Categories
உலக செய்திகள் சற்றுமுன் தேசிய செய்திகள்

ஆப்கானில் சிக்கிய இந்தியர்கள்…! என்ன செய்யலாம் ? தீவிர ஆலோசனையில் இந்தியா …!!

ஆப்கானிஸ்தான் காபூல் விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் காபூல் விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால் அங்கு சிக்கி கொண்டுள்ள இந்தியர்களை மீட்பதில் சிக்கல் எழுந்துள்ளது. வெளியுறவுத்துறை தரப்பில் பேச்சு வார்த்தை என்பதைத்தான் முதலில் தொடங்க வேண்டும்.  ஏனென்றால் அஷ்ரப் கனியை  தான் இந்தியா ஆதரித்து வந்தது. தற்போது அவர் நாட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும்,  அங்கு இருக்கக்கூடிய ஆப்கான் படைகள் தொடர்ந்து தாலிபான்களிடம் சரண் அடைந்து வருவதால் அங்கு இருக்கக்கூடிய மக்களுக்கு பாதுகாப்பு […]

Categories
உலக செய்திகள்

அதிகமாகும் மக்கள் கூட்டம்… காபூல் விமான சேவை ரத்து….!!

ஆப்கான் தலைநகர் காபூலில் இருந்து புறப்படும் அனைத்து விமானமும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது ஆப்கானிஸ்தானில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தலிபான்களுக்கும் அரசுப்படைகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது.. அரசுப்படைகளுடன் இணைந்து அமெரிக்கப்படைகளும் போரிட்டு வந்தனர்.. இந்த சூழலில் அமெரிக்கப்படைகள் அங்கிருந்து திரும்ப பெறப்படும் என அதிபர் பைடன் அறிவித்தார்.. அதன் தொடர்ச்சியாக பல்வேறு நகரங்களையும், மாகாணங்களையும் தலிபான்கள் கைப்பற்றி வந்த சூழ்நிலையில் காபூல் நகரத்தையும் அவர்கள் கைப்பற்றினர்.. குடியரசுத் தலைவரான அஷ்ரப் கனி நாட்டை […]

Categories
உலக செய்திகள்

காபூலில் ஆட்சியமைக்கும் தலீபான்கள்.. மக்களின் நிலை என்ன..? வீடியோ வெளியிட்ட போராளிகள்..!!

ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூல் நகரின் நிலை எவ்வாறு இருக்கிறது என்பது தொடர்பில் பொதுமக்களிடம் கருத்து கேட்டு தலீபான்கள் வீடியோ வெளியிட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதி அரண்மனைக்குள் தலிபான் தீவிரவாதிகள் நுழைந்தனர். அவர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. எனவே ஜனாதிபதி அஷ்ரப் கனி ஜனாதிபதி மாளிகையிலிருந்து வெளியேறிவிட்டார். எனவே தலிபான்களின் கைக்கு ஆட்சி மாறியது. காபூல் நகரின் எல்லையை தலிபான்கள் சூழ்ந்திருந்த நிலையில், அவர்களை நகருக்குள் செல்ல தலிபான்களின் தலைமை உத்தரவிட்டிருக்கிறது. அதன்பின்பு தலிபான்கள் காபூலுக்குள் நுழைந்தனர். நகர் […]

Categories
உலக செய்திகள்

அதிபர் மாளிகையில் உரை…. அமைதியான அரசாங்கம் உருவாகும்…. காணொளி வெளியிட்ட தலீபான்கள் அமைப்பு….!!

ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதை அடுத்து அந்நாட்டில் உள்ள அதிபர் மாளிகையில் தலீபான்கள் அமைப்பின் தலைவர் உரையாற்றியுள்ளார். ஆப்கானிஸ்தானை தலீபான்கள் முழுவதுமாக கைப்பற்றியதை தொடர்ந்து அதிபர் அஷ்ரப் கனி அந்நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார். இதனை அடுத்து ஆப்கானிஸ்தான் மக்களும் அங்கிருந்து வெளியேற தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் நேற்று காபூல் நகருக்குள் நுழைந்த தலீபான்கள் தங்களது வெற்றியை கொண்டாடும் விதமாக அதிபர் மாளிகைக்குள் சென்று உரை ஒன்றை காணொளி மூலம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர். அதில் காபூலை கைப்பற்றி அதிபரை பதவியிலிருந்து விலக செய்தது […]

Categories
தேசிய செய்திகள்

காபூல் விமான நிலையத்தில் துப்பாக்கிசூடு – 2 பேர் பலி…!!!

ஆப்கானிஸ்தானில் காபூல் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். காபூர் விமான நிலையத்தில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. காபூல் வான்வெளி மூடப்பட்டதால் இந்தியாவில் இருந்து சற்று நேரத்தில் புறப்பட இருந்த விமானம் ரத்து செய்யப்பட்டது. இதனால் ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள 200க்கும் மேற்பட்ட சீக்கியர்களையும், அங்குள்ள அனைத்து இந்தியர்களையும் பத்திரமாக மீட்கக்கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் […]

Categories
உலக செய்திகள்

பெண்களின் உரிமைகளை மதிப்போம்..! தலிபான் பயங்கரவாதிகள் சபதம்… வெளியான முக்கிய தகவல்..!!

தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்கள் பர்தா அணிவது கட்டாயம் ஆக்கப்படும் என்று கூறியுள்ளனர். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதற்கு பிறகு தலிபான்களின் ஆதிக்கம் அந்நாட்டில் அதிகரித்து கொண்டே வருகிறது. இதற்கிடையே ஐ.நா. சுமார் ஆயிரம் அப்பாவி மக்கள் ஒரே மாதத்தில் கொலை செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் அரசு படைகள் தலிபான்களை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. இதற்கிடையே தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றனர். […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

BREAKING: ஆப்கானில் பெரும் பரபரப்பு…. இந்தியர்களை மீட்பதில் சிக்கல்… !!

