காபூல் நகரில் உள்ள ஒரு மசூதியின் வாசலில் தலிபான்களை குறிவைத்து குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டதில் அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலிபான்களின் செய்தி தொடர்பாளரான ஜபிஹுல்லா முஜாஹித் என்பவர், தன் தாயின் நினைவு நாள் வழிபாட்டிற்காக ஈத்கா மசூதிக்கு சென்றிருக்கிறார். அப்போது திடீரென்று மசூதி வாசலில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறியிருக்கிறார். இக்கொடூர தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இத்தாக்குதலில் தலீபான்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை […]
Tag: ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தானை விட்டு மக்கள் வெளியேறுவதை தடுப்பதற்காக எல்லைகளில் பயங்கரமான நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காகவும், மக்கள் நாட்டை விட்டு வெளியே செல்வதை தடுக்கவும் ஆப்கானிஸ்தான் எல்லைகளில் தற்கொலை படையை நிறுத்த இருப்பதாக தலீபான் அறிவித்துள்ளது. இதில் தலீபான்-ஆப்கானிஸ்தான் எல்லைகளை சுற்றி குறிப்பாக பதாஷன் மாகாணத்தில் தற்கொலை மனித வெடிகுண்டுகளின் ஒரு பிரத்யேக படைப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த மாகாணத்தின் துணை ஆளுநர் முல்லா நிசார் அகமது அஹ்மதி தஜிகிஸ்தான் மற்றும் சீனாவின் எல்லையான பதாஷானில் ஒரு […]
காபூல் நகரின் மலைப்பகுதிகள் நிறைந்த கோடாமன் நகரில், ஆயிரக்கணக்கான ஆண்கள் தலீபான்களுக்கு ஆதரவு தெரிவித்து கூட்டம் நடத்தியுள்ளனர். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராட்டம் நடத்தி வந்தனர். தலிபான்கள் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இதனால், தங்களின் சுதந்திரத்திற்காக நாடு முழுவதும் பெண்கள் போராடினர். மேலும், நாட்டு மக்கள் தலிபான்களைக்கண்டு பயந்து வாழ்ந்து கொண்டிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்நிலையில், காபூல் நகரில் மலைப்பகுதிகள் நிறைந்து காணப்படும் கோடாமன் என்னும் நகரில், தலிபான்களுக்கு ஆதரவு […]
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் பைசாபாத் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில் நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆகப் பதிவாகியுள்ளது. இது குறித்த தகவலை புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. மேலும் நிலநடுக்கமானது பூமியின் ஆழத்தில் இருந்து 240 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்துள்ளது. குறிப்பாக இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத […]
ஆப்கானிஸ்தான் IEA படை, காபூல் நகருக்கு வடக்கில் இருக்கும் ஐ.எஸ்-கே மறைவிடத்தில் நடத்திய சோதனையில் பல போராளிகள் கொல்லப்பட்டதாக IEA செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். IEA செய்தித் தொடர்பாளரான Bilal Karimi, பர்வான் மாகாணத்தில் இருக்கும் கரிகார் நகரத்தில் சோதனை நடத்தப்பட்டது என்று கூறியிருக்கிறார். எனினும், உயிரிழந்தது எத்தனை பேர்? மற்றும் கைதானது எத்தனை பேர்? என்ற தகவல்களை அவர் கூறவில்லை. சமீபத்தில் நகரத்தின் சாலைப்பகுதியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் தொடர்புகொண்ட, ஐ.எஸ்-கே போராளிகள் இருவரை […]
தலிபான்களின் ஊடகப் பேச்சாளர், பெண்கள் பூட்ஸ் காலணி அணிந்து, இளைஞர்களுக்கு தவறான எண்ணத்தை தூண்டுகிறார்கள் என்று கூறியிருக்கிறார். ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து, பெண்கள் தங்களுக்கான உரிமைகளை கோரி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர். தலிபான்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய பெண்களை தாக்கி, துப்பாக்கியால் சுட்டு விரட்டியடித்தார்கள். அவர்கள் ஆட்சியைக் கைப்பற்றியவுடன், ஷரியத் சட்ட அடிப்படையில் பெண்களுக்குரிய உரிமைகள் அளிக்கப்படும் என்று தெரிவித்திருந்தனர். ஆனால், தற்போது பள்ளிகளுக்கு செல்ல மாணவிகள் அனுமதிக்கப்படவில்லை. பெண்களின் சுதந்திரம் பறிக்கப்படுகிறது. மேலும் […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் இடைக்கால ஆட்சியின் பிரதமராக இருக்கும் முகமது ஹசன் அகுந்த், இராணுவ படைகளுக்கு முக்கிய உத்தரவை பிறப்பித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதையடுத்து, நகரங்களில் இருக்கும் குடியிருப்புகள் மற்றும் வாகனங்களை தலிபான்கள் ஆக்கிரமிக்கிறார்கள் என்று மக்கள் பலரும் புகாரளித்து வருகிறார்கள். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ஆப்கானிஸ்தான், ஐக்கிய அமீரகத்தின் புதிய பிரதமரான முகமது ஹசன் அகுந்த் முக்கிய உத்தரவுகள் பிறப்பித்திருக்கிறார். அதாவது, பிரதமர் MOI, MOD மற்றும் உளவுத்துறையில் இருக்கும் இராணுவ வீரர்கள் […]
