Categories
அரசியல் மாநில செய்திகள்

முக்கியமானத பேசணும்…! தேர்தல் வேற நெருங்குது… எல்லாரும் சென்னைக்கு வாங்க… திமுக அதிரடி அழைப்பு …!!

திமுகவின் மக்களவை மாநிலங்களவை உறுப்பினர் கூட்டம் வரும் 26-ஆம் தேதி பகல் 12 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயம் அறிவாலயத்தில் நடைபெறும் என திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பாக ஆலோசிக்கபட இருப்பதால், இது முக்கிய கூட்டமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக மத்திய அரசின் மூன்று வேளாண் மசோதாவிற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதைத்தொடர்ந்து ஜிஎஸ்டி வருவாய் விஷயங்கள், சமீபத்தில் கிடைக்க வேண்டிய நிதி, நிவர் புயல் நிவாரணங்களில் தமிழகத்துக்கு தேவையான இழப்பீட்டை […]

Categories
தேசிய செய்திகள்

குறைந்த வட்டியில் பாதுகாப்பான கடன்… எப்படி பெறுவது?…!!!

கடன் செயலிகள் மூலம் கடன் பெறாமல் பாதுகாப்பாக எப்படி கடன் பெறுவது என பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. கடன் செயலிகள் மூலம் சிலர் கடன் பெறுவது வழக்கம். ஆனால் கடன் செயலிகள் மூலம் மோசடிகள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பாக எப்படி கடன் பெறலாம் என்பது குறித்து வங்கி அதிகாரிகள் ஆலோசனை தருகின்றனர். அதன்படி, வீட்டில் அல்லது வங்கி லாக்கரில் உள்ள நகைகளை வைத்து கடன் பெற பரிசீலிக்கலாம். அதற்கான வட்டி விகிதம் மிகவும் குறைவு. உறவினர் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு… வெளியான புதிய தகவல்…!!!

தமிழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறக்க ஆய்வு செய்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பொங்கலுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மாஸ் காட்டும் அழகிரி… புதிய கட்சி உதயமாகுமா?… பரபரப்பு தகவல்…!!!

மதுரையில் தனது ஆதரவாளர்களுடன் மு.க.அழகிரி ஆலோசனை கூட்டம் நடத்துகிற நிலையில் தனிக்கட்சி ஆரம்பிக்கப்படுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிர பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக திமுக […]

Categories
மாநில செய்திகள்

இது ரொம்ப மோசமாம்…! அசால்ட்டா இருக்காதீங்க…. தமிழக அரசு முக்கிய ஆலோசனை …!!

உலகை அச்சுறுத்தும் உருமாறிய கொரோனா தொற்று முன்னெச்சரிக்‍கை நடவடிக்‍கை குறித்து தமிழக அரசு முக்‍கிய ஆலோசனை நடத்தியது. தளர்வுகளுடன் கூடிய கொரோனா கட்டுப்பாடு டிசம்பர் 31ம் தேதி முடிவடைவதையொட்டி, தளர்வுகள் நீட்டிப்பது குறித்து தமிழக அரசு முக்‍கிய ஆலோசனை நடத்தி வருகிறது. முதல்கட்டமாக காலையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடைபெற்றது.கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விதிக்‍கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பிரிட்டனில் உருவெடுத்துள்ள புதிய கொரோனாதொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகம் முழுவதும் வழங்கப்படும்… அரசு புதிய அறிவிப்பு..!!

புரவி புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு ஒரு 28ஆம் தேதி தமிழகம் வருகிறது. கடந்த சில நாட்களில் நிவர் மற்றும் புரெவி என அடுத்தடுத்த புயல் தமிழகத்தை தாக்கியுள்ளது. இதனால் புயலின் பாதிப்பு இல்லை என்றாலும் கொட்டிய மழை நீர் காரணமாக பல மாவட்டங்களில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி உள்ளது.நிவர் புயல் பாதிப்புகளை மத்திய குழு ஏற்கனவே ஆய்வு செய்ய விட்ட நிலையில் மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்து விட்டது, […]

Categories
மாநில செய்திகள்

புதிய கொரோனா வைரஸ்… முதல்வர் ஆலோசனை… ஜனவரி மாதம் ஊரடங்கு?…!!!

