ஆப்பிரிக்காவில் கண்ணிவெடியில் மாட்டி பேருந்து வெடித்து சிதறியதில் பத்து நபர்கள் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். புர்கினோ பாசோவில் கடந்த 2013 ஆம் வருடத்திலிருந்து பல தீவிரவாத அமைப்புகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவர்கள் மேற்கொள்ளும் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகி வருகிறார்கள். லட்சக்கணக்கான மக்கள் பக்கத்து நாடுகளுக்கு குடிபெயர்ந்திருக்கிறார்கள். இந்நிலையில், கடந்த ஜனவரி மாதத்தில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. மேலும் தீவிரவாதத்தை அழிப்பதாகவும் அறிவிப்பு வெளியிட்டது. இருப்பினும், அங்கு தீவிரவாத தாக்குதல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், புர்கினோ பாசோ […]
Tag: ஆப்பிரிக்கா
ஆப்பிரிக்காவில் காட்டிற்கு சபாரி சென்ற சுற்றுலா பயணிகளை நோக்கி ஒரு பெண் சிங்கம் ஒன்று ஆவேசமாக ஓடி வந்தது. அதனை பார்த்த அனைவரும் பதட்டமடைந்தனர். அதன் பிறகு அவர்கள் சென்ற வானத்தில் தாவி ஏறி அந்த சிங்கம் யார் எதிர்பாக்காத வகையில் மேலே ஏறி சுற்றுலா பயணிகளுடன் விளையாடுகிறது. https://twitter.com/OTerrifying/status/1589946543796150273 அந்த பெண் சிங்கம் விளையாடுவதை பார்த்த சுற்றுலா பயணிகள் அந்த சிங்கத்துடன் சேர்ந்து விளையாட தொடங்குகின்றனர். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை […]
வலதுசாரியை சேர்ந்த எம்.பி. கிரிகோயர் “நீங்கள் ஆப்பிரிக்காவுக்கு திருப்பிச் செல்லுங்கள்” என்று கத்தினார். புலம்பெயர்ந்த நூற்றுக்கணக்கான கறுப்பின மக்களை ஏற்றிச்சென்ற ஒரு கப்பல், பிரான்ஸ் அருகே மத்தியதரைக் கடலிலுள்ளது. புலம்பெயர்ந்தோர் விவகாரத்தில் பிரான்ஸ் நாட்டு அரசாங்கம் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று அரசு சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் வலியுறுத்தி வந்துள்ளன. இந்நிலையில் நேற்று நடைபெற்ற பிரான்ஸ் நாடாளுமன்ற கூட்டத்தில் புலம்பெயர்ந்தோர் விவகாரம் பற்றி இடதுசாரியை சேர்ந்த கறுப்பின எம்.பி கார்லோஸ் மார்டென்ஸ் பிலோங்கோ பேசினார். […]
ஆப்பிரிக்கா நாட்டின் லிபியாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள பென்ட் பய்யா நகரில் டீசல் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி நிலை தடுமாறி சாலையின் நடுவே கவிழ்ந்தது. இதனையடுத்து டேங்கரில் இருந்த டீசல் சாலையில் கொட்டியது. அதனை பார்த்த வாகன ஓட்டிகள் மற்றும் ஊர் மக்கள் ஆபத்தை உணராமல் டீசலை சேகரிக்க கோவிந்தனர். அவர்கள் போட்டி போட்டுக்கொண்டு டீசல் சேகரித்துக் கொண்டிருந்தபோது கவிழ்ந்து கிடந்த டேங்கர் லாரி […]
உலக சுகாதார மையம், குரங்கு அம்மை பாதிப்பு உலக அளவில் நெருக்கடியானதா? என்பது பற்றி மீண்டும் பரிசீலிப்பதாக கூறியிருக்கிறது. உலக நாடுகளை கொரோனா ஒருபுறம் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்க மறுபுறம், குரங்கு அம்மை நோய் சில நாடுகளில் பரவி, பீதியை கிளப்பிக்கொண்டிருக்கிறது. இதற்கு முன்பு ஆப்பிரிக்கா, ஐரோப்பாவில் பரவிய குரங்கு அம்மை தற்போது அமெரிக்காவிலும் பரவத் தொடங்கியிருக்கிறது. உலக நாடுகளில் தற்போது வரை 15,000 மக்களுக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த பாதிப்பை கட்டுப்படுத்த இங்கிலாந்து, […]
உலகளவில் 8.9 கோடிக்கும் அதிகமானோர் சென்ற 2021 ஆம் ஆண்டில் புலம்பெயர்ந்து சென்றுள்ளனர். இந்த வரலாற்று பதிவை உக்ரைன் போர் அதிகப்படுத்தி இருக்கிறது. அகதிகள் மற்றும் உள் நாட்டிலேயே புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை நடப்பு ஆண்டில் 10 கோடியை கடந்துள்ளது என்று ஐ.நா-வின்அகதிகளுக்கான தூதரகம் அதிர்ச்சியான தகவலை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஆப்பிரிக்காவுக்கு மனித நேய அடிப்படையில் ரூபாய் 4719.47 கோடி நிதியுதவி ஒதுக்கீடு செய்யப்படும் என அமெரிக்காவின் சர்வதேச வளர்ச்சி மற்றும் வெளியுறவுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த […]