மீண்டும் மன்னர் ஆட்சியை பின்பற்ற உள்ளதாக தலீபான் அரசு தகவல் தெரிவித்துள்ளது. அமெரிக்க படைகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் அந்நாட்டை முழுவதும் தங்கள் கைவசப்படுத்தினர். மேலும் ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்பட்ட அரசை நீக்கிவிட்டு தலீபான்கள் புதிய இடைக்கால அரசை அமுல்படுத்தியுள்ளனர். இதனை அடுத்து ஆண்களை மட்டுமே கொண்ட மந்திரி சபை அறிவிக்கப்பட்டது. மேலும் பெண்களுக்கு அதில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் மன்னர்கள் […]
இந்தியாவிலிருந்து ஆப்கானுக்கு மீண்டும் விமானங்களை இயக்க கோரி தலீபான் அரசு கோரிக்கை விடுத்துள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி அமெரிக்க ராணுவம் வெளியேற தொடங்கியதும் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இதனையடுத்து காபூல் விமான நிலையம் மட்டும் அமெரிக்க இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி காபூலில் இருந்தும் அமெரிக்க இராணுவத்தினர் வெளியேறினர். அதன்பின் ஆப்கானில் குறைந்த அளவிலான விமானங்களே செயல்பட்டு வருகின்றன. மேலும் இந்தியாவும் கடந்த ஆகஸ்ட் […]
இந்தியா- ஆப்கானிஸ்தான் இடையே மீண்டும் விமான போக்குவரத்தை தொடங்க வேண்டும் என்று தலிபான்கள் இந்தியாவிற்கு கடிதம் எழுதியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் தலிபான்கள் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளனர். ஆட்சியை பிடித்ததிலிருந்து அங்கு பெரும் கலவரம் நடந்து கொண்டு உள்ளது. இதனால் இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையே விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா ஆப்கானிஸ்தான் இடையே மீண்டும் விமான போக்குவரத்தை தொடங்க வேண்டும் என்று தலிபான்கள் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து டிஜிசிஏவுக்கு ஒப்புதல் கடிதம் […]
ஆப்கானில் ஆண்கள் சவரம் செய்யவும் இசை இசைக்கவும் தலீபான்கள் தடை விதித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானை தலீபான்கள் கைப்பற்றிய பின் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது ஆப்கானின் ஹெல்மண்ட் மாகாணத்தின் தலைநகரான Lashkar gau வில் முடிதிருத்தும் ஊழியர்களுடன் தலீபான் அதிகாரிகள் சந்தித்து பேசினர். அதில் அவர்கள் கூறியதாவது “ஆப்கானில் உள்ள ஆண்கள் தாடியை சவரம் செய்ய கூடாது அதோடு ஹெல்மண்ட் மாகாணத்தில் இசை நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை […]
ஆப்கானில் தலீபான்களுக்கு எதிராக ஐ.எஸ்.ஐ.எஸ். ஹரசன் அமைப்பு தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றது. ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் இடைக்கால ஆட்சி அமைத்துள்ளனர். இதனையடுத்து தற்போது ஐ.எஸ்.ஐ.எஸ் ஹரசன் அமைப்பு தலீபான்களை எதிர்த்து பல்வேறு தாக்குதல்கள் நடத்துகின்றது. மேலும் காபூல் விமான நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி ஐ.எஸ் அமைப்பு நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 13 அமெரிக்க படை வீரர்கள் உட்பட 182 பேர் பலியாகினர். இதனை தொடர்ந்து காபூல், ஜலாலாபாத் மற்றும் மசர்-ஐ-ஷரிப் பகுதிகளில் தலீபான்கள் […]
தலீபான்களின் அச்சுறுத்தல் காரணமாக மகளிர் ஓட்டுநர் பயிற்சி பள்ளி மூடப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் சில வருடங்களாக மகளிர் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியை 23 வயதான நிலாப் துராணி என்பவர் நடத்திவருகிறார். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றிய பின்பு பள்ளி திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது மட்டுமின்றி அவர்கள் ஆட்சி அமைந்தவுடன் ஒரு பெண் கூட ஓட்டுநர் பயிற்சி பெறுவதற்காக பள்ளிக்கு வரவில்லை என்று கூறுகிறார். மேலும் முன்பதிவு செய்திருந்த பெண்களும் […]
