சென்று உள்ளனர். அங்கு நிலவி வரும் கடுமையான பனிப்பொழிவின் காரணமாக ஆறு முழுவதும் பனியால் உறைந்து உள்ளது. அப்போது நாராயண முட்டனா […]

Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி!… எங்க வீட்ல நாங்க இருக்கோம்… உங்களுக்கு என்ன பிரச்சனை வந்துச்சு?…. அதிகாரிகளிடமே கேள்வி எழுப்பிய தாய்-மகள்…. நடந்தது என்ன?…..!!!!!

ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகிலுள்ள கொய்யூர் கிராமத்தில் சூரிபாபு என்பவரின் மனைவியும், மகளும் கடந்த 2020ம் வருடம் கொரோனா காலம் தொடங்கியது முதல் வீட்டில் தனிமையில் வாழ்ந்து வந்தனர். தற்போது பெருந்தொற்று காலம் முடிந்து அனைவரும் இயல்புநிலைக்கு வந்தபோதும், இவர்களால் இயல்பாக மாற முடியவில்லை. இதன் காரணமாக தாயும்-மகளும் வீட்டிலேயே முடங்கி விட்டனர். இதற்கிடையில் சூரிபாபு அவர்களுக்கு உணவு கொடுத்து வந்துள்ளார். சென்ற சில நாட்களாக சூரிபாபுவின் மனைவிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் மருத்துவமனைக்கு போக […]

Categories
தேசிய செய்திகள்

பகீர்!… வேறொரு பெண் மீது ஆசை…. கர்ப்பிணி மனைவிக்கு HIV வைரஸை செலுத்திய கணவர் கைது…. பரபரப்பு சம்பவம்….!!!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடா பகுதியில் சரண் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் திருமணம் முடிந்த நாளிலிருந்து சரண் தன்னுடைய மனைவியை வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதோடு, ஆண் குழந்தை பெற்று தராததை குத்தி காட்டி அடிக்கடி சண்டை போட்டுள்ளார். இதற்கிடையில் சரணுக்கு விசாகப்பட்டினம் பகுதி சேர்ந்த 21 வயது இளம்பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த பெண்ணை சரண் திருமணம் செய்து கொள்ள […]

Categories
தேசிய செய்திகள்

இது வேற லெவல்!!… குத்துசண்டை விளையாடிய அமைச்சர் ரோஜா…. அரங்கமே உற்சாக குரல் எழுப்பி ஆரவாரம்….!!!!!

ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியில் உடா சிறுவர் பூங்காவில் 12-வது தேசிய மினி ரோல் பால் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் ராஜஸ்தான் அணியும், பெண்கள் பிரிவில் ஒடிசா அணியும் முதல் பரிசை வென்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் ரோஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். அதன் பிறகு ரோஜா அங்கிருந்த பெண்களுடன் குத்துசண்டை விளையாடினார். […]

Categories
தேசிய செய்திகள்

“இந்தியா என்றால் நினைவுக்கு வருவது ஊழல், மோசமான சாலைகள் மட்டும் தான்”….. இன்போசிஸ் நிறுவனர் ஸ்பீச்….!

ஆந்திர மாநிலம் விஜயநகர் மாவட்டத்தில் ராஜம் என்ற இடத்தில் ஜிஎம்ஆர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் அமைந்துள்ளது. இந்த கல்வி நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயணமூர்த்தி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, வாய்ப்பு தேடுபவர்கள் எங்கே இடைவெளி இருக்கிறது என்பதை கண்டறிய வேண்டும். நீங்களே உங்களை தலைவராக நினைத்துக் கொள்ளுங்கள். வேறு ஒருவர் தலைவர் பதவியை எடுத்துக் கொண்டிருப்பதை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்காதீர்கள். நீங்கள் என்ன உருவாக்குகிறீர்களோ அதுதான் நிஜம். அதன்பிறகு […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே!… உயிருடன் இருக்கும் போதே தன் நினைவு நாளை கொண்டாடிய மாஜி அமைச்சர்…. அதிர்ச்சியில் உறவினர்கள்…..!!!!!

ஆந்திர பிரதேச‌ மாநிலத்தில் உள்ள பாபட்லா மாவட்டத்தில் சிராலா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் மருத்துவரும், முன்னாள் அமைச்சருமான பாலேட்டி ராமராவ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய 12-வது நினைவு தினத்தில் கலந்து கொள்ள வருமாறு நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அழைப்பிதழ் அச்சடித்து கொடுத்துள்ளார். இந்நிலையில் அழைப்பிதழ் வாங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பாலேட்டி ராமராவ் வீட்டிற்கு சென்ற போது அவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது பாலேட்டி ராமராவ் தான் உயிரோடு இருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

அட!… இந்த காலத்திலும் இப்படியா…? செல்போன், மின்சாரம் இல்லாத அதிசய கிராமம்…. அதுவும் நம்ம இந்தியாவுல….!!!!!!