காபூல் விமான நிலையம் மூடப்பட்டதால் ஆப்கானிஸ்தானில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. நேற்று 129 பேர் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்ட நிலையில்,  இன்று மேலும் ஒரு விமானம் 12.30க்கு காபூலுக்கு செல்ல இருந்தது. தற்போது அந்த விமான நிலையம் மூடப்பட்டதால் இந்தியர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. காபூல் விமான நிலையத்தில் தற்போது விமானங்கள் தரை இறங்குவதற்கான வாய்ப்பு கள் முற்றிலுமாக இல்லை என்பதுதான் அங்கிருந்து வரக்கூடிய தகவலாக இருக்கிறது. ஏனென்றால் மக்கள் கூட்டம் ஆயிரக்கணக்கில்….  லட்சக்கணக்கில் […]

Categories
உலக செய்திகள்

இதெல்லாம் தேவையா..? ஆப்கானிஸ்தானில் சிக்கி தவிக்கும் பிரித்தானிய மாணவர்… வெளியான பரபரப்பு தகவல்..!!

பிரித்தானிய மாணவர் ஒருவர் வேண்டுமென்றே ஆப்கானிஸ்தானுக்கு சென்று தற்போது நாடு திரும்ப முடியாமல் சிக்கி தவிக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள பிர்மிங்காம் என்ற நகரத்தில் வசித்து வரும் மைல்ஸ் ரௌட்லெட்ஜ் (21) எனும் மாணவன் கடந்த வாரம் விடுமுறையை கொண்டாடுவதற்காக கூகுளில் “மிகவும் ஆபத்தான நாடு” என்று தேடி பிடித்து ஆப்கானிஸ்தானுக்கு சென்றுள்ளார். ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆதிக்கம் அதிகரித்து வருவதால் பிரித்தானிய அரசாங்கம் அந்நாட்டில் இருக்கும் தங்கள் நாட்டு மக்களை உடனடியாக வெளியேறும் […]

Categories
உலக செய்திகள்

ஆப்கான் போர் முடிவுக்கு வந்ததாக தலிபான்கள் அறிவிப்பு…. வேதனையுடன் வெளியேறும் மக்கள்…..!!!!

தலிபான்கள் நேற்று தலைநகர் காபூலை கைப்பற்றியதை தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசமாகமாறியது. அதிபர் அஷ்ரப் கனி ஆப்கனில் இருந்து வெளியேறிய நிலையில் தலிபான்கள் வசம் ஆட்சிப் பொறுப்பு சென்றது. இதனைத்தொடர்ந்து, அந்நாட்டு மக்கள் பலர் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆட்சியை கைப்பற்றிய நிலையில் போர் முடிவுக்கு வந்ததாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.தலிபான்கள் ஆட்சி பொறுப்பை ஏற்றதால், காபூல் நகருடனான விமானப் போக்குவரத்தை பெரும்பாலான நாடுகள் ரத்து செய்து விட்டன.அதுமட்டுமின்றி ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற […]

Categories
உலக செய்திகள்

BREAKING : ஆப்கானில் சிக்கிய இந்தியர்கள்… புறப்படுகிறது அடுத்த விமானம்…!!

இந்தியாவிலிருந்து  ஆப்கானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க விமானம் செல்கிறது.. ஆப்கானிஸ்தானில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தலிபான்களுக்கும் அரசுப்படைகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது.. அரசுப்படைகளுடன் இணைந்து அமெரிக்கப்படைகளும் போரிட்டு வந்தனர்.. இந்த சூழலில் அமெரிக்கப்படைகள் அங்கிருந்து திரும்ப பெறப்படும் என அதிபர் பைடன் அறிவித்தார்.. அதன் தொடர்ச்சியாக பல்வேறு நகரங்களையும், மாகாணங்களையும் தலிபான்கள் கைப்பற்றி வந்தனர்.. அதனை தொடர்ந்து காபூல் நகரமும் அவரது கட்டுப்பாட்டில் வந்துவிட்டது.. குடியரசுத் தலைவரான அஷ்ரப் கனி நாட்டை விட்டு […]

Categories
உலக செய்திகள்

BREAKING : ஆப்கானில் போர் முடிவுக்கு வந்துவிட்டது – தலிபான்கள்..!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் போர் முடிவுக்கு வந்ததாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.. ஆப்கானிஸ்தானில் கடந்த 20 வருடங்களாக தலிபான்களுக்கும் அரசுப்படைகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது.. அரசுப்படைகளுடன் இணைந்து அமெரிக்கப்படைகளும் போரிட்டு வந்தனர்.. இந்த சூழலில் அமெரிக்கப்படைகள் அங்கிருந்து திரும்ப பெறப்படும் என அதிபர் பைடன் அறிவித்தார்.. அதன் தொடர்ச்சியாக பல்வேறு நகரங்களையும், மாகாணங்களையும் தலிபான்கள் கைப்பற்றி வந்தனர்.. அதனை தொடர்ந்து காபூல் நகரமும் அவரது கட்டுப்பாட்டில் வந்துவிட்டது.. குடியரசுத் தலைவரான அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறி […]

Categories
உலக செய்திகள்

தலைநகரை கைப்பற்றிய தலீபான்கள்…. நிபந்தனையற்ற அதிகாரம்…. பதவி விலகிய அதிபர் அஷ்ரப் கனி….!!

தலீபான்கள் நாட்டின் அதிகாரத்தையும் கைப்பற்றியதால் அதிபர் அஷ்ரப் கனி பதவி விலகியுள்ளார். ஆப்கானிஸ்தானில் அமெரிக்க நேட்டோ படைகள் வெளியேறியதை தொடர்ந்து அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வந்தது. இதனால் தலீபான்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள பல்வேறு மாகாணங்களை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். அதில் நாட்டின் முக்கிய நகரான கந்தகாரையும் கைப்பற்றினர். இதனை அடுத்து தலைநகர் காபூலை கைப்பற்றும் நோக்கில் தீவிர ஆர்வம் காட்டி வந்தனர். மேலும் காபூலை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை தலீபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

வெளியேறும் பொதுமக்கள்….. அதிகார கைமாற்றத்திற்கு முன்வந்துள்ள அதிபர்…. தகவல் வெளியிட்ட ஆப்கான் அமைச்சர்….!!