உலக சுகாதார மையம் குரங்கு அம்மை நோய் பரவல் 77 சதவீதம் அதிகரித்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. கொரோனா வைரஸ் இரண்டு வருடங்களுக்கும் மேலாக உலக நாடுகளை புரட்டிப் போட்டது. மக்களின் வாழ்வாதாரத்தையும் உலக நாடுகளின் பொருளாதாரத்தையும் கொரோனா வைரஸ் கடுமையாக பாதிப்படைய செய்தது. தற்போது வரை, கொரோனா முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில் குரங்கு அம்மை நோய் பரவிக் கொண்டிருக்கிறது. ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவில் அதிகமாக குரங்கு அம்மை பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 59 நாடுகளில் 6027 நபர்களுக்கு குரங்கு […]
ஆப்பிரிக்கா ராட்சத நத்தைகளின் படையெடுப்பால் பாஸ்கோ மாவட்டம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டின் ஃப்ளோரிடா என்ற மாகாணம் அமைந்துள்ளது இந்த மாகாணத்தில் உள்ள பாஸ்கோ என்ற மாவட்டம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு ஆப்பிரிக்க ராட்சத நத்தைகள் வருடத்திற்கு 2500 முட்டைகள் வரை இடும். இந்த ராட்சத நத்தைகள் மூலம் மூலக் காய்ச்சல் பரவக்கூடிய அபாயம் உள்ளது. எனவே மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நத்தைகளை கண்டால் உடனே தகவல் தெரிவிக்குமாறு […]
எத்தியோப்பியாவில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 230 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்திருக்கும் நாடு எத்தியோப்பியா. இந்த நாட்டில் பல வருடங்களாக உள்நாட்டு போர் நடைபெற்று வந்தது. அதிலும் குறிப்பாக அந்த நாட்டில் உள்ள ஒரொமியா மாகாணத்தில் கிளர்ச்சியாளர் குழுக்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறது.ஓரொமியா மாகாணத்தை எத்தியோவில் இருந்து பிரித்து தனிநாடாக அறிவிப்பதை இந்த கிளர்ச்சியாளர்கள் அமைப்பு நோக்கமாக கொண்டிருக்கிறது. மேலும் இந்த கிளர்ச்சியாளர்கள் அமைப்புகள் அவ்வப்போது பொதுமக்கள் ராணுவம் மீது கொடூரமான […]
லெபனானில் முதல் தடவையாக ஒரு நபர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆப்பிரிக்க நாடுகளில் பரவிய குரங்கு அம்மை பாதிப்பு, உலக நாடுகளில் தற்போது பரவிக் கொண்டிருக்கிறது. எனவே, பல்வேறு நாடுகளும் முன்னெச்சரிக்கையாக சில வழிமுறைகளை பின்பற்றி கொண்டிருக்கின்றன. கனடா, போர்ச்சுக்கல், ஸ்பெயின், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உட்பட சுமார் 20-க்கும் அதிகமான நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்பு இருப்பதாக உலக சுகாதார மையம் கூறியிருக்கிறது. இந்நிலையில், முதல் தடவையாக லெபனானில் ஒரு நபர் குரங்கு […]
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் எலிகளால் பரவக்கூடிய லாசா காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதுபற்றி நைஜீரிய நோய் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நாடு முழுவதும் அரசு தொற்றை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்த போதிலும் நடப்பாண்டில் காய்ச்சல் பாதிப்புக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 155 ஆக அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளது. வருடத் தொடக்கத்தில் இருந்து 782 பேருக்கு லாசா காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதுதவிர 4,939 பேருக்கு பாதிப்பு இருக்கக்கூடும் என […]
ஆப்பிரிக்க நாடானநைஜீரியாவின் வட மேற்கு பகுதியிலுள்ள சோகோடோ மாகாணத்தில் ஒரு பள்ளிக்கூடம் இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகள் “வாட்ஸ்-அப்” குழு ஒன்றை வைத்து இருக்கின்றனர். இந்நிலையில் டெபோரா சாமுவேல் என்ற மாணவி ஒருவர் குறிப்பிட்ட ஒரு மதத்தை இழிவுபடுத்தும் அடிப்படையிலான கருத்துகளை அந்த “வாட்ஸ்-அப்” குழுவில் பகிர்ந்தாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கோபமடைந்த குறிப்பிட்ட அம்மதத்தை சேர்ந்த மாணவர்கள் அனைவரும், அந்த மாணவியை சூழ்ந்துகொண்டு சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பள்ளிக்காவலர்கள் மற்றும் தகவலின் பேரில் […]
சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக பிரித்தானியா புகலிடக் கோரிக்கையாளர்களை 4,000 மைல்கள் தொலைவில் உள்ள ஆப்பிரிக்க நாடு ஒன்றிற்கு அனுப்பி வைக்க இருக்கிறது. உலகில் முதன் முறையாக இப்படியொரு ஒப்பந்தத்தை கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவுடன் செய்ய பிரித்தானிய அமைச்சர்கள் முடிவு செய்து உள்ளனர். ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைவோரின் புகலிடக் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் சூழ்நிலையில், அவர்கள் ருவாண்டாவில்தான் இருப்பார்கள். இத்திட்டம் தொடர்பில் ருவாண்டா நாட்டின் தலைநகரான Kigaliயைச் பிரித்தானிய உள்துறைச் செயலரான பிரீத்தி பட்டேல் […]
எகிப்தில் இந்திய விமானப்படை தலைமை தளபதி 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான எகிப்தில் இந்திய விமானப்படை தலைமை தளபதியான வி.ஆர்.சௌத்ரி 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதுகுறித்து விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் “தலைமை தளபதி வி.ஆர்.சௌத்ரி இன்று முதல் எகிப்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்நிலையில் டிசம்பர் 2-ம் தேதி வரை அவர் அந்த நாட்டில் இருப்தாக கூறப்படுகிறது. இதற்கிடையில் எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெறவிருக்கும் விமானப்படைத் திறன் மாநாடு மற்றும் பாதுகாப்பு கண்காட்சியில் […]
பெட்ரோல் லாரி வெடித்த விபத்தில் உயிரிழந்த 100-க்கும் மேற்பட்டோர் சடலங்கள் ஒரே இடத்தில் அருகருகே புதைக்கப்பட்டது. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோன் தலைநகர் ஃப்ரீடௌனின் புகர்ப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்த பெட்ரோல் லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதனையடுத்து லாரியில் இருந்து கசிந்த பெட்ரோலை சேகரிப்பதற்காக அந்தப் பகுதியில் உள்ள பெரும்பாலானவர்கள் அங்கு கூடினர். அப்போது திடீரென்று லாரி தீப்பிடித்து வெடித்து சிதறியது. இதனால் சம்பவத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக […]
சீய்ரா லியோன் என்ற நாட்டில் பெட்ரோல் பங்கில் தீ விபத்து ஏற்பட்டு 80க்கும் அதிகமான மக்கள் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்காவின் மேற்கு பகுதியில் இருக்கும் லியோனின் தலைநகரில் இருக்கும் ஒரு பெட்ரோல் பங்கின் மீது டேங்கர் லாரி ஒன்று மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது தீ பற்றி எரிந்ததில் சுமார் 91 நபர்கள் தீயில் கருகி உயிரிழந்ததாகவும், நூற்றுக்கும் அதிகமானோருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் பங்கிற்கு அருகில் இந்த […]
ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினர் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தேசிய துக்கம் அனுசரிக்கப்படுகிறது. ஆப்பிரிக்காவில் உள்ள சஹேலின் மேற்கில் அரசு படைகளுக்கும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு மற்றும் அல்கொய்தா இயக்கத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. இதனால் எப்போதும் அந்த பகுதி பதற்றத்துடன் காணப்படும். இந்த நிலையில் நைஜரில் உள்ள புர்கினோ பாசோ மற்றும் மாலி நாடுகளின் எல்லைப் பகுதியில் பயங்கரவாத தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலானது உலக அளவில் பெரும் […]
ஸ்பெயின் நாட்டின் விலங்குகள் காப்பகத்தில் 2 அரிய வகை வெள்ளை நிற சிங்க குட்டிகள் பிறந்துள்ளன. தெற்கு ஸ்பெயினில் உள்ள விலங்குகள் காப்பகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று 2 அரிய வகை வெள்ளை நிற ஆப்பிரிக்க சிங்க குட்டிகள் பிறந்தன. மேலும், பிறந்து 8 நாட்கள் ஆன ஆண் மற்றும் பெண் வெள்ளை சிங்க குட்டிகள் நேற்று முன்தினம் அண்டலூசியா பகுதியில் உள்ள மலை கிராமத்தில் இருந்து உணவு அளிப்பதற்காக சிறப்பு அறைக்கு மாற்றப்பட்டன. இந்த வெள்ளை […]