பிரிட்டனில் உருமாறிய வீரியமிக்க கொரோனா தமிழகத்தில் பரவாமல் இருக்க மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் பிரிட்டனில் புதிதாக கொரோனா வைரஸ் உருமாறி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதனால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர். பிரிட்டனில் உருமாறிய வீரியமிக்க கொரோனா தமிழகத்திற்குள் பரவாமல் தடுப்பது குறித்து […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

Breaking: ஆசிரியர்களுடன் இன்று ஆலோசனை… மத்திய அமைச்சர் அதிரடி…!!!

நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களுடன் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பொதுத் தேர்வு பற்றி இன்று ஆலோசனை நடத்துகிறார். இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும், அனைத்து மாநிலங்களிலும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. சில மாநிலங்களில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் பள்ளிகள் திறப்பது […]

Categories
உலக செய்திகள்

புதிய வகை கொரோனா… உஷாராகும் இந்தியா… தீவிர ஆலோசனை…!!!

இங்கிலாந்தில் பரவத் தொடங்கியுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றும் தன்மை 70 சதவீதம் அதிகமாக இருப்பதால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன.சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வியூகம் ரெடியா இருக்கு…! ஒரு அமைச்சரும் ஜெயிக்க கூடாது… ஸ்டாலின் எடுத்த முடிவு ..!!

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து நேற்று திமுக நிர்வாகிகள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் பேசிய ஸ்டாலின், திமுகவை யாரும் வீழ்த்த முடியாது, திமுகவினரால் தான் வீழ்த்த முடியும் என்று அண்ணா அவர்கள் அடிக்கடி கூறினார்கள். நாம் அனைவரும் அண்ணாவின் தம்பிகள். கலைஞரின்  உடன் பிறப்புகள், கருப்பு சிவப்பின்  காவலர்கள், உதயசூரியனின் ஒளி விளக்குகள். இதுதான் நமக்குள் இருக்கும் ஒற்றுமை. இதுதான் நம்ம இந்த அரங்கத்திற்குள் அமர வைத்துள்ளது. உங்களில் சிலர் எம்எல்ஏவாக மாறலாம். […]

Categories
உலக செய்திகள்

இது பண்ண போறிங்களா….? குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீங்க…. மருத்துவ கவுன்சில் அறிவுரை….!!

பிரான்சில் பள்ளி குழந்தைகளுக்கு கொரோனா வைரஸால் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. பிரான்சில் அரசிற்கு ஆலோசனைகள் வழங்கும் மருத்துவ கவுன்சில் பள்ளி மாணவர்களுக்கு அறிவுறித்தியதாவது:- கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பு அவரவர் குடும்பங்களை தாமாகவே தனிமைப்படுத்த விரும்புவர்கள் அவர்களது குழந்தைகளை வியாழன் வெள்ளி கிழமைகளில் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டியதில்லை வீட்டிலேயே தங்க வைக்கலாம் என்று கூறியுள்ளது. மேலும் கொரோனா வைரசால் எளிதில் பாதிப்படையக் கூடிய வயதானவர்களை வீட்டிற்கு அழைத்து கிறிஸ்துமஸ் கொண்டாட விரும்பும்  குடும்பங்கள் ஒரு வாரத்திற்கு முன்பு தங்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சென்னையில்… ரஜினி மீண்டும் ஆலோசனை… காரணம் என்ன?…!!!

சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் மாவட்ட நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை நடத்தி வருகின்றார். நடிகர் ரஜினிகாந்த் வருகின்ற ஜனவரி மாதம் கட்சி தொடங்குவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். அதனையடுத்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு அர்ஜுனா மூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதனைப்போலவே கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியன் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது கட்சி தொடங்குவதற்கான அனைத்து பணிகளையும் ரஜினி தீவிரமாக செய்து வருகின்றார். இந்நிலையில் ராகவேந்திரா மண்டபத்தில் தமிழருவி மணியன் மற்றும் அர்ஜூனா மூர்த்தி ஆகியோருடன் நேற்று நடிகர் […]

Categories
மாநில செய்திகள்

சட்டப் படிப்பிற்கான அரியர் தேர்வு… உயர்நீதிமன்றத்தில் சட்டப் பல்கலைக்கழகம் பதில்..!!