அதிகார கைமாற்றத்திற்கு அதிபர் அஷ்ரப் கனி முன்வந்துள்ளதாக ஆப்கான் உள்விவகாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நேட்டோ படைகள் வெளியேறுவதை தொடர்ந்து அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் தலீபான்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள பல்வேறு மாகாணங்களை கைப்பற்றிவிட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் தலைநகர் காபூல் தலீபான்களால் கைப்பற்ற நேரும் என்பதால் அங்கிருந்து பொதுமக்கள் வெளியேறத் தொடங்கியுள்ளனர். அது மட்டுமின்றி தலீபான்கள் முக்கிய பகுதி ஒன்றையும் கைவசப்படுத்தி தலைநகரையும் கைப்பற்ற தயாராகிவிட்டனர். இருப்பினும் தலைநகர் காபூலை […]

Categories
உலக செய்திகள்

காபூல் நகரில் நுழைந்த தலீபான்கள்.. அரவணைத்து ஆரவாரமிட்ட மக்கள்.. வெளியான பரபரப்பு வீடியோ..!!

ஆப்கானிஸ்தானின் காபூல் நகரை தலிபான் தீவிரவாதிகள் ஆக்கிரமித்த நிலையில் ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஆப்கானிஸ்தானில், தலிபான்களின் ஆதிக்கம் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. நாட்டின் பல பகுதிகளை அவர்கள் கைப்பற்றி வருகிறார்கள். அதன்படி தற்போது பிற நாட்டின் தூதரகங்கள் உள்ள முக்கிய நகரமான காபூலை இன்று சூழ்ந்துள்ளார்கள். https://twitter.com/SufyanARahman/status/1426884575108677634 இதனைத்தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியான Ashraf Ghani ராஜினாமா செய்ததாகவும், 20 வருடங்களுக்குப் பிறகு நாட்டில் தலிபான்களின் ஆட்சி மீண்டும் அமைய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

காபூல் நகருக்குள் நுழைந்தவுடன் தலீபான் போராளி செய்த செயல்.. வைரலாகும் வீடியோ..!!

20 வருடங்களுக்குப்பின் காபூல் நகருக்குள் புகுந்த தலிபான் தீவிரவாதி கண்ணீர் விட்டு அழுத காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆப்கானிஸ்தானின் தலைநகரம் காபூல் நகரின் எல்லையை தலிபான் தீவிரவாதிகள் சூழ்ந்து கொண்டார்கள். இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதி அரண்மனையில், தலீபான் தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதற்கிடையில், நாட்டின் ஜனாதிபதி அஷ்ரப் கனி, தன் பதவியை ராஜினாமா செய்தார். https://twitter.com/sanaayesha__/status/1426858054935478277 அதன்பின்பு, அலி அஹ்மத் ஜலாலி, இடைக்கால அரசின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 20 […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானின் 200 அகதிகளை ஏற்க முடிவு.. சுவிட்சர்லாந்து அரசு அறிவிப்பு..!!

சுவிட்சர்லாந்து அரசு, ஆப்கானிஸ்தானில் இருக்கும் தங்கள் தூதரகத்தில் பணிபுரியும் 40 பணியாளர்கள் உட்பட 200 நபர்களை தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்க தீர்மானித்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் ஒவ்வொரு நாளும் தலிபான்கள் ஆதிக்கம் அதிகரிக்கிறது. பல்வேறு முக்கிய மாகாணங்களை கைப்பற்றி வருகிறார்கள். தற்போது தலைநகருக்கு அருகில் இருக்கும் முக்கிய நகரை கைப்பற்றி இருக்கிறார்கள். இந்நிலையில் இன்னும் சில தினங்களில் காபூல் நகரையும் கைப்பற்றலாம் என்ற பதற்றம் பொது மக்களிடையே நிலவுகிறது. இதனால் மக்கள் அந்நகரை விட்டே வெளியேறி வருகிறார்கள். காபூல் […]

Categories
உலக செய்திகள்

காபூல் நகரின் எல்லையை சூழ்ந்த தலீபான்கள்.. வாகனங்களில் தப்பியோடும் மக்கள்.. வெளியான பரபரப்பு வீடியோ..!!

ஆப்கானிஸ்தானின் தலைநகரம் காபூல் நகரின் எல்லையை தலிபான் தீவிரவாதிகள் சூழ்ந்து கொண்டதால் மக்கள் அந்நகரில் இருந்து தப்பிச்செல்வதாக தெரியவந்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் பல்வேறு பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றியுள்ளார்கள். இந்நிலையில் தலைநகரான காபூலின் எல்லையில் சூழ்ந்து கொண்டுள்ளனர். மேலும் காபூல் நகரத்தை போர் மற்றும் மோதலின்றி கைப்பற்றப் போவதாக தலிபான்கள் அறிக்கை விட்டுள்ளார்கள். https://twitter.com/newsistaan/status/1426845523948892175 மேலும் போராளிகள் கலவரத்தை ஏற்படுத்துவதை தவிர்ப்பதற்காகவும், நகரில் இருந்து வெளியேற விரும்பாத மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் காபூலிலிருந்து மக்கள் வாகனங்களில் […]

Categories
உலக செய்திகள்

12 நாடுகள் பங்கேற்று நடந்த கூட்டம்…. அதிரடியாக எடுக்கப்பட்ட முடிவுகள்…. தகவல் வெளியிட்ட அமெரிக்க செய்தி தொடர்பாளர்….!!

இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட 12 நாடுகள் பங்கேற்று நடத்திய கூட்டத்தில் ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்ட தேவையான முயற்சிகளை எடுப்பது தொடர்பான முடிவை எடுத்துள்ளதாக அமெரிக்க செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியதையடுத்து அந்நாட்டில் தலிபான்கள் தங்களுடைய ஆதிக்கத்தை மீண்டும் செலுத்தி வருகிறார்கள். மேலும் இவர்கள் ஆப்கானிஸ்தானிலுள்ள 15 க்கும் மேலான பகுதிகளை கைப்பற்றி தங்களுடைய ஆதிக்கத்தை அங்கு செலுத்தி வருகிறார்கள். இதனையடுத்து தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானிலுள்ள பல பகுதிகளை கைப்பற்றுவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் […]

Categories
உலக செய்திகள்

தலைநகர் பறிபோகுமா….? மனித உரிமைகள் மீது கட்டுப்பாடு…. வேதனையில் ஐ.நா. பொதுச்செயலாளர்….!!

பெண்கள் மற்றும் செய்தியாளர்களின் உரிமைகள் மீது கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நேட்டோ படைகள் வெளியேறுவதை தொடர்ந்து அந்நாட்டில் தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து தலீபான்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள பல்வேறு மாகாணங்களை கையகப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தலைநகர் காபூலை கைப்பற்ற தலீபான்கள் தீவிர முனைப்பு காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து 2001 ஆம் ஆண்டுக்கு பிறகு மறுபடியும் ஆப்கானிஸ்தானை முழுமையாக தலீபான்கள் அவர்களின்  கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு […]

Categories
உலக செய்திகள்

“காபூல் மாவட்டத்தில் புகுந்த தலீபான்கள்!”.. எங்கு இருக்கிறார்கள்..? வெளியான தகவல்..!!

தலீபான் தீவிரவாதிகள், காபூல் மாவட்டத்தில் புகுந்து, காபூல் நகரிலிருந்து 10 கி.மீ தொலைவில் இருப்பதாக தெரியவந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப்படைகள் வெளியேறியதிலிருந்து, தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி மக்களை கொன்று குவித்து வருகிறார்கள். இதனால் பல மக்கள் தங்கள் ஊரைவிட்டு வெளியேறி வருகிறார்கள். இந்நிலையில், தலைநகர் காபூல் மாவட்டத்தில் தலிபான்கள் புகுந்துள்ளதாகவும், அவர்கள் காபூல் நகரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் காபூலுக்கு தெற்கு பகுதியில் இருக்கும் பக்திகா […]

Categories
உலக செய்திகள்

ஊழியர்களை வெளியேற்ற சென்ற சிறப்பு படை…. ஆப்கானிஸ்தானில் நிலவும் அசாதாரண சூழ்நிலை….!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்களால் மிகவும் அசாதாரண சூழ்நிலை நிலவி வருவதால் அங்குள்ள கனட தூதரகத்திலிருந்து தங்கள் நாட்டின் ஊழியர்களை வெளியேற்ற ஆப்கானிஸ்தானுக்கு கனட ராணுவ படைகள் சென்றுள்ளதாக வெளியான தகவலை தற்போது கனட நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் உறுதி செய்துள்ளார். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியதையடுத்து தலிபான் பயங்கரவாதிகள் மீண்டும் அந்நாட்டில் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். மேலும் ஆப்கானிஸ்தானிலுள்ள பல பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றி தங்கள் வசம் வைத்துள்ளார்கள். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் நிலவும் இந்த […]

Categories
உலக செய்திகள்

அதிகரித்து வரும் தலிபான்களின் அட்டகாசம்…. 18 பேர் உயிரிழப்பு….!!

ஆப்கானிஸ்தானின் தலிபான்களின் தாக்குதலில் பொதுமக்கள் 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் விலகியதால் தலிபான்களின் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் ஆப்கானிஸ்தானின் பெரும் பகுதிகளையும் தலிபான்கள் கைப்பற்றி விட்டனர். இதனிடையே கடந்த வாரத்தில் 11 முக்கிய மாகாணங்களின் தலைநகரையும் கைப்பற்றினர். இதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் கைப்பற்ற முயற்சி செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அவர்கள் கைப்பற்றிய 6 நகரங்களில் இருக்கும் சிறைக் கைதிகளையும் விடுவித்துள்ளனர். இந்நிலையில் ஹெராத் மாகாணத்தில் […]

Categories
உலக செய்திகள்

“ஆப்கானிஸ்தானில் மோசமடையும் நிலை!”.. பிரிட்டன் பிரதமரின் முடிவு.. வெளியான தகவல்..!!

ஆப்கானிஸ்தானில் நிலைமை மோசமடைந்து வருவது தொடர்பில் ஆலோசனை நடத்த பிரதமர் போரிஸ் ஜான்சன் அவசர கோப்ரா கூட்டத்தை கூட்ட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறியதிலிருந்து தலிபான்களின் தாக்குதல் அதிகரித்திருக்கிறது. பல்வேறு முக்கிய நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதனால் மக்கள் ஆயிரக்கணக்கில் கிராமங்களை விட்டு வெளியேறி வருகிறார்கள். இதேபோன்று ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தினால் காபூல் நகரே அழிந்துவிடும். இந்நிலையில் பிரிட்டன் பிரதமரான போரிஸ் ஜான்சன் […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் நிலவும் அசாதாரண சூழ்நிலை…. ஸ்விட்சர்லாந்தின் அதிரடி முடிவு….!!