இன்றைய நவீன காலகட்டத்தில் மக்களின் வாழ்க்கையை தொழில் நுட்பங்கள் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. மின்சாரம், ஸ்மார்ட் போன், இணையதளம் போன்றவைகள் தற்போது மனிதர்களுக்கு அத்தியாவசியமான தேவையாக மாறிவிட்டது. ஆனால் இந்த நவீன காலகட்டத்திலும் ஸ்மார்ட்போன், மின்சாரம் போன்ற எந்த தொழில்நுட்ப வசதிகளும் இல்லாமல் ஒரு கிராம மக்கள் வசிக்கிறார்கள் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?. ஆம் அப்படி ஒரு அதிசய கிராமம் இருக்கிறது. அதாவது ஆந்திர பிரதேச மாநிலத்தில் குர்மா என்ற கிராமம் அமைந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

“2034 ஆம் ஆண்டு நான் உயிரிழப்பேன்”…. மரண நாளை கொண்டாடி வியக்க வைத்த நபர்….!!!!

ஆந்திராவில் ஒருவர் உயிருடன் இருக்கும் போதே தனது மரண நாளை கொண்டாடிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் அமைச்சர் பாலேட்டி ராமராவ் (63) தன்னுடைய 75 வயதில் அதாவது 2034 ஆம் ஆண்டில் உயிரிழப்பின் என எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார். அதோடு நான் இறப்பதற்கு இன்னும் 12 ஆண்டுகளே உள்ளதால் இந்த ஆண்டு முதல் தனது மரண நாளை கொண்டாட உள்ளதாக அழைப்பிதழ் வழங்கி கொண்டாடியுள்ளார். இந்த சம்பவம் பலரையும் வியக்க வைத்துள்ளது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

இனி அரசு பள்ளி மாணவர்களுக்கும் செமஸ்டர் தேர்வு….. மாநில அரசின் புதிய அதிரடி அறிவிப்பு….!!!!!

ஆந்திர மாநிலத்தில் அடுத்த கல்வி ஆண்டு முதல் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2 செமஸ்டர் தேர்வு முறை கொண்டு வரப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதன் பிறகு 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2024-24 ஆம் கல்வி ஆண்டு முதல் செமஸ்டர் தேர்வு முறை அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறையானது தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ செயல்படுத்துவதற்கு சிறப்பான முறையில் வழிவகுக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர்கள், […]

Categories
இந்திய சினிமா சினிமா

OMG!… அவதார் 2 படம் பார்த்துக் கொண்டிருந்த நபர் உற்சாகத்தில் திடீர் மரணம்…. அதிர்ச்சி சம்பவம்….!!!!

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான அவதார் படம் உலக அளவில் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படம் ரிலீஸ் ஆகி கிட்டத்தட்ட 13 வருடங்கள் கழித்து அவதார் 2 திரைப்படத்தை ஜேம்ஸ் கேமரூன் இயக்கியுள்ளார். இந்த படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த லட்சுமி ரெட்டி ஸ்ரீனு என்ற நபர் பெட்டபுரம் பகுதியில் உள்ள ஒரு தியேட்டரில் அவதார் […]

Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ்!…. ஓய்வூதியதாரர்களுக்கு 10% பென்ஷன் அதிகரிப்பு…. மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில் ,அதில் முன்பு இருந்த பண பலன்கள் கிடைக்காததால் தொடர்ந்து மத்திய மற்றும் மாநில அரசின் ஊழியர்கள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில் ஆந்திர மாநில அரசு தற்போது ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி அரசு ஓய்வூதிய தொகையை 10 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதனால் சமூக ஓய்வூதியமானது 2500 ரூபாயிலிருந்து 2750 ரூபாயாக […]

Categories
தேசிய செய்திகள்

மாண்டஸ் புயலுக்கு அடுத்து!…. வெளுத்து வாங்கும் கனமழை…. மாநில அரசு வெளியிட்ட தகவல்….!!!!

வங்கக்கடலில் உருவாகிய மாண்டஸ் புயல் நேற்றிரவு கேளம்பாக்கம் அருகில் கரையை கடந்த நிலையில், ஆந்திர மாநிலத்தில் என்று அதிகாலை முதல் கன மழை பெய்து வருகிறது. அதாவது, ஆந்திர மாநிலத்தின் தெற்கு கடற்கரை மாவட்டங்கள் மற்றும் ராயல சீமா மாவட்டங்களில் கன மழை பதிவாகி இருக்கிறது. இதுகுறித்து அம்மாநில அரசு வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரத்தின்படி, திருப்பதி மாவட்டம் நாயுடு பேட்டை பகுதியில் இன்று காலை 8 மணியுடன் நிறைவு பெற்ற 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக 281.5 மி.மீ. மழை […]

Categories
தேசிய செய்திகள்

மாண்டஸ் புயல் தாக்கம்… ஆந்திராவில் வெளுத்து வாங்கும் கனமழை… கடும் அவதியில் பொதுமக்கள்…!!!!!

