ஜெர்மனியை சேர்ந்த நிறுவனம் ஒன்று செயற்கை கரு மூலமாக குழந்தைகளை உருவாக்குவது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ ஒரு பக்கம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் மற்றொருபக்கம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது மக்கள் தொகை அதிகரிப்பு உலகின் பெரும் பிரச்சனையாக இருந்த காலம் மாறி தற்போது பல நாடுகளில் ஒன்றிற்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக் கொள்ள மக்களை ஊக்குவிக்கும் நிலையில் இருக்கின்றனர். தென்கொரியா, ஜப்பான், பல்கொரியா போன்ற நாடுகளில் மக்கள் தொகை சரியத் தொடங்கியுள்ளது. […]
Tag: ஆராய்ச்சியாளர்கள்
பிரபல நடிகர் மற்றும் தற்காப்பு கலை ஜாம்பவனான புரூஸ் லீ 1973- ஆம் வருடம் 32 வது வயதில் பெருமூளை வீக்கம் ஏற்பட்டு உயிரிழந்தார். ஆனால் அப்போது வலி நிவாரணி மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டதால் மூளையில் வீக்கம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் நம்பியுள்ளனர். கிட்டத்தட்ட 50 வருடங்களுக்குப் பின் தற்போது புரூஸ்லீ மரணம் குறித்த ஆச்சரியப்படும் செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. கிளினிக்கல் கிட்னி ஜர்னலில் வெளியிடப்பட்ட ஆய்வில் கூறப்பட்டிருப்பதாவது, புரூஸ்லீயின் மரணத்திற்கு அதிக அளவு […]
பைத்தான் என்ற ராட்சச சிறு கோள் பூமியை நோக்கி மிக வேகமாக வந்து கொண்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த சிறு கோளின் சுற்றுப்பாதை சூரியனுக்கு அருகில் இருப்பதால் கிரேக்கப் புராணங்களில் வரும் சூரியக் கடவுளான ஹீலியோஸின் மகனின் பெயரான பைத்தான் என்ற பெயர் இதற்கு சூட்டப்பட்டுள்ளது. இந்த ராட்சச சிறுகோள் வருகின்ற 2028ஆம் ஆண்டில் பூமிக்கு மிக அருகில் வர உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தற்போது கண்டறிந்துள்ளனர். பூமிக்கு மிக அருகில் பைத்தான் ராட்சஸ சிறுகோள் கடந்து செல்ல […]
இஸ்ரேல் நாட்டை சேர்ந்த கடற்கரை தொல்பொருள் ஆய்வாளர்கள் சுமார் 1200 வருடங்களுக்கு முந்தைய கப்பலின் பாகங்களை கண்டுபிடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எகிப்து, துருக்கி, வட ஆப்பிரிக்கா, சைப்ரஸ் போன்ற மொத்த மத்திய தரைக்கடல் பகுதிகளில் ஒரு வணிக கப்பலானது கி.பி ஏழாம் நூற்றாண்டில் வணிகம் செய்திருக்கிறது. அப்போது அந்த வணிக கப்பல் விபத்தில் சிக்கி கடலில் மூழ்கி போனது. இந்நிலையில் இஸ்ரேல் நாட்டின் கடற்கரையில் இந்த வணிகப்பலை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து இருக்கிறார்கள். அந்த வணிக கப்பலின் […]
கடலில் விழுந்த விண்கல்லை தேடும் பணியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். சூரிய குடும்பத்திற்கு அருகே இருந்து வந்த விண்கல் ஒன்று சூரியனின் ஈர்ப்பு விசைக்குள் மாட்டாமல் பூமியை வந்தடைந்துள்ளது. இந்த விண்கல் பப்புவா நியூக்கினியா பகுதியில் உள்ள கடலில் விழுந்திருக்கும் என கூறப்படுகிறது. இதன் காரணமாக விஞ்ஞானிகள் ஆழ்கடலுக்குள் இறங்கி விண்கல் பற்றி ஆராய்ச்சி செய்வதற்கு முடிவு செய்துள்ளனர். கடந்த 2017-ம் ஆண்டு ஆவ்மூவாமூவா விண்கல் மற்றும் கடந்த 2018-ஆம் ஆண்டு போரிசோவ் விண்கல் என 2 விண்கற்கள் […]
