Categories
உலக செய்திகள்

மீட்பு விமானத்தில்…. தனது பிள்ளைகளுடன் தப்பித்த தாய்…. விமான நிலையத்தில் நடந்த நெகிழ்ச்சி தருணம்….!!

காபூல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட மீட்பு விமானம் ஒன்றில் ஒரு தாய் தனது மகள் மற்றும் மூன்று மகன்களுடன் பிரான்ஸ் நாட்டிற்கு தப்பி சென்றுள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி அந்நாட்டை கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்த 15 ஆம் தேதி கைப்பற்றியுள்ளனர். மேலும் ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரமான காபூலையும் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதனால் ஆப்கானிஸ்தான் முழுவதும் தலீபான்களின் கைவசம் சென்றுள்ளது. அதிலிருந்து ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் […]

Categories
உலக செய்திகள்

“பிற நாடுகளுடன் நட்புறவை ஏற்படுத்த விரும்புகிறோம்!”.. எங்கள் நாட்டு மக்களை பயமுறுத்துவதில்லை.. -தலீபான் முதன்மை தலைவர்..!!

தலிபான்களின் முதன்மை தலைவர்களில் ஒருவராக இருக்கும் அப்துல் கஹார் பால்கி உலக நாடுகளுடன், தலீபான்கள் நட்புறவை ஏற்படுத்த விரும்புவதாக கூறியிருக்கிறார். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் இரண்டாம் தடவையாக கைப்பற்றியிருப்பதால், அவர்களின் ஆட்சிக்கு அஞ்சி மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகிறார்கள். எனவே, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகள் ஆப்கானிஸ்தானில் இருக்கும் தங்கள் மக்களுடன் சேர்த்து அந்நாட்டு மக்களையும் மீட்டு வருகிறது. இந்நிலையில் தலிபான்களின் முதன்மை தலைவர்களில் ஒருவராக இருக்கும் அப்துல் கஹார் பால்கி, முதல் தடவையாக ஒரு […]

Categories
உலக செய்திகள்

வெடிகுண்டு தாக்குதலில்…. குடும்பத்தை இழந்த பெண்…. பிரித்தானியா அரசிடம் கோரிக்கை….!!

தற்கொலைப்படை தாக்குதலில் குடும்பத்தை இழந்த பெண் தனது குழந்தையை மீட்டுத் தருமாறு பிரித்தானியா அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். ஆப்கானிஸ்தானில் உள்ள விமான நிலையத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் படுகாயமடைந்தவர்களில் 19 வயதான Basbibi  என்பவரின் கைக்குழந்தையும் ஒன்று. இந்த குழந்தைக்கு இருபத்தி மூன்று மாதங்களே ஆகிறது. மேலும் இந்த வெடிகுண்டு தாக்குதலில்  Basbibiயின் கணவர் மற்றும் குழந்தையின் தாத்தாவான சுல்தான் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். தற்போது குழந்தை முகமதுவையும் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் குழந்தையின் […]

Categories
உலக செய்திகள்

சீல் வைத்த தலீபான்கள்…. மீண்டும் தாக்குதல் நடத்தப்படும்…. எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா அரசு….!!

காபூல் விமான நிலையத்திற்கு தலீபான்கள் சீல் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் முழு அதிகாரமும் தலீபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றுள்ளது. இதனால் அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டு மக்களை ஆப்கானில் இருந்து பாதுகாப்பாக வெளியேறி வருகின்றனர். மேலும் ஆப்கானைச் சேர்ந்தவர்களே தங்களது சொந்த நாட்டை விட்டு வெளியேறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் மீட்புப் பணிகளின் காரணமாக காபூல் விமான நிலையத்தில் மக்கள்  குவிந்துள்ளனர். மேலும் காவல் விமான […]

Categories
உலக செய்திகள்

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில்…. செயல்பட்ட வெளிநாட்டவர்கள்…. கைது செய்த தலீபான்கள்….!!

தலீபான்கள் காபூலில் செயல்பட்டு வந்த ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 4 ஆப்கானிஸ்தர்கள் மற்றும் 2 மலேசிய நாட்டவர்களை கைது செய்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி அந்நாட்டை கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்த 15 ஆம் தேதி கைப்பற்றியுள்ளனர். மேலும் ஆப்கானிஸ்தானில் முக்கிய நகரமான காபூலையும் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதனால் ஆப்கானிஸ்தானின் முழுவதும் தலீபான்களின் கைவசம் சென்றுள்ளது. அதிலிருந்து ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதனால் […]

Categories
உலக செய்திகள்

வடகொரியா போல் மாறும் ஆப்கானிஸ்தான்..! பிரபல பத்திரிக்கையாளர் கடும் எச்சரிக்கை… வெளியான பரபரப்பு தகவல்..!!

ஆப்கானிஸ்தானின் முன்னணி பத்திரிக்கையாளர் ஒருவர் தலிபான்கள் ஊடகத்தை முழுவதுமாக முடக்கி விடுவார்கள் என்ற கடும் எச்சரிக்கையினை முன் வைத்துள்ளார். பிரபல பத்திரிக்கையாளரான மசூத் ஹொசைனிக்கு கடந்த 2012-ஆம் ஆண்டு பிரான்ஸ்-பிரஸ் நிறுவனத்தில் பணியாற்றியதற்காக புலிட்சர் விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஹொசைனி ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியவுடன் விமானம் மூலம் காபூலில் இருந்து வெளியேறிவிட்டார். இதற்கிடையே ஹொசைனி வெளிநாட்டு பத்திரிகையாளர்களுடன் இணைந்து தலிபான்கள் சிறுமிகள் மற்றும் பெண்களை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொள்வது குறித்து சிறப்பு செய்தியினை வெளியிட்டிருந்தார். இது […]

Categories
உலக செய்திகள்

“மீட்பு பணிகளை முடித்துக்கொண்ட நாடுகள்!”.. தலீபான்கள் கட்டுப்பாட்டில் விமான நிலையம்.. காத்திருக்கும் மக்கள்..!!

