Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: ஆளுநர் ஆர்.என் ரவியுடன் சபாநாயகர் அப்பாவு திடீர் சந்திப்பு ..!!

அடுத்த ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜனவரி 9ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்ட, சூழலில் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவுனில் ஆளுநரை சந்தித்து முறையாக அழைப்பு விடுக்க சென்றுள்ளார். ஜனவரி 9ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற இருக்கின்றது. பேரவை கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் ? என்பதெல்லாம் அன்றைய தினம் நடைபெறக்கூடிய அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்து இருக்கின்றார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பயங்கர புத்திசாலின்னு சொன்னாங்க…! ஒண்ணுமே புரியாம இருக்காரு… ஆளுநரை ரவியை ரவுண்டு கட்டிய கனிமொழி…!!

மறைந்த திமுகவின் மூத்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, இன்றைக்கு தமிழ்நாட்டில ஒரு கவர்னர் இருக்காரு.நாம் அவரிடம் என்ன கேட்கிறோம் ?  ஆன்லைன் ரம்மி வேண்டாம். நமக்காக கேட்கல,  திமுக அதை ஏதோ ஒரு காரணத்திற்காக தடை செய்ய நினைக்கிறது என்பதற்காக கேட்கவில்லை. நம்முடைய அமைச்சருக்கு அந்த ஆன்லைன் ரம்மி நடத்துறவங்களை புடிக்கலை என்பதற்காக கேட்கல.  எத்தனை குடும்பங்கள் அந்த ஆன்லைன் ரம்மியால் பாதிக்கப்படுகிறது ? […]

Categories
மாநில செய்திகள்

திராவிட மாடலுக்கு பதிலாக “வேறு நல்ல தமிழ் பெயரை வையுங்கள்”…. தமிழிசை சௌந்தர்ராஜன் பேச்சு….!!!!!!

தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தின் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்  இன்று நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் புதுச்சேரி மாநிலத்தில் புயலினால் எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் செய்யப்பட்டது. இதன் காரணமாக பாதிப்புகள் தடுக்கப்பட்டது. ஏனென்றால் உயிரிழப்பு இல்லாமல் எடுக்கப்படும் நடவடிக்கை தான் சிறப்பான பணி. மேலும் மக்களை காக்க வேண்டியது அரசின் கடமை.  நமது நாடு உலகத்திற்கு ஆன்மீகம் உள்ளிட்ட பல […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடுத்த ஊழல் பட்டியல் ரெடி…. 2,3 அமைச்சர்கள் இருக்காங்க…. அதிரடியில் இறங்கிய பாஜக அண்ணாமலை….!!!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை வேறொரு பெயரில் வழங்கப்படுகிறது. அதன் பிறகு மழை மற்றும் வெள்ளம் போன்ற பாதிப்புகளில் பாஜக எப்போதும் அரசியல் செய்யாது. தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி ஆன்லைன் சூதாட்ட உரிமையாளர்களை சந்தித்து பேசியது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. எங்களைப் பொறுத்தவரை ஆன்லைன் சூதாட்டத்தை தமிழகத்தில் முறைப்படுத்துவதோடு அதை முற்றிலும் தடை செய்ய வேண்டும். சமீபத்தில் நாங்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஓரு உயிர் போனாலும் ஆளுநர்தான் பொறுப்பு…. அன்புமணி ராமதாஸ் கண்டனம்….!!!!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் பலரும் பணத்தை இழந்து தற்கொலை நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனால் ஆன்லைன் ரம்மிக்கு அரசு அவசர சட்டம் அண்மையில் கொண்டு வந்தது. இருந்தாலும் அதற்கு ஆளுநர் ஆட்சியும் காட்டி வருவதாக பல தரப்பினரும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் ஒரு உயிர் போனாலும் அதற்கு ஆளுநரே முழு பொறுப்பு என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ஆன்லைன் ரம்மி தடை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அரசாங்கத்தை விட நாடு மிகப்பெரியது- ஆர்.என்.ரவி..!!!

