சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். தினம்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதால் சபரிமலையில் கூட்டம் அலைமோதுகிறது. அதே சமயம் இந்த வருடம் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு செய்வது கட்டாயமாகப்பட்டுள்ளது. அப்படி ஆன்லைனில் முன்பதிவு செய்ய இயலாத பக்தர்களுக்கு ஸ்பாட் புக்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது. தினம்தோறும் 90 ஆயிரத்திற்கும் மேல் பக்தர்களின் […]
Tag: ஆன்லைன் முன்பதிவு
சபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்வது கட்டாயம் என்றஆணையத்தின் முடிவு மண்டல பூஜை காலத்தில் கோவிலுக்கு செல்ல திட்டமிட்டுள்ள பக்தர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது .41 நாட்கள் நடைபெறும் மண்டல பூஜைக்காக சபரிமலையில் நவம்பர் 11ஆம் தேதி நடை திறக்கப்படுகிறது.கட்டாயம் ஆன்லைன் தரிசனம் முன்பதிவு நடைமுறைக்கு வரும்போது பக்தர்கள் தங்கள் வசதிக்கேற்ப தங்கள் யாத்திரையை திட்டமிட முடியாது. தற்போது தரிசனத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்வதை தேவசம்போர்டு கட்டாயமாகியுள்ளது. ஆனால் புதிய விதி பக்தர்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதாக […]
சபரிமலையில் தரிசனம் செய்வதற்கு ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாகப்பட்டுள்ளதாக பக்தர்களுக்கு புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.பாதுகாப்பு காரணங்களுக்காக பக்தர்களின் தகவல்களை சேகரிக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருந்தாலும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆன்லைன் முன்பதிவு அவசியம் இல்லை. சபரிமலையில் நவம்பர் 16ஆம் தேதி மாலை 5 மணிக்கு தரிசனத்திற்காக நடை திறக்கப்படுகின்றது. இதனிடையே நிலக்கல் உள்ளிட்ட 12 இடங்களில் ஸ்பாட் புக்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. நிலக்கல்லில் மட்டும் மொத்தம் பத்து கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த வருடம் […]
சபரிமலை பக்தர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு மூலம் தரிசனத்துக்கு விதிக்கப்பட்டிருந்த எண்ணிக்கை கட்டுப்பாடானது நேற்று முதல் நீக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் தற்போது பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சையாக நடந்து வருகிறது. இதை அடுத்து தரிசனத்துக்காக தினமும் 15 ஆயிரம் பக்தர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு மூலம் அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கொரோனாவின் பாதிப்பு குறைந்து வருவதால், கூடுதலாக பக்தர்களை அனுமதிக்குமாறு தேவசம்போர்டு, கேரளா அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் கேரள ஹைகோர்ட் , ஆன்லைன் முன்பதிவு கட்டுப்பாட்டை […]
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொது மக்கள் சிரமமின்றி பயணிக்க சிறப்பு பேருந்துகளை அரசு இறங்கியுள்ளது. அதன்படி அரசு போக்குவரத்தில் இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்டது. முன்பதிவு செய்ய விரும்புவோர் www.tnstc.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். பின் முகப்பு பக்கத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். Search and book tickets என்பதில் from என்ற கட்டத்தில் நீங்கள் எங்கிருந்து பயணம் செய்கிறீர்கள் என்பதை பதிவு செய்ய வேண்டும். பிறகு To என்ற கட்டத்தில் […]
திருப்பதி ஏழுமலையான் கோவில் தரிசனத்திற்கு டிசம்பர் மாதத்திற்கான இலவச டோக்கன்கள் இன்று முதல் ஆன்லைனில் வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன்படி நாளொன்றுக்கு 12 ஆயிரம் டோக்கன்கள் வீதம், இன்று காலை 9 மணிமுதல் தேவஸ்தான இணையதளம் மூலம் வழங்கப்பட உள்ளது. மேலும் பக்தர்கள் மறுநாள் முதல் தங்கும் அறைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை தீபத் திருவிழா விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தீபத் திருவிழா வருகிற 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 6 மணி முதல் 7.30மணிக்கு கோவில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து 10 நாட்கள் தீபத் திருவிழா உற்சவம் நடைபெறும்.விழாவின் உச்ச நிகழ்ச்சியாக வருகின்ற 19ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபமும் மாலை […]
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டு வருவதால், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நவம்பர் 7 முதல் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அனைவருக்கும் இ- பாஸ் பெற வேண்டும். அதற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும். நாளை முதல் ஆன்லைனில் முன்பதிவு […]
தமிழகத்தில் உள்ள பெரிய கோவில்களில் சுவாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் ஆன்லைன் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்யும் முறை விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதில் முதற்கட்டமாக திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில், ஸ்ரீரங்கம்,மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் திருச்செந்தூர் முருகன் கோவில் உள்ளிட்ட 46 பெரிய கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு ஆன்லைன் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்ய வசதிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்பிறகு படிப்படியாக மற்ற கோவில்களிலும் ஆன்லைன் டிக்கெட் முறையை கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு […]
கோவை குற்றாலத்தில் நீர் வரத்து குறைந்துள்ளதால் இன்று முதல் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது.கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சிக்கு செல்ல, சுற்றுலா பயணிகளுக்கு கடந்த மே மாதம் வனத்துறையினர் தடை விதித்தனர்.தொடர் மழையின் காரணமாக, நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்ததால், மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி நிறுத்தி வைக்கப்படுவதாக வனத்துறை அறிவித்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக நீர்வீழ்ச்சிக்கு நீர் வரத்து குறைந்தது. இதையடுத்து இன்று […]
சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்வதற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யும் முறை நடைமுறையில் உள்ளது. இதனை வெளிமாநில பக்தர்கள் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தினமும் 15 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அதேசமயம் முன்பதிவு செய்யும் பக்தர்களில் பெரும்பாலானோர் தரிசனம் செய்ய வருவதில்லை. அதனால் மற்ற பக்தர்களுக்கு கிடைக்கவேண்டிய வாய்ப்புகள் கிடைக்காமல் போகும் சூழல் உருவாகிறது. ஆன்லைன் முன்பதிவு இலவசமாக அனுமதிப்பதே இதற்கு காரணம் என […]