காபூல் நகரில், பல நாடுகள் மீட்பு நடவடிக்கையை முடித்ததால், தலிபான்கள் விமான நிலையத்தின் அதிகமான பகுதியை அடைத்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடா, பிரிட்டன் போன்ற பல்வேறு நாடுகள், ஆப்கானிஸ்தானிலிருந்து, தங்கள் மக்களை மீட்கும் நடவடிக்கைகளை முடித்துவிட்டது. எனினும் தங்கள் நாட்டு மக்கள் உள்பட ஆப்கானிஸ்தானின் மக்களையும் கைவிட்டுத்தான் செல்கிறோம் என்பதையும் ஒப்புக்கொண்டு விட்டார்கள். ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி அன்று நாட்டை தலீபான்கள் கைப்பற்றினர். அதன்பின்பு, ஒட்டுமொத்தமாக ஒரு லட்சம் நபர்களை அங்கிருந்து மீட்டதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது. […]

Categories
உலக செய்திகள்

காபூல் நகரில் தாக்குதல் நடத்திய முக்கிய தீவிரவாதி கொலை.. அமெரிக்க இராணுவம் அதிரடி..!!

காபூல் விமான நிலையத்தில், 170 பேர் உயிரிழந்த கொடூரத் தாக்குதலுக்கு காரணமானவர்களை அமெரிக்க படை, ட்ரோன் தாக்குதல் மூலம் கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை, தலிபான்கள் கைப்பற்றி விட்டதால் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகிறார்கள். எனவே, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் குவிந்து காணப்படுகிறது. இந்நிலையில், காபூல் விமான நிலையத்திற்கு வெளியில் கடந்த வியாழக்கிழமை அன்று இரவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் அமைப்பு, தொடர்ந்து குண்டுவெடிப்பு தாக்குதல் மற்றும் துப்பாக்கிசூடு தாக்குதல் நடத்தியதில், அமெரிக்க […]

Categories
உலக செய்திகள்

மூடப்பட்ட தூதரகம்…. மீட்பு பணி நிறுத்தம்…. பிரபல நாடு வெளியிட்ட அறிக்கை….!!

ஜேர்மனி அரசு காபூலில் வெடிகுண்டு வெடிப்பதற்கு முன்பே ஆப்கானிஸ்தானில் உள்ள தனது தூதரகத்தை மூடி மக்களை மீட்கும் பணியை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி கடந்த 15 ஆம் தேதி கண்ணிமைக்கும் நேரத்தில் அந்நாட்டை கைப்பற்றி தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அதிலிருந்து ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதனையடுத்து ஆப்கானிஸ்தானில் இன்னும் ஜேர்மனி நாட்டை சேர்ந்த மக்கள் மற்றும் உள்ளூர் அலுவலர்கள் உட்பட […]

Categories
உலக செய்திகள்

பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கிய நாடு…. தொடரும் வன்முறைச் சம்பவங்கள்…. ஆபத்தில் இருக்கும் பொதுமக்கள்….!!

ஆப்கானில் ஆட்சி அமைக்கும் தலீபான்களுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினர் பெரும் சவாலாக இருப்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் முழு அதிகாரமும் தலீபான்களின் கையில் சிக்கியுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் தலீபான்களுக்கு அஞ்சி ஆப்கானை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக தப்பிச் செல்கின்றனர். மேலும் அங்குள்ள ஆப்கானியர்கள் அவர்களின் சொந்த நாட்டை விட்டு வெளியேறும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக காபூல் விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்துள்ளனர். இந்த நிலையில் […]

Categories
உலக செய்திகள்

வெளியேறும் ராணுவ படையினர்…. விருப்பம் தெரிவித்த தலீபான்கள்…. ஆலோசனையில் அமெரிக்கா அதிகாரிகள்….!!

அமெரிக்கா படையினர் வெளியேறினாலும் அவர்களின் தூதரக அதிகாரிகளில் ஒருவரையாவது விட்டுச் செல்லுமாறு தலீபான்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் முழு அதிகாரமும் தலீபான்களின் கையில் சென்றுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் ஆப்கானை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளுக்கு தப்பிச் செல்கின்றனர். மேலும் அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் தங்கள் நாட்டு மக்களை பாதுகாப்பாக ஆப்கானில் இருந்து வெளியேறி வருகின்றனர். இதற்கிடையில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று ஆப்கானை தலீபான்கள் கைப்பற்றிய பிறகு அமெரிக்கா தூதரக அதிகாரிகள் […]

Categories
உலக செய்திகள்

இதனை ஒரு வாரத்திற்குள் ஒப்படைக்க உத்தரவு…. காபூல் மக்களுக்கு…. தலீபான்கள் விடுத்த எச்சரிக்கை….!!