ஆந்திர மாநிலம் திருப்பதியில் மாண்டஸ் புயல் தாக்கத்தால் தொடர் கனமழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்நிலையில் வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் தீவிரமடைந்து வட தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. மாண்டஸ்  புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை புதுச்சேரிக்கும் – ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே மாமல்லபுரம் அருகே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு […]

Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி!…. ரயிலுக்கும், தண்டவாளத்துக்கும் இடையில் சிக்கிய மாணவி பரிதாப பலி….. பெரும் சோகம்….!!!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் பகுதியில் அன்னாவரம் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த முதலாம் ஆண்டு பிஎஸ்சி மாணவி சசிகலா கல்லூரிக்கு செல்வதற்காக நேற்று முன்தினம் துவ்வடா ரயில்வே நிலையத்திற்கு சென்றார். இவர் ரயிலில் இருந்து இறங்கிய போது திடீரென தண்டவாளத்திற்கும், ரயிலுக்கும் இடையில் சிக்கிக் கொண்டார். இதைப்பார்த்து  அதிர்ச்சியடைந்த சக பயணிகள் உடனடியாக ரயிலை நிறுத்துமாறு ஓட்டுனரிடம் கூறியுள்ளனர். இருப்பினும் சசிகலாவை மீட்க முடியாததால் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சுமார் ஒன்றரை […]

Categories
தேசிய செய்திகள்

கூட்டம் கூட்டமாக சாலையை கடக்கும் யானைகள்… வைரலாகும் வீடியோ…!!!!!

யானைகள் கூட்டம், கூட்டமாக சாலையை கடக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆந்திர எல்லையில் முசலமடுகு பகுதியில் குடியாத்தம் – பலமனேரி சாலையில் உள்ள வனப்பகுதியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம் கூட்டமாக சாலையை கடந்து சென்றது. அப்போது அந்த  சாலை வழியாக சென்ற வாகன ஓட்டிகள் யானைகளை பார்த்து  வாகனங்களை நிறுத்தி யானைகள் கூட்டம் கூட்டமாக சாலையை கடப்பதை தங்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக […]

Categories
தேசிய செய்திகள்

“நான் எம்ஜிஆர், என்டிஆர் போன்றவன்”…. முதுகில் குத்தி இடத்தைப் பிடித்தவர் சந்திரபாபு….. முதல்வர் ஜெகன் ஒரே போடு….!!!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாகுளம் நர்சன பேட்டையில் பூ ஹக்கு என்ற திட்டத்தை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் 2000 கிராமங்களில் மறு சர்வே எடுக்கப்பட்ட நிலங்கள் அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பிறகு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி விழாவில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, யாராவது ஒருவர் தன்னுடைய கடின உழைப்பின் மூலமாக கட்சியை தொடங்கி வெற்றி பெற்றால் அவரை எம்.ஜி.ஆர், என்டிஆர் அல்லது ஜெகன் என்று தான் சொல்லுவார்கள். […]

Categories
தேசிய செய்திகள்

“10 நாளில் இறப்பேன், 3-ம்‌ நாளில் உயிர்த்தெழுவேன்”….. அடம் பிடிக்கும் பாதிரியார்….. மூடநம்பிக்கைக்கு ஒரு அளவே இல்லையா…..!!!!!!

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் கண்ணவரம் அருகே கெல்லனப்பள்ளி தேவாலயம் அமைந்துள்ளது. இந்த தேவாலயத்தை சேர்ந்த பாதிரியார் நான் இன்னும் 10 நாட்களில் இறந்து விடுவேன் என்று கூறி வருகிறார். அதோடு இறந்த பிறகு அடுத்த 3 நாட்களில் மீண்டும் உயிர்த்தெழுந்து வருவேன் என்றும் கூறுகிறார். இந்த பாதிரியாரின் பேச்சால் அப்பகுதியைச் சேர்ந்த மக்களும் குழப்பமும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். இந்நிலையில் நான் இன்னும் 10 நாளில் இறந்து விடுவேன் என்று கூறும் பாதிரியார் தனக்கு சொந்தமான இடத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

என்ன இப்படி ஆயிடுச்சு!…. மேம்பாலத்தில் சிக்கிக்கொண்ட பிஸ்தா ஹவுஸ் விமானம்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பிஸ்தா ஹவுஸ் நிறுவனம் ஒன்று பழைய விமானத்தை வாங்கி அதனை ஓட்டலாக மாற்ற முடிவு செய்தது. இதற்காக கொச்சியில் ஒரு பழைய விமானத்தை வாங்கிய அந்த நிறுவனம் அதனை சாலை வழியாக ஹைதராபாத் கொண்டு செல்ல முடிவு செய்தது. இதனையடுத்து ராட்சத லாரியில் ஏற்றப்பட்ட விமான சாலை வழியை சென்றபோது ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டம் மேதரமெட்லாவில் உள்ள மேம்பாலத்தின் அடியில் சிக்கி கொண்டது. இந்த சம்பவம் குறித்து அறிந்து அந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே!…. தளபதியின் வாரிசு படத்திற்கு வந்த புதிய சிக்கல்…. கவலையில் விஜய் ரசிகர்கள்….!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வரும்  நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம், யோகி பாபு, குஷ்பு உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கிறார்கள். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையின் போது படம் ரிலீஸ் ஆகும் என படக் குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த படத்தின் ரஞ்சிதமே பாடல் சமீபத்தில் வெளியாகி […]

Categories
தேசிய செய்திகள்

“ரூ‌. 13 லட்சம் வாடகை பாக்கி, ரூ.‌ 2.50 லட்சம் மின்சார பாக்கி”…. 3 வருடங்களாக ஓனருக்கு டிமிக்கி கொடுக்கும் எம்பி…. போலீசில் பரபரப்பு புகார்….!!!!!

