ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவால் 2,000-திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். ஒரு குழந்தை உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ரசாயன ஆலை ஒன்றில் இன்று அதிகாலை திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டது. இதனால் ஆலையை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தின் அருகே எல்.ஜி.பாலிமர்ஸ் இன்டஸ்ட்ரி என்ற ரசாயன ஆலை இயங்கி வருகிறது. இங்கு இன்று அதிகாலை திடீரென விஷவாயு கசிவு ஏற்பட்டது. […]
Tag: ஆந்திர மாநிலம்
ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவர் ஓய்வு நேரத்தில் நண்பர்களுடன் சீட்டு விளையாடியதால் 24 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது உலக நாடுகள் முழுவதிலும் பரவிவரும் கொரோனா தொற்றின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதுவரை 26 ஆயிரதிற்கும் மேற்பட்டோர் தொற்றினால் பாதிக்கப்பட்டு 800க்கும் அதிகமானோர் மரணமடைந்துள்ளனர். அதில் ஆந்திர மாநிலத்தில் 1061 கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு 31 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்றினால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க மே 3 வரை நாடு முழுவதும் […]
ஆந்திர மாநிலத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். காக்கினாடா மருத்துவமனையில் கொரோனவால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட நபர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இவருக்கு கை குலுக்கி மருத்துவர்கள் வீட்டிற்கு வழியனுப்பி வைத்துள்ளனர். முன்னதாக இவர் வெளிநாட்டிற்கு சென்று திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையின் படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,301 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பில் 335 பேருடன் மஹாராஷ்டிரா முதலிடத்தையும், 309 பேருடன் தமிழகம் 2வது இடத்தையும் […]