தலீபான்கள் காபூல் நகரத்தில் வாழும் மக்கள் வைத்திருக்கும் ஆயுதங்கள், வெடிபொருட்கள் உட்பட பிற அரசு பொருட்கள் அனைத்தையும் எமிரேட் அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல் நடத்தி அந்நாட்டை கடந்த 15 ஆம் தேதி கைப்பற்றியுள்ளனர். மேலும் ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அதிலிருந்து தலீபான்களின் ஆதிக்கம் ஆப்கானிஸ்தானில் அதிகரித்துள்ளது. இதனால் உயிருக்கு பயந்த ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் தவிக்கும் மக்கள்… கஷ்டத்தையும் காசாக்கும் அமெரிக்க நிறுவனம்… வெளியான பரபரப்பு தகவல்..!!

தனியார் அமெரிக்க நிறுவனம் ஒன்று ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற விரும்பும் மக்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதையடுத்து அந்நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்காக காபூல் விமான நிலையத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுவதற்கான காலக்கெடு முடிவடைவதாக தலிபான் பயங்கரவாதிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். மேலும் நோர்வே, கனடா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளும் மீட்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இருப்பினும் ஆப்கானிஸ்தானில் பிரித்தானியா, […]

Categories
உலக செய்திகள்

காபூல் விமான நிலையத்தில் வெடிக்குண்டு தாக்குதல்.. உயிரிழந்தோர் எண்ணிக்கை 175-ஆக அதிகரிப்பு..!!

காபூல் நகரின் விமான நிலையத்தில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 175 ஆக உயர்ந்திருக்கிறது. ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கட்டுப்பாட்டிற்கு சென்றது. எனவே, இந்தியா, அமெரிக்கா போன்ற பல நாடுகள் தங்கள் மக்களை ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்றி வருகிறது. மேலும், அந்நாட்டிலிருந்து வெளியேற நினைக்கும் மக்களுக்கும் உதவி வருகிறது. எனவே காபூல் விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில், மீட்புப் பணிகள் நடந்து கொண்டிருக்கும் போதே, விமான நிலையத்தில் ஐ.எஸ் தீவிரவாத […]

Categories
உலக செய்திகள்

காபூல் நகரிலிருந்து 12 மணிநேரத்தில் 4,200 மக்கள் வெளியேற்றம்.. வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவல்..!!

ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் இருந்து சுமார் 12 மணி நேரங்களுக்குள் 4200 நபர்கள் வெளியேற்றப்பட்டதாக வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை, தலிபான்கள் கைப்பற்றி விட்டார்கள். எனவே, அமெரிக்கா, இந்தியா இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் ஆப்கானிஸ்தானில் இருக்கும் தங்கள் மக்களை விமானங்கள் மூலம் மீட்டு வருகிறது. இதனால் காபூல் விமான நிலையம், அமெரிக்க படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இம்மாத இறுதிக்குள் காபூலில் மீட்புப்பணிகள் நிறுத்தப்படும் என்றும் தங்கள் […]

Categories
உலக செய்திகள்

ஆபத்தில் பொதுமக்கள்…. தொடரும் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் தாக்குதல்…. தேசிய பாதுகாப்பு மையம் எச்சரிக்கை….!!

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினர் மற்றொரு தாக்குதல் நடத்தப்போவதாக அமெரிக்கா தேசிய பாதுகாப்பு மையம் எச்சரிக்கை அளித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் முழு அதிகாரமும் தலீபான்களின் கையில் சிக்கியுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் ஆப்கானை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக தப்பிச் செல்கின்றனர். அதிலும் அமெரிக்கா, இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டு மக்களை அங்கிருந்து வெளியேறுவதில் தீவிர முனைப்பு காட்டி வருகின்றனர். இந்த நிலையில் காபூலில் உள்ள ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம்  […]

Categories
உலக செய்திகள்

காபூலில் பரபரப்பு…. ஐ.எஸ் அமைப்பின் வெடிகுண்டு தாக்குதல்…. உதவி கேட்டு கெஞ்சிய பிரபல நாட்டு சிறுவர்கள்….!!

ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் காபூல் விமான நிலையத்தை குறிவைத்து தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலீபான்கள் கடந்த 15 ஆம் தேதி கைப்பற்றியுள்ளனர். மேலும் ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரமான காபூலையும் கைப்பற்றியுள்ளனர். அதிலிருந்து ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரம் தலீபான்களின் வசம் சென்றுள்ளது. இதனால் உயிருக்கு பயந்த ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேற தொடர்ந்து போராடி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து மக்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறுவதற்காக […]

Categories
உலக செய்திகள்

வீட்டை முற்றுகையிட்ட தலீபான்கள்…. ஆப்கன் முதல் பெண் மேயர்…. பிரபல நாட்டுக்கு குடும்பத்துடன் தப்பியோட்டம்….!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் முதல் பெண் மேயர் Zarifa Ghafari தலீபான்களின் ஆட்சி அதிகாரத்திற்கு பயந்து ஜேர்மனிக்கு தனது குடும்பத்துடன் தப்பி சென்றுள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டின் முதல் பெண் மேயர் 29 வயதுடைய Zarifa Ghafari ஆவார். இவர் ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலை தலீபான்கள் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்த பின்னர் இங்கு நமது உயிருக்கு உத்தரவாதம் இல்லை என உணர்ந்து கொண்டார். இதனையடுத்து மேயர் Zarifa Ghafari அவரது குடும்பத்துடன் தலீபான்களின் கண்ணில் சிக்காமல் ஜேர்மனிக்கு செல்ல […]

Categories
உலக செய்திகள்

இதுதான் எங்கள் இரண்டாம் தாயகம்…. தலீபான்களின் செய்தி தொடர்பாளர்…. பேட்டியில் வெளியிட்ட தகவல்கள்….!!

