Categories
அரசியல்

“எப்போதும் எங்க கொள்கை இதுதான்”…. அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் அளித்த பேட்டி….!!!!

அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஆர்.வைத்திலிங்கம், அதிமுகவை பொருத்தவரை எப்போதும் இருமொழிக் கொள்கைதான் என்று கூறியுள்ளார். அதாவது செய்தியாளர்களை சந்தித்த ஆர்.வைத்திலிங்கம், “தமிழ், இணைப்பு மொழி ஆங்கிலம் என்பது ஜெயலலிதா காலத்திலும், எம்ஜிஆர் காலத்திலும், அண்ணா காலத்திலும் பின்பற்றப்படுகிறது. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கருத்தும் தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கை தான். எங்களது தலைமை புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய்ந்து, அதன் கருத்துக்களை சொல்லும்” என்று ஆர்.வைத்திலிங்கம் கூறியுள்ளார்.

Categories

Tech |