ஆப்கானிஸ்தானின் தலைநகரில் பல வருடங்களாக நடந்த மோதல், மோசமான நீர் மேலாண்மை மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றின் காரணமாக தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானின் தலைநகரில் அதிகாரிகள் பலரும் தண்ணீர் பற்றாக்குறை ஒவ்வொரு நாளும் தீவிரமடைந்து வருவதாக தெரிவித்துள்ளனர். இதற்கிடையே காபூலின் மேயர் ஹம்துல்லா நோமானி ஆப்கானிஸ்தானின் தலைநகரம் தண்ணீர் இல்லாமல் வறண்டு போகும் நிலையும் உள்ளதாக கூறியுள்ளார். மேலும் நோமானி குடிநீர் வழங்கும் நிறுவனங்களுடன் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க பேச்சுவார்த்தை நடத்த […]
புதிய அரசியலமைப்பை அமல்ப்படுத்தப்போவதாக தலீபான்களின் நீதித்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாடானது கடந்த மாதம் 15 ஆம் தேதி தலீபான்களின் கைவசம் சென்றது. இதனால் அதிபர் அஷ்ரப் கனி ஆப்கானை விட்டு வெளியேறினார். இதனையடுத்து தலீபான்கள் ஆப்கானிஸ்தானில் தங்களது கொடியை நாட்டினர். இதனை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி ராணுவப் படைகள் அனைத்தும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறினர். தற்போது ஆப்கானிஸ்தானில் புதிய இடைக்கால அரசை தலீபான்கள் அறிவித்துள்ளனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் புதிய […]
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அவர்களின் வாக்குறுதிகளை நிறைவேற்ற, அந்நாட்டுடன் உலக நாடுகள் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் கூறியிருக்கிறார். தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியவுடன், தாங்கள் முன்பு ஆட்சி செய்தது போன்று, தற்போது ஆட்சி நடத்தப் போவதில்லை. பெண்களின் அடிப்படை உரிமைகளை மதிப்போம் என்று கூறியிருந்தனர். ஆனால், தற்போது அவர்களின் செயல்பாடுகள், அதற்கு மாறாக இருக்கிறது. இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமரான இம்ரான் கான், அமெரிக்காவின் ஒரு பத்திரிகையில் தெரிவித்திருப்பதாவது, தலிபான்கள், தாங்கள் ஆட்சியை சிறப்பாக நடத்த, உலக […]
தலீபான்கள் குற்றவாளிகளுக்கு கொடூரமான தண்டனைகளை வழங்குவது குறித்து அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றிய தலீபான்கள், கடந்த ஆட்சி காலத்தில் குற்றவாளிகளுக்கு பயங்கரமான தண்டனைகள் வழங்கியது போல இந்த ஆட்சியிலும் மோசமான குற்றத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை மற்றும் திருடுவோருக்கு கை, கால் துண்டிப்பு போன்ற தண்டனைகளே வழங்கப்படும் என்று சமீபத்தில் கூறினர். கடந்த சனிக்கிழமையன்று ஆப்கானின் ஹெரட் மாகாணத்தில் கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை தலீபான்கள் கைது செய்ததோடு அவர்களை சுட்டு கொன்றுள்ளனர். மேலும் […]
ஆப்கான் பொருளாதார நிலைமை குறித்து நார்வே அகதிகள் கவுன்சில் செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு சென்றுள்ள நார்வே அகதிகள் கவுன்சிலின் பொது செயலாளரான Jan Egeland அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. அங்கு பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் வங்கி அமைப்பு எப்போது வேண்டுமானாலும் சரிவடையலாம். மேலும் நான் பல குடும்பங்களிடம் விசாரித்தேன். அப்பொழுது அவர்களில் பலர் தேநீர், காய்ந்த மாறும் பழைய ரொட்டித்துண்டுகளை உண்டு உயிர் வாழ்வதாக என்னிடம் கூறினார்கள். இப்படியே தொடர்ந்தால் […]
இரு சிறுவர்கள் ரொட்டியை திருடிய குற்றத்திற்காக அவர்களை தலீபான்கள் கம்பத்தில் கட்டி வைத்து துன்புறுத்தியுள்ளனர். ஆப்கானிஸ்தான் நாடானது தலீபான்களின் கையில் சிக்கியுள்ளது. அங்கு அவர்கள் புதிய இடைக்கால அரசை ஏற்படுத்தியுள்ளனர். மேலும் தங்களின் புதிய ஆட்சியை உலக நாடுகள் ஏற்க வேண்டும் என்றும் கூறிவருகின்றனர். இதற்கிடையில் தலீபான்கள் தற்பொழுது தங்களின் உண்மையான முகத்தை காட்டி வருகின்றனர். அதிலும் கடந்த வாரம் கடுமையான தண்டனைகளை அறிவித்தது மட்டுமின்றி சடலங்களையும் பொதுஇடத்தில் தொங்கவிட்டு மக்கள் பார்க்கும்படி செய்தனர். இந்த நிலையில் […]
