உக்ரைனுக்கு ராணுவ உதவி அளித்ததற்காக அமெரிக்க நாட்டை ரஷ்யா கடுமையாக சாடியுள்ளது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது 100 நாட்களை கடந்து தீவிரமாக போர் தொடுத்து கொண்டிருக்கிறது. இதில் உக்ரைன் நாட்டிற்கு ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் ஆயுத உதவிகளை செய்து வருகின்றன. இதற்கிடையில் வியன்னாவில் நடந்த ராணுவ பாதுகாப்பு மற்றும் ஆயுத கட்டுப்பாடு தொடர்பிலான பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட ரஷ்ய தரப்பு தெரிவித்ததாவது, மேற்கத்திய நாடுகள் உக்ரைன் நாட்டிற்கு அளிக்கும் ஆயுதங்கள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இது மட்டுமல்லாமல் […]
Tag: ஆயுத உதவி
நேட்டோ அமைப்பானது, ரஷ்யாவை எதிர்த்து போர் தொடுக்க உக்ரைன் நாட்டிற்கு ராணுவ உதவி அளிப்பதாக தெரிவித்துள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா 75 நாட்களை தாண்டி போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. உக்ரைன் படைகளும், இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கிறது. இதனால், ரஷ்ய படைகள் வெற்றி பெறுவதில் சிரமம் ஏற்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா போன்ற பல நாடுகளும் பொருளாதார உதவியும் இராணுவ உதவியும் வழங்கி வருகின்றன. இந்நிலையில் ரஷ்ய நாட்டை எதிர்த்து தொடர்ந்து போரிடுவதற்கு ராணுவ உதவி […]
உக்ரைன் நாட்டில் போர் தொடுத்துக் கொண்டிருக்கும் அதிபர் விளாடிமிர் புடினுக்கு ஆயுத உதவி செய்தால் சீனா மீது தடை விதிப்போம் என்று அமெரிக்க தூதர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க வெளியுறவுத் துறையின் இணை அமைச்சரான வெண்டி ஷெர்மன், ரஷ்யாவின் வதந்திகளை பெரிதாக்கி கொண்டிருக்கும் சீனா, உக்ரைன் நாட்டில் நடக்கும் நிலையை முடிவுக்கு கொண்டுவர உதவவில்லை என்று கூறியிருக்கிறார். மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது, தடை அறிவிப்பது, ஏற்றுமதியில் கட்டுப்பாடு ஆகியவற்றிலிருந்து என்ன நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று அவர்கள் தெரிந்திருப்பார்கள். […]
ரஷ்யா நடத்தும் போரில் பதில் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆஸ்திரேலியா ஏவுகணைகளை அனுப்பியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 12 ஆம் நாள் ஆக கடுமையாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டின் பல நகரங்களை ரஷ்ய படைகள் ஆக்கிரமித்திருப்பதோடு தலைநகரை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது. எனவே உக்ரைன் படைகள் ரஷ்ய படைகளை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கின்றன. இந்தப் போரை நிறுத்த வேண்டும் என்று பல நாடுகளும் முயற்சி […]