அரசாங்கத்தை விட நாடு மிகப்பெரியது என ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். அரசாங்கத்தை விட நாடு மிகப்பெரியது எனக் கூறிய ஆளூநர் ரவி தற்சார்பு இந்தியா என்ற இலக்கை நோக்கி வேகமாக செல்ல வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளார். தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் 11 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா சென்னை தரமணியில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய ஆளுநர் ரவி இந்தியா தற்போது முன்பு போல் இல்லை எனவும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா முதன்மையான இடத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஊழல் பட்டியல்”…. அண்ணாமலையை தொடர்ந்து ஆளுநரிடம் ரிப்போர்ட் கொடுக்கும் இபிஎஸ்….. அதிர்ச்சியில் திமுக….!!!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்று பால் விலை, மின் கட்டணம் மற்றும் சொத்துவரி போன்றவற்றின் விலையை உயர்த்தியதன் காரணமாக பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருவதோடு விலை உயர்வை மீண்டும் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. அதன் பிறகு திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் குறித்து அடிக்கடி அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறி வருகிறார்கள். இதற்கு திமுக அமைச்சர்களும் பதிலடி கொடுக்கிறார்கள். அதன் பிறகு எதிர்க்கட்சித் […]

Categories
மாநில செய்திகள்

திடீர் பயணமாக டெல்லி செல்லும் தமிழக கவர்னர்… எதற்காக தெரியுமா…? வெளியான தகவல்…!!!!!

சென்னையில் இருந்து விமான மூலமாக இன்று காலை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி திடீர் பயணமாக டெல்லிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் டெல்லிக்கு செல்லும் கவர்னர் ஆர்.என். ரவி இரண்டு நாட்கள் அங்கு இருப்பதாகவும், அதன் பின் மீண்டும் சென்னைக்கு திரும்புவார் என தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து டெல்லிக்கு செல்லும் கவர்னர் ஆர்.என்.ரவி உள்துறை அதிகாரிகள் மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா போன்றோரை சந்தித்து பேச உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

வெளியே போக சொன்ன ஆளுநர்.. மன்னிப்பு கேட்க சொல்லி பேரணி… கேரளா ஆளுநருக்கு வலுக்கும் எதிர்ப்பு…!!

ஊடகங்களுக்கு தடை விதித்த கேரளா ஆளுநர் மன்னிப்பு கேட்க வேண்டும் என அந்த மாநில எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். கேரள மாநில அரசுக்கும் ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் விவகாரத்தில் ஏற்கனவே  மோதல் வெடித்தது.  இதற்கிடையே கேரள மாநில ஆளுநர் கொச்சியில் நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ஒரு சில குறிப்பிட்ட ஊடகங்களுக்கு பேட்டியளிக்க மாட்டேன் என தெரிவித்து,  அவர்களை உடனடியாக வெளியேற கூறியுள்ளார். ஆளுநரின் இந்த செயலுக்கு கடுமையான எதிர்ப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆளுநருன்னு யாருமே கிடையாது… எல்லாருமே குடைச்சல் கொடுப்பவர்கள் தான்… போட்டு தாக்கிய கம்யூனிஸ்ட்கள் ..!!

திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் முத்தரசன்,கடந்த முறை அண்ணா திமுக தான் ஆட்சியில் இருந்தது. எடப்பாடி பழனிச்சாமி தான் முதலமைச்சராகவும் இருந்தார். அந்த ஆளுநர் இப்போது பஞ்சாப் மாநிலத்தில் ஆளுநராக இருக்கிறார். இங்க இருந்து குடைச்சல் கொடுத்துட்டு, இப்ப நேர அங்க குடைச்சல்  கொடுக்க போயிட்டார். யாருமே ஆளுநர் கிடையாது,  எல்லாருமே குடைச்சல் கொடுப்பவர்கள் தான். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMK மினிஸ்டர்ஸ் சூப்பர்… வசமாக சிக்கிய AIADMK… எடப்பாடியை குறிவைத்த ஆளுநர் ..!!

திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் முத்தரசன், நம்முடைய தளபதி அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்று,  பொருத்தமான துறைகளுக்கு பொருத்தமான அமைச்சர்களையும் தேர்வு செய்து, அவரவர்களுக்கு பொறுப்பளித்து, எல்லா அமைச்சர்களுமே சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சன் டிவில 7:30 மணிக்கு ஒரு செய்தி சொல்லுவாங்க. அதை நான் தவறாமல் பார்ப்பேன். காலையில் 7:30 மணி, சாயந்திரம் 6:30 மணி […]

Categories
தேசிய செய்திகள்

“கேரள ஆளுநர் தனது அதிகாரத்தின் வரம்பு மீறி செயல்படுகிறார்”… பினராயி விஜயன் குற்றச்சாட்டு…!!!!