குரங்கு அம்மை பெயருக்கு பதிலாக புதிய பெயர் வைக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். உலகம் முழுவதும் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இதுவரை 39 நாடுகளில் இந்த நோய் பரவியுள்ளது. உலகளவில் 72 உயிரிழப்புகள் உட்பட 1100 க்கும் மேற்பட்ட குரங்கு அம்மை பாதிப்பு பதிவாகியுள்ளது. 29 உயிரியலாளர்கள் மற்றும் பிற ஆராய்ச்சியாளர்கள் கொண்ட குழு கடந்த வாரம் குரங்கு அம்மை நோய்க்கு புதிய பெயர் சூட்ட வேண்டும் என்று அழைப்பு […]
எலிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஸ்கொட்லாந்திலுள்ள கிளாஸ்கோவில் வசிக்கும் விஞ்ஞானி டோனோ கீன் தலைமையிலான குழு எலிகளுக்கு சிறப்பு பயிற்சி அளித்து வருகின்றனர். அதாவது பூகம்பம் மற்றும் நில நடுக்கத்தின் போது இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்காக எலிகளுக்கு பயிற்சி கொடுக்கப்படுகிறது. இதற்காக எலிகளுக்கு ஒரு ஆடை வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு மைக்ரோபோனை பொருத்தி சிறிய பேக் பேக்குடன் எலிகளுக்கு அணிகின்றனர். I train these clever creatures to save victims trapped in collapsed […]
ஜப்பான் நாட்டின் ஆய்வாளர்கள் கெட்டுப்போன உணவுகளிலிருந்து சிமெண்ட் தயாரித்து சாதனை படைத்திருக்கிறார்கள். கான்கிரீட் தயாரிக்க மேற்கொள்ளப்படும் செயல்முறைகள் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்படையக் கூடிய வாயுக்கள் வெளியேறுகின்றன. இதனால், சிமெண்டிற்கு பதிலாக சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் ஒன்றை கண்டுபிடிப்பதற்கு உலக நாடுகள் ஆய்வுகளை நடத்தி வருகிறது. இதில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர்கள் வெற்றியை நெருங்கி விட்டனர். அதாவது வீடுகளில் மீதமாகும் உணவுகள் மூலம் சிமெண்டை உருவாக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள். வீண் செய்யப்படும் உணவுகளில் மூன்று […]
நிலவில் கிடைத்த மண்ணிலிருந்து செடிகளை வளரச்செய்து வரலாற்றிலேயே முதல் தடவையாக நாசா விஞ்ஞானிகள் புதிய சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்கள். அப்பல்லோ விண்கலமானது சந்திரனிலிருந்து பெறப்பட்ட மண் மாதிரிகளை பூமிக்கு அனுப்பியிருந்தது. அதனை வைத்து செடிகளை வளர்ப்பது குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டனர். அதன்படி செடி ஒவ்வொன்றுக்கும் ஒரு கிராம் அளவு கொண்ட நிலவின் மண்ணை ஆராய்ச்சியாளர்கள் ஒதுக்கினர். அதனோடு, செடிகளின் இலைகளையும் நீரையும் சேர்த்திருக்கிறார்கள். அதனைத்தொடர்ந்து சுத்தமான அறைக்குள் ஒரு கண்ணாடிப் பெட்டியில் அதனை வைத்திருக்கிறார்கள். அந்த மண்ணில் […]
6 கோடியே 60 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாக கூறப்படும் கடல்வாழ் உயிரினத்தின் எச்சங்கள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து நாட்டில் பாங்காங் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள வணிக வளாகத்திற்கு அருகில் நடைபாதையில் இருக்கும் பொறிக்கப்பட்டிருந்த எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் ஏறத்தாழ 70 க்கும் மேற்பட்ட நத்தை வடிவ எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை 6 கோடியே 60 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அம்மோனைட் என்ற கடல்வாழ் உயிரினத்தில் எச்சம் என்றும் டைனோசர்கள் வாழ்ந்த […]