தலீபான் அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஜபிகுல்லா முஜாகித் செய்தியாளர்களை சந்தித்து கொடுத்த பேட்டியில் பாகிஸ்தான் எங்களது இரண்டாவது தாயகம் எனவும் அந்நாட்டுடன் உறவை வளர்த்துக் கொள்ள விரும்புவதாகவும் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி அந்நாட்டை கண்ணிமைக்கும் நேரத்தில் கைப்பற்றியுள்ளனர். அதிலிருந்து ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. அதனால் உயிருக்கு பயந்த ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் சொந்த நாட்டிலிருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் ஆப்கானிஸ்தான் மக்கள் நாட்டை […]

Categories
உலக செய்திகள்

காபூலில் பரபரப்பு…. எச்சரிக்கை விடுத்த ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு…. பீதியில் மக்கள்….!!

காபூல் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தப் போவதாக ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி அந்நாட்டை கண்ணிமைக்கும் நேரத்தில் கைப்பற்றியுள்ளனர். அதிலிருந்து ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரம் முழுவதும் தலீபான்களின் கைவசம் சென்றுள்ளது. இதனால் தலீபான்களின் ஆதிக்கம் ஆப்கானிஸ்தானில் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக உயிருக்கு பயந்த ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

காபூல் விமானநிலையத்தில் 40 டாலருக்கு விற்கப்படும் தண்ணீர்.. பசியால் வாடிய குழந்தைகள்.. ஆறுதல் கொடுக்கும் இராணுவம்..!!

காபூல் விமானநிலையத்தில், அத்தியாவசிய பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதால், சில குழந்தைகள் தண்ணீரீன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்டார்கள். எனவே, தங்கள் ஆட்சியை நிலைநாட்ட தீவிரமாக பல நடவடிக்கைகளை செய்து வருகிறார்கள். எனவே அவர்களின் கொடூர ஆட்சிக்கு அஞ்சிய மக்கள் நாட்டிலிருந்து வெளியேறி வருகிறார்கள். எனவே, காபூல் விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் குவிந்து காணப்படுகிறது. இந்நிலையில், காபூல் விமான நிலையத்தின் வெளியில், ஒரு தண்ணீர் பாட்டில் 40 டாலர்களுக்கு விற்கப்படுகிறது. அதாவது […]

Categories
உலக செய்திகள்

விமான நிலையத்தில்…. தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள்…. தகவல் அளித்த அமெரிக்கா ஜெனரல்….!!

காபூல் விமான நிலையத்தில் பயங்கரவாத அமைப்பினர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆப்கானிஸ்தானின் முழு அதிகாரமும் தலீபான்களின் கையில் சிக்கியுள்ளது. இதற்கிடையில் நேற்று காபூல் விமான நிலையத்தில் இருந்த மக்கள் அனைவரும் வெளியேறும்படி அமெரிக்கா எச்சரிக்கை அளித்துள்ளது. இந்த நிலையில் நேற்று காபூலில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். அதிலும் காபூல் விமான நிலையத்தை சுற்றி ஒரு தண்ணீர் கால்வாய் அமைந்துள்ளது. இந்த கால்வாய் அங்குள்ள மக்களின் நீர் […]

Categories
உலக செய்திகள்

இன்றுடன் நிறைவு பெறும் பணி… பிரபல நாடு முக்கிய அறிவிப்பு… வெளியான பரபரப்பு தகவல்..!!

இன்று மாலையுடன் ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை பாதுகாப்பாக மீட்கும் பணி நிறைவு பெறுவதாக பிரான்ஸ் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைக்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர். இதற்கிடையே அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தங்கள் நாட்டு மக்களை விமானம் மூலமாக ஆப்கானில் இருந்து பாதுகாப்பாக மீட்டு வருகின்றனர். மேலும் அமெரிக்கா ஆப்கானிஸ்தானிலிருந்து மக்களை மீட்கும் பணி வருகின்ற 31-ஆம் தேதியோடு நிறைவுபெறும் என்று அறிவித்துள்ளது. அதன் பிறகு ஆப்கானிஸ்தானிலிருந்து மக்களை […]

Categories
உலக செய்திகள்

விமான நிலையத்தில் குண்டு வெடிப்பு…. கண்டனம் தெரிவித்த ஐ.நா.சபை…. அறிக்கை வெளியிட்ட இங்கிலாந்து பிரதமர்….!!

விமான நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு ஐ.நா.சபை கண்டனம் தெரிவித்துள்ளது. ஆப்கானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதை அடுத்து அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வந்தது. இதனையடுத்து தலைநகர் காபூல் போன்ற முக்கிய நகரங்கள் தலீபான்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ளது. மேலும் அவர்கள் புதிய ஆட்சியை அமைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அங்குள்ள மக்கள் ஆப்கானை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக தப்பிச் செல்கின்றனர். மேலும் இங்கிலாந்து அமெரிக்கா, ரஷ்யா, போன்ற  நாடுகள் தங்கள் […]

Categories
உலக செய்திகள்

காபூல் விமான நிலையத்தில்…. குண்டு வெடிப்பு தாக்குதல்…. 13 பேர் பலியான சோகம்….!!