புதிய அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்று தலீபான்களின் தகவல் மற்றும் கலாச்சார இணை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் புதிய ஆட்சியை அமல்ப்படுத்தியுள்ளனர். மேலும் அவர்கள் அங்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இதனால் மக்கள் அவர்களுக்கு பயந்து பல்வேறு நாடுகளுக்கு தப்பிச் செல்கின்றனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் புதிய கடவுச் சீட்டுகள் வழங்கப்படும் என்று தலீபான்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு முந்தைய ஆட்சியில் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளும் கடவுச்சீட்டுக்களும் தற்காலிகமாக மட்டுமே செல்லும். இனி புதிய கடவுச்சீட்டு […]
ஆப்கானிஸ்தானில் இளம் தலீபான்கள் அந்நாட்டின் தேசபக்தி பாடலுக்கு நடனமாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. ஆப்கானிஸ்தான் தற்போது தலீபான்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. அந்நாட்டை தலீபான்கள் 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கைப்பற்றியுள்ளனர். மேலும் இருபது ஆண்டுகளுக்கு முன்பு தலீபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சி புரிந்த போது பல கடுமையான சட்டங்களை அமல்படுத்தி இருந்தனர். குறிப்பாக பெண்களுக்கு எதிராக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. ஆனால் இம்முறை அவ்வாறான அடக்குமுறைகள் இருக்காது என தலீபான்கள் உறுதியளித்தனர். ஆனால் அதனை மறந்து […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான்களின் ஆட்சி முறையால் இசைப் பயிற்சி மையங்கள் மூடப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தான் நாட்டை தலீபான்கன் கைபற்றிய பின்னர் அங்கு இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பெண்களுக்கு ஆரம்பத்தில் அனைத்து உரிமைகளும் வழங்கப்படும் என தலிபான்கள் உறுதி அளித்துள்ளனர். இருப்பினும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் போன்ற இடங்களில் இருபாலரும் சேர்ந்து படிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் பெண்கள் இணைந்து படிக்கும் சூழ்நிலை ஏற்பட்டால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் மாநகராட்சியில் பெண்கள் பணியாற்றவும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் […]
ஆப்கானில் வேலையின்றி தவித்த முன்னாள் காவல்துறை அதிகாரி தற்கொலை செய்துள்ள சம்பவம் மக்களிடையே பெரும் அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த மாதம் ஆட்சியை கைப்பற்றியுள்ள தலீபான்களால் மக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். மேலும் தலீபான்கள் ஆட்சியில் 3 லட்சம் பாதுகாப்பு படை ஊழியர்களும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான அரசு பணியாளர்களும் வேலையிழந்தனர். குறிப்பாக ஒவ்வொரு குடும்பத்திலும் 7 உறுப்பினர்கள் சராசரியாக உள்ளததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் கிழக்கு குணார் மாகாணத்தில் கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் பொது இடத்தில் சடலங்கள் தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆப்கானிஸ்தானின் ஹெராத் என்ற நகரில் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு நபர்களின் உடல்களை வெவ்வேறு பகுதிகளில் தலிபான்கள் தொங்க விட்டுள்ளனர். இந்த கடத்தல் வழக்கில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளாமல் நான்கு நபர்களையும் அவர்கள் சுட்டுக் கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://twitter.com/i/status/1441697856155537409 மேலும், இனிமேல் கடத்தல் சம்பவங்களை நடத்துபவர்களின் நிலை இதுதான் என்ற போஸ்டர்கள் அவர்களது உடலின் மேல் ஒட்டப்பட்டிருக்கிறது. அவர்களை பொதுவெளியில், தொங்கவிட கிரேனை […]
ஆப்கானிஸ்தானில் தலீபான் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அரசாங்க ஆவணங்கள் மற்றும் பாஸ்போர்ட்டுகள் குறித்த குழப்பத்திற்கு தீர்வாக அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. தலீபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியபின் அந்நாட்டின் பெயரை இஸ்லாமிய அமீரக ஆப்கானிஸ்தான் எனவும், அரசாங்க கொடியாக தலீபான் கொடியையும் மாற்றினர். இந்நிலையில், ஆப்கானியர்களிடையே முந்தைய அரசாங்கம் வழங்கிய அடையாள அட்டைகள் மற்றும் பாஸ்போர்ட்டுகள் தற்பொழுது செல்லுபடி ஆகுமா? என்ற கலக்கம் நிலவி வருகிறது. இதனைத் தொடர்ந்து இக்கலகத்திற்கு தீர்வாக தலீபான் அரசு அறிக்கை ஒன்றை […]
