தமிழக அரசின் முதன்மை பயிற்சி நிறுவனமான அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி அரசு துறைகளிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் பணிபுரிவோருக்கு பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது . இதனிடையே தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் ஆனது இரண்டாம் நிலை காவலர் மற்றும் சிறை காவலர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வை வருகின்ற நவம்பர் 27ஆம் தேதி நடத்த உள்ளது. இந்த தேர்வுக்காக நேர்முக இலவச பயிற்சி வகுப்புகள் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சருத் தியாகராய கல்லூரியில், […]
Tag: ஆன்லைன் வகுப்பு
புதுச்சேரி மாநிலத்தில் காய்ச்சல் காரணமாக 1 முதல் 8ஆம் வகுப்பு வரை விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில் ஒருவாரத்திற்கு பிறகு பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்படுகிறது. மேலும் மாணவர்களுக்கு இன்று முதல் காலாண்டு தேர்வு நடத்தப்படும் என்றும் 30 ஆம் தேதி வரை இந்த தேர்வுகள் நடைபெறும் என்றும் அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், காய்ச்சல் இன்னும் குறையவில்லை என்பதால், பள்ளிகளை திறக்காமல், ஆன்லைனில் வகுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அதேபோல். தமிழகத்திலும் காய்ச்சல் அதிகமாக […]
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதிலும் குழந்தைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றன. பள்ளிகளில் ஒன்றாக இணைந்து பாடம் பயிலும்போது காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்படுகின்றது. இதனால் தொடர்ந்து காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்படுபவர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இவற்றை கருத்தில் கொண்டு புதுச்சேரியில் காய்ச்சல் காரணமாக 25ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் காய்ச்சல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கக் […]
கள்ளக்குறிச்சி கலவரம் ஏற்பட்ட கனியாமூர் பள்ளியின் மாணவர்களுக்கு இன்று முதல் ஆன்லைனில் வகுப்புகள் தொடங்க உள்ளது. அதிலும் குறிப்பாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாரதி, குறிஞ்சி மற்றும் பாலாஜி ஆகிய மூன்று தனியார் பள்ளிகளில் அடுத்த வாரம் பாடம் நடத்துவதற்கு வகுப்பறைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.இவர்களுக்கு சக்தி மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் பாடம் நடத்துவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் கலவரம் உண்டான தனியார் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்காதவாறு நடவடிக்கை எடுப்பது […]
இலங்கையில் கடந்த சில நாட்களாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இதனால் மக்கள் அன்றாட உணவிற்காக அல்லாடி வருகின்றனர். உணவு பொருட்கள் மட்டுமில்லாமல் மருந்து தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு என அனைத்திற்கு சிரமப்பட வேண்டி இருக்கிறது. அது மட்டுமில்லாமல் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதால் மின்சார தட்டுப்பாட்டு நிலவி வருகிறது. எனவே ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கு தேவையான எந்த பொருட்களும் கிடைக்காததால் இலங்கை மக்கள் கடுமையான நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர். இந்த பொருளாதார நெருக்கடிக்கு அரசுதான் […]
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்ததால் கடந்த பிப்ரவரி மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன் பிறகு பள்ளிகளில் ஆண்டு இறுதித்தேர்வு முடிவடைந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவரும் அடுத்த கல்வி ஆண்டில் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சென்னையில் உள்ள சில கல்லூரிகளில் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருவது மாணவர்கள் மத்தியில் […]
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வை கருத்தில் கொண்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனால் 10,11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பே சிறந்தது. ஆன்லைன் […]