ஆப்பிரிக்காவில் ஒரு பெண் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்த பின்பு தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார். ஆப்பிரிக்காவில் இருக்கும் மாலி என்ற பகுதியை சேர்ந்த ஹலிமா சிஸ்ஸே என்ற பெண் கடந்த மே மாதத்தில் 9 குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பெற்றெடுத்தார். இது உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டது. அவர் கர்ப்பமடைந்திருந்த போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், மருத்துவர்கள் ஏழு குழந்தைகள் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் பிரசவத்தின் போது ஆண் குழந்தைகள் 4 மற்றும் பெண் […]
இறந்த பெண்ணின் செல்களை கொண்டு மரணத்தை ஏற்படுத்தக்கூடிய நோய்களுக்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆப்பிரிக்காவை சேர்ந்த ஹென்ரீட்டா லாக்ஸ் என்னும் இளம்பெண் கடந்த 1951 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கருப்பைவாய் புற்றுநோயால் உயிரிழந்தார். இவர் தனது 21வது வயதில் மரணமடைந்தார். தற்பொழுது அந்த பெண் இறந்து 70 ஆண்டுகள் ஆயினும் அவருடைய உடல் செல்கள் இன்று வரை பல மருத்துவ கண்டுபிடிப்புகளுக்கு ஆதரவாக உள்ளது. அதிலும் போலியோ தடுப்பூசி, HPV தடுப்பூசி, ஜெனெடிக் மேப்பிங் மற்றும் கொரோனா […]
எரித்திரியா பகுதியில் இரண்டு திருமணம் செய்யாத ஆண்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள எரித்திரியாவில் வசித்து வரும் ஆண்கள் கட்டாயமாக இரண்டு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அவ்வாறு 2 திருமணம் செய்ய மறுக்கும் ஆண்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. இந்நிலையில் முதல் மனைவி அவரது கணவரின் 2-வது திருமணத்திற்கு ஏதாவது ஆட்சேபனை தெரிவித்தால் இருவரும் சிறைக்கு செல்ல வேண்டியது இருக்கும். இதற்கிடையில் எரித்திரியாவில் பலமுறை உள்நாட்டுப் போர்கள் நடைபெற்று வருவதால் […]
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் வாழ்ந்து வந்த ராணி ஒருவர் செய்த கொடூர செயல் குறித்த பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிரிக்காவில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து வந்த அங்கோலாவின் ராணி என்ஜிங்கா எம்பாண்டி கொடூரமான ஆட்சி புரிந்து வந்துள்ளார். மேலும் அவர் உடலுறவு கொண்ட தனது காதலரை துடிக்கத் துடிக்க உயிருடன் எரித்துக் கொன்றதாகவும் கூறப்படுகிறது. இந்த ராணி தென் மேற்கு ஆப்பிரிக்க நாடான மாதம்பா மற்றும் தொங்கோவில் ராணியாக ஆட்சி புரிந்தார் என்று பல […]
புதிய தொழிற்சாலையை அமைக்கப்போவதாக அமெரிக்கா தடுப்பூசி நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றிற்கு எதிராக மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் அந்தந்த நாடுகளில் உள்ள அரசுகளும் மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வதனை ஊக்குவிப்பதற்காக இலவச தடுப்பூசி மையங்கள் அமைத்துள்ளனர். இதனை தொடர்ந்து கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர மக்கள் அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பும் வலியுறுத்தியுள்ளது. அதிலும் ஆப்பிரிக்காவில் […]
ஆப்பிரிக்கா முழுவதும் உள்ள குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள மலேரியாவிற்கு பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசி முதன்முதலாக செலுத்தப்பட்டு வருகிறது. பிரிட்டனில் கிளாக்ஸோ ஸ்மித்கிளைன் (GlaxoSmithKline) எனும் மருந்து நிறுவனம், மலேரியா காய்ச்சலுக்கு எதிராக மாஸ்குயிரிக்ஸ் (Mosquirix) அல்லது RTS, S என்ற தடுப்பூசியை கடந்த 1987-இல் தயாரித்தது. ஆனால் இதன் செயல்திறனானது 30 சதவீதம் மட்டுமே கொண்டது . எனவே, இதை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போதிருந்து கானா, கென்யா மற்றும் மலாவியில் உள்ள 8 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு […]