ஆந்திர மாநிலத்தில் மல்லிகார்ஜுன் ரெட்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் 2 அடுக்குமாடி வீடுகளை கட்டி அதில் வசித்துவருகிறார். இவரின் ஒரு வீட்டை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்பி கோரண்டலா மாதவ் வாடகைக்கு வாங்கியுள்ளார். ஆனால் வாடகைக்கு வாங்கிய எம்.பி கடந்த 3 வருடங்களாக மின்சார கட்டணம் மற்றும் வாடகை கட்டணம் எதுவும் செலுத்தாமல் இருந்துள்ளார். இது தொடர்பாக மல்லிகார்ஜுன் ரெட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததாக கூறப்படுகிறது. இதனால் மல்லிகார்ஜுன் ரெட்டி 10 […]

Categories
தேசிய செய்திகள்

OMG: 45 குரங்குகள் விஷம் வைத்து கொலை…. பெரும் பரபரப்பு சம்பவம்……!!!!

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்திலுள்ள சிலகம் கிராமத்திற்கு அருகே வனப்பகுதியில்குட்டிகள் உட்பட மொத்தம் 45 குரங்குகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடல்கள் கண்டெடுக்கப்பட்ட அந்த கிராமத்தில் குரங்குகள் இல்லை என அப்பகுதியினர் தெரிவித்தனர். இதன் மூலம் வேறு இடத்தில் விஷமிகள் சிலர் விஷம் வைத்து அந்த குரங்குகளை கொன்று இருக்கலாம் என்றும் பின்னர் டிராக்டர் மூலம் அந்த குரங்குகளின் உடல்களை வீசி சென்று இருக்கலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக விலங்குகள் நலச் […]

Categories
தேசிய செய்திகள்

“இனி இப்படி பேசினால் செருப்பால் அடிப்பேன்”…. கொந்தளித்து பேசிய பிரபல நடிகர்…!!!

தெலுங்கில் பிரபல நடிகரான பவன் கல்யாண் ஆந்திரத்தில் பாஜகவின் ‘பி’ டிம்மாக செயல்பட ஜனசேனா கட்சியை தொடங்கியதாகவும், பாஜகவிடம் பணம் வாங்கி தனது கட்சியை நடத்தி வருவதாகும் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் தன் கட்சி தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளிடையே நடிகர் பவன் கல்யாண் பேசியனார். அப்போது பேசிய அவர்  “நான் பாஜகவிடம் பணம் பெற்றுக்கொண்டு ‘பி’ டிம்மாக உள்ளேன் என கூறுவதை ஏற்க முடியாது. இனி இது போல் பேசினால் […]

Categories
தேசிய செய்திகள்

“இந்த மனசு தான் கடவுள்” நெஞ்சு வலியால் மயங்கி விழுந்த விவசாயி…. சிபிஆர் செய்து காப்பாற்றிய போலீஸ்….. குவியும் பாராட்டு…..!!!!

ஆந்திர மாநிலத்தில் அமராவதியை தலைநகராக அறிவிக்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதாவது சந்திரபாபு நாயுடுவின் ஆட்சிக்காலத்தில் அமராவதியை தலைநகராக மாற்றுவதற்கு விவசாயிகள் நிலம் கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரை அமராவதியை தலைநகராக மாற்றாததால் நிலம் கொடுத்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள காமன் இந்தியா பாலத்தின் மீது போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் ஊர்வலமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு விவசாயிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் மயங்கி விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த விவசாயிகளும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சீயான் விக்ரமுக்கு ஜோடியாக மாஸ்டர் பட நடிகை…. வெளியான புது அப்டேட்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!!!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விக்ரம். இவர் திரைப்பட நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், பின்னணி பாடகர் மற்றும் குரல் நடிகர் ஆவர். இவர் 1990 ஆம் வருட முதல் சேது, விண்ணுக்கும் மண்ணுக்கும், சாமி, பிதாமகன், ஐ போன்ற தமிழ் மொழி திரைப்படங்களிலும் தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகின்றார். இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தை அடுத்து பா ரஞ்சித் இயக்கும் படத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

ஆண்மையை அதிகரிக்கும் கழுதை கறி?…..‌ 400 கிலோ பறிமுதல்…. 11 பேர் கைது…. போலீசார் அதிரடி…!!!

ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் கழுதை கறி விரும்பி சாப்பிடுகிறார்கள். இதற்கு அரசு தடை விதித்த போதிலும் சட்ட விரோதமாக கழுதைகளை கடத்தி வந்து கறி விற்பனை செய்து வருகின்றனர். கழுதை கறி மூலம் வேகம், வலிமை மற்றும் சுவாச பிரச்சனைகளை குணப்படுத்த முடியும் என்று நம்புகிறார்கள். அதிலும் ஆண்மை சக்தி அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது. இதனால் கழுதை கறி வெட்டப்படும் இடங்களில் போட்டி போட்டுக் கொண்டு வாங்கி செல்கின்றனர். ஒரு கிலோ கறி ரூ.700 வரை விற்பனை […]

Categories
தேசிய செய்திகள்

நிச்சயமான பெண்ணை கொன்று புதைத்து…. தலைமறைவான காதல் ஜோடி…. திடுகிட வைக்கும் பின்னணி…!!!