ஐ.எஸ். அமைப்பினரின் தொடர் தாக்குதல் சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள நங்கர்ஹார் மாகாணத்திலிருந்து வெளிநாட்டுப் படைகள் கடந்த மாத இறுதியில் வெளியேறியுள்ளது. அந்த வெளியேற்றத்திற்குப் பின் ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்ச்சியான தாக்குதலை நடத்தி வந்துள்ளனர். இந்த தாக்குதலை அவர்கள் தலீபான்களை மையமிட்டு நடத்தி வந்துள்ளனர். இதனையடுத்து தலீபானின் வண்டியை மையமாகக் கொண்டு மாகாணத் தலைநகரில் வைத்து வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் தலீபான் போராளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். அதோடு […]
தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றிய ஆப்கானிஸ்தான் நாட்டில் கை மற்றும் கண்கள் கட்டப்பட்ட நிலையில் 3 ஆண்கள் சுட்டுக் கொல்லப்பட்டுக் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலிபான்கள் அங்கு தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இதற்கிடையே ஆப்கானிஸ்தான் நாட்டிலிருக்கும் Nangarhar என்னும் மாவட்டத்தில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வந்துள்ளார்கள். இதனையடுத்து ஆப்கனிலுள்ள nangarhar என்னும் மாவட்டத்தில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வந்த ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கும், தற்போது அந்நாட்டைக் கைப்பற்றிய தலிபான் பயங்கரவாதிகளுக்குமிடையே […]
பெண்கள் பள்ளிக்கு செல்ல தடை விதித்தது குறித்து சிறுமி பேசும் காணொளியானது வெளியிடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாடானது தற்பொழுது தலீபான்களின் கைவசம் சென்றுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் தலீபான்கள் தற்பொழுது பெண்கள் பள்ளிக்கு செல்லக்கூடாது என்று தடை விதித்துள்ளனர். இந்த நிலையில் இது குறித்து ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சிறுமி பேசும் காணொளி காட்சியை அந்நாட்டு ஊடகவியலாளரான பிலால் சர்வாரி வெளியிட்டுள்ளார். அதில் “பெண் கல்வியை பறிக்காதீர்கள். நான் மூன்று வேளையும் உணவு உண்டு […]
காபூல் பலக்லைக்கழகத்தில் பணியாற்றிய பேராசிரியர்கள் ராஜினாமா செய்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தற்போது ஆட்சி அதிகாரம் தலிபான்களின் கைவசம் சென்றுள்ளது. மேலும் அந்நாட்டின் அதிபரான அஷ்ரப் கனி நாட்டைவிட்டு தப்பி சென்று விட்டார். இதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் போதிய உணவு, மருந்து, குடிநீர் போன்ற அத்தியாவசியத் பொருட்கள் கிடைக்காததால் ஐந்து வயதுக்கு உட்பட்ட சுமார் ஒரு கோடி குழந்தைகள் தவித்து வருகிறார்கள் என யுனிசெஃப் அமைப்பு மூலம் தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து ஆப்கானிஸ்தான் நாட்டில் காபுல் நகரில் இருக்கும் […]
தலீபான்களின் புதிய ஆட்சியில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை 1996 முதல் 2001 வரை தலீபான்கள் ஆட்சி செய்த பொழுது திருடர்களின் கைகளை மைதானங்கள், மசூதிகள் மற்றும் விளையாட்டுத்திடல்கள் போன்ற பொது இடங்களில் மக்கள் முன்னால் வைத்து வெட்டினார்கள். இது போன்ற கடுமையான தண்டனைகளை பொது இடங்களில் வைத்து செய்வதற்கு உலக நாடுகள் முழுவதும் தலீபான்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர. இந்த நிலையில் ஆப்கானை மீண்டும் கைப்பற்றியுள்ள அவர்கள் அதே கடுமையான தண்டனைகளை மறுபடியும் […]
ஆப்கானிஸ்தான் மண்ணை தீவிரவாதத்திற்கு பயன்படுத்தக்கூடாது என ஜி20 நாடுகள் கூட்டமைப்பில் இந்தியா வலியுறுத்தியது. நியூயார்க்கில் நடைபெற்ற ஜி20 நாடுகளின் கூட்டமைப்பு மாநாட்டில் உரையாற்றிய வெளியுறவு அமைச்சர் திரு ஜெய்சங்கர் உள்நாட்டு போரால் வாழ்வாதாரத்தை இழந்த ஆப்கானிஸ்தான் மக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளை வழங்க உலக நாடுகள் ஓர் அணிதிரள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் ஆப்கானிஸ்தான் மண்ணிலிருந்து தீவிரவாதம் செயல்பட அனுமதிக்க மாட்டோம். என்ற உறுதிமொழியை தலிபான்களின் புதிய அரசு உலக நாடுகளுக்கு அளிக்க வேண்டும் என்று […]