ஆப்கானிஸ்தானில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வரும் தலிபான்களால் அந்நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை முன்னிட்டு தங்களது ஊழியர்களை திரும்பப்பெற சுவிட்சர்லாந்து அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியதையடுத்து தலிபான் பயங்கரவாதிகள் தங்களுடைய ஆதிக்கத்தை மீண்டும் அந்நாட்டில் செலுத்தி வருகிறார்கள். மேலும் இவர்கள் அந்நாட்டிலுள்ள பல பகுதிகளையும் கைப்பற்றி தங்கள் வசம் வைத்துள்ளார்கள். இதனால் ஸ்விட்சர்லாந்து அரசாங்கம் ஆப்கானிஸ்தானில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை முன்னிட்டு அந்நாட்டில் பணிபுரியும் தங்களது பணியாளர்களை […]

Categories
உலக செய்திகள்

“உங்க மகள்களை எங்களுக்கு மனைவியாக்குங்க”… தலிபான்களின் மிரட்டல்… வெளியான அதிர்ச்சித் தகவல்..!!

ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் பயங்கரவாதிகள் அந்நாட்டு மக்களிடம் உங்களது மகள்களை எங்களுக்கு மனைவி ஆக்குங்கள் என்று கூறி மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதையடுத்து அந்நாட்டில் உள்ள பெண்களை தலீபான் தீவிரவாதிகள் தங்களது வசம் கொண்டு வரும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அமெரிக்கா தலிபான் பயங்கரவாதிகள் போர்க்குற்றம் செய்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினரை தலிபான் தீவிரவாதிகள் ஈவு இரக்கம் இல்லாமல் கொலை செய்வது […]

Categories
உலக செய்திகள்

தொடரும் தலிபான்களின் அட்டகாசம்…. நம் மக்களை அழைத்து வாருங்கள்…. பாதுகாப்பு படையை அனுப்பிய பிரபல நாடு….!!

ஆப்கானில் தலிபான்கள் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பிட்டன் மக்களை அழைத்து வர பாதுகாப்பு படை அனுப்பப்படவுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் விலகியதால் தலிபான்களின் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் ஆப்கானிஸ்தானின் பெரும் பகுதிகளையும் தலிபான்கள் கைப்பற்றி விட்டனர். இதனிடையே கடந்த வாரத்தில் 11 முக்கிய மாகாணங்களின் தலைநகரையும் கைப்பற்றினர். இதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் கைப்பற்ற முயற்சி செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அவர்கள் கைப்பற்றிய 6 நகரங்களில் இருக்கும் […]

Categories
உலக செய்திகள்

1,000 த்துக்கும் மேலான சிறைக்கைதிகள்…. எல்லையை மீறிய தலிபான்கள்…. அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு….!!

ஆப்கானிஸ்தானில் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளிலுள்ள சிறைகளிலிருந்து சுமார் 1,000 த்திற்கும் மேலானோரை தலிபான்கள் விடுவித்தது தொடர்பாக அந்நாட்டு அரசாங்கம் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியதையடுத்து தலிபான் பயங்கரவாதிகள் தங்களுடைய ஆதிக்கத்தை மீண்டும் அந்நாட்டில் செலுத்தி வருகிறார்கள். இதன் விளைவாக தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள பல பகுதிகளை கைப்பற்றி தங்கள் வசம் வைத்துள்ளார்கள். இந்நிலையில் தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றியிருக்கும் 6 நகரங்களிலுள்ள சிறைகளிலிருந்து சுமார் 1,000 த்திற்கும் மேலானோரை விடுவித்துள்ளார்கள். […]

Categories
உலக செய்திகள்

அதிகரித்து வரும் பயங்கரவாதம்… மேலும் மூன்று மாகாண தலைநகரங்களை கைப்பற்றிய தலிபான்கள்… வெளியான பரபரப்பு தகவல்..!!

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் மேலும் மூன்று மாகாண தலைநகரங்களை கைப்பற்றியுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் ராணுவம் தலிபான் பயங்கரவாதிகள் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல் குறித்த காணொலியை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த வான்வழித் தாக்குதலில் 13 பேர் பலத்த காயம் அடைந்துள்ளதாகவும், 25 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடுமட்டுமில்லாமல் தலிபான் பயங்கரவாதிகள் கடந்த ஆறு நாட்களில் மட்டும் எட்டு மாகாண தலைநகரங்களை கைப்பற்றியுள்ள நிலையில் தற்போது காபுலை கைப்பற்ற தீவிர […]

Categories
உலக செய்திகள்

எங்களை கைவிட்டு விடாதீர்கள் …. நட்சத்திர கிரிக்கெட் வீரரின் உருக்கமான பதிவு ….!!!

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ரஷீத் கான் தங்கள் நாட்டை கைவிட்டு விடாதீர்கள் என உலகத் தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து நேட்டோ படைகளை அமெரிக்க அரசு திரும்ப பெற்றதைத் தொடர்ந்து, அங்கு தலிபான்களின்  ஆதிக்கம் தலைவிரித்தாடுகிறது. அங்கு தலிபான்கள்  பொதுமக்கள் ,அரசு படைகள் மற்றும் அரசு அலுவலகங்கள் என அனைவர்  மீதும் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தி வருகின்றனர். அதோடு ஒவ்வொரு மாகாணத்தில் உள்ள தலைநகரை கைப்பற்றி வரும் தலிபான்கள், ஒரு வாரத்தில் மட்டும் […]

Categories
உலக செய்திகள்

தலீபான்களிடம் சிக்கி தவிக்கும் நாடு…. உதவிக்கரம் நீட்டும் அமெரிக்கா…. தகவல் வெளியிட்ட ஜோ பைடன்….!!