பென்குயின் இனம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டு இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தென் ஆப்பிரிக்கா நாட்டில் பென்குயின் இனம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டு வருகின்றது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதனை அடுத்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இங்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பென் குயின்கள் இருந்த நிலையில் இப்பொழுது 10 ஆயிரம் ஜோடிகள் மட்டுமே உள்ளன. இதனை தொடர்ந்து இங்குள்ள மீனவர்கள் அதிக அளவில் மத்தி மற்றும் நெத்திலி மீன்களை பிடிப்பதால் பென் குயின்களுக்கு […]
சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் இந்தியா-ஜப்பான் ஆய்வகம், ரிகா இன்ஸ்ட்டியூட் இடையே முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் சென்னை பல்கலைக்கழக பதிவாளர் மதிவாணன், ஜப்பான் கியோ பல்கலைக்கழகத்தின் இந்தியா-ஜப்பான் ஆய்வகத்தின் இயக்குனர் ரஜிப் ஷா, சென்னையில் உள்ள ஜப்பான் நாட்டுக்கான தூதர் டகா மசயுகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சென்னை உள்ளிட்ட நகரங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட கூடும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் இந்தியா ஜப்பான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது . […]
வான்வெளியில் ஏலியன்கள் எனப்படும் வேற்று கிரகவாசிகள் யாரும் இல்லை என ஆஸ்திரேலியா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கலிபோர்னியாவில் உள்ள SETI அமைப்பின் ஆய்வாளர்கள், மேற்கு ஆஸ்திரேலிய பாலைவனத்தில் உள்ள முர்ச்சிசன் வைட்பீல்ட் அரே என்ற உலகின் மிக உணர் திறன் வாய்ந்த ரேடியோ தொலைநோக்கி மூலம் வான்வெளியை ஆராய்ச்சி செய்தனர்.அதன் பின்னர் 144 கோள்களையும்,ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களையும் ஆராய்ச்சி செய்தனர். சுமார் 7 மணி நேரம் நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில் நட்சத்திரங்கள் மற்றும் ஏனைய கோள்களில் இருந்து எந்த அதிர்வெண்ணும் […]
உலகில் அழிந்து போன நிலையில் அதிகம் தேடப்படும் 25 உயிரனங்களின் பட்டியலை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். டெக்சாசை தளமாகக் கொண்டுள்ள Re:Wild என்ற அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அதிகம் தேடப்படும் உயினங்களின் பட்டியலை தயார் செய்துள்ளனர். பிளாங்கோ பிளைன்ட் எனப்படும் இதில் கண்கள் அற்ற சாலமன் மீன்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வகை மீன்கள் கடந்த 1951 ம் ஆண்டிற்குப் பின்னர் மிகவும் அரிதாகவே தென்பட்டது எனவும் நீரில் வெகு ஆழத்தில் பிளைன்ட் சாலமன்கள் வாழ்வதால் அவற்றுக்கு கண்கள் இல்லை […]
சீனா போன்ற கொரோனா தொற்று இல்லாத இடங்களில் கட்டுப்பாடுகளை தளர்த்தினால் ஒரு ஆண்டில் இரண்டு மில்லியன் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்திருக்கிறார்கள். சீன ஆராய்ச்சியாளர்கள் கட்டுப்பாடுகளை தளர்த்துவது, ஒரு வருடத்தில் 2 மில்லியன் உயிரிழப்புகளை ஏற்பட வழிவகுக்கும் என்று கூறியிருக்கிறார்கள். மேலும், அவர்கள் தெரிவித்திருப்பதாவது, தொற்றை தடுக்கக்கூடிய சிறப்பான தடுப்பூசிகளை தயாரிப்பது வைரஸை கட்டுப்படுத்தக்கூடிய நடவடிக்கைகளில் மிகவும் முக்கியமானது என்று கூறியிருக்கிறார்கள். மேலும், தற்போதிருக்கும் தடுப்பூசிகளின் செயல்திறனை கணக்கிட, பிரிட்டன் மற்றும் சிலி போன்ற […]
பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள “டஹிட்டி” என்ற தீவு பகுதியில் ஆய்வாளர்கள் பிரம்மாண்டமான பவளப்பாறைகளை கண்டுபிடித்துள்ளனர். இந்த பவளப்பாறைகள் ‘ட்விலைட் ஸோன்’ என்ற கடல் பகுதியில் சுமார் 3 மீட்டர் நீளத்திற்கு வளர்ந்துள்ளது. மேலும் 70 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ள இந்த பவளப்பாறைகள் குறித்து ஆய்வாளர்கள் வித்தியாசமான தகவல் ஒன்றையும் கூறி இருக்கின்றனர். அதாவது இன்னும் 25 ஆண்டுகளில் அந்த பவளப்பாறைகள் முழுமையாக உருவாகலாம் என்று ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த பவளப்பாறைகள் கடலுக்கு அடியில் ஆழமான பகுதியில் […]
இங்கிலாந்தில் சுமார் 180 மில்லியன் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த கடல் டிராகனின் புதைபடிமங்கள் கண்டறியப்பட்டிருக்கிறது. இங்கிலாந்தில் இருக்கும் நார்த் லிசென்ஸ்டர்ஷுரே என்னும் பகுதியில் இருக்கும் ரூத்லேண்ட் என்ற இடத்தில், உள்ள ஒரு தீவின் ஏரியில் கடந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் ஜோ டேவிஸ் என்னும் ஆய்வாளர் வித்தியாசமான வடிவில் இருக்கும் புதைபடிவம், மண்ணில் புதைந்திருப்பதை கண்டறிந்தார். அதன்பிறகு, அப்பகுதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வந்தனர். அப்போது வித்தியாசமான உயிரினம் ஒன்றின் புதைப்படிமம் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, ஜோ […]
சைப்ரஸ் ஆராய்ச்சியாளர்கள் “டெல்டாகிரான்” என்ற புதிய வகை வைரஸை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த நிலையில் உலக சுகாதார நிறுவனத்தை சேர்ந்த இந்திய வம்சாவளியான நிபுணர் டாக்டர் கிருத்திகா குப்பள்ளி “டெல்டாகிரான்” ஒரு உண்மையான வைரஸே கிடையாது என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். அதாவது ‘டெல்டாகிரான்’ உண்மையான வைரஸ் கிடையாது. ஆய்வக சோதனையின் போது உருவான கழிவுகளில் ஒன்றாக இருக்கலாம் என்று கோவிட் தொழில்நுட்ப குழுவின் உறுப்பினரான கிருத்திகா குப்பள்ளி கூறியுள்ளார். அதேபோல் ஆராய்ச்சியாளர்கள் புதிய வைரஸ்களுக்கு இவ்வாறு […]
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் கோபால்ட் எந்திரத்தின் மூலமாக கதிர்வீச்சு செலுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். இந்த சிகிச்சையில் புற்றுநோயால் உருவாகும் செல்களும் திசுக்களும் அழிந்து பாதிக்கப்பட்டவர் நோயிலிருந்து விடுபடலாம். கோபால்ட் எந்திரத்தின் மூலமாக சிகிச்சை அளிக்கும்போது அதற்கான பராமரிப்புச் செலவுகள் மிகவும் குறைவு. அதே நேரத்தில் அந்த எந்திரத்தின் ஆயுள்காலம் அதிகம் என்பதால் ஏராளமான அரசு மருத்துவமனைகளில் கோபால்ட் சிகிச்சையே பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் கேன்சர் செல்களை அழிக்க கீமொதெரபி மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை முறை இனி தேவைப்படாது என்று […]
