ஆஃப்கானிஸ்தானிலுள்ள ஐ.நா வளாகத்தின் மீது அரசுக்கு எதிரான மர்ம நபர்கள் நடத்திய தாக்குதல் போர் குற்றமாக கருதி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐ.நாவின் பொது செயலாளர் எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருக்கும் ஹீரத் நகரில் ஐ.நா வளாகம் அமைந்துள்ளது. இந்நிலையில் திடீரென அரசுக்கு எதிரான சில மர்ம நபர்கள் ஐ.நா வளாகத்தின் மையப் பகுதியை குறிவைத்து ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளார்கள். மேலும் ஐ.நா அலுவலகத்தின் மீது துப்பாக்கி சூட்டையும் நடத்தியுள்ளார்கள். இவ்வாறு மர்ம நபர்கள் […]
Tag: ஆப்கானிஸ்தான்
ஐ.நா. அலுவலகத்தில் தலீபான்கள் தாக்குதல் நடத்தியதால் அங்கு பலத்தப்பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை தலீபான்கள் தங்களின் கட்டுப்பாட்டில் கீழ் கொண்டு வந்துள்ளனர். இதனால் அந்நாட்டு ராணுவத்திற்கும் தலீபான்களுக்கும் இடையே போரானது நீடித்து வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும் அதில் எந்த பயனும் கிடைக்கவில்லை. மேலும் ஆப்கான் அரசுக்கு உதவியாக இருந்த நேட்டோ படைகள் அங்கிருந்து வெளியேறுமாறு அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து வரும் ஆகஸ்ட் 1 […]
ஆப்கானிஸ்தானில் இருவேறு பகுதிகளில் நடந்த வாகன விபத்தில் 20 பேர் உயிரிழந்ததாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள லக்மன் பகுதியில் எதிர்பாராதவிதமாக இருவேறு வாகன விபத்துகள் ஏற்பட்டதாகவும் அதில் 18 பேர் பலத்த காயமடைந்ததாகவும் 20 பேர் உயிரிழந்ததாகவும் அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று தவ்லாதலை என்ற பகுதியில் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்ட வாகனத்தில் இருந்த 8 பேர் காயமடைந்ததாகவும், 12 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. அதேபோல் நேற்று திடீரென […]
ஆப்கானிஸ்தானில் மர்ம நபர்கள் சிலர் ஐ.நா மீது நடத்திய தாக்குதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் அரசுக்கு எதிரான மர்ம நபர்கள் சிலர் ஹெராத் நகரில் அமைந்துள்ள ஐ.நா. வளாகத்தின் முக்கிய பகுதி மீது தாக்குதல் நடத்தியதாக ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் தூதரகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் பலர் காயமடைந்ததாகவும், பாதுகாவலர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஐ.நா. அதிகாரிகள் யாருக்கும் இந்த தாக்குதலில் காயம் எதுவும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து […]
மறைந்த புகைப்பட செய்தியாளரின் இறப்பு குறித்து அமெரிக்கா செய்தி பத்திரிக்கை புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை தலீபான்கள் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். இதனை அடுத்து ஆப்கான் நாட்டில் ராணுவத்தினருக்கும் த்லீபான்களுக்கும் நடக்கும் தாக்குதல்கள் குறித்து தகவல் சேகரிப்பதற்காக கடந்த 17 ஆம் தேதி இந்தியாவைச் சேர்ந்த ராய்டர்ஸ் நிறுவன புகைப்பட செய்தியாளர் ஒருவர் சென்றுள்ளார். இதனை தொடரந்து ஆப்கான் ராணுவத்தினருக்கும் தலீபான்களுக்கும் இடையில் தாக்குதல் எற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் இராணுவத்தினருடன் இருந்த […]
ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்திய தூதர் ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்படும் பதற்ற நிலை வருத்தமளிப்பதாக கூறியிருக்கிறார். ஐ.நா சபையின் இந்திய தூதரான திருமூர்த்தி, இது தொடர்பில் தெரிவித்திருப்பதாவது, இந்தியா வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தேதியன்று ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலுக்கான சுழற்சி முறையில் தலைவராக பதவியேற்கவிருக்கிறது. ஐஎஸ் போன்ற தீவிரவாத அமைப்புகள் அனைத்தும் பாகிஸ்தான் நாட்டில் சாதாரணமாக இயங்கி வருகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்கா தங்கள் படைகளை திரும்பப் பெற்றதைத்தொடர்ந்து அங்கு ஏற்படும் பதற்றமான […]
ஆப்கானிஸ்தான் தலிபான் தீவிரவாதிகள் குழு சீன வெளியுறவு அமைச்சரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் விலகியதால் தலிபான்களின் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் நாட்டில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. இதனிடையே தலிபான் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு நாட்டின் அமைதியை நிலைநாட்ட ஆப்கானிஸ்தான் அரசு முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் தலிபான் தீவிரவாத அமைப்பின் தலைவர் முல்லா பரதர் அகுந்த் மற்றும் 9 பேர் கொண்ட குழு சீனாவுக்கு இரண்டு நாள் பயணத்தை […]