சட்டப் படிப்பிற்கான அரியர் தேர்வு கால அட்டவணை குறித்து சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில், சட்டப் பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக அரியர் தேர்வுகள் ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணன் தேர்வு எழுதாமல் ஆல்பாஸ் செய்யக்கூடாது என்றும், ஆன்லைனில், ஆஃப்லைனில் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று திட்டவட்டமாக கூறினார். இந்நிலையில் சட்டப் படிப்பிற்கான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆட்சியில் இல்லை என்றாலும்… ராகுல் காந்தி அதிரடி…!!!

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இல்லை என்றாலும் வலிமைமிக்க இயக்கமாக கட்சி இருக்கிறது என ராகுல் காந்தி கூறியுள்ளார். தமிழகத்தில் அடுத்த வருடம் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள்தலைவர் ராகுல் காந்தி தனது கட்சி நிர்வாகிகளுடன் காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதில், தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் இல்லை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கட்சி உதயம் எப்போது?… ரஜினி காலை 10 மணிக்கு ஆலோசனை…!!!

நடிகர் ரஜினிகாந்த் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் சென்னையில் இன்று காலை ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் அடுத்த வருடம் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் இன்று காலை 10 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில், கட்சி உதயம், சட்டமன்ற தேர்தலில் தனது […]

Categories
மாநில செய்திகள்

மழை, அடுத்தக்கட்ட தளர்வுகள்… முதல்வர் இன்று ஆலோசனை…!!!

தமிழகத்தில் ஊரடங்கு அடுத்த கட்ட தளர்வுகள் பற்றி மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாக தரவுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் புதிய தொடர்புகள் குறித்து இன்று காலை 10 மணிக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். கொரோனா உயிர் இழப்புகள் குறைந்த நிலையில், மழை காரணமாக கொரோனா பரவல் அதிகரிக்க […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு… மக்களுக்கு முக்கிய தகவல்…!!!

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு டிசம்பர் 30-ஆம் தேதி நீட்டிப்பது பற்றி முதல்-அமைச்சர் நாளை ஆலோசனை நடத்துகிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. தற்போது தரவுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு முடிய இன்னும் 3 நாட்கள் உள்ள, முதல்வர் பழனிசாமி நாளை அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார். அதில் ஊரடங்கு டிசம்பர் மாதம் 31ம் […]

Categories
மாநில செய்திகள்

120 கிமீ வேகம்… நெருங்குகிறது ஆபத்து… பரபரப்புக்கு நடுவே முதல்வர் ஆலோசனை…!!!

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தமிழக முதல்வர் ஆலோசனை நடத்தி வருகின்றார். வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தாழ்வு மண்டலமாக உருவாகி புயலாக மாறியுள்ளது. நிவர் புயல் கரையை கடக்கும்போது நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் 120 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது மக்கள் வெளியே வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது. மேலும் மூன்று மணி நேரமாக […]

Categories
தேசிய செய்திகள்

மாநில முதல் முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து சில மாநில முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுகுறித்துமாநிலங்களுக்கு பல்வேறு உதவிகளும் வழங்கி வருகிறது.கொரோனாவைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி அடிக்கடி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டங்களில் மாநிலங்களின் கொரோனா நிலவரம் குறித்து கேட்டறியும் அவர், அவற்றில் இருந்து மக்களை […]

Categories
மாநில செய்திகள்

பிரதமருடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை…!!

தமிழகத்திற்கு கொரோனா தடுப்பு மருந்துகள் வழங்குவது குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். நாட்டில் பல்வேறு பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். இதே போல்,  நோய் தொற்று குறைந்த மாநிலங்களில் தடுப்பு மருந்துகள் வழங்குவது குறித்தும் ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழகத்தில் கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு தலைமைச் செயலகம்… அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை…!!!

தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி மற்றும் ஜெயக்குமார் ஆகியோருடன் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் உறவை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட ஆணையத்தின் பரிந்துரை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

சத்குருவுடன் தமிழக சிறைத் துறை டி.ஜி.பி  கலந்துரையாடல் …!!

சிறைவாசிகளின் நல்வாழ்வு மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது தொடர்பாக தமிழக சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை தலைமை இயக்குநர் திரு.சுனில் குமார் சிங், சத்குரு அவர்களுடன் இன்று (நவம்பர் 9) ஆன்லைன் வாயிலாக கலந்துரையாடினார். ஒரு மணி நேரம் நடந்த இந்த கலந்துரையாடல் நிகழ்வு தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் டி.ஜி.பி மட்டுமின்றி சிறைத்துறை உயர் அதிகாரிகள், சிறை காவலர்கள் மற்றும் சிறைவாசிகளின் பல்வேறு கேள்விகளுக்கு சத்குரு பதில் அளித்தார். குறிப்பாக, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுமா?… வெளியாகும் முக்கிய அறிவிப்பு… முதலமைச்சர் ஆலோசனை…!!!

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பது பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில், நவம்பர் மாதம் 30ஆம் தேதி வரையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறிவித்துள்ளார். மேலும் நவம்பர் மாதம் 16ஆம் தேதி முதல் 9,10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கும் என்றும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரிகளை திறக்க வேண்டாம் ? முதல்வர் திடீர் ஆலோசனை …!!

தமிழகத்தில் பள்ளி, கல்லுரிகளை திறக்க எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் தமிழக முதல்வர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றார். கொரோனா பெருந்தொற்று காரணமாக நீண்ட நாட்களாக மூடப்பட்டிருந்த பள்ளி கல்லூரிகள் 16ஆம் தேதி முதல் செயல்படலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. பள்ளிகளை பொறுத்தவரை 9, 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்பு வந்தது. கொரோனாவின் இரண்டாவது அலை வரும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை […]

Categories
மாநில செய்திகள்

தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு…? 2 காரணங்கள் பார்க்கணும்…. முதல்வர் ஆலோசனை…!!

பள்ளி கல்லூரிகள் திறக்கும் தேதி தள்ளி போவதற்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது தமிழகம் முழுவதும் கொரோனா பரவ தொடங்கியதையடுத்து மார்ச் மாதம் முதல் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டது. இந்நிலையில் நவம்பர் 16-ம் தேதி பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி கொடுத்தது. 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்து கல்வித்துறை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குருபூஜை பாதுகாப்பு பற்றி காவல் அதிகாரிகளுடன் ஐஜி ஆலோசனை…!!

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 58ஆவது குருபூஜையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காவல் துறை அதிகாரிகளுடன் மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா ஆலோசனை நடத்தினார். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 58 ஆவது குருபூஜை விழா வரும் 30-ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளன. குருபூஜையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய […]

Categories
அரசியல்

பள்ளி, கல்லூரி திறப்பு… புறநகர் ரயில், தியேட்டர் இயக்கம்…. இன்று முக்கிய முடிவு …!!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கு தளர்வு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாவட்ட ஆட்சியர்கள் மருத்துவக் குழுவுடன் ஆலோசனை நடத்துகின்றார். எட்டாவது ஊரடங்கு முடிந்து ஒன்பதாவது ஊரடங்கு தளர்வு குறித்த ஒரு ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற உள்ளது. இன்று இரண்டு கூட்டங்கள் நடைபெறுகிறது. காலை நடைபெறக் கூடிய கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்  விஜயபாஸ்கர், வருவாய், பேரிடர் மீட்பு […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் இன்று அறிவிப்பு – அரசின் மிக முக்கிய முடிவு ….!!