கடலுக்கடியில் காணப்பட்ட அரியவகை மீன்களை ஆராய்ச்சியாளர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர். பாண்டம் என்று கூறப்படும் அரியவகை ஜெல்லி மீன்கள் (Jelly fish) 1899 ஆம் ஆண்டில் அதிகளவு அமெரிக்காவின் கடற்பகுதிகளில் காணப்பட்டுள்ளன. இவைகளின் கால் இழைகள் 33 அடி நீளம் உடையது. இது பார்ப்பதற்கு மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும். தற்பொழுது கலிபோர்னியாவில் உள்ள மாண்டரே வளைகுடாவில் சுமார் 3200 அடி ஆழத்தில் பாண்டம் ஜெல்லி மீன்கள் சுற்றி திரிந்துள்ளன. இவற்றை ரோபோக்களின் உதவியுடன் ஆராய்ச்சியாளர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர். இது […]
கொரோனா தொற்றைக் கண்டறிய புதிய வழிமுறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கொரோனா தொற்று அறிகுறியில்லாமல் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிவதற்காக புதிய தொழில்நுட்ப முறை ஓன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை கயோட்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது, நெருப்புக்கோழியின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட செல்களை முககவசத்தின் மீது தடவ வேண்டும். இதனை அடுத்து அதன் மீது புறஊதாக் கதிர்களை செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தும் பொழுது முககவசம் ஒளிருமானால் அவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை […]
உலகிலேயே முதல்முறையாக தண்ணீரில் நனைந்தாலும் பாதிக்காத மற்றும் வளையும் திறனுடைய பேட்டரி கனடா ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், இந்த பேட்டரியை உருவாக்கியுள்ளனர். மேலும், இதன் மூலம் உடலில் அணியக்கூடிய கருவிகள் சாத்தியமாகியிருக்கிறது என்றும், தெரியாமல் தண்ணீரில் நனைத்து விட்டால் கூட நீடித்து உழைக்க கூடியது என்றும் அவர்கள் கூறியுள்ளார்கள். மேலும், இந்த பேட்டரியை இரண்டாக மடிக்கவும் முடியும், இரண்டு மடங்காக இழுக்கவும் முடியும். ஏற்கனவே உடலில் அணியக்கூடிய பேட்டரிகள் பயன்பாட்டில் […]
காற்று மற்றும் நீரைப் பயன்படுத்தி விமான எரிபொருளை தயாரிக்கும் தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சுவிட்சர்லாந்தில் ETH Zurich என்ற ஆராய்ச்சி பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு ஆராய்ச்சி குழு கடந்த இரண்டு ஆண்டுகளாக விமான எரிபொருள் தயாரிக்கும் தொழில்நுட்பம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதாவது சூரிய ஒளியையும் காற்றையும் மட்டும் பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்த எரிபொருளானது குறைவான அளவிலேயே சுற்றுச்சூழலுக்கு தீங்கை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். மேலும் கருவி ஒன்றின் உதவியால் காற்றில் இருந்து […]
சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் காற்றின் மூலம் விமான எரிபொருளை தயாரிக்கக்கூடிய ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்கியிருப்பதாக கூறியிருக்கிறார்கள். சூரிய ஒளி மற்றும் காற்று ஆகியவற்றை மட்டும் உபயோகித்து இந்த எரிபொருள் உருவாக்கப்படுகிறது. எனவே இது குறைந்த அளவிலான காற்று மாசை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. ETH Zurich என்ற சுவிஸ் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தில் ஒரு அமைப்பினர் கடந்த இரண்டு வருடங்களாக அசாதாரணமான ஆராய்ச்சியை மேற்கொண்டு வந்தனர். ஒரு இயந்திரத்தின் மூலம் காற்றிலிருந்து, கார்பன் டை ஆக்சைடு மற்றும் நீரை […]