ஆந்திர மாநிலம் சித்தம்பூட்டைச் சேர்ந்த கொரபுலெட்சுமி (20) என்பர் வசித்து வருகிறார். இவரும் சம்பங்கிப்புட்டைச் சேர்ந்த வண்டலம் கோபால் (21) என்பவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த சேதலா நாராயணம்மா என்பவரது இளைய மகள் சேதல காந்தம்மா (21) என்பவருக்கும் கோபாலுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்து நிச்சயக்கப்பட்டது. அதன்பிறகு கோபால், லட்சுமி காதல் விவகாரத்தை அறிந்த நாராயணம்மா, லட்சுமியை சந்திக்க கூடாது என்று கோபாலை கட்டுக்குள் வைத்தார். மேலும் காந்தம்மாவுடன் கோபாலுக்கு நிச்சயதார்த்தம் […]

Categories
தேசிய செய்திகள்

“சவால் விட்ட மனைவி” பொங்கி எழுந்த கணவன்…. தோளில் தூக்கி மலை ஏறி சாகசம்….. வைரலாகும் புகைப்படம்….!!!!

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் வரத வீர வெங்கட சத்யநாராயணா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி லாவண்யா. இவர்கள் 2 பேரும் திருப்பதியில் உள்ள ஒரு கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக சென்றுள்ளனர். அங்கு வரதவீர வெங்கட சத்ய நாராயணா மலை மீது வேகமாக நடந்து சென்றுள்ளார். இதை பார்த்த லாவண்யா முடிந்தால் என்னையும் தோளில் தூக்கிக்கொண்டு நடங்கள் என்று சவால் விட்டுள்ளார். மனைவியின் சவாலை ஏற்றுக் கொண்ட கணவரும் அவரை தோளில் சுமந்து கொண்டு […]

Categories
மாநில செய்திகள்

ஆந்திர மாநில முதல்வரின் திடீர் அறிவிப்பு… அதிர்ச்சியில் தமிழக விவசாயிகள்…!!!!!

ஆந்திர மாநிலம் குப்பம் சட்டசபை தொகுதியைச் சேர்ந்த அணிமிகனிபள்ளே என்ற இடத்தில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் அந்த மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பேசிய போது, தமிழக மற்றும் ஆந்திர எல்லையில் கனக நாச்சியம்மன் கோவில் அருகே இருக்கும் பாலாறு நீர்த்தேக்கத்தின் உயரத்தை அதிகரிக்காமல் தண்ணீர் சேமிக்கும் அளவை அதிகரிக்க இருக்கிறோம். அதற்காக 120 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மேலும் விரைவில் பணிகள் தொடங்கப்படும் குடிப்பள்ளியில் 77 டிஎம்சி சாந்திபுரத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

முதலிரவில் புதுமாப்பிள்ளை திடீர் மரணம்…. காரணம் என்ன தெரியுமா…? ஷாக் நியூஸ்….!!!

ஆந்திரா அன்னமையா மாவட்டத்தைச் சேர்ந்தவர் துளசி பிரசாத். இவர் சிரிஷா என்ற பெண்ணை காதலித்து இருவீட்டார் சம்மததுடன் திருமணம் செய்து கொண்டார். மறுநாள் குடும்பத்தினர் முதலிரவுக்கான ஏற்பாடுகளைச் செய்து, தம்பதியரை அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் முதலிரவு அறையில் எதிர்பாராதவிதமாக துளசி பிரசாத் சுயநினைவை இழந்து வீழ்ந்துள்ளார். பதறிப்போன சிரிஷா, குடும்பத்தினர் உதவியுடன் அவரை மருத்துவமனையில் சேர்த்த போது அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்து விட்டதாகத் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓடும் போதும் […]

Categories
தேசிய செய்திகள்

விஷவாயு தாக்கி பள்ளி மாணவ, மாணவிகள் மயக்கம்….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

ஆந்திர மாநிலம் காக்கிநாடா, சர்பாபுரம் மண்டலம் வலசப்பாக்கம் பகுதியில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாபாலா பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும் பள்ளியின் அருகில் தொழிற்சாலை மற்றும் ஆயில் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்துவதை கவனித்துக் கொண்டிருந்தனர். அப்போது ரசாயன தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகையின் மூலம் விஷவாயு அப்பகுதியில் பரவியது. இதனால் 7 […]

Categories
தேசிய செய்திகள்

மாணவியின் கழுத்தை அறுத்து ஆசிட் வீச்சு…. மாமனின் கொடூர செயல்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

சிறுமியின் கழுத்தை அறுத்து ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள நெல்லூர் பகுதியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவருடைய மாமா நாகராஜ் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். அப்போது சிறுமி கத்தியதால் ஆத்திரத்தில் நாகராஜ் சிறுமியின் கழுத்தை அறுத்து ஆசிட் வீசி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அதன் பின் அருகில் இருந்தவர்கள் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு சிறுமிக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஓடும் ரயிலில் பாலியல் வன்கொடுமை… தூக்கி வீசப்பட்ட பெண்… நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!!!!