ஆப்கானிஸ்தானுக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று அமெரிக்கா அதிபர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டில் அமெரிக்கா படைகள் வெளியேறுவதை தொடர்ந்து அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து ஆப்கானிஸ்தானில்  65% நிலப்பரப்பை தலீபான்கள் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். மேலும் நேற்று மாலை ஆப்கானிஸ்தானின் வடபகுதியிலுள்ள பாக்லான்  மாகாணத்தின் தலைநகரான பூல்-இ-ஹுமியை கைப்பற்றியுள்ளனர். இதற்காக தலீபான்களின் கோட்டையான லேகின் பாலைவனத்தில் ராணுவ வீரர்கள் பதில் தாக்குதல் நடத்துவதாக தகவல்கள் […]

Categories
உலக செய்திகள்

அந்த நாட்டை விட்டு உடனே வெளியேறுங்க..! இந்தியர்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை… வெளியான பரபரப்பு தகவல்..!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள இந்தியர்கள் அனைவரும் அந்நாட்டில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு இந்திய அரசு வலியுறுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து தலிபான்களின் ஆதிக்கம் அந்நாட்டில் அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் தலிபான்கள் நாட்டின் முக்கிய மாகாண தலைநகரங்களையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றனர். அதன்படி தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் நான்காவது நகரமான மசார் இ ஷரிப் நகரையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இந்திய அரசு ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை உடனடியாக […]

Categories
உலக செய்திகள்

தலீபான்களின் அத்துமீறல்…. தொலைக்காட்சி நிருபர் கடத்தல்…. தகவல் வெளியிட்ட ஹெல்மண்ட் மாகாண பொறுப்பாளர்….!!

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் தொலைக்காட்சி நிருபரை கடத்தி சென்ற சம்பவமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து  அமெரிக்க படைகள் வெளியேறுவதை தொடர்ந்து தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் அந்நாட்டு ராணுவத்திற்கும் தலீபான்களுக்கும் இடையே தாக்குதல் நடைபெற்று வருகிறது. மேலும் தலீபான்கள் ஆப்கானிஸ்தாலுள்ள தாகர்,ஜவ்ஜான், நிம்ரோஸ்  போன்ற மாகாணங்களை கைப்பற்றிய நிலையில் தற்பொழுது குந்தூஸ் மாகாணத்தையும் கைவசப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் காபூலில் உள்ள தேஹ் சப்ஸ் மாவட்டத்தில் பக்தியா காக் வானொலி நிலையம் அமைந்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

தொடரும் வன்முறைச் செயல்கள்…. தலீபான்களின் வான்வழி தாக்குதல்…. பலியான விமான ஓட்டிகள்….!!

தலீபான்களின் வான்வழி தாக்குதலினால் 8 விமானிகள் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள தலீபான்கள் நடத்திவரும் தொடர்ச்சியான தற்கொலை தாக்குதலினால் நாட்டின் நிலைமை மோசமாகியுள்ளது. இதுவரை எட்டு முக்கிய ராணுவ விமானிகள் வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். இதனை அடுத்து இறுதியாக Black Hawk  ஹெலிகாப்டரின் விமானியான Hamidullah Azimi கடந்த சனிக்கிழமை அன்று வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தார். ஏற்கனவே ஆப்கான் ராணுவம்  தலீபான்களினால் ஆயுத பலத்தை இழந்துள்ள நிலையில் வான்வழி தாக்குதல் உதவியையும் இழக்கும் மோசமான […]

Categories
உலக செய்திகள்

அதிகரிக்கும் பயங்கரவாதம்… மேலும் ஒரு மாகாணத்தை கைப்பற்றிய தலிபான்கள்… பிரபல நாட்டில் பதற்றம்..!!

ஆப்கானிஸ்தானின் முக்கிய மாகாணமான குண்டூஸையும் தலிபான்கள் கைப்பற்றியுள்ளதால் அந்நாட்டில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து அந்நாட்டில் நாளுக்கு நாள் தலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மேலும் தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் முக்கிய மாகாணங்களை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றனர். அந்த வகையில் ஏற்கனவே தலிபான்கள் நிம்ரோஸ், ஜவ்ஜான், தாகார் உள்ளிட்ட மாகாணங்களை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த நிலையில் தலிபான் பயங்கரவாத அமைப்பு ஆப்கானிஸ்தானின் முக்கியமான மாகாணமான குண்டூஸையும் கைப்பற்றியுள்ளது. இதனால் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் அதிகரிக்கும் பயங்கரவாதம்… திணறும் ராணுவப்படை… வெளியான பரபரப்பு தகவல்..!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு முக்கிய மாகாணங்களின் தலைநகரை கைப்பற்றியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து தற்போது தலிபான்களின் ஆதிக்கம் அந்நாட்டில் அதிகரித்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் பெரும்பாலான இடங்களை தலிபான்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் ராணுவம் அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து தலிபான்கள் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க முடியாமல் திணறி வருகிறது. இதற்கிடையே கடந்த 24 மணி நேரத்தில் தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் […]

Categories
உலக செய்திகள்

பலியான தலீபான்கள்…. போர் கப்பல் வழங்கிய அமெரிக்கா…. தகவல் வெளியிட்ட ஆப்கான் செய்தி தொடர்பாளர்….!!

ஆப்கானிஸ்தனில் நாட்டில் நடந்த வான்வழி தாக்குதலில் 200க்கும் அதிகமான தலீபான்கள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் நாட்டில் இருந்து நேட்டோ படைகள் வெளியேறுவதை அடுத்து அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று நிம்ரூஸ் மற்றும் ஜவ்ஜான் பகுதிகளை தலீபான்கள் கைப்பற்றியுள்ளனர். மேலும் Kandahar, Herat, Lashkargah மற்றும் Helmand போன்ற மாகாணங்களை தலீபான்கள் கைப்பற்றுவதை தடுப்பதற்காக ஆப்கானிஸ்தானுக்கு போர் விமானங்களை அமெரிக்கா வழங்கியுள்ளது. இந்தச் செய்தியை அமெரிக்காவின் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இதனை […]

Categories
உலக செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில்… மேலும் ஒரு மாகாண தலைநகரை கைப்பற்றிய தலிபான்கள்… பிரபல நாட்டில் பரபரப்பு..!!

தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் இரண்டாவது மாகாண தலைநகரத்தை கடந்த 24 மணி நேரத்தில் கைப்பற்றியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானிலிந்து அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து தலிபான்களின் ஆதிக்கம் அந்நாட்டில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் ஆப்கானிஸ்தான் ராணுவமும் தலிபான்களின் இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க முடியாமல் திணறி வருகிறது. இந்நிலையில் தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் இரண்டாவது மாகாண தலைநகரத்தை கடந்த 24 மணி நேரத்தில் கைப்பற்றியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று தலிபான்கள் […]

Categories
உலக செய்திகள்

அந்த நாட்டை விட்டு வெளியேறுங்க..! மக்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்… பிரித்தானிய அரசு கோரிக்கை..!!

பிரித்தானிய அரசு ஆப்கானிஸ்தானில் உள்ள தங்களது நாட்டு மக்கள் உடனடியாக வெளியேறுமாறு கோரிக்கை விடுத்துள்ளது. ஆப்கானிஸ்தானில் அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு பிரித்தானிய வெளிவிவகார அமைச்சகம் அந்த நாட்டிற்கு செல்வதை தவிர்க்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சகம் ஆப்கானிஸ்தானில் உள்ள தங்களது நாட்டு மக்கள் உடனடியாக வெளியேறுமாறு கோரிக்கை விடுத்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் எந்த நேரத்திலும் தீவிரவாதிகள் தாக்குதலை முன்னெடுக்கலாம், எனவே உரிய ஆவணங்களுடன் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற தயார் நிலையில் […]

Categories
உலக செய்திகள்

நாட்டுப்பற்று மிக்கவரை இப்படி கொன்னுட்டாங்களே..! பிரபல நாட்டில் பெரும் சோகம்… ஐ.நா. முக்கிய ஆலோசனை..!!

ஆப்கானிஸ்தானின் ஊடகப் பிரிவு தலைவரான தாவா கான் மேனாபாலை தலிபான்கள் பயங்கரமாக சுட்டுக் கொலை செய்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் அரசு தலிபான்களின் ஆதிக்கத்தினை கட்டுப்படுத்தும் வகையில் வான்படை தாக்குதலை அதிகரித்து வந்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தலிபான்கள் “அரசு மூத்த அலுவலர்கள் கொலை செய்யப்படுவார்கள்” என்று எச்சரித்துள்ளனர். இந்நிலையில் காபூல் அருகே உள்ள மசூதியில் வைத்து அரசின் ஊடகப் பிரிவு தலைவரான தாவா கான் மேனாபாலை தலிபான்கள் பயங்கரமாக சுட்டுக் கொலை செய்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

இராணுவத்தினரின் அதிரடி நடவடிக்கைகள்.. ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் 303 பேர் உயிரிழப்பு..!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த ஒரே நாளில் பல இடங்களில் ராணுவ தாக்குதல் நடத்தப்பட்டதில் தலீபான்கள் 303 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் அரசபடை மற்றும் தலீபான் தீவிரவாதிகளுக்கிடையே நீண்ட நாட்களாகவே மோதல் ஏற்பட்டு வருகிறது. இதில் தலிபான் தீவிரவாதிகள் பல இடங்களை கைப்பற்றி, பொது மக்கள் பலரை கொன்று குவித்தார்கள். எனவே தலிபான்களை அழிப்பதற்காக ஆப்கானிஸ்தான் ராணுவம் அதிரடி நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது. இந்நிலையில், நாட்டின் பல பகுதிகளில் இராணுவத்தினர் நேற்று அதிரடி தாக்குதல்களை மேற்கொண்டனர். இதில் […]

Categories
உலக செய்திகள்

திடீரென உணரப்பட்ட நிலநடுக்கம்…. ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவு…. தகவல் வெளியிட்ட தேசிய புவியியல் ஆய்வு மையம்….!!

ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவாகியுள்ள நிலநடுக்கத்தினால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் உள்ள பைசாபாத் நகரின் அருகே நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவாகி உள்ளது. இதனையடுத்து இந்த நிலநடுக்கமானது பூமியின் ஆழத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தேசிய புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் மக்கள் பீதியடைந்துள்ளனர். மேலும் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் […]

Categories
உலக செய்திகள்

அத்துமீறும் தலீபான்கள்….. குண்டு வெடிப்பு தாக்குதல்…. 8 பேர் பலியான சோகம்…!!

அமைச்சர் வீட்டின் அருகே நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதனால்  அந்நாட்டு ராணுவத்திற்கும் தலீபான்களுக்கும் இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது. மேலும் ஆப்கான் அரசு தலீபான்களின் பயங்கரவாதத்தை தடுக்க பல்வேறு வழிகளில் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தலீபான்கள் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலானது காபூலில் இருக்கும் பாதுகாப்புத்துறை அமைச்சர் வீட்டின் அருகே நடந்துள்ளது. இதில் 8 பேர் பலியாகியுள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

தலிபான்களுக்கு எதிராக ராணுவம் எடுத்த நடவடிக்கை…. 2 லட்சம் குடும்பங்களிடம் வைத்துள்ள கோரிக்கை…. வெளியான முக்கிய தகவல்….!!

தலிபான்கள் கைப்பற்றியுள்ள ஆப்கானிஸ்தான் குடியிருப்புகளை காலி செய்யுமாறு ராணுவம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற தலிபான்களின் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே கிராமப்புற பகுதிகளை கைப்பற்றிய தலிபான்கள் தற்போது மாகாண தலைநகரங்களை கைப்பற்ற முனைப்பு காட்டி வருகிறது. இந்நிலையில் Lashkar Gah நகரில் நகரில் ராணுவத்தினருக்கு தலிபான்களுக்கும் இடையே நடந்த மோதலில் 40 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ராணுவம் தலிபான்களுக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி […]

Categories
உலக செய்திகள்

பாதுகாப்பு துறை அமைச்சர் வீட்டில்…. தாக்குதல் நடத்திய தலீபான்கள்…. கண்டனம் தெரிவித்த அமெரிக்கா….!!