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு அந்நாட்டில் சுகாதாரத் துறைச் சரிவின் விழிம்பில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் தற்போதைய சுகாதாரத்துறை நிலை குறித்து பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம், ஆப்கானை தலிபான்கள் கைப்பற்றிய பின்னர், சர்வதேச உதவிகள் நிறுத்தப்பட்டதால் அந்நாட்டு சுகாதார துறை சீர்குலையும் விளிம்பில் இருப்பதாக தெரிவித்தார். யார் உயிரை காப்பாற்றுவது ? யார் உயிரை காப்பாற்றாமல் விடுவது ? என்பதை முடிவெடுக்க முடியாமல் அந்நாட்டு சுகாதார […]
தலீபான்களின் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை கடந்த மாதம் 15ஆம் தேதி தலீபான்கள் கைப்பற்றினர். இதனையடுத்து அங்கு பெரும் பதற்றம் நீடித்து வந்தது. மேலும் அவர்களுக்கு எதிராக சில கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வந்தனர். அதில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினரும் ஒருவர். இந்த நிலையில் ஜலாலாபாத்தில் மாவட்டத்தில் உள்ள சோதனை மையத்தின் அருகே அடையாளம் தெரியாத ஒருவர் கையில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து தலீபான்களின் மீது சரமாரியாக தாக்குதல் […]
ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு போர் ஏற்பட வாய்ப்புள்ள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாடானது கடந்த 15ஆம் தேதி முதல் தலிபான்களின் கையில் சென்றது.மேலும் அவர்கள் தற்பொழுது புதிய இடைக்கால அரசை அமல்படுத்தியுள்ளனர். அதில் இஸ்லாம் மத கொள்கைகளை விரிவுபடுத்தி வருகின்றனர். குறிப்பாக அவர்கள் ஏற்படுத்தியுள்ள புதிய அரசில் இருக்கும் அமைச்சரவையில் பெண்களுக்கு இடம் அளிக்கப்படவில்லை. இதனால் பல்வேறு பகுதியில் பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனையடுத்து பெண்கள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவும் பார்வையிடவும் தலீபான்கள் தடை […]
ஏற்கனவே இருந்த கிரிக்கெட் வாரியத் தலைவரை நீக்கி விட்டு புதிதாக நசீம் கானை தலீபான்கள் நியமனம் செய்துள்ளனர். ஆப்கானிஸ்தானை 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தலீபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதனால் அங்கு அவர்கள் இஸ்லாமிய மதக் கொள்கைகளை அமல்ப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக தற்போது அமைக்கப்பட்ட இடைக்கால அமைச்சரவையில் பெண்களுக்கு இடம் அளிக்காததால் தலீபான்களுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. மேலும் பெண்களை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவும், பார்வையிடவும் தடை விதித்துள்ளனர். இதேபோன்று IPL விளையாட்டு போட்டிகளையும் ஒளிபரப்ப தடை […]
எங்களையும் பேச அனுமதி வேண்டும் என்று தலீபான்களின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஐ.நா.பொதுச்செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ஐ.நா.வின் பொதுச்சபை கூட்டமானது கடந்த 14 ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. அதிலும் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் 100க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் நேரில் பங்கேற்கவுள்ளனர். அதில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா, பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சொனரோ, இஸ்ரேல் பிரதமர் நப்தாலி […]
தலீபான்களை குறிவைத்து தொடர்ச்சியாக நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதல்களில் 35 பேர் இறந்துள்ளதாக பிரபல ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள Nangarhar மாகாணம் ஐஎஸ்-கே பயங்கரவாதிகளின் கோட்டையாகும். இந்த மாகாணத்தில் கடந்த சில வாரங்களாக தலீபான்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு ஐஎஸ்-கே பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். இந்த நிலையில் இன்று Nangarhar மாகாணத்தின் தலைநகரான ஜலாலாபாத்தில் உள்ள சோதனை மையத்தில் கையில் ஆயுதமேந்திய நபர் ஒருவர் தலீபான்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. […]
நிவராணப் பொருட்கள் ஏற்றி வந்த லாரியை தலீபான்கள் மறித்துள்ள வீடியோ காட்சிகளானது வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆப்கானிஸ்தான் நாடானது கடந்த மாதம் 15ஆம் தேதி முதல் தலீபான்களின் கையில் சென்றது. மேலும் ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் தற்பொழுது புதிய இடைக்கால அரசை அறிவித்துள்ளனர். இதற்கிடையில் ஆப்கானிஸ்தானின் அண்டை நாடான பாகிஸ்தான் அந்நாட்டுக்கு தேவையான அனைத்து நிவாரண உதவிகளையும் செய்து வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானில் இருந்து உணவு, மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று ஆப்கானுக்கு […]