ஓடும் ரயிலில் பாலியல் தொல்லையில் இருந்து தன்னை காப்பாற்ற முயன்ற பெண்ணை ரயிலில் இருந்து தூக்கி வீசிய  வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியானா மாநிலத்தில் உள்ள  ரோஹ்தக்கின் லகான்  மஜ்ராவிலிருந்து தோஹானாவுக்கு  மந்தீப் கவுர் என்ற பெண் தனது 9  வயது மகனுடன்  ரயிலில் சென்று கொண்டிருந்தார். அப்போது ரயிலில் இருந்த பாதி பெட்டிகள் காலியாக இருந்துள்ளது. இந்நிலையில்  ரயில் தோஹானா ஸ்டேஷன் வந்துள்ளது. அப்போது அந்த சிறுவன் மட்டும் அழுது கொண்டு இறங்கியுள்ளான். இதனை […]

Categories
தேசிய செய்திகள்

“திடீரென தீப்பிடித்து எரிந்த லாரி”… கேஸ் சிலிண்டர் வெடிப்பு… பெரும் பரபரப்பு…!!!!!!

கேஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் கர்னூலில் இருந்து பிரகாச மாவட்டம் கோமராலு மண்டலம் உளவுபாடு பகுதிக்கு 36 கேஸ் சிலிண்டர்களை ஏற்றுக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது நள்ளிரவு 12 மணி அளவில் கர்னூல் பிரகாசம் தேசிய நெடுஞ்சாலையில் பெத்தவாடா என்னும் பகுதியில் லாரி சென்று கொண்டிருந்தபோது லாரியின் பின்பகுதியில் இருந்து திடீரென தீப்பொறி கிளம்பியுள்ளது. இதனைப் பார்த்து லாரி […]

Categories
தேசிய செய்திகள்

சிதறி கிடந்த 75 டன் பிளாஸ்டிக் கழிவுகள்…. வெறும் 2 நிமிடத்தில் நடந்த அதிசயம்…. சாதனை படைத்த ஆந்திரா….!!!!

ஆந்திரமாநிலம் விசாகப்பட்டினம் கடற்கரையிலுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற மெகா பீச் கிளீனிங் திட்டத்தின் வாயிலாக அம்மாநில அரசு முடிவு செய்தது. அந்த வகையில் விசாகப்பட்டினம் கோகுல் பார்க் முதல் பீமலி கடற்கரை வரையிலும் சுமார் 40 இடங்களில் காலை 6- 8 மணிவரை பிளாஸ்டிக்சேகரிக்கும் பணியானது துவங்கியது. இப்பணியில் தன்னார்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பெண்கள் அமைப்பினர் அப்பார்ட்மெண்ட் அசோசியன் அசோசியேஷன், காலனி அசோசியேசன், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் என மொத்தம் 22,517 […]

Categories
தேசிய செய்திகள்

கொடூரத்தின் உச்சம்…..! தனியாக இருக்கும் பெண்களை குறி வைத்து…. அதிர வைத்த ஆந்திர சைக்கோ….!!!!

ஆந்திரா மாநிலம், அனகாபள்ளி மாவட்டத்தை சேர்ந்த சந்தக ராம்பாபு என்பவர், தனது 18 வயதில் ராஜமுந்திரியை சேர்ந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ராம்பாபு தனது மனைவி, குழந்தைகளுடன் ஐதராபாத்தில் குடியிருந்தபோது அந்த வீட்டின் உரிமையாளருடன் அவரது மனைவிக்கு கள்ளத்தொடர்பு இருந்ததால் அவரை 2018ம் ஆண்டில் பிரிந்தார். பின்னர் தங்குவதற்கு இடமின்றி ராம்பாபு தவித்து வந்தார். தற்போது 49 வயதாகும் ராம்பாபு, மனைவிக்கு வேறொருவருடன் கள்ளத்தொடர்பு இருந்ததால்தான், தன் வாழ்க்கை இவ்வாறு ஆகிவிட்டது என்று நினைத்து, சைக்கோவாக […]

Categories
தேசிய செய்திகள்

தனியாக இருக்கும் பெண்களை அடுத்தடுத்து குறிவைத்து தாக்கிய சைக்கோ…. போலீஸ் நடவடிக்கை…..!!!!

ஆந்திரமாநிலத்தில் தனியாகவுள்ள பெண்கள் பலர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அடுத்தடுத்து கொலை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தபோது சந்தக ராம்பாபு என்பவர் சிக்கினார். இவருடைய மனைவிக்கு வேறொருவருடன் தொடர்பு ஏற்பட்டு பிரிந்து சென்றதால் சைக்கோவாக மாறிய சந்தக ராம்பாபு, பெண்களை பழிவாங்கும் நோக்கில் இது போன்று கொலை மற்றும் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து ஆந்திர காவல்துறையினர் அவரை கைது செய்தனர். அதாவது சந்தக […]

Categories
தேசிய செய்திகள்

75 ஆவது சுதந்திர தினம்…. 350 அடி நீளம் கொண்ட தேசியக்கொடி….. காண்போரை மெய்சிலிர்க்க வைத்த பேரணி….!!!!