தமிழக முதல்வர் இன்று மருத்துவக்குழுவினரோடும், மாவட்ட ஆட்சியரோடும் ஆலோசனை நடத்துகின்றார். கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. பின்னர் கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. படிப்படியாக தளர்வுகளை மத்திய – மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. தமிழகத்திலும் கூட மாவட்ட ஆட்சியர், மருத்துவ குழு நிபுணர்கள், அதிகாரிகள் என கலந்தாலோசித்து தளர்வுகளை தமிழக முதல்வர் அறிவித்து வந்தார். இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் நாளை மிக முக்கிய முடிவு – தமிழக அரசு அறிவிப்பு

தமிழக முதல்வர் நாளை மருத்துவக்குழுவினரோடும், மாவட்ட ஆட்சியரோடும் ஆலோசனை நடத்துகின்றார். கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. பின்னர் கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. படிப்படியாக தளர்வுகளை மத்திய – மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. தமிழகத்திலும் கூட மாவட்ட ஆட்சியர், மருத்துவ குழு நிபுணர்கள், அதிகாரிகள் என கலந்தாலோசித்து தளர்வுகளை தமிழக முதல்வர் அறிவித்து வந்தார். இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன் தேசிய செய்திகள்

வம்பிழுத்து வசமாக மாட்டிக்கொண்ட சீனா…. வச்சு செய்ய போகும் இந்தியா – அமெரிக்கா …!!

டெல்லியில் அமெரிக்கா – இந்தியா அதிகாரிகளின் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. டெல்லியில் அமெரிக்கா – இந்தியா பெற்றுவார்த்தை நடைபெறுகின்றது. இதில் இரண்டு நாட்டு வெளியுறவுத்துறை மற்றும் ராணுவ துறை அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். இப்போது நடக்க இருக்கும் பேச்சுவார்த்தையின் முக்கியத்துவத்தை இந்த சூழ்நிலையை வைத்து புரிந்து கொள்ளலாம். ஒரு பக்கம் அமெரிக்க தேர்தல் நடைபெற இன்னும் ஒரு வாரம் இருக்கிறது. அந்த சமயத்திலேயே தேர்தலுக்குப் பிறகு பேச்சுவார்த்தையை பார்த்துக்கொள்ளலாம் என்று இல்லாமல் உடனடியாக பேச்சுவார்த்தை இப்போதே நடத்துகிறார்கள். அதிலிருந்து […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

சீனாவுக்கு முடிவுரை எழுதும் நேரமிது…. அமெரிக்கா – இந்தியா எடுக்க போகும் முடிவு …!!

டெல்லியில் இந்தியா – அமெரிக்கா அதிகாரிகள் பேச்சவரத்தை நடத்துவது சர்வதேச நாடுகளின் கவனத்தை பெற்றுள்ளது. டெல்லியில் அமெரிக்கா – இந்தியா பெற்றுவார்த்தை நடைபெறுகின்றது. இதில் இரண்டு நாட்டு வெளியுறவுத்துறை மற்றும் ராணுவ துறை அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.இப்போது நடக்க இருக்கும் பேச்சுவார்த்தையின் முக்கியத்துவத்தை இந்த சூழ்நிலையை வைத்து புரிந்துகொள்ளலாம். ஒரு பக்கம் அமெரிக்க தேர்தல் நடைபெற இன்னும் ஒரு வாரம் இருக்கிறது. அந்த சமயத்திலேயே தேர்தலுக்குப் பிறகு பேச்சுவார்த்தையை பார்த்துக்கொள்ளலாம் என்று இல்லாமல் உடனடியாக பேச்சுவார்த்தை இப்போதே […]

Categories
அரசியல்

பள்ளி, தியேட்டர் திறப்பு – தமிழகத்தில் அடுத்தகட்ட தளர்வு – முக்கிய தகவல் …!!

கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. பின்னர் கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. படிப்படியாக தளர்வுகளை மத்திய – மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. தமிழகத்திலும் கூட மாவட்ட ஆட்சியர், மருத்துவ குழு நிபுணர்கள், அதிகாரிகள் என கலந்தாலோசித்து தளர்வுகளை தமிழக முதல்வர் அறிவித்து வந்தார். இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த கட்ட ஊரடங்கு தளர்வு குறித்து அக்டோபர் 28ஆம் தேதி மாவட்ட […]

Categories
மாநில செய்திகள்

புதிய தளர்வுகள் என்னென்ன? அக்டோபர் 28 இல் முதலமைச்சர் ஆலோசனை…!!

