ஆப்கானிஸ்தானின் முன்னாள் நிதியமைச்சர் காலித் பாயெண்டா தற்போது வாடகை கார் ஓட்டுனராக மாறி அமெரிக்காவின் வாஷிண்டன்னில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். அமெரிக்காவின் படை ஆப்கனில் இருந்து விலகியதும் அங்கிருந்த தாலிபான்கள் அரசு கவிழ்த்து ஆட்சியை கைப்பற்றினர். 600 கோடி ரூபாய் அளவுக்கு பட்ஜெட் தாக்கல் செய்து வந்த அவர் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அமெரிக்க ஊடகத்திற்கு பேட்டியளித்த காலித் பயெண்டா, “ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் டாக்சி ஓட்டுகிறேன். 150 […]
Tag: ஆப்கான்
ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா மருந்து பொருட்களை அனுப்பி வைத்து உதவிக்கரம் நீட்டியுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் வசம் ஆட்சி அதிகாரம் சென்ற பிறகு முதன் முறையாக மனிதநேயமுடன் உதவியாக 1.6 மெட்ரிக் டன் உயிர்காக்கும் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ பொருட்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ஆப்கானிஸ்தானியர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் அடிப்படையில் இந்தியா இந்த உதவியை செய்துள்ளது. இதனிடையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து டெல்லிக்கு 10 இந்தியர்கள் மற்றும் 94 ஆப்கானிஸ்தானியர்கள் கடந்த வெள்ளிக்கிழமை […]
ஆப்கானிஸ்தானில் போதுமான உணவு இன்றி 95 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் கஷ்டப்படுவதாக ஐநா சபை தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானை கடந்த ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதன் பிறகு ஆப்கானிஸ்தான் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்தது. அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம், வேலைவாய்ப்பின்மை, வறுமை, பட்டினி போன்றவற்றால் மக்கள் அவதியுற்று வருகின்றனர். ஐநா மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவை சேர்ந்து மனிதநேய அடிப்படையில் ஆப்கானிஸ்தானில் வசிக்கும் மக்களுக்கு உணவு அளித்து வருகிறது. இதுகுறித்து ஐ.நா […]
கடந்த 15ஆம் தேதி முதல் ஆப்கானிஸ்தான் முழுமையாக தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் தங்களை உயிரை காப்பாற்றுவதற்காக எப்படியாவது விமானங்களில் வெளியேறி வருகின்றனர். அங்கிருந்து தற்போது வரை ஒரு லட்சத்து 12 ஆயிரம் பேரை அமெரிக்கா பத்திரமாக மீட்டு கொண்டு வந்துள்ளது. இதனையடுத்து தற்போது இறுதிகட்ட மீட்பு நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. அந்த சமயத்தில் தான் கடந்த வியாழக்கிழமை அன்று ஆப்கான் விமான நிலையத்தில் அடுத்தடுத்து இரண்டு குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தது. இதில் 13 […]
இந்தியாவில் வாழ அச்சப்படுவோர் தாராளமாக ஆப்கானிஸ்தான் செல்லலாம் என்று பாஜக எம்எல்ஏ ஹரி பூஷன் தாக்கூர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தலிபான் ஆட்சியை கைப்பற்றியுள்ளது, ஆட்சி அமைக்கும் பணியில் தலிபான் அமைப்பினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இது உலக அளவில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. மேலும் அங்குள்ள மக்கள் ஆப்கானை விட்டு வெளியேற தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். இதனால் அந்நாட்டில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. […]
ஆப்கான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றி ஆட்சி அமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. அங்குள்ள மக்கள் தங்கள் உயிருக்கு பாய்ந்து அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். உலக நாடுகள் அங்குள்ள மக்கள் குறித்து கவலை தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் பீஹார் மாநிலம் பிஸ்ஃபி சட்டப்பேரவைத் தொகுதி பா.ஜ.க., – எம்.எல்.ஏ., ஹரி பூஷன் தாக்கூர் பச்சால் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், ஆப்கானிஸ்தான் போரினால் இந்தியாவிற்கு எந்த ஒரு பாதிப்பும் […]
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் நுழைந்ததை அறிந்ததும் அந்த நாட்டு அதிபர் அஷ்ரப் கனி தன்னுடைய குடும்பம் மற்றும் அமைச்சர்களுடன் தலைமறைவாகி நாட்டை விட்டு தப்பி ஓடினார். இந்த நிலையில் அவர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாக அந்நாடு அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து இக்கட்டான சூழ்நிலையிலும் கூட ஆப்கானிஸ்தானை விட்டு தப்பிச் சென்ற அதிபர் அஷ்ரப் கனி மீது பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் ஐக்கிய அமீரகத்தில் தஞ்சமடைந்த அஷ்ரப் கனி தன்னுடைய சமூக […]
