பெரும்பாலும் மக்களால் அதிகமாக பயன்படுத்தப்படும் டோலோ மாத்திரைகளை பரிந்துரை செய்வதற்கு மருத்துவர்களுக்கு ஆயிரம் கோடி மதிப்பிலான இலவச பொருள்களை நிறுவனம் ஒன்று வழங்கியுள்ளதாக தன்னார்வத் தொண்டு அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளது. தாங்கள் தயாரிக்கும் மருந்துகளை விநியோகம் செய்வதற்காக அதை தயாரிக்கும் நிறுவனங்கள் முறைகேடான வழிமுறைகளை பயன்படுத்துவதாக குற்றம் சாட்டிய இந்திய மருத்துவ பிரதிநிதிகள் கூட்டமைப்பு மருந்து விநியோகத்தில் ஒரே மாதிரியான விதிமுறைகளை உருவாக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைத்திருந்தது. […]
Tag: ஆயிரம் கோடி
கோவை நீலகிரியில் நடக்கும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல்வர் முக ஸ்டாலின் நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு கோவை சென்றடைந்தார். கோவை வஉசி மைதானத்தில் கண்காட்சி மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பாக ஓவியக் கண்காட்சியை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார். அதன் பிறகு கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 3 மாவட்ட தொழில் முனைவோருடன் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது அவர் தெரிவித்ததாவது: “குணத்தால், […]
திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் இது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது தலைமைச் செயலகத்தில் 2022-2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிதியாண்டுக்கான காகிதமில்லா தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் தாக்கல் செய்தார். இந்நிலையில் பட்ஜெட் குறித்து பேசத் தொடங்கிய […]
தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஆயிரம் கோடி ஒதுக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி கடலூரை சேர்ந்த செல்வகுமார் இதுகுறித்த வழக்கை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்தார். இந்தியாவில் செம்மொழியாக தேர்வு செய்யப்பட்ட ஆறு மொழிகளில் பழமையானது தமிழ்மொழி தான். ஆனால் தமிழ்மொழி வளர்ச்சிக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 22.94 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. மிகக் குறைந்த அளவு பயன்பாட்டில் இருக்கும் சமஸ்கிருத மொழிக்கு […]
ரூ. 1000 இழப்பீடு கேட்டு பாபா ராம்தேவுக்கு இந்திய மருத்துவ சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. யோகா குரு பாபா ராம்தேவ் ஆங்கில மருத்துவம் குறித்து கடுமையான விமர்சனங்களை செய்திருந்தார். அவர் ஆங்கில மருத்துவத்தை ” முட்டாள் மருத்துவம்” என்று கூறியது பெரும் சர்ச்சையானது. அதுமட்டுமில்லாமல் ஆங்கில மருந்துகளை சாப்பிட்டு தான் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். ராம்தேவ் கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதற்கு பல அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இதை […]
குஜராத் பகுதியில் டவ்-தே புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து ஹெலிகாப்டரில் பார்வையிட்ட பிரதமர் மோடி ஆயிரம் கோடியை உடனடியாக நிவாரணமாக அறிவித்துள்ளார். அரபிக் கடலில் உருவான டவ்-தே புயல் கடந்த திங்கட்கிழமை இரவு குஜராத் மாநிலத்தில் கரையை கடந்தது. இது கடலோரப் பகுதிகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக 16 ஆயிரம் வீடுகள், 40 ஆயிரம் மரங்கள் வேரோடு சாய்ந்தது. 70 ஆயிரம் மின்கம்பிகள் சாய்ந்தது. இதன் காரணமாக மின் வினியோகம் துண்டிக்கப்பட்டு வேலை செய்ய […]