பல நாடுகளிலிருந்து ஐ.எஸ் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு செல்வதாக ரஷ்ய நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் விலக ஆரம்பித்ததை தொடர்ந்து தலிபான் பயங்கரவாதிகள் அந்நாட்டில் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இதற்கிடையே ஐ.எஸ் பயங்கரவாதிகள் உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறார்கள். இவ்வாறான சூழலில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் லிபியா, சிரியா உட்பட பல நாடுகளிலிருந்து ஆப்கனிஸ்தான் நாட்டிற்கு செல்கிறார்கள் என்று ரஷ்ய நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் இவர் ரஷ்ய நாட்டிற்கு […]
ஆப்கானிஸ்தானில் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 1,520 தலிபான்கள் கொல்லப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிய தொடங்கியுள்ள நிலையில் தலிபான் பயங்கரவாதிகள் அந்த நாட்டில் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் கடந்த ஒரு வாரத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டில் 154 ராணுவ அதிரடி தாக்குதல்கள் 20 மாகாணங்களில் நடந்ததாகவும், வான்வழி, பீரங்கி மற்றும் தரை வழி தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும் அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு படை தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் அந்த தாக்குதலில் […]
தலீபான்களின் கட்டுக்குள் இருந்த பகுதிகளை ஆப்கான் பாதுகாப்புப் படையினர் மீண்டும் கைப்பற்றியுள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் அமெரிக்க படைகள் வெளியேறுவதை தொடர்ந்து தலீபான் தீவிரவாதிகள் பல பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுபாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டு தேசிய பாதுகாப்பு படையினருக்கும் தலீபான்களுக்கும் இடையே போர் நடந்தது. இந்த போரில் ஆப்கானிஸ்தான் நாட்டின் பால்க் மாகாணத்தில் உள்ள கால்தர் மாவட்டம் பாதுகாப்பு படையினரால் கைப்பற்றப்பட்டது. இந்த தாக்குதலில் 20 தலீபான்கள் உயிரிழந்துள்ளதாகவும் 20க்கும் அதிகமானோர் […]
இன்று மாலை ஆப்கானிஸ்தானில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று ஆப்கானிஸ்தானில் உள்ள பைசாபாத் பகுதியில் மாலை 4.11 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் தேசிய புவியியல் ஆய்வு மையம் இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 4.3-ஆக பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தின் மையம் சுமார் 188 கிலோ மீட்டர் தொலைவில் 160 கிலோ மீட்டர் ஆழத்தில் பைசாபாத் பகுதியிலிருந்து உணரப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த நிலநடுக்கத்தால் சேதாரங்கள் மற்றும் பாதிப்புகள் […]
தலீபான்களுக்கு பயந்து இராணுவ வீரர்கள் பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்கா நேட்டோ படைகள் வெளியேறுவதை அடுத்து தலீபான்கள் அந்நாட்டை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். இதனை தொடர்ந்து ஆப்கான் எல்லைப்குதிகளை கைப்பற்றுதில் தீவிர முனைப்பு காட்டி வருகின்றனர். இதனால் ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் இடையேயுள்ள எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. இந்த நிலையில் தலீபான்களின் வன்முறை செயலுக்கு அஞ்சி ஆப்கானைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் பாகிஸ்தானில் தஞ்சம் அடைந்துள்ளனர் என்று தகவல்கள் […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான்களின் தாக்குதல் அதிகமாகியுள்ளதால் இரவு நேரத்தில் மட்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் 20 ஆண்டுகளாக தங்கியிருந்த அமெரிக்க நேட்டோ படைகள் வெளியேறுமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் தங்களின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்துள்ளனர். இதனால் தாலிபான்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை கொன்று வருகின்றனர். இதுவரை மதத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், ஆண் மற்றும் பெண் பத்திரிக்கையாளர்கள், மனித ஆர்வலர்கள் போன்ற 33 பேரை கொன்றுள்ளனர். இதனை தொடர்ந்து […]
