Categories
உலக செய்திகள்

“பயங்கர வெள்ளப்பெருக்கு”… 100 ஐ தாண்டிய பலி… அல்லல்படும் ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் நாட்டில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் நூற்றுக்கும் மேலான மக்கள் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் நேற்று தீவிர மழை பெய்து தீர்த்தது. இந்த மழையால் பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதிகாலை மக்கள் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அதிகமான வீடுகள் மண்ணுக்குள் புதைந்து விட்டன. பர்வான், வார்டக் ஆகிய இரு மாகாணங்களில் வெள்ளம் அத்துமீறி பாய்ந்ததால் பல வீடுகள் வெள்ளத்தால் அடித்து இழுத்துச் செல்லப்பட்டன. இந்த தகவல் அறிந்து […]

Categories
உலக செய்திகள்

“போலியோ”.. இன்னும் இந்த 2 நாட்டுல மட்டும் இருக்கு…!!

போலியோ நோயை பல்வேறு நாடுகள் வென்று வரும் நிலையில் இரு நாடுகள் மட்டும் இந்த நோய் தாக்கத்தை பெற்று வருவதாக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. 1952 ஆம் ஆண்டு, போலியோ என்ற இளம் பிள்ளை வாதம் என்ற கொடூர நோய் கண்டுபிடிக்கப்பட்டு உலகையே உலுக்கிக் கொண்டிருந்தது. இந்நோயிற்குத் தடுப்பூசி மருந்து கண்டறிவதற்குள் பல நாடுகளில் பரவ தொடங்கி பெரும்பாலும் குழந்தைகளை தாக்க ஆரம்பித்தது. இந்நோயிக்கு எதிராக உலக சுகாதார அமைப்பு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வந்தது. […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் தொடரும் தாக்குதல்… 3 பேர் பலி…!!

ஆப்கானிஸ்தானில் நடந்த கார் குண்டு வெடிப்பில் 3 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபகாலமாக ஆப்கானிஸ்தான் நாட்டுக்கும், தாலிபான் நாட்டிற்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. இருந்தாலும் இருநாடுகளும் சமாதான நிலையை அடைய பல முறை திட்டமிட்டுள்ளனர்.  இந்நிலையில் பால்க் மாவட்டத்திலுள்ள ராணுவப் படையினரை குறிபார்த்து தாலிபான் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலை ஒரு காரில் குண்டு வைத்து வெடிக்கச் செய்து நடத்தியுள்ளது. நடந்த தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர் என ராணுவ வட்டாரங்கள் […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் அட்டூழியம்… வான் தாக்குதல் நடத்திய ராணுவம்… 10 தலீபான்கள் பலி…!!!

ஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய வான் தாக்குதலில் 10 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தான் அரசுக்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த 19 ஆண்டுகளாக தொடர்ந்து உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருக்கிறது. ஆப்கானிஸ்தான் அரசு, இந்த உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் பயங்கரவாதிகளின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதுமட்டுமன்றி இராணுவ முகாம்கள், காவல் நிலையங்கள் மற்றும் அப்பாவி பொதுமக்களை குறிவைத்தும் பயங்கரவாதிகள் தொடர் குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அட்டூழியம்… கண்ணிவெடித் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்த பரிதாபம்…!!!

ஆப்கானிஸ்தானில் சாலையோரம் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி தாக்குதலில் பொதுமக்கள் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் அரசுக்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே 20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து கொண்டிருக்கிறது. அந்தப் போரில் ஆப்கானிஸ்தான் அரசுக்கு சாதகமாக அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படைகள் ஆதரவு அளித்து கொண்டிருக்கின்றன. மேலும் இந்தப் போரில் பயங்கரவாதிகள் பொதுமக்களை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்த நிலையில் அந்த நாட்டின் ஹர் மாகாணம் டாலெட் யார் மாவட்டத்தில் இருக்கின்ற சாலைப் பகுதியில் […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அட்டூழியம்… அரசு சார் போராளிகள் 13 பேர் பலி…!!!