ஆஸ்திரேலியாவில், பல லட்சம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த பறக்கக்கூடிய உயிரினத்தின் கீழ் தாடையின் அரிதான புதைபடிவ துண்டுகள் கண்டறியப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக ஆய்வாளர்கள், வேட்டையாடக்கூடிய உடல் திறன் கொண்ட பறக்கக்கூடிய டிராகன் போல இந்த உயிரினம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதற்கு ‘தபுங்காகா ஷாவி’ என்று பெயரிட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவில், 11 கோடி வருடங்களுக்கு முன்பு, இந்த கண்டத்திலேயே மிகவும் பெரிதாக இந்த ட்ராகன் வானத்தில் ஆதிக்கம் செலுத்தியிருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இது 23 அடி நீளம் […]
சர்வதேச விண்வெளி மையத்தில் ஆய்வு மேற்கொண்டுவரும் விஞ்ஞானிகள் உண்பதற்காக பீட்சா அனுப்பி வைக்கப்பட்டது. அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து சிக்னஸ் சென்ற சரக்கு ராக்கெட் மூலம் பீட்சா கடந்த இரு தினங்களுக்கு முன்பு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த ராக்கெட் நேற்று காலை சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தது. அதில் ஆப்பிள், தக்காளி மற்றும் கிரிபடம் போன்றவைகளுடன் மூன்றே முக்கால் கிலோ எடை கொண்ட பீட்சாவை விண்வெளி மையத்தில் உள்ள ஏழு வீரர்களும் பகிர்ந்து கொண்டனர்.
ஆஸ்திரேலியாவில் பல வருடங்களுக்கு முன் கிடைத்த எலும்புகள், உலகிலேயே மிகவும் பெரிதான டைனோசர் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு கால்நடை பண்ணையில் சுமார் பதினேழு வருடங்களுக்கு முன்பு சில எலும்புகள் கண்டறியப்பட்டுள்ளது. அதனை விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டதில் கூப்பர் எனும் புதிய வகை டைனோசர் இனம் என்று தெரியவந்துள்ளது. மேலும் பூமியில் உள்ள டைனோசர் இனங்களில் இது பெரிய இனம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளார்கள். இந்த டைனோசர் கிரீத்தேசியக் காலக்கட்டத்தில் வாழ்ந்திருக்கிறது. மேலும் இது Sauropod […]
ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் முகக்கவசங்கள் கொரோனா காலகட்டத்தில் எவ்வாறு நம்மை காக்கிறது என்று விளக்கியுள்ளார்கள். ஜெர்மனியிலுள்ள Mainz என்ற நகரில் இருக்கும் Max Planck என்ற வேதியல் ஆய்வகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸிலிருந்து, முகக்கவசம் எவ்வாறு மக்களை காக்கிறது என்பது தொடர்பில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் ஆய்வின் முடிவுகளை தெளிவாக கண்டறிந்துள்ளார்கள். அதாவது மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் தும்மல் மற்றும் இருமல் மூலமாக வெளியேறும் சிறு துளி எச்சிலினால் கொரோனா பரவும் என்பது அனைவரும் அறிந்தது. அந்த நிலையில் […]
தெற்கு இத்தாலியில் 2000 ஆண்டுகள் பழமையான தேரை தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தெற்கு இத்தாலியில் உள்ள pompeii என்ற நகருக்கு அருகில் உள்ள வில்லாவில் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டனர். அப்போது அவர்கள் 2000 ஆண்டுகள் பழமையான நான்கு சக்கர தேர் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த தேரானது வெண்கலம் மற்றும் தகரத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் அதே இடத்தில் ஆராய்ச்சியாளர்கள் மூன்று பழங்காலத்து குதிரை வண்டிகளையும் கண்டுபிடித்துள்ளனர். இந்தத் தேரை செய்ய ரோமானிய காலத்து ஓக் மரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. […]