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 10,11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாணவர்களுக்கு மூன்றாம் பருவ பாடபுத்தகங்கள் விரைந்து வழங்கி ஆன்லைன் வகுப்புகளை நடத்த வேண்டும் என்று பள்ளிகளுக்கு கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தற்போது ஊரடங்கு காரணமாக மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் வழங்க தாமதம் ஏற்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு பாடம் நடத்துவது தாமதமாகிறது. இதனால் […]
தமிழகத்தில் மீண்டும் கொரோனாபரவல் அதிகரித்து வருவதால் பள்ளிகளில் நேரடி வகுப்புகளை கைவிட்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதில் சென்னையில் தினசரி கொரோனா தொற்று நேற்று ஒரு நாளில் மட்டுமே 120 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் சென்னை, வேலுர், விழுப்புரம் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவில் […]
ஆன்லைன் மூலமாக தமிழ் கற்பிக்க விரும்புவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ் இணைய கல்வி கழகம் தமிழக அரசின் தகவல் தொழில் நுட்பவியல் துறையின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி அமைப்பாக விளங்குகிறது. இணையத்தின் மூலம் உலகமெங்கும் உள்ளவர்களுக்கு தமிழ் கற்பித்தல் இதன் முதன்மையான நோக்கமாகும். தமிழ் இலக்கியம், கலை கலாச்சாரம் போன்றவற்றில் ஆர்வம் உள்ளவர்களுக்கும் இதன் வாயிலாக கலாச்சாரம் தொடர்பான விவரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. வெளிநாடு மற்றும் உள்நாடு களில் வாழும் மாணவர்களுக்கு […]
நாடு முழுவதும் ஒமைக்ரான் பரவல் தொடர்ந்து பரவி வருகின்றது. இதுவரை இந்தியாவில் 415 க்கும் மேற்பட்டோர் ஒமைக்ரான் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஒமைக்ரான் பரவல் காரணமாக மீண்டும் ஆன்லைன் வழி வகுப்பு மற்றும் தேர்வுகளுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு பரிந்துரை செய்துள்ளது. நேரடியாக மற்றும் ஆன்லைன் வழி தேர்வுகளை நடத்துவது குறித்து தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் உரிய முடிவு எடுக்க வேண்டுமென்று ஏ ஐ சி டி இ தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்து நிலையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி 9-12 வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கடந்த நவம்பர் 1-ஆம் தேதி முதல் 1-8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனிடையில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமிக்ரான் என்ற […]
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்களுக்கு தற்போது ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதனால் தற்போது மாணவர்கள் செல்போன் பயன்படுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் வியட்நாம் நாட்டின் நிகே அண் மாகாணத்தில் நாம் டென் மாவட்டத்தை சேர்ந்த ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் கடந்த அக்டோபர் 14-ஆம் தேதி மாலை ஆன்லைன் வகுப்பில் பாடம் படித்துக்கொண்டிருந்தார். அந்த மாணவர் மொபைலை சார்ஜ் போட்டவாறு காதுகளில் இயர் போனை மாட்டிக் கொண்டு பாடங்களை கவனித்து வந்துள்ளார். […]
கேரளாவில் ஆன்லைன் வகுப்பை கவனிக்காததால் தனது 6 வயது குழந்தைக்கு சூடு வைத்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள குமாரமங்கலம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கணவனால் கைவிடப்பட்ட ஒரு பெண் மற்றும் அவருடைய ஆறு வயது குழந்தை இருவரும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் குழந்தைக்கு ஆன்லைன் வழியாக பாடம் கற்பிக்க படுவதாக தெரியவந்துள்ளது. ஆனால் குழந்தை சரிவர கவனிக்காத காரணத்தினால் குழந்தையின் தாயார் குழந்தைக்கு முகம், கால்மூட்டி, அந்தரங்க உறுப்பு […]
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகளும் தேர்வுகளும் நடத்தப் பட்டன. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு குறித்து எந்த ஒரு அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை. இந்நிலையில் பொறியியல் படிப்பில் நடப்பு கல்வி ஆண்டிற்கான செமஸ்டர் வகுப்புகள் இன்று தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் […]