ஆப்கானிஸ்தான் நாட்டின் பல பகுதிகளை கைப்பற்றிய தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அந்நாட்டு அரசுக்குமிடையேயான பேச்சுவார்த்தை மீண்டும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியதையடுத்து தலிபான் பயங்கரவாதிகள் அங்குள்ள பல பகுதிகளை கைப்பற்றியுள்ளார்கள். இதனால் ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள பொது மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்த திட்டமிட்ட அரசாங்கம் கத்தார் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகளின் பிரதிநிதியுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து […]
ஆப்கானிஸ்தான் படைக்கு ஆதரவாக அமெரிக்கா தொடர்ந்து வான்வழி தாக்குதலை நடத்தும் என்று அந்நாட்டு ராணுவத்தின் கமாண்டர் ஒருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறி வரும் நிலையில் தலிபான்களின் தாக்குதல் கடந்த சில நாட்களாக அந்நாட்டில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள பல்வேறு பகுதிகளை கைப்பற்றி வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்க ராணுவத்தின் கமாண்டர்களில் ஒருவரான கென்னத் மெக்கன்சி ஆப்கானிஸ்தான் படைகளுக்கு உதவும் வகையில் அமெரிக்கா வான்வெளி தாக்குதலை தொடர்ந்து நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். […]
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில் அந்நாட்டு அரசு பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தியுள்ளதாக பிரபல ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்க படையினர் தலிபான்களுக்கு எதிரான போரில் ராணுவத்துக்கு உதவவும், ஆப்கன் அரசு படைகளுக்கு பயிற்சி அளிக்கவும் ஆப்கானிஸ்தானில் தங்கியிருந்தனர். மேலும் கத்தார் தலைநகர் தோஹாவில் ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் தலிபான்களுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. அதன்படி கடந்த 2019-ஆம் ஆண்டு வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் ஒன்று இரு தரப்பினருக்கிடையே […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான்கள் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளில் சுமார் 33 நபர்களை கொன்றதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் அரசை எதிர்த்து தலீபான் தீவிரவாதிகள் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்நாட்டின் அரசப்படையினருக்கு ஆதரவாக இருந்த அமெரிக்க படையினரும் வெளியேறினார்கள். இதனால் தலீபான்கள், நாட்டின் பல பகுதிகளை கைப்பற்றி வருகிறார்கள். இந்நிலையில் தலிபான்கள் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளிலிருந்து 33 நபர்களை கொன்று கொடூர செயலை செய்துள்ளார்கள். இதில் பழங்குடியின மக்கள், சமூக ஆர்வலர்கள், செய்தியாளர்கள், மத பண்டிதர்கள், […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் ராணுவத்துக்கும் தாலிபான்களுக்கும் இடையில் நடைபெற்ற தாக்குதலில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்புதுறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில் அந்நாட்டு ராணுவத்திற்கும் அவர்களுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் ராணுவம் இரண்டு பகுதிகளில் வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில் ஒரு பகுதியில் 30 தாலிபான்கள் உயிரிழந்ததாகவும் 17 பேர் படுகாயமடைந்ததாகவும் அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் மற்றொரு இடமான வடக்கு ஜாவ்சான் பகுதியில் உள்ள […]
ஆப்கானிஸ்தான் நாட்டினை தாலிபான்களின் கட்டுப்பாட்டில் முழுவதுமாக கொண்டுவரப் போவதாக அவர்களின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 20 ஆண்டுகளாக இருந்த அமெரிக்க நேசோட்டு படைகள் வெளியேறுகின்றனர். மேலும் அக்டோபர் மாதத்திற்குள் அனைத்து படைகளும் வெளியேறுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து தாலிபான்கள் நாட்டை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிக்கின்றனர். இதனால் ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள 400 மாவட்டங்களில் 200 தாலிபான்களின் கைவசம் சென்றுள்ளது. இதனை அடுத்து ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான், ஈரான், கஜகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்ற […]