மருத்துவ நிபுணர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் வரும் 28ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நோய்த் தொற்றைத் தடுக்கும் வகையில் தமிழகத்தில் வரும் 31-ஆம் தேதி வரை பல்வேறு தளர்வுகள் உடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வரும் 28ஆம் தேதி மருத்துவ நிபுணர் குழுவினர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்துகிறார். […]

Categories
மாநில செய்திகள்

“தீபாவளி கொண்டாட்டம்” தியேட்டர்கள் திறப்பு….? எதிர்பார்ப்பில் மக்கள்….!!

பண்டிகை காலம் என்பதால் தியேட்டர்கள் திறப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது நாடு முழுவதும் கொரோனா தோற்று பரவ தொடங்கியதை தொடர்ந்து மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு மக்களின் நலனை கருத்தில் கொண்டு பொது முடகத்தில் தளர்வுவர்கள் அளிக்கப்பட்டது. அக்டோபர் மாதம் 31ஆம் தேதியுடன் தளவர்களுடனான பொது முடக்கம் முடிவடைகிறது. இந்நிலையில் 28 ஆம் தேதி தமிழக முதல்வர் மேலும் சில தளர்வுகள் அளிப்பது தொடர்பாக மருத்துவக் குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ளார். நவம்பர் மாதம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

47 தொகுதி நின்னோம்… 6 மட்டும் தான் ஜெயிச்சி இருக்கோம்….தனி அறையில் ஆலோசிக்கும் ஸ்டாலின் …!!

வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு திமுக ஆயத்தமாகி வரும் நிலையில் மண்டல வாரியாக ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. வர இருக்கின்ற 2021ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலுக்கு திமுக ஆயத்தமாகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக மண்டல வாரியாக ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. கொங்கு மண்டலத்தை பொருத்தவரை திமுக மிகவும் பலவீனமாக உள்ளது . குறிப்பாக இந்த மண்டலத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் ஆகிய 6 மாவட்டங்கள் உள்ளன. இந்த ஆறு மாவட்டங்களில் உள்ள 47 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தொடங்கும்… வடகிழக்கு பருவமழை… 12ஆம் தேதி முதலமைச்சர் ஆலோசனை கூட்டம்…

தமிழகத்தில் தொடங்கவுள்ள வடக்கு கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி வருகிற 12-ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை கூட்டம் நடத்துகிறார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அடுத்த வாரம் தொடங்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகின்ற 12ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார். அக்டோபர் மாதம் மூன்றாம் வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது. ஒவ்வொரு மாவட்டங்களிலும் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் பள்ளிகளை திறக்கபடுமா?… முதல்-மந்திரி… இன்று ஆலோசனை கூட்டம்…!!!

கர்நாடக மாநிலத்தில் பள்ளிகளை எப்போது திறக்கலாம் என்று மந்திரிகள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்-மந்திரி எடியூரப்பா இன்று பெங்களூரில் ஆலோசனை நடத்த உள்ளார். கர்நாடக மாநிலத்தில் தற்போது கொரோனா பாதிப்பு வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. அதனால் தினந்தோறும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் வருகின்ற 15ஆம் தேதிக்கு பின்னர் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறப்பது பற்றி மாநில அரசுகள் முடிவு செய்துகொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து பள்ளி திறப்பதற்கு கர்நாடக அரசு மிக தீவிரமாக […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா விழுப்புணர்வு குறித்து மத்திய அரசு ஆலோசனை …!!

பொதுமக்களிடையே கொரோனா மீதான விழிப்புணர்வை அதிகரிப்பதற்கான புதிய பிரச்சார நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு இன்று ஆலோசனை நடத்த உள்ளது. கொரோனா ஊரடங்கில் ஏற்கனவே பல்வேறு தளர்வுகள் நடைமுறைக்கு வந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக எதிர்வரும் பண்டிகை காலங்களில் முன்னிட்டு மேலும் பல்வேறு தளர்வுகளை அறிவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு முன் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொது மக்களிடையே மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் புதிய பிரச்சார வழிமுறைகளை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

ராஜபக்சேவுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை ….!!