இந்தியா உடனான அனைத்து ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தலிபான்கள் நிறுத்தியுள்ளதாக இந்திய ஏற்றுமதி அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. 85% உலர் பழங்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் இந்தியாவில் உலர் பழங்கள் விலை கடுமையாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஏற்றுமதி அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. ஆனால் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்தாலும் மற்ற நாடுகளுடனான பொருளாதார உறவுகளை அவர்கள் வளர்த்தெடுத்துதான் ஆகவேண்டும். ஆகவே இந்த இழுபறி நிலை தற்காலிகமானதுதான் எனவும் இருப்பினும் இதன் […]
ஆப்கானிஸ்தான் நாட்டை தற்போது தாலிபான்கள் முற்றிலுமாக கைப்பற்றி விட்டனர். இதனால் தாலிபான் தலைமையிலான அரசு ஆப்கானை வழிநடத்தும் என்பதனால் அங்குள்ள மக்கள் தங்கள் உயிருக்கு பயந்து வெளிநாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர். அவ்வாறு வெளியேறிய மக்கள் விமானங்களில் அடித்து பிடித்து ஏறும் வீடியோ வெளியாகி உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் ஆப்கான் மக்களுடைய நிலை குறித்து வருத்தம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் அகதிகளை அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என் […]
ஆப்கானிஸ்தான் நாடு முழுமையாக தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் பயத்தில் வெளிநாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் ஆப்கானில் உள்ள மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். மக்களுக்கு சேவை செய்வதற்காக நாங்கள் இங்கே இருக்கிறோம். எங்களுடைய ஆட்சியில் பெண்களுடைய உரிமை பாதுகாக்கப்படும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஷரியத் சட்டப்படி உரிமைகள் வழங்கப்படும். பெண்களுக்கு எதிரான அடக்கு முறையில் நாங்கள் ஈடுபட மாட்டோம் என்று தாலிபான்கள் அறிவித்துள்ளனர். இந்நிலையில் படிப்பு, அரசியல், வேலைகள் என எந்த உரிமைகளையும் பெண்களிடமிருந்து பறிக்கக் […]
ஆப்கானில் பத்து நாள்களாக நடைபெற்ற தாக்குதலின் விளைவாக, நாட்டின் முக்கியப் பகுதிகள் அனைத்தும் தலிபான்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. தலைநகர் காபூல், ஆகஸ்ட் 15ஆம் தேதி அவர்களால் கைப்பற்றப்பட்டது. கடந்த ஒரு வாரமாக மற்ற நாடுகளுக்கு செல்ல பொதுமக்கள், தலைநகர் காபூல் விமான நிலையத்தில் குவிந்துவந்தனர். ஆப்கானில் நிலவும் பதற்றம் காரணமாக பல்வேறு நாடுகள் காபூல் விமான நிலையத்திற்கான போக்குவரத்தை ரத்து செய்தன. அதன்படி ராணுவ விமானங்கள் தவிர மற்ற விமானங்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டது. காபூல் விமான […]
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே நடந்த மோதலில் விழாக்களுக்கு வந்த மக்களில் 15 பேர் கொல்லப்பட்டு 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக ஆப்கான் அரசு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் சாதாரணமில்லாத நிலை நிலவிவருகிறது. அவ்வப்போது இரு நாட்டு ராணுவப் படைகளும் தாக்குதல் நடத்திக் கொள்வது வாடிக்கையாக கொண்டுள்ளது. பாகிஸ்தான் தனது 2,500 கிமீ எல்லையைச் சுற்றி வேலி ஒன்றை 2017ம் ஆண்டு அமைக்க தொடங்கியது. இதன் மூலம் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடிக்க தொடங்கியது. இதனால் பயங்கரவாதிகள் ஊடுருவுவதைத் […]
பெற்றோர்களை கொன்ற தீவிரவாதிகளை துப்பாக்கியால் சுட்டு கொன்ற சிறுமியின் செயல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் கோர் மாகாணத்தில் உள்ள கிரிவா கிராமத்தை சேர்ந்தவர் சிறுமி க்வமர் கல். ஆப்கான் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததால் சிறுமியின் பெற்றோரை சென்ற வாரம் தாலிபன் தீவிரவாதிகள் கொன்றுள்ளனர். அந்தத் தாக்குதலில் தப்பித்த சிறுமி கல் தனது வீட்டில் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டு இருந்த ஏ.கே 47 ரக துப்பாக்கியை எடுத்து தனது பெற்றோரை கொன்ற தீவிரவாதிகளில் இரண்டு பேரை அப்போதே […]