சரக்கு வாகனங்களில் ஆபத்தான முறையில் பயணிகளை ஏற்றி செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றார்கள். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி பகுதியில் 32 ஊராட்சிகளும் 92 கிராமங்களும் இருக்கின்றது. இதில் கிராம பகுதிகளை சேர்ந்த மக்கள் திருத்துறைப்பூண்டி நகரப் பகுதியை நம்பியே இருக்கின்றார்கள். இந்த நிலையில் திருத்துறைப்பூண்டி பகுதியில் புதுமனை புகுவிழா, காதணி விழா, திருமணம், வளைகாப்பு, துக்க நிகழ்ச்சி ஆகிய நிகழ்ச்சிகளுக்கு செல்பவர்கள் சரக்கு வாகனங்களில் பயணம் செய்வது அண்மைகாலமாகவே […]
Tag: ஆபத்தான பயணம்
சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையிலும், சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலும் ரயில்கள் இயக்கப்படுகிறது. அதன் பிறகு 118.9 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மெட்ரோ ரயில் திட்டமானது தற்போது 3 வழித்தடங்களில் அமைக்கப் பட்டு வருகிறது. இந்தப் பணிகள் 2026-ம் ஆண்டுக்குள் முடிவடையும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், 63,246 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தி.நகர் மற்றும் […]
சென்னை மயிலாப்பூரில் இருந்து ஆவடி நோக்கி மின்சார ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த மின்சார ரயிலில் அரசு பள்ளி மாணவி ஒருவர் ஏரி படிக்கட்டின் அருகில் நின்று கொண்டு பயணம் செய்தார். அதன் பிறகு ரயில் வேகமாக செல்லத் தொடங்கிய போது நடைமேடை முடியும் வரை காலை தரையில் தேய்த்தவாறு ஆபத்தான முறையில் மாணவி பயணம் செய்தார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ரயில்கள் மற்றும் பேருந்துகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படியில் நின்று […]
ஈரோடு மாவட்ட சத்தியமங்கலத்தை அடுத்த வனப்பகுதியில் தேங்குமரஹடா, கள்ளம்பாளையம், அல்லிமாயாறு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் மாயாற்றை பரிசிலில் கடந்து தான் பவானி சங்கர், சத்தியமங்கலம் மற்றும் வெளியூருக்கு செல்ல முடியும். ஆனால் மழை நேரங்களில் மாயாற்றில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இது போன்ற நேரங்களில் ஆபத்தை உணராமல் பரிசிலினில் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை தொடர்ந்து […]
மாணவர்கள் தினம்தோறும் ஆபத்தான பயணம் மேற்கொள்வதால் பள்ளி, கல்லூரி நிர்வாகத்துடன் ஆலோசனை மேற்கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு அவர் அறிவித்துள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “பள்ளி ,கல்லூரி செல்லும் மாணவர்கள் தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர். இவ்வாறு பயணிப்பது உயிரிழப்பு மற்றும் பெருங்காயத்தை ஏற்படத்தக்கூடியது. எனவே இத்தகைய ஆபத்தான பயணங்களை தடுக்க வேண்டும் என்பதற்காக பள்ளி, கல்லூரி நிர்வாகத்திடம் […]