கொரோனா தொற்றுக்கு இதுவரை அதிகாரபூர்வமாக மருந்து எதுவும் கண்டுபிடிக்காத நிலையில் ஆதி மனிதனின் டி .என்.ஏவில் வைரஸை கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளதென ஆராய்ச்சியாளர்கள் கண்டுபுடித்துள்ளனர். உலகில் மனித இனம் தோன்றுவதற்கு முன்பு மனிதனின் சகோதர இனமான நியாண்டெர்தல் மரபுக்கும் ,கொரோனா தொற்றிற்கும் இடையில் இருக்கும் ரகசியம் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது நியாண்டர்தலின் டி.என்.ஏவில் கொரோனா தொற்றை 22% வரை குறைக்கும் ஆற்றல் இருப்பதாக தெரியவந்துள்ளது. சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பா மற்றும் ஆசியா உள்ளிட்ட பகுதிகளில் இம்மாதிரியான […]
கொரோனா வைரஸை விட 75 மடங்கு அதிக அளவு மூளையை பாதிக்கக்கூடிய பெரும் தொற்று ஒன்று வரக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்த தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு மில்லியன் கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும் என்று விஞ்ஞானிகள் அச்சத்தில் உள்ளனர். இதுவரை வந்த தொற்றுநோய்களிலேயே இப்போது வரப்போகும் இந்த தொற்றுநோய் தான் மிகவும் கொடியது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அந்த தொற்று நோய் என்னவென்றால் ,பழங்களை உண்ணும் வௌவால்கள் மூலம் பரவும் நிபா வைரஸ் தற்போது மீண்டும் உருமாற்றம் […]
எகிப்து நாட்டில் அலெக்சாண்ட்ரியா பகுதியில்உள்ள டபோசிரிஸ் மேக்னா கோவிலில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் 2000 வருட பழமையான தங்க நாக்கை கொண்ட மம்மி கண்டுபிடிக்கப்பட்டது. எகிப்து மற்றும் டொமினிகன் குடியரசு நாட்டை சேர்ந்த ஆய்வாளர்கள் எகிப்தில் பத்து வருடங்களாக ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். இதில் 16 புதிய இடங்களை கண்டறிந்து உள்ளன. இந்த புதிய இடங்களில் பல மம்மிகள் புதைக்கப்பட்டுள்ளது, மார்பில் அணிகலன் மற்றும் தலையில் வைத்த கிரீடத்துடன் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. இருப்பினும் அவை சரியான […]
குளிர் பிரதேசமான அண்டார்டிகாவில் முதன்முறையாக 36 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதி கட்ட சோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் […]
உலகில் பெண்களை விட ஆண்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிக அளவு இருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் அனைவரும் ஒரு நொடி கூட வீணடிக்காமல் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதி […]
விண்வெளியில் வேற்று கிரகவாசிகள் இருப்பது உண்மை என்பது ஆய்வில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. உலகில் உள்ள விஞ்ஞானிகள் அனைவரும் புது புது ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தி வருகின்றன. அதில் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பல்வேறு ஆராய்ச்சிகள் வெற்றி கண்டுள்ளன. விஞ்ஞானிகள் நாளுக்கு நாள் புதிய ஆராய்ச்சி பற்றிய அறிவிப்புகளை வெளியிடுகின்றன. அதன்படி வேற்றுக்கிரகவாசிகள் இருப்பது உண்மை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. விண்வெளி பற்றிய விஷயங்களை விலக்கிக் கொள்ளும் அளவுக்கு மனிதர்கள் பரிணாம வளர்ச்சி அடைவதற்காக அவை காத்திருக்கின்றன. அதன் பிறகு தங்கள் […]