ஆப்கானிஸ்தானில் திடீரென நடந்த வான்வழி தாக்குதலில் ஐந்து தலீபான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறி வரும் நிலையில் தலீபான்களின் ஆதிக்கம் தற்போது அந்நாட்டில் அதிகரித்து வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் தலீபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் பல பகுதிகளையும் கைப்பற்றி வருகின்றனர். இதனால் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் பதற்றம் நீடிக்கிறது. இந்நிலையில் அமெரிக்க படைகள் தலீபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் உள்ள சயாத் அபாத் பகுதியில் ஒன்று கூடியிருப்பதை அறிந்து அங்கு வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளனர். […]
ஆப்கானிஸ்தான் நாட்டின் இராணுவத்தினருக்கும் தலிபான்களுக்கும் இடையில் மோதல் இருந்த நிலையில் அதனை முடிவுக்கு கொண்டு வரப்போவதாக அந்த இயக்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டில் இருபது வருடங்களாக இருந்த அமெரிக்க படையினர் வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் வெளியேற வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்துஅமெரிக்கா படைகள் வெளியேறுவதை அடுத்து தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர். இதனால் ஆப்கானிஸ்தானில் பல்வேறு இடங்களில் அந்நாட்டு ராணுவத்திற்கும் தலிபான்களுக்கும் இடையே பெரும் மோதல் […]
ஆப்கானிஸ்தான் நாட்டின் அதிபரான அஷ்ரப் கனி, சிறையிலிருந்து 5,000 தலீபான் பயங்கரவாதிகளை விடுவித்தது மிகப்பெரும் தவறு என்று கூறியிருக்கிறார். ஆப்கானிஸ்தான் நாட்டின் அரசபடையினருக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த அமெரிக்க படைகள் வெளியேற்றப்பட்டது. இதனால் தலீபான் பயங்கரவாதிகளின் அட்டூழியம் தொடங்கியுள்ளது. நாட்டின் அதிகமான பகுதிகளை கைப்பற்றி விட்டார்கள். இந்நிலையில் நேற்று, காபூல் நகரில் பக்ரீத் பண்டிகைக்கான சிறப்பு தொழுகை நடந்தது. அப்போது, பொதுமக்களிடம் பேசிய அதிபர், “தலீபான் பயங்கரவாதிகளிடம் அமைதியை ஏற்படுத்தும் நோக்கம் கிடையாது. அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட அமைதி […]
ஆப்கானிஸ்தானில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்த சமயத்தில் ஜனாதிபதி மாளிகையின் அருகில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள காபூல் நகரத்தில் பக்ரீத் பண்டிகைக்கான சிறப்பு தொழுகை நடைபெற்றது. அப்போது ஜனாதிபதி மாளிகையின் அருகில் திடீரென்று மூன்று ராக்கெட்டுகள் வீசப்பட்டது. இதனால் ஏற்பட்ட விளைவுகள் தொடர்பில் தகவல் தெரிவிக்கப்படவில்லை. எனினும் திடீரென்று நடத்தப்பட்ட தாக்குதலால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. மேலும் காபூல் நகரத்திலுள்ள பல பகுதிகளிலும் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து நாட்டின் […]
ஆப்கானிஸ்தான் தூதரின் மகள் பாகிஸ்தானில் மர்ம கும்பலால் கடத்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தூதர் மற்றும் மூத்த தூதரக அதிகாரிகளை ஆப்கானிஸ்தான் திரும்பி அழைக்கவுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரான நஜிப் அலிகேலின் மகள் 27 வயதான சில்சிலா அலிகேல் ஆவார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் மர்ம கும்பல் ஒன்றால் கடத்தப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் கடத்திய கும்பலிடம் இருந்து துன்புறுத்தப்பட்ட நிலையில் சில மணி நேரங்களுக்குப் பின் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தினால் […]
பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான் ஆப்கானிஸ்தான் நாட்டின் தூதர் மகளை கடத்தி கொடுமைப்படுத்திய மர்மநபர்களை 48 மணி நேரத்தில் பிடிக்க உத்தரவிட்டிருக்கிறார். பாகிஸ்தான் நாட்டின் ஆப்கானிஸ்தான் தூதரான நஜிபுல்லா அலிகிலின் மகளான சில்சிலாவை இஸ்லாமாபாத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மர்ம நபர்கள் கடத்திச்சென்றனர். அதன்பின்பு அவரை கொடூரமாக சித்திரவதை செய்து இரவில் விடுவித்துள்ளனர். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். இந்நிலையில் உள்துறை மந்திரி ஷேக் ரஷீத் அகமதுவிற்கு, அந்த மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய இம்ரான்கான் […]