நாடு முழுவதும் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி 25வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் ஆந்திராவின் காக்கிநாடாவில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 350 அடி நீளம் உள்ள தேசியக்கொடி பேரணி நடைபெற்றது. நாடு முழுவதும் தேசியக்கொடி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள காக்கிநாடா பகுதியில் கிட்டத்தட்ட 350 அடி நீளம் கொண்ட தேசியக்கொடி பேரணி நேற்று நடந்தது. நேற்று நகரின் முக்கிய வீதியில் வழியாக எடுத்துச் செல்லப்பட்ட தேசிய கொடியை […]

Categories
தேசிய செய்திகள்

கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவி…. உண்மை அறியாமல் கணவன் செய்த செயல்….!!!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் வசித்து வந்தவர் சாய்பிரியா (24). இதில் சாய்பிரியாவுக்கும் அவருடைய உறவினரான சீனிவாஸ் என்பவருக்கும் ஓராண்டுக்கு முன்பு  திருமணம் நடந்தது. சீனிவாஸ் ஐதராபாத்திலுள்ள ஒரு தனியார் மருந்து உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சென்ற சில நாட்களுக்கு முன்பு நான் கம்ப்யூட்டர் கோர்ஸ் படிக்க வேண்டும் என கணவனிடம் கூறிய சாய்பிரியா, விசாகப்பட்டினத்திற்கு வந்தார். அதன்பின் சீனிவாஸ் விசாகப்பட்டினம் வந்தடைந்தார். கடந்த திங்கள்கிழமையன்று 2 பேரும் விசாகப்பட்டினத்திலுள்ள கடற்கரைக்கு மாலை வேளையில் சென்றிருந்தனர். […]

Categories
உலக செய்திகள்

குரங்கு அம்மை: முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை….. மத்திய அரசு அறிவுறுத்தல்…..!!!!!

உலகம் முழுவதும் இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை குரங்கு அம்மை தாக்கி உள்ளது. இந்தியாவில் முதல் முறையாக வெளிநாட்டில் இருந்து கேரளாவுக்கு திரும்பிய ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி ஆனது. இதையடுத்து, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது. இந்நிலையில் தான் சவுதி அரேபியாவில் இருந்து ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்கு விமானத்தில் வந்த ஒரு குடும்பத்தினருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டபோது 2 வயது பெண் குழந்தைக்கு குரங்கு அம்மை அறிகுறி இருப்பது தெரியவந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடியுடன் செல்பி எடுத்துக் கொண்ட பிரபல நடிகை…. வைரல் புகைப்படம்….!!!

ஆந்திர மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி வருகை தந்திருந்தார். அவரின் பயணத்தின் முக்கிய நிகழ்வாக ஆந்திர மாநில பீமாவரத்தில் விடுதலை போராட்ட வீரர் அல்லுரி சீதாராம ராஜுவின் 125 வது பிறந்த நாள் விழாவில் மோடி பங்கேற்றார். அப்போது அவரது 30 அடி உயர வெண்கல சிலையை அவர் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து பல்வேறு அரசு திட்டங்களை மோடி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநில ஆளுநர் பிஸ்வ பூசன் ஹரிசந்தன், மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

மகளை காதல் திருமணம் செய்த என்ஜினீயரை…. கொடூரமாக கொலை செய்த மாமனார்…. வெளியான பரபரப்பு உண்மைகள்….!!!!

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்திலுள்ள கிடாலூர் மண்டலம் போடலகொண்டபள்ளியில் வசித்து வந்தவர் நாராயண ரெட்டி (26). இவர் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இதற்கிடையில் இவர் அதே ஊரைச் சேர்ந்த கந்துலா வெங்கடேஸ்வர ரெட்டியின் மகள் ரவாளியை காதலித்து வந்தார். இவர்களுடைய காதலுக்கு ரவாளியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டனர். இதையடுத்து ரவாளியை பெற்றோர் வலுக்கட்டாயமாக நாராயண ரெட்டியிடமிருந்து பிரித்து அழைத்து சென்று விட்டனர். தன் […]

Categories
மாநில செய்திகள்

ஆண்களே உஷார்…..! பியூட்டி வேஷம்போட்ட பாட்டி…. 2ஆம் திருமணத்திற்கு காத்திருக்கும் ஆண்களே குறி….!!!!

ஐடி ஊழியரை மூணாவதாக திருமணம் செய்து மோசடி செய்த ஆந்திரா பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை ஆவடி அடுத்த முத்தா புதுப்பேட்டை குமார நகர் தெருவை சேர்ந்த இந்திராணி என்பவரின் மகன் ஹரி. எம்சிஏ பட்டதாரியான இவர் தரமணியில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில் கருத்து வேறுபாடு […]

Categories
தேசிய செய்திகள்

கல்யாண மஸ்து திட்டம்…. ஜூலை 1 முதல் பதிவு செய்யலாம்…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

ஆந்திராவில் ஏழை எளியோருக்கு இலவசமாக திருமணம் செய்து வைக்கும் கல்யாணம் மஸ்து திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. ஏழை எளிய மக்களின் திருமண நிதி சுமையை குறைக்கும் வகையில் ஜோடிகளுக்கு இலவசமாக ஆடை,தாலி மற்றும் மெட்டி உள்ளிட்டவை வழங்கப்பட்டு திருமணம் நடைபெறும் என அரசு தெரிவித்துள்ளது. அதன்படி ஏழை எளியோருக்கு இலவசமாக திருமணம் செய்யும் கல்யாண மஸ்து திட்டத்திற்கு வருகின்ற ஜூலை 1ம்தேதி முதல் பதிவு செய்யலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் […]

Categories
தேசிய செய்திகள்

மனைவி நடத்தையில் சந்தேகம்…. தந்தையே தன் குழந்தைக்கு செய்த கொடூரம்…. பெரும் சோகம்….!!!!