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அரசு சார்பு போராளிகள் 13 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் அரசுக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே 19 ஆண்டுகளுக்கு மேலாக உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருக்கிறது. தலிபான் பயங்கரவாதிகளின் அட்டூழியத்தை ஒடுக்குவதற்கு அந்நாட்டு ராணுவம் கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறது. அதே சமயத்தில் தலிபான்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ள பல மாகாணங்களில் பொது மக்களில் ஒரு பிரிவினர் போராளிகளாக மாறி அந்நாட்டு அரசுக்கு ஆதரவாக தலிபான் பயங்கரவாதிகளிடம் போராடி வருகின்றனர். ஆயுதமேந்திய அரசுசார் போராளிகள் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான் சுதந்திர தினம்… பீரங்கி குண்டு தாக்குதல்… பயங்கரவாதிகள்…!!!

ஆப்கானிஸ்தான் சுதந்திர தினத்தன்று காபூலில் பீரங்கி குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆப்கானிஸ்தானில் 19 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துக் கொண்டிருக்கும் உள்நாட்டு போரால் அங்கு தொடர்ந்து மோசமான சூழ்நிலை நிலவி கொண்டிருக்கிறது. இந்நிலையில் மோசமான பாதுகாப்பு நிலைக்கும் மத்தியில் நேற்று ஆப்கானிஸ்தான் 101-வது சுதந்திர தினத்தை கொண்டாடியது. அதனையொட்டி தலைநகர் காபூலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் அதையும் மீறி காபூலில் பயங்கர பீரங்கி குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான் சுதந்திர தினம்… ராக்கெட் தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்…!!!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சுதந்திர தினத்தன்று பயங்கர ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆப்கானிஸ்தானில் இன்று சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தலைநகர் காபூலின் வஜீர் அக்பர் கான்,ஷெர்போர், 1வது மேக்ரோரியன் மற்றும் ஷாஷ்டாரக் ஆகிய பகுதிகளில் ராக்கெட் தாக்குதல் நடந்தால், படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறியுள்ளனர். இன்று காலையில் காபூல் நகரத்தின் பி.டி 8 மற்றும் பி.டி 17 பகுதிகளில் […]

Categories
உலக செய்திகள்

தலிபான்களை விடுவிக்க வேண்டாம்… ஆப்கான் அரசிடம் கோரிக்கை விடுத்த பிரான்ஸ்…!!!

பிரான்ஸ் குடிமக்களை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் தலிபான்களை விடுவிக்க கூடாது என்று ஆப்கான் அரசிடம் பிரான்ஸ் கோரிக்கை விடுத்துள்ளது. ஆப்கானிஸ்தான் சிறைகளில் இருக்கின்ற தலிபான் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அமெரிக்க அரசுக்கும் தலிபான்களுக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது. அதன்பின்னர் ஆப்கானிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 5000 தலிபான் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தனர். அதனைப் போலவே ஆப்கானிஸ்தான் அரசு அதிகாரிகள், அரசு பாதுகாப்பு படையினர் ஆயிரம் பேரை தலிபான்கள் அமைப்பு விடுதலை செய்ய வேண்டும் என்று […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான் அமைதிக்குழு பெண் உறுப்பினர் மீது தாக்குதல்… அமெரிக்கா கடும் கண்டனம்…!!!

ஆப்கானிஸ்தான் அமைதி குழுவை சேர்ந்த பெண் உறுப்பினர் மீது நடத்தப்பட்ட கொலை வெறி தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்தினருக்கும் இடையில் 19 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து கொண்டிருக்கிறது. அந்தப் போரில் ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்கா சாதகமாக இருந்துகொண்டிருக்கிறது. ஆனால் முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அமெரிக்கா பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் பலனாக கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் அமெரிக்க அரசு […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளின் அட்டூழியம்… 5 பேர் உயிரிழந்த பரிதாபம்…!!!

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானின் உரூஸ்கான் மாகாணத்தில் தரீன்கோட் நகரில் பாதுகாப்பு படையினரை இலக்காக கொண்டு தலீபான் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் மேற்கொண்டனர். அந்தத் தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் நீண்ட ஆண்டுகளாக அரசிற்கு எதிரான போரில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு அமெரிக்கா தலைமையிலான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. அதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் திடீர் குண்டுவெடிப்பு… 5 பேர் பலி… 10 பேர் படுகாயம்..!!

ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில் 5 பேர் உயிரிழந்த நிலையில் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் எல்லை அருகே உள்ள பாலுசிஸ்தான் மாகாணம் சாமன் நகரத்தின் ஹாஜி நிடா சந்தையில் குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த சம்பவம் பற்றி காவல்துறையினர் கூறும்போது, “தடைசெய்யப்பட்ட அமைப்புகளை சேர்ந்த பிரிவினைவாதிகள் இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தியிருக்கலாம். ஆனால் எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் இந்த குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை. இந்த குண்டுவெடிப்பில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10 […]

Categories
உலக செய்திகள்

400 தலிபான் சிறைக் கைதிகள் விடுதலை… ஆப்கானிஸ்தான் அரசு முடிவு..!!

ஆப்கானிஸ்தானில் தாக்குதலை ஏற்படுத்தி வந்த 400 முக்கிய தலிபான் சிறைக்கைதிகளை விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் தொடர்ந்து உள்நாட்டு கலவரங்களை ஏற்படுத்தி வருவது மட்டுமில்லாமல் பாதுகாப்பு படையினர் மீது திடீர் தாக்குதல்களையும் மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் ஒரு சிறைச்சாலையில் தற்கொலை படை தாக்குதல் நடத்திய தலிபான் சிறைக் கைதிகளை விடுதலை செய்ய முயற்சி செய்தபோது அந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டது. இந்நிலையில் தலைநகரான காபூலில் அதிபர் அஸ்ரப் கானி தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு… போராட்டத்தில் இறங்கிய மக்கள்..!!

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டை கண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் தொடர்ந்து பதற்றமான நிலை நீடித்துக் கொண்டே வருகிறது. இரு நாட்டின் ராணுவத்திற்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் சென்ற மாதம் 31ஆம் தேதி ஆப்கானிஸ்தானின் காந்தஹார் மாகாணம் ஸ்பின் போல்டாக் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. அவ்வாறு நடத்தப்பட்ட தாக்குதலில் அப்பாவி […]

Categories
உலக செய்திகள்

மனைவி மீது சந்தேகம்…. மூக்கை அறுத்த கணவன்… ஆப்கானில் கொடூரம் …!!

ஆப்கானிஸ்தானில் மனைவியின் மீது சந்தேகம் அடைந்த கணவர் அவர் மூக்கை அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் அதிகளவில் நடந்து கொண்டிருக்கின்றன. மேலும் ஆப்கானிஸ்தானில் 87% பெண்கள் உடல் ரீதியான துன்பங்கள் அல்லது பாலியல் வன்முறைகளுக்கு ஆளாகி கொண்டிருக்கின்றனர். அது தவிர மனதளவிலும் அதிக அளவு பாதிக்கப்படுகிறார்கள் என்று ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை அமைப்பு நடத்திய தேசிய கணக்கெடுப்பில் அறியப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி கணவரோ அல்லது குடும்பத்தில் இருக்கின்ற வேறு ஆண்கள் மூலமாக […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானில் ஒரு கோடி பேர் பாதிப்பு…? சுகாதாரத் துறையின் அதிர்ச்சித் தகவல்….!!

ஆப்கானிஸ்தானில் ஒரு கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சுகாதார அமைச்சகம் அதிர்ச்சித் தகவலை அளித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36,000 என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1200 பேர் உயிரிழந்துள்ளதாக பதிவுசெய்துள்ளனர். இருந்தாலும் வறுமை மற்றும் பல்வேறு கால உள்ளூர் சண்டைகளால் பாதிக்கப்பட்டுள்ள சுகாதார அமைப்பு காரணமாக கொரோனா பாதிப்பு குறைவான அளவே பதிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், ஒரு கோடி மக்கள் கொரோனாவிற்கு ஆளாகி இருக்கலாம் என நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

வான்வெளி தாக்குதல்…. தலிபான் பயங்கரவாத தளபதி உட்பட 4 பேர் பலி….!!

ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்கள் மேற்கொண்ட வான் தாக்குதலில் தலிபான் பயங்கரவாத தளபதி உட்பட நான்கு பேர் பலியாகினர். ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அந்நாட்டு அரசிற்கும் இடையே உருவாகியுள்ள உள்நாட்டுப் போர் மிகவும் தீவிரம் அடைந்து கொண்டிருக்கிறது. இராணுவ முகாம்கள் மற்றும் காவல்நிலையங்கள் ஆகியவற்றை குறிவைத்து பயங்கரவாதிகள் தொடர் குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு ஆகிய சம்பவங்களை நடத்தி வருகின்றனர். அதே சமயத்தில் நாடு முழுவதும் உள்ள தலிபான் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து அந்நாட்டின் ராணுவம் வான் வழியாகவும் […]

Categories
உலக செய்திகள்

400 பேரை விடுவிக்க முடியாது… அதிபர் பேச்சால் ஆத்திரமடைந்த பயங்கரவாதிகள்… விரக்தியில் அமெரிக்கா..!!

ஆப்கானிஸ்தானில் தலிபான் கைதிகள் 400 பேரை சிறையில் இருந்து விடுதலை செய்ய முடியாது என அதிபர் அஷ்ரப் கனி கூறியுள்ள செய்தி தலிபான் பயங்கரவாதிகள் இடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் 19 வருடங்களாக நீடித்துக் கொண்டிருக்கும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் அமெரிக்க அரசுக்கும் தலிபான் பயங்கரவாத இயக்கத்தினருக்கும் இடையே சென்ற பிப்ரவரி மாத இறுதியில் வரலாற்று சிறப்புமிக்க அனுமதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அந்த ஒப்பந்தத்தில் தலிபான் பயங்கரவாதிகள் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருக்கும் ஆப்கானிஸ்தான் […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானில் அதிர்ச்சி… “கார் வெடிகுண்டு தாக்குதல்”… 40க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆப்கானிஸ்தானில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 40க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர் ஆப்கானிஸ்தானில் நாட்டு அரசுக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் சுமார் 19 வருடங்களாக உள்நாட்டுப் போர் நிகழ்ந்து வருகின்றது. இத்தகைய போர் தொடங்கியதிலிருந்து ஆப்கானிஸ்தான் நாட்டின் அரசு படைக்கு அமெரிக்கா ஆதரவாக செயல்பட்டு வந்தது. இதனிடையே தலிபான் பயங்கரவாதிகளுடன் போரை நிறுத்துவதற்கு அமெரிக்கா அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இதனை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் தலிபான் பயங்கரவாத அமைப்புக்கும் அமெரிக்க அரசுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அதனை தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

உறுதி கூறியும் மாறவில்லை…. மூன்று வாரத்தில் கொல்லப்பட்ட 250 ராணுவ வீரர்கள்….!!

கடந்த மூன்று வாரத்தில் மட்டும் 250 ஆப்கானிய ராணுவ வீரர்கள் தலிபான் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் சென்ற மூன்று வாரங்களாக 11 மாகாணங்களில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 250 ஆப்கானிய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மட்டுமன்றி 300 பேர் காயமடைந்து இருப்பதாக ஊடகங்கள் கூறியுள்ளன. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மேற்கொண்ட தாக்குதலில் வடக்கு மற்றும் தென்கிழக்கு பகுதியை சேர்ந்த ராணுவ வீரர்கள் பலர் உயிரிழந்தனர். சென்ற பிப்ரவரி 29-ல் அமெரிக்க-தலிபான் சமாதான ஒப்பந்தத்தில் தோஹாவில் […]

Categories
இராணுவம் உலக செய்திகள்

தொடரும் தலிபான் பயங்கரவாதிகளின் தாக்குதல்….. 8 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு…!!

தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 ஆப்கான் ராணுவ வீரர்கள் உயிர் இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் நடத்தியுள்ள தற்கொலைப் படை தாக்குதலில் அந்த நாட்டைச் சேர்ந்த 8 ராணுவவீரர்கள் பலியாகியுள்ளனர். இது பற்றி ராணுவம் தரப்பில் கூறியதாவது, “ஆப்கானிஸ்தானின் மத்தியப் பகுதியில் உள்ள மைதன் மாகாணத்தில் சையத் அபாத் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 8 ஆப்கன் ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் […]

Categories
உலக செய்திகள் கொரோனா

கவச உடைகளும் இல்லை…. முக கவசமும் இல்லை…. கொரோனா நோயாளிகளைக் கவனிக்கும் உறவினர்கள்…!!