இலங்கை பிரதமர் ராஜபக்சேவுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். இலங்கை பிரதமராக மீண்டும் ராஜபக்சே பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக பிரதமர் திரு.நரேந்திர மோடி அவருடன் ஆலோசனை நடத்த உள்ளார். காணொளி வாயிலாக நடைபெறும் இந்த ஆலோசனையின் போது பிராந்திய ஒத்துழைப்பு இருதரப்பு விவகாரங்கள் உட்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசிக்க கூடும் என தெரிகிறது. இது குறித்து டுவிட்டரில் பதிவிட்ட பிரதமர் […]

Categories
உலக செய்திகள்

மாஸ்கோ கூட்டமைப்பு மாநாடு… ராஜ்நாத் சிங் ஆலோசனை…!!!

மாஸ்கோவில் நடந்த ஷாங்காய் கூட்டமைப்பு மாநாட்டில் ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் அந்நாட்டுப் பாதுகாப்புத் துறை மந்திரியை சந்தித்து பேசினார். ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்புத் துறை மந்திரிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் பங்கேற்க பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோ சென்றடைந்தார். இந்த நிலையில் மாஸ்கோவில் நடைபெற்ற ஷாங்காய் கூட்டமைப்பு மாநாட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி அதிகாரிகளுடன்… நிர்மலா சீதாராமன் ஆலோசனை…!!

மக்களுக்கு வங்கிகளால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து மத்திய நிதியமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார்.  கொரோனாவால் ஏற்பட்டுள்ள பிரச்சனையால் மக்கள் பல்வேறு இழப்புகளை சந்தித்து வருகின்றனர். அதில் ஒன்றாக பொருளாதார இழப்பு உள்ளது அதாவது வங்கிகளில் மக்கள் பெற்றுள்ள கடன்களை திருப்பி செலுத்த முடியாமல் சிரமத்தில் உள்ளனர். இதனை தீர்க்கும் விதமாக  மத்திய நிதி அமைச்சர் வங்கி அதிகாரிகளுடன் இணைந்து ஆலோசனை நடத்த உள்ளார். இதற்கு முன்னால் கடன் வழங்குதல் போன்ற நடவடிக்கைகளில் இருந்து மீண்டுவர ரிசர்வ் வங்கி […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஒரே பட்டியல் – மத்திய அரசு புதிய திட்டம் ….!!

நாடு முழுவதும் ஒரே விதமான வாக்காளர் பட்டியலை தயாரிக்க மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு மத்தியில் ஆட்சி அமைத்ததை அடுத்து…. அவ்வப்போது புதுப்புது திட்டங்களையும், சட்டங்களையும் அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது நாடு முழுவதும் புதிய திட்டம் அமல்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் நடைபெறும் அனைத்து விதமான தேர்தல்களிலும் பயன்படும் வகையில் ஒரே விதமான வாக்காளர் பட்டியலை உருவாக்க […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் பொதுமுடக்கம் நீட்டிப்பு ? முதல்வர் ஆலோசனை …!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ குழுவினரோடு ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா கட்டுக்குள் வராத நிலையில் மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் போன்றவற்றை கருத்தில் கொண்டு ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் படிப்படியாக மத்திய அரசால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதையே மாநில அரசும் பின்பற்றுகிறது. தற்போதைய சூழ்நிலையில் நாடு முழுவதும் மூன்றாம் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் மீண்டும்… போடு ரகிட.. ரகிட..!!

கோயம்பேடு மார்க்கெட் அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளதாக சிஎம்டிஏ தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் தமிழகத்தில் பெரும்பாலும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் வேகமாக பரவி வந்தது. இந்த பரவல் சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து வந்ததாக ஆய்வாளர்கள் கூறியதால் இந்த சந்தை தற்காலிகமாக திருமழிசைக்கு மாற்றப்பட்டு செயல்பட்டு வருகின்றது. ஆனாலும் வியாபாரிகள் மற்றும் வணிகர்கள் தொடர்ந்து கோயம்பேடு சந்தையை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்ததால், தற்போது அதுகுறித்த தகவலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. வெளியிட்டுள்ள அந்த […]

Categories
மாநில செய்திகள்

“இ – பாஸ் சேவை ரத்து”… இரு நாட்களில் வெளியாகிறது முடிவு… முதலமைச்சர் பழனிசாமி…!!

