இந்தியா முழுவதும் ஆயுத பூஜை பண்டிகையானது வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு பல்வேறு தொழில் நிறுவனங்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் தாங்கள் அன்றாடம் வேலைக்காக பயன்படுத்தும் உபகரணங்களுக்கு பூஜை செய்தனர். அதேபோன்று அனைத்து ரயில்வே நிலையங்களிலும் ஆயுத பூஜை பண்டிகையானது சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் உள்ள ரயில்வே நிலையங்களிலும் ஆயுத பூஜை பண்டிகை கொண்டாடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ரயில்வே தண்டவாளத்திலும் பூ, பழம் போன்றவற்றை வைத்து சந்தனம், குங்குமம் […]
Tag: ஆயுத பூஜை
தமிழக முழுவதும் இன்று சரஸ்வதி பூஜை பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த சரஸ்வதி பூஜை பண்டிகையை நாம் ஆயுத பூஜை என்றும் கூறலாம். இந்த சரஸ்வதி பூஜையை முன்னிட்டு ஒர்க் ஷாப் வைத்திருப்பவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், நிறுவனங்கள் மற்றும் கடைகளில் வேலை பார்ப்பவர்கள் தாங்கள் பணிபுரியும் இடத்தை நன்றாக தூய்மை செய்து தாங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கு சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து வழிபடுவார்கள். அதன் பிறகு ஒரு வாழை இலையில் அவல்பொரி, பழங்கள், சர்க்கரை மற்றும் […]
ஆயுத பூஜை விடுமுறை காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை திறந்திருக்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா செவ்வாய்க்கிழமைகளில் மூடப்படுகிறது. இந்த நிலையில் நாளை செவ்வாய்க்கிழமை ஆயுத பூஜை விடுமுறை என்ற காரணத்தினால் பொதுமக்கள் வருகை தரும் விதமாக நாளை வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதனால் வழக்கம் போல் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை […]
ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து செப்டம்பர் மற்றும் அக்டோபர் 1 ஆம் தேதிகளில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆயுதபூஜையை முன்னிட்டு,சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்படும். இந்நிலையில், வரும் செம்ப்டம்பர் 30ம் தேதி முதல் அக்டோப்டர் வரை இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் குறித்த விவரங்கள் பின்வருமாறு: தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்தும் திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை, செல்லும் பேருந்துகள், சேத்துபட்டு, வந்தவாசி, எஞ்சி […]
போக்குவரத்து துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு, 30.09.2022 மற்றும் 01.10.2022 ஆகிய நாட்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, பயணிகளின் வசதிக்காக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், இதர பேருந்துகள் வழக்கம் போல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும். திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள், போளூர், சேத்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள், திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், […]
தமிழகத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு ஐந்து வகை இனிப்புகள் மற்றும் ஒரு கார வகையை விற்பனை செய்வதற்கான பணியை ஆவின் தொடங்கியுள்ளது. அதன்படி நெய் பாதுஷா 250 கிராம் 190 ரூபாய், நைஸ் அல்வா 250 கிராம் 190 ரூபாய், ஸ்டஃப்டு மோதி பாக் 250 கிராம் 180 ரூபாய், காஜூ பிஸ்தா ரோல் 500 கிராம் 320 ரூபாய், காஜு கத்திலி 250 கிராம் 260 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. கலவை இனிப்புகள் அடங்கிய […]
அலங்கார மின்விளக்கில் இருந்து மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் வ.உ.சி நகரில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் சபரி நேரு நகரில் உள்ள ஒரு இருசக்கர வாகனம் பழுதுபார்க்கும் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடையில் ஆயுதபூஜை விழாவை கொண்டடுவாதர்க்காக கடையை சுத்தம் செய்து அலங்கார விளக்குகளை மாட்டியுள்ளார். இதனையடுத்து இரவு பூஜை முடிந்ததும் வழக்கம்போல கடையை மூட முயன்றுள்ளார். அப்போது அலங்காரத்திற்கு பொருத்தப்பட்ட […]