விமான நிலையத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் 13 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் முழு அதிகாரமும் தலிபான்களின் கையில் சிக்கியுள்ளது. மேலும் அவர்கள் ஆப்கானில் புதிய ஆட்சி அமைக்கப்போவதால் அங்கிருந்து மக்கள் வெளியேறி வருகின்றனர். இதனால் காபூல் விமான நிலையத்தில் மக்கள் காத்து கிடக்கின்றனர். இந்த நிலையில் நேற்று  ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று குண்டு வெடிப்பு நிகழ்வு  நடந்துள்ளது. மேலும் இந்த குண்டு வெடிப்பானது விமான நிலையத்தின் நுழைவு […]

Categories
உலக செய்திகள்

‘ஆப்கானியர்கள் வெளியேறலாம்’…. சம்மதம் தெரிவித்த தலீபான்கள்…. உறுதிசெய்த ஜெர்மனி தூதர்….!!

அமெரிக்கா படைகள் வெளியேறிய பின்னும் ஆப்கானியர்கள் நாட்டை விட்டு வெளியேறலாம் என்று தலீபான்கள் கூறியுள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் முழு அதிகாரமும் தலீபான்களின் கையில் சிக்கியுள்ளது. இதனையடுத்து தலீபான்கள் புதிய ஆட்சி அமைக்கப் போவதாக கூறி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் பயந்து ஆப்கானில் இருந்து தப்பிச் செல்கின்றனர். மேலும் அமெரிக்கா, இந்தியா ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டு மக்களை விமானம் மூலம் ஆப்கானில் இருந்து பாதுகாப்பாக மீட்டு வருகின்றனர். இதனால் தலைநகர் காபூலில் உள்ள […]

Categories
உலக செய்திகள்

திறக்கப்பட்ட வங்கிகள்…. போதிய பணமில்லை…. நிதி நெருக்கடி ஏற்பட வாய்ப்பு….!!

வங்கிகளில் போதிய பணமில்லாத காரணத்தினால் மக்கள் ஏமாற்றம் அடைந்து சென்றனர். ஆப்கானில் 20 ஆண்டுகளாக தங்கியிருந்த அமெரிக்கா நேட்டோ படைகள் வெளியேறுவதை அடுத்து அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வந்தது. இந்த நிலையில் தலீபான்கள் தலைநகர் காபூல் மற்றும் முக்கிய இடங்களை கைப்பற்றி  தங்களின் அதிகாரத்தை நிலை நாட்டியுள்ளனர். மேலும் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளதால் அங்குள்ள பெரும்பாலான வங்கிகள் மூடப்பட்டன. இதனால் மக்களுக்கு பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பத்து நாட்களுக்கு பிறகு மீண்டும் வங்கி […]

Categories
உலக செய்திகள்

விமானம் மீது துப்பாக்கிச்சூடு…. பயணித்த ஆப்கானியர்கள்…. தகவல் வெளியிட்ட இத்தாலிய பாதுகாப்புத்துறை….!!

ராணுவ போக்குவரத்து விமானம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக இத்தாலிய பாதுகாப்புத்துறை அமைச்சரகம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் முழு அதிகாரமும் தலீபான்களின் கையில் சென்றுள்ளது. இதனால்  அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பியா போன்ற நாடுகள் தங்கள் நாட்டு மக்களை வெளியேற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆப்கானில் தங்கியுள்ள அனைத்து படைகளும் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என்று தலீபான்கள் எச்சரித்துள்ளனர். இதற்கிடையில் காபூல் விமான நிலையத்தில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தவுள்ளதாக நம்பத்தகுந்த […]

Categories
உலக செய்திகள்

இசைக்கு தடை விதிப்பு…. தலீபான்களின் செய்தி தொடர்பாளர் பேட்டி…. செய்தி வெளியிட்ட பிரபல பத்திரிக்கை….!!

தலீபான்களின் செய்தி தொடர்பாளர் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு பேட்டி அளித்துள்ளார். ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றிய நிலையில் அங்கு அவர்களின் அதிகாரம் கொடி கட்டி பறக்கிறது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் பெண்களின் நிலைமை கேள்விக்குறியாகியுள்ளது. இந்த நிலையில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையிடம்  தலீபான்களின் செய்தி தொடர்பாளர் Zabihullah Mujahid பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது “இஸ்லாமியத்தில் இசைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மக்கள் புரிந்து கொள்வதற்காக அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படமாட்டாது. […]

Categories
தேசிய செய்திகள்

ஆப்கானிஸ்தானில் இருந்து… இந்தியர்களை மீட்கும் பணி மிகவும் சவாலாக இருந்தது… வெளியுறவுதுறை மந்திரி ஜெய்சங்கர்…!!!

ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியர்களை மீட்கும் பணி மிகவும் சவாலாக இருந்ததாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஆப்கானிஸ்தானில் நிலவும் நிலவரம் குறித்து மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது: “ஆப்கானிஸ்தானில் இருந்த இந்தியர்களை மீட்கும் பணி மிகவும் சவாலாக இருந்தது. ஆப்கானிஸ்தான் மக்களுடன் நட்புறவு தொடர வேண்டும் என்பதே இந்தியாவின் நீண்ட கால திட்டம். ஆப்கானிஸ்தானிலிருந்து இந்திய மக்களை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றது. விரைவில் […]

Categories
உலக செய்திகள்

தலீபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள்…. அழுத்தம் கொடுக்கும் பல நாடுகள்…. வேண்டுகோள் விடுத்த பிரபல நாட்டு சேன்ஸலர்….!!

ஜேர்மன் நாட்டு சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தலீபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா உட்பட பல நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி கண்ணிமைக்கும் நேரத்தில் அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர். அதிலிருந்து அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதனையடுத்து தலீபான்களின் ஆட்சி அதிகாரத்திற்கு பயந்த ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேற தொடர்ந்து போராடி வருகின்றனர். […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டு சிஐஏ…. தலீபான் தலைவருடன் இரகசிய சந்திப்பு…. வெளியான தகவல்கள்….!!