ஆன்லைனில் மகன் பாடம் படிக்காத காரணத்தினால் மகனை கொன்றுவிட்டு தாயும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே பாத்தார்டி பாட்டா என்ற பகுதியை சேர்ந்த சாகர் பாட்டக், சிக்கா என்ற தம்பதிகளுக்கு மூன்றரை வயதில் மகன் ஒருவர் இருந்துள்ளார். அவரது பெயர் ரிதான். அவரை பள்ளியில் சேர்க்க முடிவு செய்த பெற்றோர்கள் அருகிலுள்ள மழலையர் பள்ளியில் சேர்த்தனர். கொரோனா காலம் என்பதால் பள்ளி திறக்கப்படாமல் ஆன்லைனிலேயே வகுப்புகள் […]
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகளும் தேர்வுகளும் நடத்தப் பட்டன. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு குறித்து எந்த ஒரு அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை. இந்நிலையில் ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் அனைத்து பேராசிரியர்களும் கல்லூரிக்கு வர உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. வரும் 9ஆம் தேதி முதல் […]
தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு குறித்த எந்த ஒரு அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை. இது பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பொறியியல் மற்றும் கலை கல்லூரிகளில் ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் மாணவர்களுக்கு […]
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகளும் தேர்வுகளும் நடத்தப் பட்டன. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு குறித்து எந்த ஒரு அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை. இந்நிலையில் பொறியியல் படிப்பில் நடப்பு கல்வி ஆண்டிற்கான செமஸ்டர் வகுப்புகள் ஆகஸ்ட் 18ஆம் தேதி தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. […]
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகளும் தேர்வுகளும் நடத்தப் பட்டன. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு குறித்து எந்த ஒரு அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை. இந்நிலையில் பொறியியல் படிப்பில் நடப்பு கல்வி ஆண்டிற்கான செமஸ்டர் வகுப்புகள் ஆகஸ்ட் 18ஆம் தேதி தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. […]
மாணவர்கள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமை ஆகாமல் இருக்க மத்திய, மாநில அரசுகளால் தான் தடுக்க முடியும் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. மார்ட்டின் ஜெயக்குமார் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கத்தில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்துள்ளது. ஆன்லைன் விளையாட்டை தடை செய்யவும், ஆய்வு செய்து கண்காணிக்கும் நடைமுறையை கொண்டு வரக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழைக்கை ஆன்லைன் விளையாட்டு கதாபாத்திரமாகவே குழந்தைகள் மாறுவதோடு, வன்முறை எண்ணங்களுக்கு ஆளாகின்றனர் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.மேலும் […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுபடுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்களின் நலன் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. பள்ளி மாணவர்களுக்கு அடுத்த கல்வி ஆண்டு தொடங்கி மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா பரவல் குறைய தொடங்கியதை அடுத்து ஜூன் 21-ஆம் தேதி […]
தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. […]
ஆன்லைன் வகுப்பு முடிந்து ஆபாசபடங்கள் பார்த்ததில் 15 வயது சகோதரியை 13 வயது சகோதரன் கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், பவாடி என்ற பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியின் குழந்தைகள் 13 வயது மகனும், 15 வயது மகளும் ஆன்லைன் வகுப்பு படித்து வந்துள்ளனர். இருவரும் ஒன்றாக சேர்ந்து செல்போனில் ஆன்லைன் வகுப்பு படித்து முடித்த பிறகு, அவ்வபோது ஆபாசப்படங்களை பார்த்துள்ளனர். பிறகு இருவரும் ஆபாச படங்களை பார்த்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதன்பிறகு […]