மருத்துவமனைகளில் செவிலியர்கள் இல்லாததால் உறவினர்களே கொரோனா நோயாளிகளை கவனித்து கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு  மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு அவர்களின் சொந்த உறவினர்களே பணிவிடை செய்யும் அவலம் ஏற்பட்டு வருகிறது. மருத்துவமனையில் செவிலியர்கள் போதுமான அளவில் இல்லாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பல வருடங்களாக நடைபெற்று வரும் போர் காரணமாக அங்கு சுகாதார வசதிகள் மிகவும் மோசமாக உள்ளது. கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க போதுமான வசதிகள் […]

Categories
உலக செய்திகள்

மசூதில் நுழைந்த பயங்கரவாதிகள் …. திடீர் தாக்குதலால் 4 பேர் பலி…!!

மசூதில் நுழைந்து தலீபான் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.  ஆப்கானிஸ்தான் நாட்டின் அரசுக்கும் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த 19 ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்து கொண்டிருக்கிறது. இப்போர் ஆனது தற்போதைய நிலையில் மிகவும் தீவிரமடைந்துள்ளது. இப்போரில் பயங்கரவாதிகள் அப்பாவி மக்களையும் ராணுவ வீரர்களையும் காவல்துறையினரையும் தொடர்ந்து தாக்கி கொண்டிருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து வடக்கு மாகாணம் பர்யாப்பின் தலைநகரான மாயம்னாவில் இருக்கின்ற மசூதியில் உள்ளூறை சார்ந்த முஸ்லிம்கள் நேற்று மதியம் தொழுகையில் ஈடுபட்டனர். […]

Categories
உலக செய்திகள்

கவர்னர் கார் மீது துப்பாக்கி சூடு… திடீர் தாக்குதலில் பாதுகாவலர் மரணம்…!!

ஆப்கானிஸ்தானில் கவர்னர் கார் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பாதுகாவலர் உயிரிழந்துள்ளார் ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் தலிபான் பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதலில் ஈடுபடுவது வழக்கம். அவர்களின் தாக்குதலினால் பெண்கள், ஒன்றும் அறியாத பிஞ்சு குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்து வருகின்றனர். அவர்களை கட்டுக்குள் கொண்டுவருவது அரசுக்கு பெரும் சவாலாக இருந்தது. பலமுறை அந்த அமைப்பின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. ஆப்கானிஸ்தானில் நூரிஸ்தான் கவர்னராக இருப்பவர் ஹபீஸ்  அப்துல் கய்யாம். […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானில் பயங்கரவாத தாக்குதல்… 18 பேர் உயிரிழப்பு..!!

ஆப்கானிஸ்தானில் 2 வெவ்வேறு இடங்களில் தனித்தனியாக நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களில் 18 பேர் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தான் மேற்கு கோர் மாகாணத்திலுள்ள சோதனைச்சாவடி வாயிலில் நுழைந்த தலிபான்கள் அங்குள்ள 10 போலீசாரை கொன்றதாக உள்ளூர் காவல் துறைத் தலைவர் ஃபக்ருதீன் தெரிவித்தார். இதற்கிடையே, கிழக்கு கோஸ்ட் மாகாணத்தின் அலி ஷெர் என்ற மாவட்டத்தில் தாலிபான்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டதாக, மாகாண காவல் துறைத் தலைவரின் செய்தித் தொடர்பாளர் அடெல் ஹைதர் கூறியுள்ளார்.. இந்தத் தாக்குதலில் […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானில் அதிர்ச்சி… மசூதியில் குண்டு வெடித்ததில் 4 பேர் பலி… பலர் படுகாயம்..!!

ஆப்கானிஸ்தான் மசூதியில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 4 பேர் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் மேற்கு காபூலில் இருக்கும் ஒரு மசூதியில் நேற்று காலை திடீரென குண்டு வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், 4 பேர் பலியானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், பலர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து கூடுதல் விவரங்கள் எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை. ஆப்கானிஸ்தானில் கடந்த சில வாரங்களில் வன்முறை அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தமாத […]

Categories
உலக செய்திகள்

பச்சிளம் குழந்தை உட்பட பலர் மரணம்…. எதிர்பாராத சம்பவத்தால் பரபரப்பு…!!