தாலிபான்கள் வன்முறை தாக்குதல் நடத்தியதில் புகைப்பட செய்தியாளர் உயிரிழந்த சம்பவத்திற்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் அவர்களின் கைவசம் கொண்டு வந்துள்ளதை அடுத்து அங்கு அரசு படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே மோதல் வலுப்பெற்றது. அதில் கந்தகார் பகுதியில் ஸ்பின் போல்டக் இடத்தில் தலிபான்களுக்கும் ராணுவத்திற்கும் இடையே ஏற்பட்ட தாக்குதலில் இந்திய புகைப்பட செய்தியாளர் டேனிஸ் சித்திக் கொல்லப்பட்டார். மேலும் இவர் கொரோனா காலகட்டங்களில் கங்கை நதிக்கரையில் பிணங்கள் எரிக்கப்படுவதை தனது புகைப்படத்தின் வாயிலாக […]
ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் தாக்குதலினால் உயிரிழந்த புகைப்பட செய்தியாளர் குடும்பத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை இரங்கல் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதை தொடர்ந்து தாலிபான்கள் நாட்டை தங்கள் கைவசம் கொண்டு வந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டு ராணுவத்திற்கும் தாலிபான்களுக்கும் இடையே மோதல் அதிகரித்து வருகிறது. இந்த மோதல் குறித்து செய்தி சேகரிக்க ராய்ஸ்டர் நிறுவனத்தின் புகைப்படப் செய்தியாளர் டேனிஷ் சித்திக் சென்றுள்ளார். இதனை தொடர்ந்து கந்தகாரின் அருகில் உள்ள ஸ்பின் போல்டக் பகுதியில் தாலிபான்களுக்கும் இராணுவத்திற்கும் ஏற்பட்ட […]
ஆப்கானிஸ்தான் நாட்டின் தூதருடைய மகள் கடத்தப்பட்டு பாகிஸ்தானில் கொடுமை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டின் ஆப்கானிஸ்தான் தூதரான நஜிபுல்லா அலிகெய்லின் என்பவரின் மகளான சில்சிலா அலிகெய்லை இஸ்லாமாபாத்தில் ராணா மார்க்கெட்டிற்கு அருகில் நேற்று சில மர்ம நபர்கள் கடத்தினர். அதன்பின்பு அவரை கொடூரமாக சித்திரவதை செய்துள்ளனர். தற்போது விடுவிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். ஆப்கானிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சகம் இதனை கண்டித்து ட்விட்டரில் தெரிவித்திருப்பதாவது, ஆப்கானிஸ்தானின் தூதர்களும் அவர்களின் குடும்பத்தாரும் பாகிஸ்தானில் இருக்கும் தூதரகத்தின் […]
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் பிரபல பத்திரிக்கையாளர் உயிரிழந்த சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆப்கானிஸ்தான் நாட்டில் பல வருடங்களாகவே அரச படைகளுக்கும் தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த தாக்குதல்களை புகைப்படம் எடுப்பதற்காக இந்தியாவைச் சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளரான டேனிஷ் சித்திகி என்பவர் அந்நாட்டிற்கு சென்றிருக்கிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட தாக்குதலில், அந்த பத்திரிக்கையாளர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் இச்செயலுக்காக தலிபான் தீவிரவாதிகள் மன்னிப்பு கேட்டிருக்கிறார்கள். இது […]
ஆப்கானிஸ்தானின் அதிபர் தங்கள் நாட்டில் நிலவும் அசாதாரண சூழலுக்கு பாகிஸ்தான் தான் காரணம் என்று கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானில் சுமார் 20 வருடங்களாக தங்கியிருந்த அமெரிக்கப் படைகள் வெளியேறுவதை அடுத்து அந்த நாட்டை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு மோசமான நிலைமை தொடர்வதாகவும் இதற்கு ஒரு வகையில் பாகிஸ்தானும் காரணம் என்று ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி கூறியுள்ளார். மேலும் ஆப்கானிஸ்தான் நாட்டில் சமாதான முன்னெடுப்பில் பாகிஸ்தான் எதிரான பங்களிப்பை கொண்டுள்ளதாகவும் அஷ்ரப் கனி குற்றம் கூறியுள்ளார். […]
இந்திய புகைப்பட செய்தியாளர் ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற தாலிபான்களின் தாக்குதலில் கொல்லப்பட்டதை அடுத்து அவருடைய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலுள்ள மும்பை மாநிலத்தைச் சேர்ந்த டேனிஷ் சித்திக் என்பவர் ராய்டர்ஸ் நிறுவனத்தில் புகைப்பட செய்தியாளராக பணிபுரிந்தார். இவர் கொரோனா காலக் கட்டங்களில் உயிரிழந்தவர்களை கங்கை கரையில் எரிக்கப்படுவதை புகைப்படம் எடுத்து அதன் மூலம் தன்னை உலகையே திரும்பி பார்க்க வைத்தவர். இவர் ஆப்கானிஸ்தானில் நடந்துவரும் தாலிபான்களின் தாக்குதலை குறித்து தகவல் சேகரிக்க அங்கு சென்றுள்ளார். […]