திருவாரூரில் எவ்வித இடர்பாடு இன்றி மாணவ- மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதற்கு போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணமாக அனைத்து பள்ளிகளும் அடைக்கப்பட்டு இருப்பதனால் ஆன்லைன் மூலம் மாணவ- மாணவிகளுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. எனவே இந்த ஆன்லைன் வகுப்புகள் அரசின் வழிகாட்டுதலின்படி மாணவ-மாணவிகளுக்கு எந்தவித இடர்பாடுகள் ஏற்படுவதை தவிர்ப்பது குறித்து திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பள்ளியின் தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு ஆன்லைன் மூலம் அறிவுரை வழங்கினார். இந்த ஆன்லைன் […]
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு CBSE மற்றும் CISCE தேர்வுகள் மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து தமிழகத்திலும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டார். எனவே +2 மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்ற நிலையில் மதிப்பெண்கள் வழங்குவது, குழுவில் யாரை இறுதி செய்யலாம் என்பது குறித்தும், ஆன்லைன் வகுப்பிற்கான வழிகாட்டு நெறிமுறைகள் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இந்நிலையில் நடிகராகவும் இயக்குனராகவும் முயற்சி செய்து வருபவர்களுக்கு பயன்படும் விதமாக ஜூன் 14 ஆம் தேதி முதல் 25-ம் தேதி வரை 10 நாட்கள் ஆன்லைன் வகுப்பு தொடங்க உள்ளதாக இயக்குனர் சுசீந்திரன் அறிவித்துள்ளார். வகுப்பின் நேரம் மாலை 5 மணி முதல் 6.30 வரை. இந்த […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல்லில் சிபிஎஸ்இ தனியார் பள்ளி ஒன்று கல்வி கட்டணம் செலுத்தாத மாணவ மாணவிகளை ஆன்லைன் வகுப்பில் இருந்து நீக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பள்ளியில் 5 ஆம் வகுப்பு முதல் பருவத்திற்கான ரூ.27,000 ஆயிரத்தை உடனே செலுத்த வேண்டும் என கூறியுள்ளது. ஆனால் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் அன்றாட வாழ்க்கையை […]
காஷ்மீரில் ஆன்லைன் வகுப்புகள் நீண்ட நேரம் எடுப்பதாக 6 வயது சிறுமி புகார் அளித்ததை தொடர்ந்து அம்மாநில கவர்னர் நடவடிக்கை எடுத்துள்ளார். காஷ்மீரை சேர்ந்த ஆறு வயது சிறுமி ஆன்லைனில் நீண்ட நேரம் வகுப்புகள் எடுப்பதாக வீடியோ மூலம் பிரதமர் மோடியிடம் புகார் அளித்தார். இதையடுத்து பள்ளி குழந்தைகளுக்கான சுமையைக் குறைப்பதற்கு 48 மணி நேரத்தில் கொள்கை வகுக்கப்படும் என்று ஜம்மு காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்கா உறுதியளித்தார். இதையடுத்து ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய கட்டுப்பாடுகளை […]
நாடு முழுவதும் கடந்த வருடம் முதல் கொரோனா பரவல் வேகமெடுத்து வந்ததன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்படி கேரளாவிலும் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. மேலும் 10, 12 மாணவர்களை தவிர அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலமாக தேர்வு நடத்தப்பட்டு நடத்தப்பட்டது. இதற்கு மத்தியில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. எனவே பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை […]
சென்னை பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் புகாரை அடுத்து மற்ற பள்ளி ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்களும் அடுத்தடுத்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனால் ஆன்லைன் வகுப்பில் படிக்கும் மாணவிகளின் பெற்றோர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் ஆன்லைன் வகுப்பு தொடர்பான புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மாணவ மாணவிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் விசாரித்து துரித நடவடிக்கை எடுக்க […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன் பிறகு எட்டு மாதங்கள் கழித்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. பெருபாலும் கல்லூரிகளும் திறக்கப்பட்டன. ஆனால் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டு […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன் பிறகு சற்று கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து,9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு […]
