உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்கும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உதவி தொகை திட்டத்திற்கான வழிமுறைகளை உயர்கல்வித்துறை வெளியிட்டிருந்தது. தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம், உயர்கல்வி உறுதி திட்ட மாற்றப்பட்டதாக அறிவித்தார். அதன்படி உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்,தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு,மாதம் ரூ.1000 வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை […]
Tag: ஆயிரம்
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து சாலை விபத்துக்கள் தொடர்பான உயிரிழப்பு அதிகரித்து வருகின்றது. இதற்கு காரணம் வாகனங்களை அதிவேகத்தில் ஓட்டுவது, ஹெல்மெட் அணியாமல் இருப்பது, குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுவது போன்ற பிரச்சனைகளால் சாலையில் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன. இதனால் இவற்றை தடுக்க வேண்டும் என்பதற்காக போக்குவரத்து துறை தொடர்ந்து கடுமையான சட்டங்களையும் அபராதத்தையும் விதித்து வருகின்றது. அந்த வகையில் தமிழகத்தில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட்டை சரியாக அணியாமல் வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் வாகனம் […]
திமுக ஆட்சியின் ஓராண்டு நிறைவடைந்ததை தொடர்ந்து அதற்கான சாதனை விளக்க கூட்டம் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தேனி அல்லிநகரம் அருகே மாவட்ட பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் . அப்போது பேசிய அவர் இன்னும் ஓராண்டில் மத்திய ஆட்சி மாற்றம் வந்தபின் நகராட்சி பேரூராட்சிகளில் 100 நாள் வேலை திட்டம் கொண்டு வரப்படும். கூட்டுறவுத் துறை, நெடுஞ்சாலைத் துறைகளிலும் 5000 பணியிடங்கள், […]
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததை அடுத்து மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வருகின்றது. அதிலும் பள்ளி மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு பல திட்டங்களை செய்து வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளியில் பயின்ற 6 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது. வரும் கல்வியாண்டில் கல்லூரிகள் திறந்ததும் இந்த உதவித்தொகை வழங்கும் பணி தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அரசு பள்ளிகளில் […]
தமிழக சட்டமன்ற கூட்டத்தில் இன்று நீர்வளத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தடுப்பணை கட்டுவதில் திமுக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகின்றது. இந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில் ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும் எனவும் தெரிவித்தார். அனைத்து தொகுதிகளிலும் ஒரு தடுப்பணை கட்ட வேண்டும். நீர்நிலைகளில் உள்ள கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கால்வாய்களை தூர்வார நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னை , செங்கல்பட்டு, காஞ்சிபுரம், […]
டெல்லியில் கூடுதல் ஆணையர் உட்பட ஆயிரம் போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டு வரும் நிலையில், அதிக அளவாக கடந்த 24 மணிநேரத்தில் 22,751 பேருக்கு நேற்று கொரோனா உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் போலீசாருக்கு அதிக அளவில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. டெல்லியில் காவல் நிலைய தலைமையகங்கள் உட்பட அனைத்து காவல் நிலைய போலீசாருக்கும் அதிகளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் […]
நடிகர் சோனு சூட் தனது அறக்கட்டளை சார்பாக ஆயிரம் பெண்களுக்கு இலவசமாக மிதிவண்டி வழங்கியுள்ளார். ரசிகர்களால் ரியல் ஹீரோ என்று அழைக்கப்படுபவர் நடிகர் சோனு சூட். இவர் எங்கு பேரிடர் நடந்தாலும் முதல் ஆளாக உதவிக்கு வந்து நிற்பார். இந்நிலையில் இவர் தனது தங்கை மாளவிகாவுடன் சேர்ந்து அறக்கட்டளை மூலம் பள்ளி செல்லும் மாணவிகள் மற்றும் முன்கள பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள் உட்பட சுமார் ஆயிரம் பேருக்கு இலவச மிதிவண்டி வழங்கியுள்ளார். தனது சொந்த ஊரான பஞ்சாப் […]
தொடர் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இந்நிலையில் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 3000 ஆயிரம் கன அடியாக உள்ள நிலையில் ஏரியில் இருந்து தற்போது 1000 கன அடி […]
குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 வழங்குவதற்கான அறிவிப்பு ஜனவரி மாதம் வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. குறிப்பாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிவாரணமாக நான்காயிரம், குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தது. திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு நிவாரணம் நான்காயிரம் ரூபாய், ஆவின்பால் விலை குறைப்பு, பெண்களுக்கு இலவச பேருந்து உள்ளிட்ட 5 திட்டங்களை தொடங்கி வைத்தார். ஆனால் குடும்ப தலைவிகளுக்கு […]
கோவையில் காணாமல்போன பூனையை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு 5000 ரூபாய் பணம் வழங்குவதாக வித்தியாசமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கோவை ராமநாதபுரம், திருவள்ளூர் நகர் பகுதியை சேர்ந்த பிரபாகரன் தனது வீட்டில் வெளிநாட்டு வகை பூனை ஒன்றை கடந்த ஆறு வருடங்களாக வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி இந்த பூனை காணாமல் போனது. இதனை தொடர்ந்து பல இடங்களில் தேடியும் பூனையை கண்டுபிடிக்க முடியாததால் ராமநாதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். […]
ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மேல் உள்ள நியாயவிலை கடைகள் தனியாக செயல்பட குழு அமைக்கப்பட்டு விரைவில் புதிய நியாயவிலைக் கடைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமத்தில் புதிய பகுதிநேர நியாய. விலை கடை திறந்து வைத்த அமைச்சர் சக்கரபாணி தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது: “தமிழக முதலமைச்சரின் உத்தரவின்படி அங்காடிகள் முழுவதும் உணவுப் பொருட்களை எளிதாக பெற்றுக் கொள்கின்ற வகையில் தாய் […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைந்தது. திமுக கட்சியின் தலைவரான முக ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். இவர் தேர்தல் பிரச்சாரத்தின் போது குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். தேர்தலில் திமுக வெற்றி பெற்ற பிறகு இதுவரை அதற்கான அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. அதுமட்டுமில்லாமல் குடும்பத் தலைவிகளின் பெயர்களில் ரேஷன் கார்டு இருந்தால் மட்டுமே ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற வதந்தியை […]
திருவல்லிக் கேணியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் சுப்ரமணியம். இவர் கடந்த 12ஆம் தேதி சவாரிக்கு சென்று விட்டு மெரினா காமராஜர் சாலையில் வந்தபோது ராணிமேரி கல்லூரி அருகே முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தில் இருந்து ஒரு பை கீழே விழுந்ததை பார்த்துள்ளார். உடனடியாக ஆட்டோவில் நிறுத்தி அதை எடுத்து பார்த்தபோது கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்தது. ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் இருந்தது. அந்த பணப்பையை தவறவிட்ட வாகன ஓட்டி யாரென்பதை அவரால் கண்டுபிடிக்க […]
சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள், அரிசி குடும்ப அட்டைதாரர்கள் ஆக மாற்றிக்கொள்ள தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் தங்களது குடும்ப அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்றிக்கொள்ள கால அவகாசம் விதித்து தமிழக அரசு இணையதள முகவரியை வெளியிட்டுள்ளது. உணவு மற்றும் நுகர்வோர் பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பொதுவினியோக திட்டத்தில் 5 லட்சத்து 80 ஆயிரத்து 298 குடும்ப அட்டைகள் சர்க்கரை பெரும் அட்டைகளாக உள்ளன. அவர்கள் அனைவரும் […]