ஆப்பிரிக்க முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள குழந்தைகளை உற்சாகமளிக்க நடன பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஆப்பிரிக்காவில் நிராகோங்கோ எரிமலை சமீபத்தில் வெடித்ததில் குறைந்தது 30 பேர் உயிரியிழந்தனர். இந்த இயற்கை பேரழிவால் 3,000 க்கும் மேற்பட்ட மக்கள் தங்களது வீடுகளை இழந்தனர். இதனை அடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் பல்வேறு பகுதிகளில் உள்ள நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். இந்த நிலையில், கோனகரா முகாம்களில் தங்கியிருக்கும் குடும்பங்களைச் சேர்ந்த 3 முதல் 10 வயதுடைய குழந்தைகளுக்கு இணுகா நடனப் பயிற்சி சார்பில் […]
ஆப்ரிக்க நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ்.ஜி.எஸ் பயங்கரவாத அமைப்பினர் மீது பிரெஞ்சு படையினர் தாக்குதல் நடத்தி வந்துள்ளனர். ஆப்பிரிக்காவில் உள்ள பமாகோ,மாலி ,பர்கினோ பாசோ ,நைஜர் போன்ற நாடுகளில் ஐ.எஸ்.ஜி.எஸ் என்று அழைக்கப்படும் இஸ்லாமிக் ஸ்டேட்டின் கிரேட்டர் சஹாரா என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. மேலும் அவர்கள் அங்கு தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த பயங்கரவாத அமைப்பின் தலைவராக அதான் அபு வாலிட் அல் ஷராவி செயல்பட்டு வருகிறார். இதனை அடுத்து பயங்கரவாத […]
ஐஎஸ் தீவிரவாத தலைவரை கொன்றால், 5 மில்லியன் டாலர்கள் பரிசு என்ற அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில், பிரான்ஸ் படை அவரை கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ் பயங்கரவாத தலைவரான, Adnan Abou Walid al Sahraoui என்பவர், கடந்த 2017ஆம் வருடத்தில் அக்டோபர் மாதம், பயங்கரவாத தாக்குதல் நடத்தியதில், அமெரிக்க வீரர்கள் 4 பேரும், நைஜீரிய வீரர்கள் 4 பேரும் உயிரிழந்தனர். மேலும், அமெரிக்காவை சேர்ந்த 2 வீரர்களும், நைஜீரியாவின் 8 வீரர்களும் பலத்த காயமடைந்தனர். இதனால், அமெரிக்க […]
ஆப்பிரிக்க நாடான ஐவரிகோஸ்ட் நாட்டில் இருந்து 53 அகதிகளுடன் படகு ஒன்று அட்லாண்டிக் கடல் வழியாக ஸ்பெயின் நாட்டிற்குள் நுழையும் நோக்கத்தோடு கடந்த வாரம் படகு ஒன்று புறப்பட்டது. அந்த படகு ஸ்பெயின் நாட்டின் ஹனரி தீவுகளுக்கு 220 கி.மீ. தொலைவில் அட்லாண்டிக் கடலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது திடீரென விபத்துக்குள்ளானது. இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஸ்பெயின் கடற்படையினர் விபத்துக்குள்ளான படகு மூழ்கிய இடத்திற்கு சென்றனர். அங்கு விபத்துக்குள்ளான படகின் பாகங்களை […]
மாலியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு கருவின் 7 குழந்தைகள் உள்ளதாக மருத்துவர்கள் கூறிய நிலையில் அவர் ஒன்பது குழந்தைகளை பெற்றெடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக ஒரு கருவியில் இரண்டு குழந்தைகள் உருவாவது உண்டு. அதையும் மீறி சில சமயங்களில் 3, 4 கருவும் உருவாவது உண்டு. அப்படி உண்டாகும்போது அனைத்து குழந்தைகளும் உயிர் பிழைப்பது இல்லை. அதையும் மீறி அபூர்வமாக நான்கு குழந்தைகளும் உயிர் பிழைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதையெல்லாம் மீறி ஆப்பிரிக்க நாடான […]
ஆப்பிரிக்காவில் மர்ம நபரால் விமானம் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்கா தலைநகரமான நோவக்ச்சோட்டடில் மௌரிட்டானிய ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான விமானத்தை அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் கடத்துவதற்காக விமானத்திற்குள் நுழைந்துள்ளார் .பிறகு அந்த மர்ம நபர் விமான உரிமம் தனக்கு வழங்குமாறு விமான அதிகாரிகளிடம் கூறியுள்ளார் .மேலும் பாதுகாப்பு படையினர் அருகில் வந்தால் விமானத்தை வெடிக்க வைத்துவிடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளான். விமானத்தை கடத்தியவன் அமெரிக்க குடிமகன் என்று கூறப்படுகிறது. விமானம் கடத்தப்பட்டதை தொடர்ந்து பாதுகாப்பு […]
ஆப்பிரிக்காவில் உள்ள சந்தையில் 58 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். ஆப்பிரிக்காவில் உள்ள Darey-Daye என்ற கிராமத்திற்கு அருகில் இருக்கும் Banibangou என்ற சந்தையில் கடந்த திங்கட்கிழமை அன்று இருசக்கர வாகனங்களில் திடீரென்று கையில் துப்பாக்கிகளுடன் பயங்கரவாத கும்பல் ஒன்று புகுந்துள்ளது. அந்த கும்பலை சேர்ந்தவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில், சந்தையில் துப்பாக்கிச்சூடு நடத்தி கண்ணில்படுபவர்களை எல்லாம் சுட்டு தள்ளினர். மேலும் சந்தையில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்களையும் தீ வைத்து கொளுத்திவிட்டு சென்றுள்ளனர். அதோடு மட்டுமல்லாமல் சந்தையில் […]