மகப்பேறு மருத்துவமனையில் நுழைந்து பச்சிளம் குழந்தை உட்பட பலரை சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஆப்கானிஸ்தானில் இருக்கும் மகப்பேறு மருத்துவமனை ஒன்றில் 3 பேர் போலீஸ் உடையுடன் நுழைந்து நடத்திய தாக்குதலில் பிறந்த பச்சிளம் குழந்தைகள் முதல் பலர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமைந்திருக்கும் மகப்பேறு மருத்துவமனைக்குள் ஊடுருவிய அந்த நபர்கள் முதலில் கையெறி குண்டுகளை வீசி விட்டு பின்னர் கண்ணில் தென்பட்டவர்களை எல்லாம் சுட்டு தள்ளியுள்ளனர். அவர்களின் இந்த எதிர்பாராத […]

Categories
உலக செய்திகள்

மூத்த காவல் அதிகாரியின் இறுதி சடங்கு….. பங்குபெற்றதில் 40 பேர் பரிதாபமாக பலி…!!

காவல் அதிகாரியின் இறுதிசடங்கில் குண்டுவெடித்து 40 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஆப்கானிஸ்தானில் 2001-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடந்து வருகின்றது. நாட்டின் சில பகுதிகளை தலிபான் பயங்கரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு பொதுமக்களை குறிவைத்து பயங்கரமான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். அந்நாட்டு ராணுவத்தினர் இந்த தலிபான் பயங்கரவாத குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். உள்நாட்டில் இருக்கும் படையினருக்கு உதவியாக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். இதன்காரணமாக தலிபான் பயங்கரவாதிகளுக்கும் […]

Categories
உலக செய்திகள்

அதிகமா நிவாரண நிதி வேணும்… மக்கள் நடத்திய போராட்டம்…. 6 பேர் உயிரிழந்த பரிதாபம்…!!

நிவாரண நிதி கேட்டு நடந்த போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 6 பேர் பலியாகியுள்ளனர் ஆப்கானிஸ்தானில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அங்கு நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு தரப்பில் உதவித்தொகை மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டின் மேற்கு பகுதியில் இருக்கும் கோர் மாகாணத்தில் கூடுதல் நிவாரணம் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மக்கள் அரசுக்கு எதிராக தலைநகர் பெரோஸ்கோவில் இருக்கும் […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானில் 80% பேருக்கு கொரோனா….! வெளியாகிய பகீர் தகவல் …!!

ஆப்கானிஸ்தானில் கொரோனா தொற்றினால் 80% பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் 3392 பேர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டு 104 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் காபூலில் 500 பேரிடம் நடத்தப்பட்ட கொரோனா  பரிசோதனையில் 50 சதவீதம் பேருக்கு தொற்று  உறுதியாகியுள்ளது. இதனடிப்படையில் ஆப்கானிஸ்தானில் இருக்கும் 50கோடி  மக்கள் தொகையில் 80% மக்களுக்கு கொரோனா  தொற்று இருக்கலாம் என அச்சம் எழுந்துள்ளது. குடிப்பெயர்வுக்காண சர்வதேச அமைப்பின் ஆப்கானிஸ்தான் அதிகாரி நிக்கோலஸ் பிஷப் கூறியதாவது ஜனவரி […]

Categories
உலக செய்திகள்

ஆப்கான் பாதுகாப்பு படையினர் அதிரடி தாக்குதல்… 6 பயங்கரவாதிகள் பலி!

ஆப்கானில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் தலிபான் பயங்கரவாதிகள் 6 பேர் கொல்லப்பட்டனர். கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தானில்  தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையே உள்நாட்டுபோர் நடந்து வருகின்றது. இந்த சணடயில் ஆப்கானிஸ்தான் அரசுப்படையினருக்கு அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஆதரவளித்து வருகின்றன. இதற்கிடையே, உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர ஆப்கானிஸ்தான் அரசின் உதவியோடு தலிபான்கள் – அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் செய்யப்பட்டது. அமைதி ஒப்பந்தத்தின்படி வெளிநாட்டு […]

Categories
உலக செய்திகள்

பயங்கரவாதிகள் வைத்த கண்ணி வெடி…. ஆப்கானில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலி!