ஆப்கானிஸ்தானின் துணை அதிபர், தலீபான் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் விமான படை தான் உதவுகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டில் ராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே பல வருடங்களாகவே மோதல் ஏற்பட்டு வருகிறது. எனவே அமெரிக்கா, தங்கள் படைகளை அந்நாட்டின் அரசுக்கு ஆதரவாக களமிறக்கியது. எனினும் தலீபான்கள் தங்கள் நாட்டிலிருந்து பிற படைகள் வெளியேறுமாறு அமைதி பேச்சுவார்த்தையில் கோரினார்கள். எனவே அமெரிக்க படைகள் அந்நாட்டிலிருந்து வெளியேறி வருகிறது. இதனால் மீண்டும் நாடு தலிபான்கள் கட்டுப்பாட்டிற்கு சென்றது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் நடந்துவரும் வன்முறைகளை பற்றி தகவல் சேகரிக்க சென்ற இந்திய புகைப்பட செய்தியாளர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலுள்ள மும்பையில் வளர்ந்தவர் டேனி சித்திக் ஆவார். இவர் ராய்டர்ஸ் நிறுவனத்தில் புகைப்பட செய்தியாளராக பணிபுரிந்தார். இவர் இந்தியாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது என்று புகைப்படத்தின் மூலமாக உலகிற்கு தெரிவித்தார். அதிலும் கங்கை கரைகளில் எரிக்கப்பட்ட பிணங்களை புகைப்படம் எடுத்து வெளியிட்டார். இதனால் உலக சுகாதார மையம் தொடங்கி அனைத்து சர்வதேச […]
ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினருக்கு உதவும் விதமாக அமெரிக்க அதிபர் சுமார் 330 கோடி அமெரிக்க டாலர்களை நிதியாக ஒதுக்கியுள்ளதாக அமெரிக்க சிறப்பு பிரதிநிதி தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள அமெரிக்க படைகள் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் வாபஸ் பெறப்படவுள்ளது. இதற்கிடையே தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள 421 மாவட்டங்களில் 3 ல் 1 பங்கை தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கான அமெரிக்க சிறப்பு பிரதிநிதி உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் […]
ஆப்கானிஸ்தான் அதிபருடன் அந்நாட்டின் அமைதியை நிலைநாட்டுவது தொடர்பில் மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தியுள்ளார். மத்திய வெளிவிவகார மந்திரியான ஜெய்சங்கர், உஸ்பெகிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அப்போது தாஷ்கண்ட் என்ற நகரத்தில் அந்நாட்டின் அதிபர் அஷ்ரப் கனியுடன் சந்திப்பு மேற்கொண்டார். நாட்டில் கடந்த 20 வருடங்களாக அரசபடையினர் மற்றும் தலீபான் தீவிரவாதிகள் இடையே மோதல் ஏற்பட்டு வந்தது. எனவே அமெரிக்கா, தங்கள் படைகளை ஆப்கானிஸ்தான் நாட்டின் அரசுக்கு ஆதரவளிக்கும் வகையில் அங்கு களமிறக்கியது. ஆனால் தற்போது அமெரிக்க […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் பதுங்கு குழிகளில் வைத்திருந்த வெடிகுண்டுகள் தீடிரென வெடித்ததில் 7 தாலிபான்கள் பலியாகியுள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் இருபது வருடங்களாக இருந்த அமெரிக்க படையினர் வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் வெளியேற வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து அவர்கள் வெளியேறுவதை தொடர்ந்து தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் மக்கள் தாலிபான்களின் நடைமுறைகளினால் அச்சமடைந்துள்ளனர். இந்த சமயத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டில் பக்டியா மாகாணத்தில் […]
பிரான்ஸ் அரசு ஆப்கானிஸ்தானில் வசித்து வரும் தன் நாட்டு மக்களை அந்நாட்டிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க தலைமையிலான வெளிநாட்டுப் படைகள் வெளியேறியதும் ஆப்கானிஸ்தானின் பெரும்பகுதியை தலீபான்கள் ஆக்கிரமித்து விட்டனர். எனவே ஆப்கானிஸ்தானிலிருந்து சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளும் தங்களது குடிமக்களை தற்போது வெளியேற்றி வருகின்றனர். அந்த வகையில் பிரான்ஸ் நாடு தற்போது ஆப்கானிஸ்தானிலிருந்து தங்களது குடிமக்களை வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளது. மேலும் பிரான்ஸ் அரசு வருகின்ற 17-ம் தேதி பிரான்ஸ் நாட்டு மக்கள் […]
பிரான்ஸ் அரசு ஆப்கானிஸ்தானில் வசிக்கும் தங்கள் நாட்டுக் குடிமக்கள் உடனே அங்கிருந்து வெளியேற வலியுறுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வெளியேற்றப்பட்டவுடன், தலிபான் தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனர். எனவே இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகள் தங்கள் மக்களை ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து வெளியேறுமாறு கூறிவருகிறது. இந்நிலையில் தற்போது, பிரான்ஸ் அரசு வரும் 17ஆம் தேதி அன்று தங்கள் குடிமக்கள் அந்நாட்டிலிருந்து வெளியேற ஒரு சிறப்பு விமானத்தை அனுப்புகிறது. எனவே பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மக்கள் அனைவரும் […]
ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி முகமது ஹனீஃப் அத்மரை நேற்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தஜிகிஸ்தான் தலைநகர் துஷன்பே நகரில் வைத்து சந்தித்துள்ளார். ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி முகமது ஹனீஃப் அத்மரை நேற்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தஜிகிஸ்தான் தலைநகர் துஷன்பே நகரில் வைத்து சந்தித்துள்ளார். அப்போது ஆப்கானிஸ்தானில் நிலவும் தற்போதைய சூழல் குறித்து இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் கலந்து பேசியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் […]
ஆப்கானிஸ்தான் நாட்டினை தலிபான்கள் கைவசப்படுதியுள்ள சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 20 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்க படையினர் வரும் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இந்த சுழலில் ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் வேகமாக கைவசப்படுத்தி வருகின்றனர். இதனால் ஆப்கானிஸ்தான் நாட்டில் பரபரப்பான நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையானது சீனாவிற்கு கவலையை அளித்துள்ளது ஏனெனில் ஆப்கானிஸ்தானுடன் 8 கிலோமீட்டர் எல்லையில் ஜின்ஜியாங் […]
காந்தஹாரில் இருக்கும் இந்திய தூதரகம் தற்காலிகமாக அடைக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவலை இந்திய வெளியுறவுத்துறை மறுத்துள்ளது. ஆப்கானிஸ்தானில் பல வருடங்களாக தலிபான் தீவிரவாதிகளுக்கும் அமெரிக்க படையினருக்கும் இடையில் போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அவர்களுக்கு இடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் அமெரிக்கப் படைகள் நாட்டிலிருந்து வெளியேறுமாறு தலீபான் தீவிரவாதிகள் கூறியதால், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செப்டம்பர் மாதம் 11-ஆம் தேதிக்கு முன்பாக ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்க படைகள் அனைத்தும் வெளியேற்றப்படும் என்று தெரிவித்திருந்தார். எனவே படைகள் நாட்டிலிருந்து திரும்பப் […]
ஆப்கானிஸ்தான் நாட்டை கட்டமைப்பது எங்களது கடமை இல்லை என்று அமெரிக்க அதிபர் ஜோபைடன் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக அந்நாட்டின் அரசுக்கு ஆதரவாக இருந்த அமெரிக்க படைகளை வெளியேறுமாறு தலீபான் தீவிரவாதிகள் கேட்டுக்கொண்டனர். எனவே அதிபர் ஜோ பைடன், குறிப்பிட்ட நாளுக்கு முன்பாகவே தங்கள் படைகள் அனைத்தையும் ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்பப் பெற்று விட்டார். இதனால் தலீபான் தீவிரவாதிகளின் ஆட்டம் மீண்டும் நாட்டில் தொடங்கிவிட்டது. எனவே அமெரிக்க அரசு ஆப்கானிஸ்தானை கைவிட்டுவிட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு பதிலளித்த […]
ஆப்கானிஸ்தான் நாட்டின் 85% பகுதியை கைப்பற்றி தாலிபான்கள் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் இருபது ஆண்டுகளாக அமெரிக்க படையினர் இருந்துள்ளனர். இதனை அடுத்து அமெரிக்க நாட்டின் அதிபர் ஜோ பைடனின் உத்தரவிற்கு இணங்கி அமெரிக்க படையினர் தங்கள் சொந்த நாட்டிற்கே திரும்ப உள்ளனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் 85 சதவிகித பகுதியை தாலிபான்கள் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். இதனை அந்த பயங்கரவாதிகள் படையின் ஒருவரான ஷாஹபுதீன் […]
ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தாலிபான்கள் திடீரென்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 2 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகள் முழுவதும் வருகிற ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியேறுவார்கள் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். இந்த அமெரிக்க படைகள் வெளியேறுவதை தொடர்ந்து தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை தங்கள் முழு கட்டுப்பாட்டில் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டின் எல்லைகளான ஈரான், தஜிகிஸ்தானை கைவசப்படுத்தியுள்ளனர். மேலும் ஆப்கானிஸ்தான் […]