கேரள மாநிலம் பாலக்காட்டில் முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது ஆளுநர் தனது அதிகாரத்தில் வரம்பு மீறி செயல்படுகிறார். இது ஜனநாயகத்திற்கு எதிரானது மட்டுமல்லாமல் துணைவேந்தர்கள் அதிகாரத்தில் நடத்தப்படும் ஆக்கிரமிப்பாகும். மேலும் சங்பரிவார் கொள்கைகளின் அடிப்படையில் ஆளுநர் ஆரிப் முகமது கான் செயல்பட்டு வருகிறார். கேரள பல்கலைக்கழகங்களின் கல்வித் தரத்திற்கு எதிராக போர் தொடுக்கப்படுகிறது. பல்கலைக்கழகங்களின் மீதான இந்த தாக்குதல் எந்த நோக்கத்திற்காக இதன் பின் உள்ள அரசியல் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மனுதர்ம சட்டம்… பூணூல் சட்டம்…. மனு ஸ்ருமிதி சட்டம்… என காலில் போட்டு மிதிக்காங்க …!!

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், ஒன்றிய பாசிச சங்பரிவார கும்பலால் ஆர்எஸ்எஸ் கும்பல்களால் தமிழகத்தின் ஆளுநராக பொறுப்பேற்று இருக்கின்ற தமிழக ஆளுநர் அவர்கள், பொறுப்பேற்ற காலத்திலிருந்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும், சட்டத்திற்கு மதிப்பளிக்காமலும், தொடர்ந்து தான்தோன்றித்தனமாக தன்னுடைய அதிகாரத்தை செலுத்தி வருகிறார். தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசு, தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்கள்,  இவர்களால் தமிழகத்தில் நிறைவேற்றப்படுகின்றன எந்த ஒரு சட்டத்தையும் அனுமதித்து, கையொப்பமிட்டு, […]

Categories
தேசிய செய்திகள்

உடனே வேலைக்கு திரும்புங்க…. இல்லனா எஸ்மா சட்டம் பாயும்…. மின் ஊழியர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு…. !!!!

புதுச்சேரியில் மின் துறையை தனியார் மையமாக்குவதற்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இதற்கான அரசு மின்துறை பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அதேசமயம் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். அதன்படி இன்று ஐந்தாவது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருவதால் இந்த தொடர் வேலை நிறுத்தத்தால் மின் சார்ந்த பழுது மற்றும் பராமரிப்பு பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நகர் மற்றும் கிராமப்புற பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறாததால் பல […]

Categories
மாநில செய்திகள்

Online ரம்மி தடைச்சட்டம்…. ஆளுநர் எடுக்கும் முடிவு என்ன?…. எதிர்பார்ப்பில் அரசு….!!!!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு மூலம் பணத்தினை இழந்து தற்கொலை செய்துக் கொள்வது தொடர்கதையாகி விட்டது. இதன் காரணமாக இந்த விளையாட்டை தடைசெய்ய வேண்டும் என தமிழக அரசிடம் பல தரப்பிலிருந்து கோரிக்கைகள் வந்தது. இதையடுத்து ஆன்லைன் ரம்மியின் தாக்கம் பற்றி ஆய்வு மேற்கொள்ள ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழுவை தமிழக அரசு அமைத்தது. அந்த குழுவில் ஐஐடி தொழில்நுட்ப வல்லுநரான டாக்டர் சங்கரராமன், சினேகா அமைப்பின் நிறுவனரும் உளவியலாளருமான டாக்டர் லட்சுமி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: ஆளுநர் ஆர்.என் ரவி திடீர் டெல்லி பயணம் – அமித் ஷாவை சந்திக்கிறார் …!!

இன்று மாலை தமிழக ஆளுநர் டெல்லி செல்கிறார். முப்பதாம் தேதி மீண்டும் தமிழகம் திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் நிலவி வரக்கூடிய பல்வேறு சூழல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பந்தமாக பாஜக தலைவர் அண்ணாமலை உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் புகார் அளித்திருக்கிறார். அதை தொடர்ந்து தமிழக ஆளுநர் டெல்லி செல்லக்கூடிய இந்த விஷயம் என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக […]

Categories
கால் பந்து விளையாட்டு

கொஞ்சம் தள்ளி போப்பா…. “மறைக்குது”….. கேப்டனை தள்ளிய ஆளுநர்…. விமர்சிக்கும் நெட்டிசன்கள்..!!