நாடு முழுவதும் இ – பாஸ் சேவை ரத்து செய்யப்படுவது குறித்து வருகிற 29-ஆம் தேதி முதலமைச்சர் தெரிவிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா தாக்கத்தின் காரணமாக நாடு முழுவதும் 6 ஆம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஏற்கனவே இந்த ஊரடங்கில் அரசு ஏராளமான தளர்வுகள் வழங்கியுள்ளது. இருந்தாலும் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு காரணமாக மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். இதனைப் போக்க நாடு முழுவதும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓ.பி.எஸ். வீட்டில் ஆலோசிக்கப்பட்டது என்ன ?

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் மூத்த அமைச்சர்களான வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், சட்டத்துறை அமைச்சர், வனத்துறை அமைச்சர் உள்ளிட்ட 14 அமைச்சர்களோடு பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் என மொத்தம் 16 பேர் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். கட்சிகளில் நடக்கக்கூடிய முரண்கள் குறித்தெல்லாம் பேசியிருக்கிறார்கள், கலந்தாலோசித்து இருக்கிறார்கள். ஒன்றரை மணி நேரம் நடந்த இந்த ஆலோசனையின் போது… இது முக்கியமான ஒரு தருணமாக இருக்கிறது, இந்த தேர்தல் என்பது நம்முடைய கட்சியை […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

ஓபிஎஸ் வீட்டில் 2ஆவது ஆலோசனை கூட்டம் நிறைவு ….!!

இரண்டாம் கட்டமாக முதல்வர் பழனிசாமி உடன் ஆலோசனை கூட்டம் தற்போது நடந்து வருகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் மூத்த அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அமைச்சர்கள் தற்போது இரண்டாம் கட்டமாக ஆலோசனை நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே முதல் கட்டமாக ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக  ஆலோசனை கூட்டம் நடத்தி அதற்கு பிறகு மீண்டும் இரண்டாம் கட்டமாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டம் தற்போது முடிந்த பிறகு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : முதல்வர் வேட்பாளர் யார்?…. மூத்த அமைச்சர்களுடன் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆலோசனை..!!

மூத்த அமைச்சர்களுடன் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அவரது இல்லத்தில் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. திமுக மற்றும் அதிமுக இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்? என்ற சர்ச்சை எழுந்துள்ளது.. கடந்த சில வாரங்களாகவே அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றது.. இது தமிழகத்தில் பேசு பொருளாகி வருகிறது. முதல்வர் வேட்பாளர் யார்? என்ற விவாதம் […]

Categories
தேசிய செய்திகள்

நிலைமை சரியில்லை…. உடனே ஆலோசனை நடத்துங்க…. பிரதமருக்கு அசோக் கெலாட் கடிதம் …!!

மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த கோரிக்கை வைத்து அசோக் கெலாட் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்   கொரோனா தொற்றை தடுப்பதற்காக மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதைய சூழலில் பிரதமர் மோடி அவ்வப்போது மாநில முதல்வர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வந்தார். தற்போது ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அளித்து வரும் நிலையில் பிரதமர் மோடி எந்த ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை என்று உள்துறை அமைச்சகத்தில் இருந்து அறிவிப்புகள் வந்தவண்ணம் உள்ளன. குறிப்பிட்ட […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் சில இடங்களில் முழுஊரடங்கு ?…. முக்கிய தகவல் …!!

தமிழகத்தில் நாளையோடு ஊரடங்கு நிறைவடைய இருக்கும் நிலையில் நேற்று தமிழக முதல் எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் மாவட்ட அளவில் கொரோனா பாதிப்பு எந்த அளவு இருக்கிறது ? தடுப்பு பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன ? இன்னும் என்னென்ன பணிகள் எல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது ? என்பது குறித்து கேட்டறிந்தார். மேலும் மாவட்ட ஆட்சியர்களுடன் கலந்துரையாடினார். இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கை சில தளர்வுகளுடன் நீடிப்பது பற்றி மருத்துவ குழுவினருடன் இன்று முதல்வர் […]

Categories

Tech |