அமெரிக்க ராணுவ படைகள், ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து வெளியேறி வருவதால், நாட்டில் தலீபான்கள் மீண்டும் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறார்கள். ஆப்கானிஸ்தானில் அரசபடை மற்றும் தலிபான் தீவிரவாதிகளுக்கு இடையே பல வருடங்களாக மோதல் ஏற்பட்டு வருகிறது. எனவே அரச படையினருக்கு ஆதரவாக அமெரிக்கா தங்கள் படைகளை ஆப்கானிஸ்தானில் களமிறக்கியது. அங்கு சுமார் 20 வருடங்களாக அமெரிக்க படைகள் இயங்கி வந்தது. எனினும் இந்த போரை முடிவு கட்ட அமெரிக்கா மற்றும் தலீபான்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதில், ஆப்கானிஸ்தான் அரசுடன் […]
அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன், ஆப்கானிஸ்தானில் 20 வருட காலமாக நடந்து வரும் போர் வரும் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதியுடன் முடிவுக்கு வரும் என்று தெரிவித்திருக்கிறார். ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகளுக்கும், அமெரிக்க அரசுக்கும் இடையே சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் ஆப்கானிஸ்தான் அரசுடன், தலீபான்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும்போது தாக்குதலில் ஈடுபடக்கூடாது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தங்கள் படைகள் வெளியேற்றப்படும் என்று தெரிவித்தார். […]
ஆப்கானிஸ்தானில் நேற்று முன்தினம் பயங்கர தாக்குதல் நடந்ததாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. நேற்று முன்தினம் தலீபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் உள்ள காலா இ நாவ் நகரத்துக்குள் புகுந்து அந்த நகரத்தை கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உள்நாட்டு படைகள் தலீபான் பயங்கரவாதிகள் மீது தொடர் தாக்குதல் நடத்தியதன் விளைவாக அந்த நகரத்தை மீட்டெடுத்துள்ளன. இந்த தாக்குதலில் உள்நாட்டு படைகள் 69 தலீபான் பயங்கரவாதிகளை கொன்று குவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 23 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. […]
ரிக்டர் அளவில் 5.1 ஆகப் பதிவான நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை. ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள பைசாபாத் நகரில் நேற்று மதியம் 1.50 மணிக்கு லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் பூமியிலிருந்து 167 கிலோ மீட்டர் ஆழத்திலும் பைசாபாத் நகரிலிருந்து 96 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டிருந்தது. இதனையடுத்து இந்த நில அதிர்வானது ரிக்டர் அளவில் 5.1 ஆகப் பதிவாகியுள்ளது என தேசிய புவியியல் ஆய்வு மையம் […]
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆப்கானிஸ்தானில் நேட்டோவின் பணிக்கு நியமிக்கப்பட்ட அனைத்து பிரிட்டிஷ் படைகளும் தற்போது நாடு திரும்புவதாக தகவல் வெளியிட்டுள்ளார். பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் ஹவுஸ் ஆப் காமன்ஸில் உரையாற்றிய போது ஆப்கானிஸ்தானில் நேட்டோவின் பணிக்கு நியமிக்கப்பட்ட அனைத்து பிரிட்டிஷ் படைகளும் தற்போது நாடு திரும்புவதாக கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானில் அல்கொய்தா மற்றும் தலீபானுக்கு எதிரான போர் காரணமாக நோட்டோ சர்வதேச நாடுகளின் கூட்டுப்படை கடந்த 20 வருடங்களாக ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ளன. மேலும் வருகின்ற செப்டம்பர் […]
ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு போர் அதிகரித்தால் பாகிஸ்தானுக்கு 5 லட்சம் அகதிகள் வருவார்கள் என்று நாடாளுமன்றத்தில் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்த நாள் முதல் இன்று வரை அண்டை நாடான பாகிஸ்தானுக்கு ஆப்கானிஸ்தான் மக்கள் அகதிகளாக சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதற்கிடையே பாகிஸ்தான் அரசு அவர்களை ஆப்கானிஸ்தானுக்கு திருப்பி அனுப்ப உத்தரவிட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் விவரங்களை கண்காணிக்கும் குழு ஒன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு போர் அதிகரித்தால் பாகிஸ்தானுக்கு 5 […]