பாதுகாப்பு துறை அமைச்சர் வீட்டில் தலீபான்கள் தற்கொலை படை தாக்குதலை நடத்தியுள்ளனர்.     ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா படைகள் வெளியேறுவதால் தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அந்நாட்டின் தற்காலிக பாதுகாப்பு துறை அமைச்சரான பிஸ்மில்லா கான் முஹம்மதின் வீட்டை நேற்றிரவு தலீபான்கள் முற்றுகையிட்டுள்ளனர். அதன் பின்பு அவரின் வீட்டில் குண்டுகளை வீசி தற்கொலை படை தாக்குதலை நடத்தியுள்ளனர். மேலும் அவரின் வீட்டில் இருந்த பாதுகாப்பு படையினரை குறிவைத்து தலீபான்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதனை அறிந்து […]

Categories
உலக செய்திகள்

தலீபான்களின் அத்துமீறல்…. ஏற்படப்போகும் பேரழிவு…. ஆப்கான் ராணுவ ஜெனரல் கருத்து….!!

தலீபான்கள் நடத்தும் வன்முறை தாக்குதல்களினால் உலகளாவிய பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படும் என ஆப்கான் ஜெனரல் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டு ராணுவத்துக்கு துணையாக இருந்த நேட்டோ படைகள் வெளியேறுமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து நேட்டோ படைகள் வெளியேறுவதை தொடர்ந்து அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் ஆப்கானிஸ்தான் நாட்டில் பதற்றம் நீடித்து வருகிறது. இதனை தொடர்ந்து அந்நாட்டு ராணுவத்திற்கும் தலீபான்களுக்கும் இடையேயான தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளது. ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் உள்ள 50 சதவீத […]

Categories
உலக செய்திகள்

வெளியேறும் நேட்டோ படைகள்…. நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை…. நாடாளுமன்றத்தில் பேசிய அதிபர்….!!

நாட்டில் நிலவும் பதற்றம் நிறைந்த சூழ்நிலையானது 6 மாதத்திற்குள் மாறிவிடும் என ஆப்கானிஸ்தான் அதிபர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து நேட்டோ படைகள் வெளியேறுமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் நேட்டோ படைகள் ஆப்கானில் இருந்து வெளியேறுகின்றனர். இந்த நிலையில் அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாகாணங்களையும் கைப்பற்றி வருகின்றனர். இதனால் ஆப்கானிஸ்தான் ராணுவத்திற்கும் தலீபான்கள்களுக்கும் இடையே […]

Categories
உலக செய்திகள்

நீங்க தான் இதற்கு காரணம்…. தலீபான்களினால் நீடிக்கும் பதற்றம்…. எச்சரித்த அதிபர்…!!

நேட்டோ படைகள் திரும்ப பெறுதலே நாட்டின் பாதுகாப்பு மோசமடைவதற்கு காரணம் என்று ஆப்கான் அதிபர் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து நேட்டோ படைகள் வெளியேறுமாறு அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் உத்திரவிட்டுள்ளார். இதனால் நேற்றிலிருந்து நேட்டோ படைகள் ஆப்கானில் இருந்து வெளியேறி வருகின்றனர். இதனை தொடர்ந்து தலீபான்களின்  ஆதிக்கம் ஆப்கானிஸ்தானில் அதிகரித்து வருகிறது. மேலும் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு அமெரிக்கா தான் காரணம் என்று ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி கூறியுள்ளார். இது குறித்து […]

Categories
உலக செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில்… 254 தலிபான்கள் பலி… பாதுகாப்புத்துறை அமைச்சர் பரபரப்பு தகவல்..!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 254 தலிபான்கள் உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ் தான் நாட்டின் தலிபான்களின் பயங்கரவாதம் அதிகரித்து வரும் நிலையில் தலிபான் அமைப்பைச் சேர்ந்த 254 பேர் கடந்த 24 மணிநேரத்தில் ஆப்கான் அரசு மேற்கொண்ட அதிரடி தாக்குதலில் உயிரிழந்துள்ளதாகவும், 97 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தகர், பாரக், ஜொஸ்வான், ஹெராத், ஹெல்மாண்ட், சமன்கண், குண்டுஸ், காபூல், தஹார், […]

Categories
உலக செய்திகள்

ஆதிக்கம் செலுத்தும் தலீபான்கள்…. அத்துமீறும் வன்முறை செயல்கள்…. வெளியேறும் பொதுமக்கள்….!!

தலீபான்கள் விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் அமெரிக்க நேட்டோ படைகள் வெளியேறுவதை தொடர்ந்து அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் அப்பகுதியில் மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். இதனை அடுத்து தெற்கு ஆப்கானிஸ்தானில்  கந்தஹார் விமான நிலையம் அமைந்துள்ளது. இதன் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  இது குறித்து விமான நிலைய தலைவர் மசூத் பஷ்டூன் தெரிவிக்கையில் “சனிக்கிழமை இரவு அன்று 3 ராக்கெட்கள் ஏவப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. […]

Categories
உலக செய்திகள்

திடீரென மோதிய ஏவுகணைகள்… அதிர்ந்து போன விமான நிலையம்… அதிகாரி பரபரப்பு தகவல்..!!

கந்தகார் விமான நிலையத்தில் திடீரென ஏவுகணைகள் பயங்கரமாக மோதியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தகார் விமான நிலையத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் அந்த விமான நிலையத்தில் திடீரென ஏவுகணைகள் மோதியதாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் ஆப்கானிஸ்தானில் தொடர்ச்சியாக வெள்ளப்பெருக்கு, கனமழை, கொரோனா தொற்று பாதிப்பு, தலிபான் பயங்கரவாதம் என அடுத்தடுத்து அந்நாட்டில் பாதிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில் தற்போது ஏவுகணைகள் மோதியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |