Categories
உலக செய்திகள்

உக்ரைனின் ஆயுதக்கிடங்கு அழிப்பு…. ரஷ்யப்படை வெளியிட்ட தகவல்…!!!

ரஷ்ய படை, உக்ரைனின் மேற்கு பகுதியில் இருக்கும் ஆயுதக்கிடங்கை அழித்ததாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டின் முக்கிய நகர்களில் ரஷ்ய படைகள், தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன. இந்நிலையில் நேற்று உக்ரைனின் மேற்கு பகுதியில் இருக்கும் ஆயுதக்கிடங்கை அழித்ததாக ரஷ்யப்படைகள் தகவல் வெளியிட்டிருக்கிறது. உக்ரைன் அரசு, தங்கள் ஆயுதக் கிடங்கின் மீது ஹைபர்சோனிக் ஏவுகணையை ரஷ்யா ஏவியதாக குற்றம் சாட்டியுள்ளது.

Categories

Tech |