ஆயுதபூஜை கொண்டாடப்பட்டு பனியன் தொழிற்சாலைகளில் இன்று சீரான முறையில் உற்பத்தியை தொடங்கியுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பனியன்கள் வெளி மாவட்டங்களில் இருந்து வெளிநாடுகள் வரை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது. இந்த தொழிற்சாலைகளில் வருடந்தோறும் ஆயுதபூஜை கொண்டாடப்படுவது வழக்கம். இதனையடுத்து தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் தொழிற்சாலைகளில் இந்த ஆண்டு ஆயுத பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டு சீராக பனியன் உற்பத்தி தொழில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. […]
ஆயுத பூஜையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். புதுடெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது ஆயுத பூஜை வாழ்த்து செய்தியில்,” அநீதியை அழித்ததன் அடையாளமாக பெண் சக்தியின் கடவுள் வடிவமான துர்க்கையை நாம் வணங்குகிறோம். தேச கட்டுமானத்தில் பெண்களுக்கு மரியாதையும் சம பங்களிப்பும் வழங்க உறுதி ஏற்க வேண்டும். நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்.” என்று அவர் கூறியிருந்தார் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தான் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில்,” நாட்டு […]
ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு வரும் 12 மற்றும் 13 தேதிகளில் பேருந்துகளில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க போக்குவரத்துறை ஏற்பாடு செய்துள்ளது. தீபாவளி, பொங்கல் போல நெரிசலை தவிர்க்க 12, 13 தேதிகளில் அரசு பேருந்துகள் இயக்கம் என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.. கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரம் ஆகிய 3 பேருந்து நிலையங்களில் இருந்து ஆயுதபூஜைக்கு வெளியூர் பேருந்துகள் இயக்கப்படுகிறது.. இது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாம்பரம் […]
ஆயுத பூஜையை முன்னிட்டு தூய்மைப் பணியாளர் குப்பைத் தொட்டிக்கும் துடப்பத்திர்க்கும் மாலை போட்டு பூஜை செய்த புகைப்படம் வைரல் ஆகியுள்ளது தற்போதைய காலம் விழாக் காலம் ஆகும். நவராத்திரியில் தொடங்கி தீபாவளி வரை எங்கு பார்த்தாலும் விழாக்கோலமாக தான் காணப்படும். அதிலும் ஆயுத பூஜை என்று வந்துவிட்டால் தொழிலாளர்களுக்கு பெரும் கொண்டாட்டமாக தான் இருக்கும். தங்கள் தொழிலில் பயன்படுத்தும் பொருட்களுக்கு அலங்காரம் செய்து பொட்டு வைத்து மாலை போட்டு கொண்டாடி மகிழ்வார்கள். அவ்வகையில் ஆயுத பூஜையை தூய்மைப் […]
சென்னை சென்ட்ரலில் உள்ள புகழ்பெற்ற பாடிகாட் முனீஸ்வரன் கோவிலில் ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆயுத பூஜை பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படும் நிலையில் சென்னை சென்ட்ரலில் உள்ள பாடிகாட் முனீஸ்வரன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலை முதலே கோவிலுக்கு படையெடுத்த பக்தர்கள் தங்களது புது வாகனங்களை கோவில் முன் நிறுத்தி பூஜையிட்டதுடன் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். பாதுகாப்பு நடவடிக்கையாக பக்தர்கள் முகக் கவசங்கள் அணிந்தும் பாதுகாப்பான இடைவெளி யோடும் பூஜையில் பங்கேற்றனர்.
ஆயுத பூஜை நாளை கொண்டாடப்படும் நிலையில் எதிர்பார்த்த வியாபாரம் இல்லை என மாதவரம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பழ சந்தை வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் இருந்து பழம் மற்றும் பூ கடைகள் தனியாக பிரித்து தற்காலிகமாக மாதவரம் பேருந்து நிலையத்தில் கடைகள் அமைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாளை ஆயுதபூஜை கொண்டாடப்பட உள்ள நிலையில் பழம் வியாபாரம் அதிகம் நடைபெறும் என […]
தமிழகத்தில் ஆயுத பூஜை நாளை கொண்டாடப்படும் நிலையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், கம்பைநல்லூர், கரூர் பகுதியில் இருந்து விவசாயிகள் தங்கள் நிலங்களில் சாகுபடி செய்த சாமந்திப் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இம்முறை பூக்களின் விலை கடுமையாக அதிகரித்து உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். கன்னியாகுமாரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் இன்று ஒரே நாளில் 60 டன் பூக்கள் விற்பனைக்கு வந்துள்ளன. பூக்களின் விலை ஏற்றம் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் […]