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் தமிழகத்தில் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன் பிறகு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தமிழகத்தில் கல்லூரிகளிலும் கொரோனா பரவி வருகிறது. இதையடுத்து கொரோனா பரவலை தடுக்க நேரடி வகுப்புகளை ரத்து செய்வதாக […]
தெலுங்கானா மாநிலத்தில் 6 வயது சிறுமி தினமும் 5 கிலோ மீட்டர் பயணம் செய்து ஆன்லைன் வகுப்பில் படிக்கும் சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது அனைத்து மாநிலங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், பெரும்பாலான மாநிலங்களில் 9 முதல் 12 ஆம் வகுப்பு […]
சென்னையில் ஆன்லைன் வகுப்பில் நடத்திய பாடங்கள் புரியாததால் 11ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு ஜனவரி 19ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. 9 மற்றும் 11ஆம் […]
ஆன்லைன் வகுப்பு எடுப்பது தொடர்பாக ஈஷா வித்யா ஆசிரியர்களுக்கு காக்னிஸன்ட் ஊழியர்கள் பயிற்சி மேற்கொண்டனர். கிராமப்புற மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் பாடம் எடுப்பது தொடர்பாக ஈஷா வித்யா பள்ளி ஆசிரியர்களுக்கு பிரபல மென்பொருள் நிறுவனமான காக்னிஸன்ட் நிறுவனத்தின் ஊழியர்கள் சிறப்பு பயிற்சி அளித்தனர். இப்பயிற்சியில் கோவை, ஈரோடு, சேலம், கரூர், தர்மபுரி, விழுப்புரம், கடலூர், நாகர்கோவில், தூத்துக்குடி மற்றும் சித்தூர் ஆகிய 10 மாவட்டங்களில் செயல்படும் ஈஷா வித்யா பள்ளிகளைச் சேர்ந்த 374 ஆசிரியர்கள் பங்கேற்றனர். அந்நிறுவனத்தைச் […]
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவும் கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பள்ளிகள் திறப்பது பற்றி எந்த ஒரு அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிடவில்லை. அதனால் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு […]
தமிழகத்தில் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு 5 நாட்கள் ஆன்லைன் வகுப்புகள் விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு 5 நாட்கள் ஆன்லைன் வகுப்புகள் விடுமுறை […]
ஆன்லைன் வகுப்பு கவனிக்க சொன்னதால் கோபமடைந்த சிறுவர்கள் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் வசிப்பவர் சேகர். இவருடைய மகன்கள் புவனேஷ்(11) மற்றும் கிஷோர்(4). இவர்கள் இருவரும் தனியார் அங்குள்ள தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் படித்து வந்துள்ளனர். இந்நிலையில் தற்போது கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. எனவே மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து இந்த இரண்டு சிறுவர்களும் வகுப்பில் கவனம் செலுத்தாமல் விளையாடுவதாக பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதனால் […]
இந்தியாவில் அடுத்த கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மற்றும் நேரடி வகுப்புகள் இரண்டுமே கலந்து நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல மாதங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தற்போது வரை கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. மேலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அடுத்த கல்வியாண்டிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் வகுப்புகள் மட்டும்தான் நடைபெறுமா […]
தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு நாளைக்கு ஐந்து வகுப்புகள் ஆன்லைன் மூலமாக நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பள்ளிகள் திறப்பது பற்றி எந்த ஒரு அறிவிப்பும் தற்போது வரை வெளியிடப்படவில்லை. இதனையடுத்து கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு […]
இறுதியாண்டு மாணவர்களை தவிர மற்றவர்களுக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது அண்ணா பல்கலைக்கழக முக்கிய சுற்றறிக்கை ஒன்றை அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, “கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு அனைத்து இளங்கலை, முதுகலை படிப்புகளில் இறுதி ஆண்டு மாணவர்களை தவிர்த்து மற்ற மாணவர்களுக்கு வகுப்புகள் நேரடியாக நடைபெறாது. ஏப்ரல் மாதத்தின் இறுதி வரை ஆன்லைன் மூலமாக மட்டுமே இவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும். நாள் ஒன்றுக்கு ஐந்து வகுப்புகள் மட்டுமே […]