உலகில் 397 ஆண்டுகளுக்கு பிறகு டிசம்பர் 21ஆம் தேதி வானில் நடக்கும் அதிசயத்தை மக்கள் அனைவரும் பாருங்கள். இந்த வருடம் டிசம்பர் 21ஆம் தேதி மாலை வானில் வியாழன் மற்றும் சனி கிரகங்கள் அருகருகே வரும் நிகழ்வு நடைபெறுகிறது. இது 397 வருடங்களுக்குப் பிறகு நடைபெற உள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதுபற்றி எம்பி பிர்லா கோளரங்கத்தில் இயக்குனர் தேபிபிரசாத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கிரகங்களான வியாழன் மற்றும் சனி கடைசியாக 1623 ஆம் […]
உலகில் கொரோனா வைரஸ் முடிவடைவதற்குள் மீண்டும் புதிய வைரஸ் உருவாகி இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதிலும் உள்ள அரசுகள், விஞ்ஞானிகள் மற்றும் சுகாதார வல்லுனர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலைகளுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அமெரிக்காவின் சிடிசியின் ஆராய்ச்சியாளர்கள் புதிய வைரஸ் ஒன்றை கண்டறிந்துள்ளனர். பொலிவியாவில் கண்டறியப்பட்ட சப்பரே வைரஸ் மனிதர்களுக்கு பரவக்கூடியது என்று CDC ஆய்வு குழு கண்டறிந்துள்ளது. இந்த வைரஸ் பரவ தொடங்கினால் எபோலா, கொரோனா விட கொடியதாக […]
உலகில் கொரோனா வைரஸ் முடிவடைவதற்குள் மீண்டும் புதிய வைரஸ் உருவாகி இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதிலும் உள்ள அரசுகள், விஞ்ஞானிகள் மற்றும் சுகாதார வல்லுனர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலைகளுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அமெரிக்காவின் சிடிசியின் ஆராய்ச்சியாளர்கள் புதிய வைரஸ் ஒன்றை கண்டறிந்துள்ளனர். பொலிவியாவின் தலைநகரான லா பாசில் இரண்டு நோயாளிகளிடமிருந்து 3 சுகாதாரப் பணியாளர்கள் இந்த நோயை கண்டறிந்த போது, 2019 ஆம் ஆண்டில் ‘சபரே வைரஸ்’ மிகப்பெரிய […]
சீனாவில் உள்ள த்ரீ கோர்ஜஸ் அணை கட்டப்பட்டதால் பூமி சுற்றும் வேகம் 0.06 வினாடிகள் குறைந்ததாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர் உலக அளவில் மிகப்பெரிய அணை த்ரீ கோர்ஜஸ். சீனாவில் உள்ள இந்த அணை உடையும் அபாயத்தில் இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. 17 வருடங்களாக 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களை வைத்து கட்டி முடிக்கப்பட்ட இந்த அணையால் நகரங்கள் பல மூழ்கும் அபாயத்தில் உள்ளது. த்ரீ கோர்ஜஸ் அணையில் வழக்கத்திற்கு மாறாக நீர்மட்டத்தின் அளவு பலமடங்கு அதிகரித்துள்ளது. […]
கொரோனா தொற்றுநோய் நெருக்கடியால் 70 லட்சம் குழந்தைகள் தங்களின் வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாமல் பாதிப்படைவார்கள் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றுநோய் உணவு வினியோகத்தை பாதிப் அதன் விளைவாக 70 லட்சம் குழந்தைகள் தங்களின் வயதுக்கு ஏற்ற உயரம் அல்லாமல் பாதிக்கப்படுவார்கள் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. 118 ஏழை மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் கொரோனா ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை நிபுணர்கள் குழு விசாரித்தது. அதில், ஐந்து வயதிற்கு உள்ளான குழந்தைகளுக்கிடையே […]