பெண்கள் மீண்டும் பள்ளி செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று தலீபான்களின் செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டை தலீபான்கள் கைப்பற்றியதை அடுத்து அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதிலும் பெண்களின் நிலைமை என்னவாகும் என்ற அச்சவுணர்வு அனைவரிடமும் இருந்தது. மேலும் மக்கள் எதிர்பார்த்தது போன்றே தலீபான்கள் கடுமையான இஸ்லாம் மதக் கொள்கைகளை அமல்ப்படுத்தி வருகின்றனர். இதனால் பெண்கள் அவர்களின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு போன்ற அடிப்படை உரிமைகளுக்காக ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் போராட்டம் நடத்தி […]
பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகத்தின் பணியாளர், நூற்றுக்கணக்கான மொழிபெயர்ப்பாளர்களின் தனிப்பட்ட தகவல்களை மின்னஞ்சலில் நகல் எடுத்த சம்பவம் பெரும் பிரச்சினையை உருவாக்கியுள்ளது. பிரிட்டன் நாட்டின் மொழிபெயர்ப்பாளரார்களாக பணியாற்றிய ஆப்கானிஸ்தானை சேர்ந்த 250 நபர்களுக்கு தலிபான்களால் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. இதுபோன்ற மோசமான நடவடிக்கையால், ஆத்திரம் அடைந்துள்ள பாதுகாப்பு செயலர், பென் வாலஸ் விசாரணை நடத்த உத்தரவிட்டிருக்கிறார். பிரிட்டன் நாட்டின் இராணுவத்திற்காக பணிபுரிந்த, 250 மொழிபெயர்ப்பாளர்கள் ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு வெளியேற கோரியிருந்தார்கள். எனவே, அவர்களின், தகவல்களை, பாதுகாப்பு அமைச்சகம் கேட்டபோது […]
ஆப்கானிஸ்தானில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்ப தலீபான்கள் தடை அறிவித்துள்ளார்கள். ஆப்கானிஸ்தானை, தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து பல மாற்றங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதில், முக்கியமாக பெண்களை கல்வி கற்கவும், பணிகளுக்கு செல்லவும் அனுமதிக்கவில்லை. மேலும், இசை மற்றும் திரைப்படம் காண்பதற்கும் தலீபான்கள் தடை விதித்துள்ளார்கள். பொதுவாகவே தலிபான்கள், கலை நிகழ்ச்சிகள் நடத்துவதை எதிர்ப்பார்கள். இந்நிலையில், 2021-ஆம் வருடத்திற்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கோலாகலமாக நடந்து வருகிறது. ஆனால், ஐபிஎல் போட்டியை ஆப்கானிஸ்தானில் ஒளிபரப்புவதற்கு தலிபான்கள் தடை விதித்துள்ளார்கள். அதாவது, […]
சவுதி அரேபியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர், பைசல் பின் பர்ஹான் அல்சாத் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சவுதி அரேபிய வெளியுறவுத்துறை அமைச்சரான, பைசல் பின் பர்ஹான் அல்சாத், நேற்று முன்தினம், 3 நாட்கள் பயணமாக டெல்லிக்கு சென்றுள்ளார். அவரை, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ட்விட்டரில் வரவேற்றுள்ளார். அதன்பின்பு, இருவருக்குமிடையே, பேச்சுவார்த்தை நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, இருவரும், இரு தரப்பிற்கும் இடையேயான உறவு மற்றும் பிராந்திய பிரச்சனைகள் குறித்து ஆலோசித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீது நடந்த வெடிகுண்டு தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் தற்போது ஆட்சி அதிகாரம் தலிபான்கள் கைவசம் சென்றுள்ளது. அந்நாட்டின் அதிபரான அஷ்ரப் கனி ஆப்கானை விட்டு வெளியேறினார். ஆப்கானிஸ்தானில் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களான உணவு, மருந்து போன்றவை கிடைக்காமல் ஐந்து வயதுக்கு உட்பட்ட சுமார் ஒரு கோடி குழந்தைகள் தவித்து வருகிறார்கள் என யூனிசெப் அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து அந்நாட்டை […]
மாநகராட்சியில் பணிபுரியும் பெண்களை வேலைக்கு வர வேண்டாம் என்று தலிபான்கள் கூறியுள்ளனர். ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் பெண்கள் பணிக்கு வர வேண்டாம் என்று தலிபான்கள் தடை விதித்துள்ளனர். இதுகுறித்து தலிபான்களின் இடைக்கால அரசின் மேயரான ஹம்துல்லா நமோனி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மாநகராட்சியில் பணிபுரியும் பெண்கள் இனிமேல் வேலைக்கு வரவேண்டாம் அதிலும் பெண்களால் மட்டுமே செய்ய முடியும் பணிகளை செய்வோர் வேலைக்கு வரலாம் என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே பள்ளிக்கு செல்ல தலிபான்கள் தடை விதித்துள்ள நிலையில் […]