ஆப்ரிக்காவில் உள்ள தங்கமலையில் பொதுமக்கள் தங்கத்தை அள்ளிச்சென்ற வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. ஆப்பிரிக்காவில் காங்கோ பகுதியில் உள்ள மலை ஒன்றில் சுரங்கப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த மலையில் சுமார் 60 முதல் 90% பரப்பளவில் தங்கம் இருப்பதாக செய்திகள் பரவியுள்ளது. இச்செய்தியை அறிந்த அப்பகுதி மக்கள் தங்கமலைக்கு சென்று அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த சுரங்கப்பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கூட்டம் கூட்டமாக சேர்ந்து தங்கத்தை தோண்டி எடுத்து பையில் போட்டு கொண்டுச்சென்ற சம்பவம் ஆச்சரியத்தை […]
சீனாவில் வூகான் சந்தையில் இருந்து கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து ஆப்பிரிக்காவிலிருந்து புதிய வகை வைரஸ் பரவி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வூகான் சந்தையில் பல வன உயிரினங்கள் உயிருடன் பிடிக்கப்பட்டு உணவாக்கப்பட்டதாக கூறப்பட்டதை அடுத்து, ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் அதுபோன்று ஒலுவு என்ற பெயரில் சந்தை செயல்பட்டு வருகிறது. சீனாவை போல இங்கும் விலங்குகள், வவ்வால்கள் குரங்குகள் ஏராளமாக பிடிக்கப்பட்டு உயிருடன் இருக்கும்போதே கொதி நீரில் மூழ்கடிக்கப்பட்டு உணவாக மாற்றப்படுகிறது. இதற்காக சில உயிரினங்கள் […]
ஆப்பிரிக்க நாட்டில் உடலுறவின்போது 35 வயது நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க நாடான மலாவியில் சார்லஸ் மஜாவா என்ற 35 வயது நபர் பாலியல் தொழிலாளர் ஒருவருடன் உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்பிறகு அவரின் உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அந்தப் பரிசோதனை முடிவில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. உடலுறவின் போது அதீத உச்சத்திற்கு சென்றதால் மூளையில் உள்ள ரத்த நாளங்களில் வெடிப்பு ஏற்பட்டு […]
சிலி நாட்டில் உள்ள Buin மிருக காட்சி சாலையில் கழுதை இனங்களில் அரிய வகை இனமான ஆப்பிரிக்க காட்டு கழுதை குட்டிகள் உள்ளன. சிலி நாட்டில் உள்ள Buin மிருக காட்சி சாலையில் கழுதை இனங்களில் அரிய வகை இனமான ஆப்பிரிக்க காட்டு கழுதை குட்டிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். ‘Lucrecia’ மற்றும் ‘Ita’ என்ற பெயர் கொண்ட அந்த 2 குட்டிகளும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக மிருக காட்சி உரிமையாளர் தெரிவித்தார். இந்த வகை […]
ஆப்பிரிக்கக் கெளுத்தி மீன்கள் வளர்ப்பதும், விற்பனை செய்வதும் மத்திய, மாநில அரசுகளால் தடை செய்யப்பட்டுள்ளது. ஆப்பிரிக்கக் கெளுத்தி மீன்கள் இந்தியாவில் கடந்த 2013 ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டது. ஆனால் தற்போது தமிழகம், கேரளம் முதலான மாநிலங்களில் இந்த வகை மீன்கள் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளது. இந்த வகை மீன்கள் உள்ளூர் நீர்நிலைகளில் கலந்து நதிகள், குளம் குட்டைகளில் வியாபித்து தற்போது நமது மாநிலத்தில் இருக்கும் உள்ளூர் மீன் வகைகளை கொன்றொழித்து விடுகின்றன. ஆப்ரிக்க கெளுத்தி […]
மற்றொரு புதிய வகை கொரோனா வைரஸ் நைஜீரியாவில் கண்டறியப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸின் புதிய திரிபு மிகவும் விரைவாகவும், எளிதாகவும் பரவக்கூடியது என்று இங்கிலாந்தில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் இங்கிலாந்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையடுத்து பல்வேறு நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இங்கிலாந்து உடனான விமான சேவையை தடைசெய்துள்ளது. பல நாடுகள் எல்லைகளை மூடி உள்ளன. இந்நிலையில் ஆப்பிரிக்கா நாடான நைஜீரியாவில் மற்றொரு புதிய வகை உருவாகி உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. […]