அமெரிக்காவின் சிஐஏ தலீபான்களின் முக்கிய தலைவரை ரகசியமாக சந்தித்து பேசியதாக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர். அதிலிருந்து தலீபான்களின் ஆதிக்கம் அங்கு அதிகரித்துள்ளது. அதனால் உயிருக்கு பயந்த ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக காபூல் விமான நிலையத்தில் கூடியுள்ளனர். இதனையடுத்து தலீபான்கள் புதிய ஆட்சி அமைப்பது […]

Categories
உலக செய்திகள்

செய்தி தொடர்பாளர் கொடுத்த பேட்டி…. மக்கள் தாயகம் திரும்ப அழைப்பு…. உறுதி அளித்த தலீபான்கள்….!!

தலீபான்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய மக்களை மீண்டும் இங்கே திரும்புமாறு அழைப்பு விடுத்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர். அதிலிருந்து ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரம் முழுவதும் தலீபான்களின் வசம் சென்றுள்ளது. இதனால் உயிருக்கு பயந்த மக்கள் தனது சொந்த நாடான ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் தலீபான்கள் குழுவின் செய்தி தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். அந்த பேட்டியில் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவுக்குள் பயங்கரவாதிகளை… எந்த காரணத்தைக் கொண்டும் ஊடுருவ விட மாட்டோம்… முப்படை தளபதி உறுதி…!!!

தெற்கு ஆசியாவில் பயங்கரவாதம் என்ற சூழல் உருவாகாமல் இருக்க வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக இருப்பதாக முப்படைத் தளபதி உறுதி தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி ஆட்சி செய்து வருகின்றது. அங்கு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பயங்கரவாதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே ஆப்கானிஸ்தானிலிருந்து பயங்கரவாதிகள் பக்கத்து நாடுகளான இந்தியாவிற்கு ஊடுருவ முயற்சி செய்வதாக தகவல் கிடைத்துள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து பயங்கரவாதிகளை, இந்தியாவிற்குள் ஊடுருவச் விட மாட்டோம் என்று முப்படை தளபதி விபின்ராவத் தெரிவித்துள்ளார். தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றுவார்கள் என்று இந்தியா எதிர்பார்த்தது, […]

Categories
உலக செய்திகள்

ஆப்கனை கைப்பற்றிய தலிபான்கள்…. உலக வங்கியின் அதிரடி முடிவு…. தகவல் வெளியிட்ட செய்தி தொடர்பாளர்….!!

தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றியுள்ள நிலையில் தற்போது உலக வங்கி அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலை தலிபான்கள் கைப்பற்றி அங்கு ஆட்சி அமைப்பது தொடர்பாக தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இதனால் உலக நாடுகள் அனைத்தும் தலிபான்களுக்கு எதிராக தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் உலக வங்கி அதிரடியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு தற்போது வரை வழங்கி வந்த நிதி உதவியை இனி அளிக்கப் […]

Categories
உலக செய்திகள்

விரைவில் நிறைவு பெறும் பணி… ஜனாதிபதி அளித்த பேட்டி… வெளியான முக்கிய தகவல்..!!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானில் உள்ள மக்களை மீட்கும் பணி நிறைவு பெறும் என்று தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஜோ பைடன் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் திரும்பப் பெறுவதோடு, ஆப்கானிஸ்தான் மக்கள் மற்றும் அமெரிக்க குடிமக்களை காபூலில் இருந்து வெளியேற்றும் பணி நிறைவு பெறும் என்று தெரிவித்துள்ளார். மேலும் தலிபான்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு அளிப்பதினை பொறுத்து ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் இந்த பணிகள் நிறைவு பெறும் என்று பத்திரிகையாளர் […]

Categories
தேசிய செய்திகள்

“ஆப்கானிஸ்தான் மக்கள் இந்தியா வர இ-விசா கட்டாயம்”… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!

ஆப்கானிஸ்தானில் உள்ள மக்கள் இந்தியாவிற்கு வருவதற்கு விசா கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் அங்கிருந்து இந்தியா வர விரும்புபவர்களுக்கு விசா கட்டாயம் என்று தெரிவித்துள்ளது. மேலும் இதற்காக மத்திய அரசு மின்னணு விசாவை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஆப்கானிஸ்தான் மக்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட விசாக்கள், தற்போது அவர்கள் இந்தியாவில் இல்லாத பட்சத்தில் உடனடியாக ரத்து செய்யப்படும். இனி ஆப்கானிஸ்தான் மக்கள் இந்தியாவிற்கு […]

Categories
உலக செய்திகள்

வெளியேறும் அமெரிக்கா படைகள்…. சீனத் தூதரிடம் பேச்சுவார்த்தை…. காபூலில் சந்திப்பு….!!

சீனத் தூதரிடம் தலீபான்களின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அப்துல் சலாம் ஹனாபி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து நேட்டோ படைகள் வெளியேறுவதை அடுத்து அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்தது. இதனை அடுத்து தலீபான்கள் ஆப்கானிஸ்தானை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். இதனால் அங்குள்ள அமெரிக்கா, இந்தியா, மற்றும் ஐரோப்பியா நாடுகளைச் சேர்ந்த மக்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் தலீபான்கள் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் அமெரிக்கா படைகள் […]

Categories
உலக செய்திகள்

தலீபான்களின் கொடூர திட்டத்தில் தப்பிய நபர்.. 10 வருடமாக புகலிடக்கோரிக்கை ஏற்க மறுப்பு.. பிரிட்டனில் தவிப்பு..!!

தலிபான்களின் பயங்கர திட்டத்திலிருந்து, ஒரு வழியாக தப்பி தன் 14 வயதில் பிரிட்டன் வந்த இளைஞர், 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மரண பீதியில் இருக்கிறார். ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து தப்பி, 10 வருடத்திற்கு முன் பிரிட்டன் வந்த சஜித் என்பவரின், புகலிட கோரிக்கை தற்போது வரை பிரிட்டன் அரசால் ஏற்கப்படவில்லை. இந்நிலையில், தன்னை மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி விடுவார்கள் என்ற பயத்தில் இருக்கிறார் சஜித். இவர், தன் 13 வயதில் ஆப்கானிஸ்தானில் ஒரு பள்ளியில் படித்து வந்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா மீது குற்றச்சாட்டு…. கனடா படைகள் வெளியேறாது…. பிரபல நாட்டு பிரதமர் உறுதி….!!

ஆப்கானிஸ்தானில் இருந்து கனடா படைகள் வெளியேறாது என அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ திட்டவட்டமாக அறிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலீபான்கள் கடந்த 15 ஆம் தேதி கைப்பற்றியுள்ளனர். அதிலிருந்து அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. அதனால் உயிருக்கு பயந்த மக்கள் ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றி இதற்கு முக்கிய காரணம் அமெரிக்காதான் என்று பல நாடுகளிலிருந்து குற்றசாட்டுகள் எழும்பியுள்ளது. ஆனால் அமெரிக்கா அந்த குற்றசாட்டுகளை சிறிதும் கூட […]

Categories
உலக செய்திகள்

உக்ரேனிய மீட்பு விமானம்…. கடத்தப்பட்டதா….? இல்லையா….? வெளியான தகவல்கள்….!!

காபூல் விமான நிலையத்திலிருந்து மக்களை மீட்பதற்காக சென்ற உக்ரேனிய விமானம் கடத்தப்பட்டதாக கூறப்பட்டதையடுத்து அது பத்திரமாக தரையிறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலீபான்கள் கடந்த 15 ஆம் தேதி கைப்பற்றியுள்ளனர். இதனால் ஆட்சி அதிகாரம் முழுவதும் தலீபான்களின் கைவசம் சென்றுள்ளது. அதனால் உயிருக்கு பயந்த மக்கள் ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக காபூல் விமான நிலையத்தில் குவிந்துள்ளனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பான சூழல் தொடர்ந்து நிலவி வருகின்றது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானிலிருந்து சொந்த நாட்டு மக்களை […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான் மக்கள் வருவதை எதிர்த்து போராட்டம்.. நெதர்லாந்தில் பரபரப்பு..!!

ஆப்கானிஸ்தான் அகதிகள், தங்கள் நாட்டிற்கு வருவதை எதிர்த்து நெதர்லாந்தில் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து முதலில் வெளியேற்றப்பட்ட மக்கள் நேற்று மதியம் நெதர்லாந்து நாட்டிற்கு வந்துள்ளனர். ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் மக்களுக்காக நெதர்லாந்தில் அவசர முகாம்கள் 4 அமைக்கப்பட்டிருக்கிறது. இதில், Harskamp-ல் இருக்கும் ராணுவ முகாமும் இருக்கிறது. ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து, வந்த 800 நபர்களை இந்த முகாமில் தங்க வைக்க நெதர்லாந்து அரசு முடிவெடுத்தது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் மக்கள் வருவதை எதிர்த்து […]

Categories
உலக செய்திகள்

‘பொதுமக்கள் போராட வேண்டும்’…. முன்னாள் உள்துறை அமைச்சர்…. ட்விட்டர் பக்கத்தில் பதிவு….!!

தலீபான்கள் அனைவரையும் கொன்று வருவதாக ஆப்கானின் முன்னாள் உள்துறை அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாடானது தலீபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றுள்ளது. இதனால் அங்குள்ள பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிறு குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் என்று அனைவரையும் பாகுபாடின்றி தலீபான்கள் கொன்று வருகின்றனர். மேலும் இத்தகைய செயல் முறைகளினால் தலீபான்கள் ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்ய முடியாது என்று முன்னாள் உள்துறை அமைச்சர்  Masoud Andarabi கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதில் […]

Categories
உலக செய்திகள்

பெண்கள் கால்பந்து அணி…. பீதியில் ஆப்கான் வீராங்கனைகள்…. தகவல் தெரிவித்த பயிற்சியாளர்….!!

ஆப்கானிஸ்தான் கால்பந்து அணியில் விளையாடிய வீராங்கனைகள் தலீபான்கள் தங்களை அடையாளம் கண்டு சித்திரவதை செய்வார்கள் என்ற அச்சத்தில் உள்ளனர். ஆப்கானிஸ்தான் கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் 2001 வரை தலீபான்களின் பிடியில் தான் இருந்ததுள்ளது. அப்போது கால்பந்து போன்ற பல விளையாட்டுகளுக்கு தலீபான்கள் தடைவிதித்துள்ளனர். மேலும் ஆண்களின் துணை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே சென்ற பெண்கள் கொடூரமாக பாலியல் வன்புணர்தலுக்கு ஆளாக்கப்பட்டார்கள். இதனையடுத்து தலீபான்களின் ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு ஆப்கானிஸ்தான் மக்கள் சுதந்திரமாக […]

Categories
உலக செய்திகள்

காபூலில் பரபரப்பு…. பிரித்தானியா இளைஞருக்கு…. கொலை மிரட்டல் விடுத்த தலீபான்கள்….!!

