சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 1-வது கேட் பாண்டுரங்கன் தெருவில் அம்மமுத்து மகன் கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆறுமுகநேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஆறுமுகநேரி காமராஜபுரம் பகுதியில் கணேஷ் கஞ்சா விற்பனை செய்ததை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் நாராயணன் கண்டுபிடித்துள்ளார். இதனையடுத்து கணேஷை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்து அவரிடம் இருந்த 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தார்.
Tag: ஆறுமுகநேரி
காவலர் ஒருவர் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வீடுகளில் திருடிய சம்பவத்தால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பெருமாள்புரம் பகுதியில் கடந்த மாதம் தங்கதுரை என்பவரின் வீட்டில் பட்டப்பகலில் 15 சவரன் நகையை யாரோ கொள்ளையடித்து சென்று விட்டனர். இதையடுத்து அங்கிருந்த கைரேகை பதிவுகளை கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்ததில், அந்த கைரேகை திருச்செந்தூர் பகுதியை சேர்ந்த காவலர் கற்குவேலின் கைரேகையோடு ஒத்துப் போனதால் காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் விசாரணையை தொடங்கிய காவல்துறையினருக்கு பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் […]
ஆறுமுகநேரி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடக்க இருப்பதால் பல்வேறு ஊர்களில் மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆறுமுகநேரி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (28ஆம் தேதி) செவ்வாய்க்கிழமை நடக்கிறது.. எனவே புன்னக்காயல், ஆத்தூர், பேயன்விளை, வீரபாண்டிய பட்டினம், காயல்பட்டணம், தளவாய்புரம், திருச்செந்தூர், சங்கிவிளை, கானம், வள்ளிவிளை, குரும்பூர், சுகந்தலை, நல்லூர், அம்மன்புரம், பூச்சிக்காடு, கானம் கஸ்பா, காயாமொழி, நாலுமாவடி, தென்திருப்பேரை, வீரமாணிக்கம், குட்டித் தோட்டம், குரங்கணி, தேமான்குளம், […]
திருச்செந்தூர், உடன்குடி பகுதியில் நாளை (30ஆம் தேதி) மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்செந்தூர் கோட்ட மின் வினியோக செயற்பொறியாளர் பொன் கருப்பசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருச்செந்தூர் : ஆறுமுகநேரி துணை மின் நிலையத்தில் 33 kw பிரேக்கர் மாற்றும் பணிகள், மின்கம்பங்கள் நிறுவும் பணிகள் நாளை நடக்கிறது. எனவே புன்னக்காயல், ஆத்தூர், பேயன்விளை, வீரபாண்டியபட்டினம், காயல்பட்டணம், தளவாய்புரம், திருச்செந்தூர், சங்கிவிளை, கானம், வள்ளிவிளை, குரும்பூர், சுகந்தலை, நல்லூர், அம்மன்புரம், பூச்சிக்காடு, காணம் கஸ்பா, காயாமொழி, நாலுமாவடி, தென்திருப்பேரை, […]