சிங்கத்திடம் மாட்டிக் கொண்ட அமெரிக்க ஆராய்ச்சியாளர் ஒருவர் அதனிடம் சண்டையிட்டு தப்பி வந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிங்கம் என்ற பெயர் கேட்டாலே சற்று நடுக்கம்தான் ஏற்படும். ஆனால் ஆப்பிரிக்காவில் வனவிலங்கு ஆராய்ச்சியாளராக இருக்கும் கோட்ஸ் நீஃப் என்ற நபர் சிங்கத்திடம் மாட்டிக் கொண்டு அதனுடன் சண்டையிட்டு தப்பி வந்துள்ளார். டிசம்பர் ஏழாம் தேதி போட்ஸ்வானாவின் ஒகாவாங்கோ டெல்டாவில் ஆராய்ச்சியில் தனது கூடத்தில் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென தனது கூடத்திற்கு வெளியே ஒரு சத்தம் […]
ஆப்பிரிக்காவில் இருந்து புலம்பெயர்ந்து சென்ற படகு ஒன்று கடலில் கவிழ்ந்து 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் வசித்து வரும் மக்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி இருப்பதால், தங்கள் நாடுகளை விட்டு வேறு நாடுகளுக்கு புலம் பெயர்ந்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் கடல்வழி பயணம் மேற்கொண்டு செல்கிறார்கள். இவ்வாறான ஆபத்து நிறைந்த கடல் வழி பயணங்களை மக்கள் எவரும் மேற்கொள்ள வேண்டாம் என்று அரசு சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் மக்கள் […]
காங்கோ நாட்டில் தங்கச் சுரங்கம் இடிந்து விபத்து நேரிட்டதில் தொழிலாளர்கள் 53 பேர் உயிரிழந்துவிட்டனர். ஆப்பிரிக்காவிலுள்ள காங்கோவில் காமிடுகா என்ற இடத்தில் டெட்ராய்டு சுரங்கம் அமைந்துள்ளது. கனமழை காரணமாக சுரங்கத்தின் ஒரு பகுதி சரிந்து உள்வாங்கியது. அப்போது ஏற்பட்ட மண்சரிவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிக்கிக்கொண்டனர். உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்புக்குழுவினர் பலரை மீட்டனர், எனினும் மண்சரிவில் சிக்கி சுரங்கத் தொழிலாளர்கள் 53 பேர் பலியாகிவிட்டனர். காங்கோ நாட்டில் உரிமம் இல்லாமல் ஏராளமான சுரங்கம் செயல்படுவதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். […]
மாலி நாட்டில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதால் அதிபர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் அதிபர் இப்ராஹிம் பவுபக்கர் பயங்கரவாதத்தை ஒழிக்க தவறியதாகவும், தேர்தலில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாகவும் கூறி கடந்த 2 மாதங்களாக அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலி இராணுவத்தினரின் ஒரு பிரிவினர் திடீரென கிளர்ச்சியாளர்களாக உருமாறி புரட்சியில் ஈடுபட்டுள்ளனர். தலைநகர் பமாகோவை ஆக்கிரமித்த கிளர்ச்சி ராணுவ வீரர்கள் தெருக்களில் துப்பாக்கியால் […]
கிளர்ச்சியாளர்களால் கைது செய்யப்பட்ட மாலி அதிபர் மற்றும் பிரதமரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று ஐ.நா சபை பொது செயலாளர் கூறியுள்ளார். மாலி நாட்டின் தலைநகர் பமாகோவில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காதி நகரத்தில் அமைந்துள்ள ராணுவத் தளம் அருகே திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டுள்ளது. ராணுவ வீரர்கள் தெருக்களில் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு கொண்டே சென்றனர். ராணுவ டாங்கிகள் நகரத்தில் வந்துள்ளன. அது ராணுவத்தின் ஆட்சிக்கவிழ்ப்பதற்கான சதியாக இருக்கலாம் […]
மாலியில் அரசு நிர்வாகத்தை இராணுவ கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி அதிபரை கைது செய்துள்ள நிலையில், அதிபர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மாலி நாட்டில் ராணுவ புரட்சி ஏற்பட்டுள்ளதால் ராணுவ கிளர்ச்சியாளர்கள் தெருக்களில் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு கொண்டே செல்கின்றனர். ராணுவ டாங்கிகள் நகரத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அதிபர் இப்ராகிம் பவுபக்கர் மற்றும் பிரதமர் பவ்பவ் சிஸ்சே ஆகியோரை இராணுவ கிளர்ச்சியாளர்கள் கைது செய்து தலைநகர் பமாகோ அருகில் இருக்கின்ற ராணுவ முகாமிற்கு கொண்டு சென்றுள்ளனர். […]