ஆப்கானில் தலிபான் பயங்கரவாதிகள் வைத்த கண்ணி வெடியில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் அரசுப்படைகளுக்கும், தாலிபான்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அதிபர் அஷ்ரப்கனி (ashraf ghani) தலைமையிலான அரசு தீவிர முயற்சிகளை செய்து வருகின்றது.ஆனாலும் அங்கு வன்முறை தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. தலிபான் பயங்கரவாதிகள் போலீசார் மற்றும் ராணுவ வீரர்களை குறிவைத்து தொடர்ந்து பயங்கரவாத […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானில் அரசுப்படையினர் – தாலிபான்களுக்கு இடையே மோதல்… 7 பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானில் அரசுப்படையினர் மற்றும் தாலிபான்களுக்கு இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 7 பேர் பலியாகினர். கடந்த  2001 ஆம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே கடுமையான சண்டை நடைபெற்றுவருகின்றது. இந்த பயங்கர சண்டையில் தலிபான் பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கு உள்நாட்டு படையினருக்கு அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஆதரவளித்து வருகின்றன. சமீபத்தில் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு தலிபான்கள் மற்றும் அமெரிக்க படைகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஒப்பந்தம் செய்யப்பட்டாலும் […]

Categories
உலக செய்திகள்

முதலில் 1,500 தலிபான்கள் விடுவிக்கப்படுவார்கள்… உத்தரவில் கையெழுத்திட்டார் ஆப்கான் அதிபர்.!

ஆப்கான் அதிபர் அஷ்ரப்  கானி (Ashraf Ghani) தலிபான் கைதிகளை விடுவிப்பதற்கான உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப்  கானி தலிபான் கைதிகளை விடுவிப்பதற்கான உத்தரவில் கையெழுத்திட்டார். சிறையில் இருந்து விடுதலையாகும்போது தலிபான் கைதிகளை அழைத்துச் செல்லத் தயாராக  வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோல பதிலுக்கு சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள ஆயிரம் ராணுவ வீரர்களை விடுவிக்க தலிபான்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த ஒப்பந்தம் அமெரிக்காவிற்கும் தலிபானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் ஒரு முக்கிய அம்சமாகும். ஆப்கானிஸ்தானில் சிறைகளில் உள்ள 5,000 தலிபான்களில் […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானில் இருந்து 10 நாட்களில் அமெரிக்க படைகள் வெளியேறும்!

தலிபான்களுடனான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து அடுத்த 10 நாட்களில் அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வாபஸ் பெறத்தொடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க செய்தித் தொடர்பாளர் கர்னர்  சன்னி லெகெட் (Sonny Leggett) செய்தியாளர்களிடம் பேசிய போது, அடுத்த 135 நாட்களுக்குள் வீரர்களின் எண்ணிக்கையை 12 ஆயிரத்திலிருந்து 8 ஆயிரமாகக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும் ஐ.எஸ், அல்கொய்தா உள்ளிட்ட அமைப்பினருடன் எதிர்த்துப் போராடுவதற்காக ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புப் படையினருடன் தாங்கள் சேர்ந்துள்ளதாகவும்  அவர் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

BREAKING : ”அதிபர் பதவியேற்பில் குண்டுவெடிப்பு” ஆப்கானில் பதற்றம் …!!

ஆப்கானிஸ்தானில் அதிபர் பதவி ஏற்பு விழாவின் போது அடுத்தடுத்து குண்டு வெடித்ததால் பற்றமான சூழல் நிலவி உள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபானுக்கும் , அந்நாட்டு நாட்டு அரசுக்கும் எதிராக கடந்த 18 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இதை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க பல பிரதிநிதிகள் முயற்சி எடுத்தும் பலனளிக்கவில்லை. இதனிடையே கடந்த செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி தாலிபானின் எச்சரிக்கையை மீறி பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் நடக்கக்கூடாது, தேர்தலில் மக்கள் யாரும் வாக்களிக்க கூடாது, […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானில் அரசியல் பேரணியில் தாக்குதல்… 27 பேர் மரணம்… அதிஷ்டவசமாக தப்பிய CEO…!!

ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் நடந்த அரசியல் பேரணியில் பயங்கரவாத தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானும், அமெரிக்காவும் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை திரும்பப் பெறுவதற்கான சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சில நாட்களுக்குப் பின்னர், நேற்று பயங்கரவாத தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலில் 27 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஹசாரஸின் தலைவரான அப்துல் அலி மசாரி, 1995 ல் நடந்த கடுமையான உள்நாட்டுப் […]

Categories

Tech |