ஆந்திரமாநிலம் கர்னூல் மாவட்டம் ஆர்வக் கல்லு பகுதியில் ஆட்டோ டிரைவர் ரங்கா முரளி வசித்து வருகிறார். இவருடைய மனைவி வீணா ஆவார். இந்த தம்பதியினருக்கு முனி வர்ஷா என்ற 6 மாத ஆண் குழந்தை இருந்தது. இப்போது ரங்கா முரளி நன்னூர் பகுதியிலுள்ள பேரடைஸ் அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதில் ரங்கா முரளி தன மனைவி வீணாவிடம் நான் கருப்பாக இருக்கிறேன், ஆனால் பிறந்த குழந்தை சிவப்பாக இருப்பதால் அந்த குழந்தை எனக்கு பிறக்கவில்லை […]

Categories
தேசிய செய்திகள்

பக்தர்கள் செய்த காரியம்…. சிக்கிய கொண்ட ஊழியர்…. திருப்பதியில் பரபரப்பு…..!!!!!

ஆந்திரமாநிலம் குண்டூர் மற்றும் பீகாரைச் சேர்ந்த 8 பக்தர்கள் ரூபாய் 300 டிக்கெட்டில் நேற்று திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தனர். அப்போது அவர்கள் கொண்டுவந்த ரூபாய்.300 டிக்கெட்டுகளை ஸ்கேன் மையத்தில் இருந்த ஊழியர் மற்றும் திருப்பதியைச் சேர்ந்தவருமான வெங்கடேசன் வாங்கி கொண்டார். அந்த டிக்கெட்டுகளை ஊழியர் ஸ்கேன் செய்வது போன்று நடித்து 8 பக்தர்களை சுவாமி தரிசனத்திற்காக கோயிலுக்குள் அனுப்பிவைக்க முயற்சி செய்தார். அந்த பக்தர்கள் கொண்டுவந்த ரூபாய் 300 டிக்கெட்டுகளை திருமலை-திருப்பதி […]

Categories
தேசிய செய்திகள்

10th Exam: 2 லட்சம் பேர் தோல்வி, 34 தற்கொலை…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்….!!!!

ஆந்திராவில் நடைபெற்ற 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 2 லட்சம் மாணவ மாணவியர் தோல்வியடைந்தனர். இதில் மிகவும் சோகமான செய்தி என்னவென்றால் தோல்வி அடைந்தவர்களில் 34 பேர் தற்கொலை செய்து கொண்டனர். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த 3ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் 70.70% மாணவிகளும், 64.02% மாணவர்களும் வெற்றி பெற்றனர். மேலும் 2 லட்சம் பேர் தோல்வியடைந்தனர். அதில் 34 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் […]

Categories
தேசிய செய்திகள்

1 இல்ல 2 இல்ல…. 3 ஆண்களை ஏமாற்றி லட்சக்கணக்கில் நகை, பணத்தை பறித்த பெண்…. பரபரப்பு….!!!!

ஆந்திர மாநிலம் நந்தியால் மாவட்டம் பகுதியில் மேரம்மா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் திரிஷாவுக்கும் (24) ஆவுக்கு பேட்டை, சென்னம் பள்ளியை சேர்ந்த மல்லிகார்ஜுன் என்பவருக்கும் முதல் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து மல்லிகார்ஜுடன் சில மாதங்கள் மட்டுமே வாழ்ந்த திரிஷா அவரை விட்டு பிரிந்து தன் தாய் வீட்டிற்கு வந்தார். அப்போது தன் கணவரிடமிருந்து விவாகரத்து வாங்காமலேயே பல்வேறு லட்சங்களை பறித்துக்கொண்டு அவர் வந்துள்ளார். அதன்பின் அத்மகூர் மண்டலம் கொத்த பள்ளியை சேர்ந்த சீனிவாஸ் ரெட்டி […]

Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி….. திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!

ஆந்திர மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருப்பதி கோவிலில் உள்ள ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள். அதனால் கொரோனா காலகட்டத்தில் பக்தர்களின் வருகை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா குறைந்து வந்த நிலையில் பக்தர்களுக்கு அமல்படுத்தப்பட்ட அனைத்துக் கட்டுப்பாடுகளும் திரும்பப் பெறப்பட்டுள்ளது. அதன்படி கோவிலுக்கு பக்தர்கள் வழக்கம்போல் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் […]

Categories
மாநில செய்திகள்

“திருமண நிகழ்ச்சிக்கு சென்ற கார்”…. கோர விபத்தில் சிக்கி பறிபோன 4 உயிர்… பெரும் சோகம்…!!!!!!

ஆந்திராவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரும்பியவர்கள் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆந்திர மாநிலத்தில் அன்னமயம் மாவட்டத்தில் உள்ள பள்ளி என்னும் பகுதியை  சேர்ந்தவர் கெங்கி ரெட்டி. இவரது உறவினர் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சி பலமனேரி நேற்று இரவு நடைபெற்றுள்ளது. திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று மாலை கெங்கி ரெட்டி, மதுலதா, தேவான்ஸ் ரெட்டி, பூஷிதா ரெட்டி ஆகிய 4 பேரும் காரில் புறப்பட்டு சென்றிருக்கின்றனர். […]

Categories

Tech |