மாலியில் ராணுவ புரட்சி ஏற்பட்டதால் அதிபர் இப்ராகிம் மற்றும் பிரதமர் பவ்பவ் சீஸ்சே ஆகியோரை ராணுவத்தினர் கைது செய்துள்ளனர். மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் ராணுவ புரட்சி ஏற்பட்டதால், அந்நாட்டின் அதிபர் இப்ராகிம் பாபுபக்கர் கெய்டா மற்றும் பிரதமர் பவ்பவ் சிஸ்சே ஆகியோரை இராணுவ கிளர்ச்சியாளர்கள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் பயங்கரவாதத்தை தடுக்க தவறியதாகவுகும், தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நாட்டின் அதிபருக்கு எதிராக இரண்டு மாதங்களாக தொடர் போராட்டம் […]
நீண்ட நாட்களாக தொடர்ந்த சண்டைக்கு பிறகு மொசாம்பிக் துறைமுகத்தை பயங்கரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில், ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினருடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி கொண்டிருக்கின்றனர். பயங்கரவாதிகள் கடந்த சில மாதங்களாக அந்நாட்டின் வடக்கு பகுதியில் இருக்கின்ற நகரங்களை கைப்பற்றி தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். அதனால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி இடம் பெயர்ந்துள்ளனர். அந்நாட்டில் உள்ள முக்கிய துறைமுகங்களில் ஒன்றான மொசிம்போ டா பிரையா துறைமுகத்தை கைப்பற்ற பயங்கரவாதிகள் பல […]
தென் ஆப்பிரிக்க நாட்டில் 2 மாதத்தில் 350 யானைகள் உயிரிழந்துள்ளன. சமீபகாலமாக விலங்குகளுக்கு எதிரான செயல்கள் உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தியாவைப் பொறுத்தவரையில் கேரள மாநிலத்தில் யானை ஒன்று வெடிவைத்து கொல்லப்பட்டது. அதேபோல் பசுமாடுகளின் சிலவற்றின் வாயில் வெடி வைக்கப்பட்டன. அதேபோல், சமீபத்தில் தண்ணீர் குடிக்க வந்த குரங்கு ஒன்று தூக்கிலிடப்பட்ட கொலை செய்யப்பட்டது. இப்படி மனிதர்களால் விலங்கிற்கு தொடர்ந்து இந்தியாவில் ஓரிரு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகையில், தென் ஆப்பிரிக்க நாடான […]
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 114 வயது முதியவர் வெற்றிகரமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார் உலக நாடுகளிடையே பரவிவரும் கொரோனா தொற்று அதிக அளவு வயதில் முதிர்ந்தவர்களை தாக்குவதாகவும் உயிரிழந்தவர்களில் அதிகமானவர்கள் வயதில் முதிர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் வெளியாகி வந்தது. ஆனால் அதிலும் சில அதிசயமான சம்பவங்கள் நடக்கத்தான் செய்கிறது. அவ்வகையில் ஆப்பிரிக்காவை சேர்ந்த அபா திலாகுன் வேர்டேமிக்கேல் என்பவர் தனது 114 வயதில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து வெற்றிகரமாக மீண்டு வந்துள்ளார். இவருக்கு கொரோனா தொற்று […]
கொரோனா தொற்றை மூலிகை மருந்து மூலம் கட்டுப்படுத்தி உள்ளதாக மடகாஸ்கர் அதிபர் தெரிவித்துள்ளார் மடகாஸ்கர் தீவில் கொரோனா தொற்றினால் 128 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் நேரவில்லை. அந்த தீவில் காணப்படும் ஆர்டிமீஸியா என்னும் தாவரத்திலிருந்து மலேரியா நோய்க்கு மருந்து தயார் செய்யப்படுகின்றது. அதே மருந்து கொரோனா தொற்றையும் அளிக்க வல்லது என மடகாஸ்கர் அதிபர் ஆன்ட்ரே ரெஜோலினா தெரிவித்துள்ளார். இயற்கையாக தயாரிக்கப்படும் அந்த மருந்திற்கு கோவிட் ஆர்கானிக்ஸ் என பெயரிட்டு இருப்பதாக கூறிய […]
ஆப்பிரிக்காவில் இருக்கும் ஜிம்பாவேவில் கொரோனாவுடன் சேர்ந்து மலேரியாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது சீனாவில் தொடங்கி உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று ஆப்பிரிக்கா நாடுகளில் அதன் தாக்கத்தை அதிகரித்து வருகிறது. குறிப்பாக அல்ஜீரியா, ஜிம்பாவே, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் ஆப்பிரிக்கா நாடான ஜிம்பாவே மற்றொரு சிக்கலையும் சந்தித்து வருகிறது. கொரோனா தொற்றை எதிர்கொண்டு வரும் இந்த சூழலில் அந்நாட்டில் மலேரியா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதுவரை […]