ஆப்கானிஸ்தானியர்கள் இந்தியா வருவதற்கு இ-விசா அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றியதை தொடர்ந்து அங்கிருந்து இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் மட்டுமின்றி அங்குள்ள மக்களும் வெளியேற முயற்சி செய்து வருகின்றனர். இந்தியர்களையும், தூதரக ஊழியர்களையும் மீட்டு வர மத்திய அரசு சிறப்பு விமானங்களை அனுப்பி வருகிறது. ஆப்கானிஸ்தானிலிருந்து அனைத்து இந்தியர்களையும் பத்திரமாக மீட்டு வருவதே அரசின் இலக்கு என்றும், கடைசி இந்தியர் மீட்டு அழைத்து வரப்படும் வரை ஆப்கானிஸ்தானுக்கு விமானங்கள் அனுப்பப்படும் என்றும் […]
Tag: ஆப்கானிஸ்தான் மக்கள்
ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து மீட்கப்பட்டிருக்கும், அந்நாட்டு மக்களுக்காக ஜெர்மனியில் தற்காலிகமாக தங்குமிடம் அமைக்கப்பட்டு வருகிறது. ஜெர்மன் நாட்டில், அமெரிக்கா அமைத்திருக்கும் Ramstein Air Base என்ற விமான தளத்தை தான் ராணுவ வீரர்கள் மற்றும் தன்னார்வலர்கள் சேர்ந்து தற்காலிக தங்கும் இடமாக மாற்றி வருகிறார்கள். இதற்காக, மக்கள் பலரும் டாய்லெட் பேப்பர், கால்பந்து போன்ற பல பொருட்களை நன்கொடையாக கொடுத்து வருகிறார்கள். இந்த விமான தளத்தில், ஐந்தாயிரம் மக்களை முதலில் தங்க வைக்கவுள்ளனர். அதன் பின்பு அவர்களை நிரந்தர […]
ஐ.நா. பொதுச் செயலாளரான அண்டோனியோ குட்ரெஸ் உலக நாடுகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் மக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். தலிபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆட்சியை கைப்பற்றியதையடுத்து பெரும்பாலான மக்கள் நாட்டிலிருந்து வெளியேறுவதற்காக விமான நிலையத்தை நோக்கி படையெடுத்து கொண்டிருக்கின்றனர். இதற்கிடையே ஆப்கானிஸ்தானில் உள்ள மக்கள் விமானத்தில் முண்டியடித்துக்கொண்டு ஏறுவது போன்ற காட்சிகள் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேலும் அமெரிக்க விமானம் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த 5 பேர் திடீரென நடுவானில் இருந்து கீழே விழுந்து […]
ஆப்கானிஸ்தானில் அதிகரித்து வரும் தலிபான்களின் பயங்கரவாதத்திலிருந்து தப்பிப்பதற்காக அந்நாட்டு மக்கள் வெளிநாட்டிற்கு செல்லும் நோக்கில் பாஸ்போர்ட் அலுவலகங்களை நோக்கி படையெடுத்து செல்கின்றன. ஆப்கானிஸ்தானை சேர்ந்த மக்கள் பலரும் அந்நாட்டில் அதிகரித்து வரும் தலிபான்களின் பயங்கரவாதத்திலிருந்து தப்பிப்பதற்காக வெளிநாட்டுக்கு செல்லும் நோக்கில் பாஸ்போர்ட் அலுவலகங்களை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். இதன் காரணமாக தினசரி பத்தாயிரம் பேராவது தலைநகர் காபூலில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அமெரிக்க படைகள் கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் […]