பிரித்தானியா இளைஞருக்கு தலீபான்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலீபான்கள் கடந்த 15 ஆம் தேதி கைப்பற்றியுள்ளனர். இதனால் ஆட்சி அதிகாரம் முழுவதும் தலீபான்களின் வசம் சென்றுள்ளது. அதனால் தலீபான்களின் ஆட்சி பிடியில் சிக்கி விடக்கூடாது என்று ஆப்கானிஸ்தானை சேர்ந்த மக்கள் தங்கள் உயிருக்கு பயந்து தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இதன் காரணமாக காபூல் விமான நிலையத்தில் அலைமோதும் மக்கள் கூட்டத்தினால் அங்கு பரபரப்பான சூழல் தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

பிரித்தானியப் படைகள் ஒரு வாரத்திற்குள் வெளியேற உத்தரவு…. எச்சரிக்கை விடுத்த தலீபான்கள்…. அமெரிக்க அதிபரின் முடிவு….!!

ஆப்கானிஸ்தானிலிருந்து பிரித்தானியப் படைகள் ஒரு வாரத்திற்குள் வெளியேறவில்லையென்றால் போர் நடத்த போவதாக தலீபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலீபான்கள் கடந்த 15 ஆம் தேதி கைப்பற்றியுள்ளனர். அதிலிருந்து அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தலீபான்களின் செய்தி தொடர்பாளர்  Suhail Shaheen என்பவர் கடந்த 24 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்து பேசும் பொழுது அவர் கூறுயதாவது “ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற விரும்பும் மக்கள் வருகின்ற செப்டம்பர் மாதம் எந்த நாடு அவர்களுக்கு விசா அளிக்க தயாராக […]

Categories
உலக செய்திகள்

புல்லிட்சர் விருது பெற்ற நாயகன்…. டேனிஸ் சித்திக்கின் இறுதி தருணம்…. வெளிவந்த புகைப்படம்….!!

இந்திய புகைப்பட கலைஞரின் மரணம் குறித்து அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்தியாவிலுள்ள மும்பையைச் சேர்ந்தவர் டேனிஸ் சித்திக் என்ற புகைப்படக் கலைஞர். இவர் மும்பையில் உள்ள ராய்ஸ்டர் பத்திரிக்கையில் பணிபுரிந்துள்ளார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு ரோஹிங்கியா அகதிகள் பிரச்சனையை ஆவணப்படுத்தி காட்டியதற்காக உயரிய விருதான புல்லிட்சர் விருது பெற்றார். இதனையடுத்து இவர் ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் நடத்தும் தாக்குதலை பற்றி தகவல் சேகரிக்க அங்கு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து தலீபான்களிடம் சிக்கிய காவல் அதிகாரி ஒருவரை […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

ஆப்கான் மக்களே… இந்தியாவுக்கு வர வேண்டுமா… உடனே இ-விசா பெறுங்க… மத்திய அரசு..!!

இந்தியாவிற்கு வர விரும்பும் ஆப்கானியர்கள் உடனடியாக இ-விசா பெற வேண்டும் என்று  மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.. ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் முற்றிலும் கைப்பற்றி விட்டனர்.. தலிபான்களின் கொடூர ஆட்சிக்கு பயந்து அந்நாட்டு மக்கள் அனைவரும் விமான நிலையங்களில் குவிந்து வருகின்றனர்.. இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் விமானங்களில் ஏறி இ-விசா எதுவும் இல்லாமல் அந்நாட்டு மக்கள் தப்பித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தியாவிற்கு வர விரும்பும் ஆப்கானியர்கள் உடனடியாக இ-விசா பெற விண்ணப்பிக்க வேண்டும் என்றும், […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானியர்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஸ்பெயின் …. அதிர்ச்சியில் ஆப்கான் மக்கள் ….!!!

அனைத்து ஆப்கானிய மக்களையும் நாட்டிலிருந்து வெளியேற்ற முடியாது என ஸ்பெயின் எச்சரித்துள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த நிலையில் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.இதனால் அங்குள்ள குடிமக்களையும் தங்களுக்கு உதவி செய்த ஆப்கானியர்களையும் நாட்டிற்கு அழைத் து வரும் பணியில் மற்ற நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குப் பிறகு வெளிநாட்டுப் படைகள் ஆப்கானில் இருக்கக்கூடாது என தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டு தூதரகங்களில் பணியாற்றி […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானின் இந்த நிலைக்கு காரணம் இவங்கதான் …. சீனாவின் பரபரப்பு குற்றச்சாட்டு….!!!

ஆப்கானில் மனித உரிமை மீறல்களுக்கு அமெரிக்கா,பிரித்தானியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் மீது சீனா குற்றம்சாட்டியுள்ளது . ஜெனிவாவில் உள்ள ஐநாஅலுவலகத்துக்கான சீனத் தூதர் சென் சூ ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலிடம் அமெரிக்கா , பிரிட்தானியா மற்றும் ஆஸ்திரேலியாவின் ராணுவத்தினர் ஆப்கானில் நடத்திய மனித உரிமை மீறல் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் இராணுவ படைகளின் சட்டவிரோதமான நடவடிக்கைகளுக்கும் மேற்கண்ட நாடுகள் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். […]

Categories

Tech |