புயல் பாதிப்பு சரியாகும் வரை ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. அதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலைமை சீராகும் வரை ஆன்லைன் வகுப்புகள் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். […]
புதுச்சேரி காரைக்கால் சைல்டு லைன் அமைப்பு சார்பில் ராயன்பாளையம் கிராமத்தில் திறந்தவெளி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. விழிப்புணர்வு நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து சைல்டு லைன் திட்ட ஒருங்கிணைப்பாளர் விமலா பேசினார். தொடர்ந்து, குழந்தைகளுக்கான கல்வியின் முக்கியத்துவம், பாதுகாப்பான இணைய வழி கல்வி கற்றலுக்கான வழிமுறைகள் குறித்து பூவம் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் விஜயராகவன் விளக்கினார். கோட்டுச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரவேல், உதவி சப்-இன்ஸ்பெக்டர் மோகன் ஆகியோர் கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள முககவசம் அணிவது, […]
தமிழகத்தில் தீபாவளி விடுமுறை முடிந்து பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்குகின்றன. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நான்கு நாட்கள் ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. அந்த விடுமுறை நேற்றுடன் முடிவடைந்த நிலையில், பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்குகின்றன. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் கல்வி தொலைக்காட்சியில் வீடியோ […]
17 வயது சிறுவன் ஆன்லைன் வகுப்பு புரியாததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருக்கும் திருவிக நகர் பகுதியை சேர்ந்தவர்கள் ஹேமந்குமார்-சண்முகப்பிரியா தம்பதியினர். இவர்களுக்கு பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாதவன் என்ற மகன் இருந்தான். கொரோனா பரவலால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும் நிலையில், ஆன்லைன் மூலமாக பாடம் எடுக்கப்படுகின்றது. ஆனால் மாதவனுக்கு ஆன்லைன் வகுப்புகளில் நடத்தும் பாடங்கள் புரியாததால் மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளார். இந்நிலையில் நேற்று தனது அறையில் இருந்த மாதவன் […]
ஆன்லைன் வகுப்பில் கேள்விக்கு பதிலளிக்காத மகளை கடித்து பென்சிலால் குத்தி துன்புறுத்திய தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளிகள் எப்போது திறக்கும் என்று அறிவிக்கப்படாமல் மூடப்பட்டது. இதுவரை சில மாநிலங்களில் மட்டுமே பள்ளிகள் திறக்கப் பட்டிருக்கும் நிலையில் ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. எப்போதும் கையில் போனை வைத்திருப்பவர்கள் கூட ஆன்லைன் வகுப்பு என்று கூறினால் தலை தெறிக்க ஓட்டம் பிடிக்கின்றனர். ஆனால் அவர்களின் பெற்றோர்கள் வலுக்கட்டாயமாக குழந்தைகளை ஆன்லைன் […]
இன்று முதல் மூன்று வாரங்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் கிடையாது என்று கர்நாடக மாநில அரசு அறிவித்துள்ளது கர்நாடகா மாநில கல்வித் துறை இன்று முதல் மூன்று வாரங்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் கிடையாது என்று இடைக்கால விடுமுறை அறிவித்துள்ளது. இந்த நாட்களில் ஆசிரியர்களுக்கும் விடுமுறை தான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார் தசரா விடுமுறைகளை ரத்து செய்யப்போவதாக 10 தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது மாநில அரசு மூன்று வார விடுமுறையை அறிவித்துள்ளது பல ஆசிரியர்கள் […]
ஆன்லைன் பகுப்பில் பங்கேற்க மலைக்குன்றுக்கு சென்ற மாணவனை சிறுத்தை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குஜராத் மாநிலத்தில் இருக்கும் தாப்பி மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர் கோவிந்த். இவர் கிராமத்தில் இருக்கும் மலைக்குன்றில் வைத்து ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இணைய வசதி அங்கு சரியாக கிடைப்பதனால் அவர் மற்றும் அவரது நண்பர் அந்த இடத்தை தேர்ந்தெடுத்தனர். இருவரும் வகுப்பில் பங்கேற்று கொண்டிருந்தபோது திடீரென சிறுத்தை ஒன்று அவர்கள் எதிரே வந்துள்ளது. சிறுத்தையிடம் […]