கத்தார் ஏர்வேஸ் விமானத்தின் மூலம் 28 அமெரிக்கர்கள் உட்பட 35 பேர் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானை கடந்த ஆகஸ்டு 15 ஆம் தேதி முழுமையாக கைப்பற்றியதை தொடர்ந்து அதிகாரம் முழுவதும் தலீபான் அமைப்பினரிடம் சென்றது. மேலும் தலீபான்கள் எப்பொழுதும் துப்பாக்கியும் கையுமாக நகரில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இதனால் அந்நாட்டு மக்கள் அனைவரும் தலீபான்களுக்கு பயந்து ஆப்கானை விட்டு வெளியேறி வருகின்றனர். குறிப்பாக, அமெரிக்க படைகள் முழுவதும் அந்நாட்டில் இருந்து வெளியேறுவதற்கு முன்பாக […]
ஆப்கானிஸ்தானில் தலிபான்களிடம் மாட்டி சிறைபிடிக்கப்பட்ட சுவிட்சர்லாந்து தம்பதிகள் குறித்து தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படம் சூரிச் திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 2011 ஆம் வருடத்தில், Daniela Widmer மற்றும் David Och என்ற தம்பதியரை தலிபான்கள் சிறை வைத்தனர். மேலும் மலைப்பகுதிக்கு இழுத்துச் சென்று ஒவ்வொரு இடமாக 14 நாட்களாக அலைய வைத்திருக்கிறார்கள். இது மட்டுமல்லாமல் பகல் நேரத்தில் ஆட்டுக்கடையில் தூங்க வைக்கப்பட்டுள்ளனர். இரவு சமயத்தில், சதுப்பு நிலங்களில் அலைய வைத்திருக்கிறார்கள். இதனால், கடும் பாதிப்படைந்த Daniela, […]
பெண்கள் வேலைக்கு செல்லக் கூடாது என்பது குறித்து தலீபான்களின் இடைக்கால மேயர் தகவல் வெளியிட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் சுமார் இருபது ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மாதம் 15 ஆம் தேதி மீண்டும் தலீபான்களின் பிடியில் சென்றுள்ளது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்களின் சுதந்திரம் மற்றும் உரிமை பறிபோகும் என்ற அச்ச உணர்வு அனைவரிடமும் ஏற்பட்டது. இதற்கிடையில் தான் தலீபான்கள் “பழைய அரசை போல் செயல்பட போவதில்லை” என்று அறிவிப்பு விடுத்தனர். ஆனால் அதற்கு […]
காபூல் விமான நிலையத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய நபரை பற்றிய தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலீபான்கள், அங்கு இடைக்கால அரசை அமைத்துள்ளார்கள். எனவே அங்கிருந்து வெளியேற நினைத்த அந்நாட்டு மக்கள், காபூல் விமான நிலையத்தில் குவிந்து காணப்பட்டனர். அந்த சமயத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதியன்று, விமான நிலையத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டதில், அமெரிக்க படையை சேர்ந்த 13 வீரர்கள் உட்பட 183 ஆப்கானிஸ்தான் மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில், இத்தாக்குதலை நடத்திய […]
ஐலாலாபாத்தில் 2வது நாளாக தொடர்ந்து தலிபான்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஐலாலாபாத் என்ற நகரின் இரு பகுதிகளில் கடந்த சனிக்கிழமை அன்று, தலிபான்களை நோக்கி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில், இதே நகரத்தில் இருக்கும் ஒரு பேருந்து நிலையத்தில் நேற்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில், இரண்டு நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தாக்குதலில், தலிபான் அமைப்பை சேர்ந்த ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலிபான்களின் எல்லை காவல்துறையினரின் வாகனத்தை குறிவைத்து இந்த குண்டுவெடிப்பு தாக்குதல் […]
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் இடைக்கால அரசை அமைந்திருப்பதால், உயிருக்கு பயந்து கடைசி யூதரும் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி, அங்கு இடைக்கால அரசையும் அமைத்துவிட்டனர். இந்நிலையில், அங்கு வசித்த Zebulon Simantov என்ற 62 வயது யூதர், அமெரிக்கா செல்வதற்காக நாட்டிலிருந்து வெளியேறி, ஒரு ஹொட்டலில் தங்கியுள்ளார். அவர், அமெரிக்காவிற்கு செல்வதற்கு தேவைப்படும் ஆவணங்களை தயார் செய்யும் பணிகள் நடந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. அதாவது, Zebulon Simantov, தலிபான்களால் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. எனினும், […]