மணிப்பூர் மற்றும் மேற்கு வங்க ஆளுநரான இல. கணேசன் விருது வழங்கும் விழாவின் போது இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரியை ‘தள்ளிய’ வீடியோ வைரலாகி வருகிறது. 20 அணிகள் இடையேயான 131-வது தூரந்த் (டுராண்ட்) கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி போட்டியில் பெங்களூரு எப்.சி மற்றும் மும்பை சிட்டி எப்.சி அணிகள் மோதியது. கொல்கத்தாவின் சால்ட் லேக் ஸ்டேடியத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த  கால்பந்து போட்டியின் இறுதி போட்டியில் மும்பை சிட்டி எஃப்சியை 2-1 […]

Categories
அரசியல்

ரஜினி ஆளுநரா?…. பாஜக போடு சூப்பர் பிளான்…. வெளியான மிக முக்கிய தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினி. இவருக்கு உலக நாடு முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவரின் ஸ்டைல் மூலம் ரசிகர்கள் அனைவரையும் ஈர்த்தார். அதனைத் தொடர்ந்து நாளுக்கு நாள் இவருக்கு புகழும் ரசிகர்களும் அதிகரித்ததால் நடிகர் ரஜினிக்கு அரசியல் ஆசை ஏற்பட்டது. இதனை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக ‘நான் எப்போது வருவேன் எப்படி வருவேன் தெரியாது ஆனால் வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்’ என்று அவ்வப்போது கூறிக்கொண்டு இருக்கிறார். ஆனால் ரஜினி அரசியலுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆளுநர் ஆகிறார் நடிகர் ரஜினிகாந்த்?….. வெளியான புதிய தகவல்….!!!!

நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். அதன் பிறகு தமிழகம் திரும்பிய உடனே அவர் ஆளுநர் ரவியை சந்தித்து பேசியது பலவிதமான யூகங்களை அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்தியது. ஆளுநருடன் அரசியல் பேசினேன் என்று ரஜினி கூறியதும் விவாதமானது. 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு தமிழகத்தில் பாஜகவை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதில் பாஜக மேலிட தலைவர் மிக மிக தீவிரமாக இருந்தார். அந்த இலக்கின் ஒரு பகுதி ஆளுநர் ரவி […]

Categories
மாநில செய்திகள்

சுதந்திர தின விழா உரை… “புதிய கல்விக் கொள்கையால் மனநிறைவு ஏற்படுகிறது”…. ஆளுநர் பெருமிதம்…!!!!!

75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தேசிய கொடி ஏற்றப்படுகின்றது. இந்த சூழலில் சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ரவி தேசிய கொடியை ஏற்றி உரையாற்றியுள்ளார். அப்போது நாட்டை பாதுகாக்கும் முப்படைகள், துணை ராணுவ படைகள், காவல்துறை, நுண்ணறிவு அமைப்புகள் போன்றவற்றின் பணிகளை பாராட்டியுள்ளார். மேலும் கொரானா பெருந்தொற்று காலத்தில் மருத்துவர்களின்  பணியில் பாராட்டி பேசினார். ஒலிம்பிக் போட்டிகள் பாரா ஒலிம்பிக் போட்டிகள், காமன்வெல்த் விளையாட்டுகள் போட்டிகளில் கலந்துகொண்டு […]

Categories
மாநில செய்திகள்

ராஜ்பவனில் தேசியக் கொடி….. ஏற்றி மரியாதை செலுத்தினார் ஆளுநர் ஆர்.என்.ரவி….!!!!

சென்னை ராஜ்பவனில் தேசியக் கொடி ஏற்றி வைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார். அரசியல் தலைவர்கள் தங்களது கட்சி அலுவலகங்களில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். மாவட்டங்களில் ஆட்சியர்கள் தேசியக்கொடியை ஏற்றிவைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினியை பார்த்துDMK பயப்படுவது ஏன்.. சீறிய அண்ணாமலை…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, எந்த அளவிற்கு தமிழகத்தில் நம்முடைய அரசியல்வாதிகள் மாறி இருக்கிறார்கள் என்று பாருங்கள். வீடு தோறும் தேசிய கொடியை ஏற்றுங்கள் என்ற பாரத பிரதமர் சொல்லுகின்றார், அதை தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசியல் தலைவர் ஒருவர் அது கார்ப்பரேட் கொள்கையை திணிப்பதற்கான முயற்சி என்று, சொல்கின்றார். அந்த அளவிற்கு அவர்களுடைய அரசியல் கீழ் தரமாக, மிகவும் பிற்போக்கு தனமாக, எதற்காக அரசியல் செய்கின்றோம் என்பதை மறந்து விட்டு, ஜாதிகளை கைதியில் பிடித்துக் கொண்டு,  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஏன் இப்படி சத்தமா பேசிட்டு இருக்கீங்க .? நீதிபதி ஏன் அதெல்லாம் சொல்லுறாரு….! சீமான் பரபரப்பு கேள்வி….!!

செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ரஜினி ஆளுநரை சந்தித்து அரசியல் பேச வேண்டிய அவசியம் என்ன? அத பேசறது சரியா? என கேட்குறீங்க. அரசியல் யார் வேணாலும் பேசலாம். இந்த மண்ணுல. அரசியலுக்கே வரமாட்டேன் சொன்னவரு ஆளுநரை சந்தித்து அரசியல் பேச வேண்டிய அவசியம் என்ன? அரசியலுக்கு வரணும்னு  அவர் வந்து ஒரு கட்சியை ஆரம்பித்து இயக்கத்தை நடத்தி தேர்தலில் நிற்கிறது மட்டும் தான் அரசியல் இல்ல.தன் உரிமைக்கு பேசுகிற ஒவ்வொருத்தனும் அரசியல்வாதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முற்றும் அரசு…. ஆளுநருக்கும், அரசுக்கும் இடையே மோதல்….. காரணம் என்ன….????

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டம் படிப்பு விழாவை புறக்கணிக்கிறோம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது: “மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை நாங்கள் புறக்கணிக்கிறோம். பட்டமளிப்பு விழாவில் மாணவர்களிடம் அரசியலைப் புகுத்துவதற்கு கவர்னர் முயற்சி செய்கிறார். பட்டமளிப்பு விழா தொடர்பாக அரசிடம் எதுவும் ஆலோசனை செய்யப்படவில்லை. மதுரை காமராஜர் பல்கலை பட்டமளிப்பு விழா தொடர்பாக என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. அரசை ஆலோசனை செய்யாமல் காமராஜர் பல்கலை பட்டமளிப்பு விழா அறிவிப்பு […]

Categories
மாநில செய்திகள்

“இரண்டையும் ஒப்பிட்டு பேசக்கூடாது”…. ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு….!!!!!!!!

எந்தவொரு ஆளுநருக்கும் இல்லாத விதமாக  தற்போதைய தமிழக ஆளுநர் ரவிக்கு மக்களிடையே எதிர்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அவர் சென்ற இடங்களில் கறுப்புக் கொடி காட்டி மக்கள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது அவர் தனியார் பள்ளி நிகழ்ச்சியில் உரையாற்றிக் கொண்டிருக்கிறார். அப்போது பேசிய அவர் சனாதனவும், மதமும் வேறுவேறு சனாதன தர்மத்தை மதத்தோடு ஒப்பிட்டு பேசக்கூடாது என தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் அமைந்திருக்கும்  ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ரவி உரையாற்றிக் கொண்டிருக்கிறார். […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய அளவில் ட்ரண்ட் ஆன #HBDTamilisai…. வைரல்….!!

தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜனுக்கு இன்று 61வது பிறந்தநாள். இதனையடுத்து அவர் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் டுவிட்டரில் இந்திய அளவில் #HBDTamilsaisoundararajan என்ற ஹேஷ் டேக் இரண்டாம் இடத்தில் உள்ளது. அதனை தொடர்ந்து பாஜக மட்டுமில்லாமல் பல கட்சியினர், தலைவர்கள், பிரபலங்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் நெட்டிசன்களும் இவர் பிறந்த நாளை கொண்டாடி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது இவர் டிரெண்ட் ஆகியுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

“தமிழகம் முழுவதும் புதிய கல்விக் கொள்கையை அமுல்படுத்த வேண்டும்”…. ஆளுநர் வேண்டுகோள்….!!

தமிழக திறந்த நிலை பல்கலைகழகத்தின் 13 வது பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பட்டங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார். அதன் பிறகு பேசிய அவர், சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்தினேன். அதில் பலவிதமான யோசனைகளை மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தது மகிழ்ச்சியாக இருந்தது. அதனை தொடர்ந்து நம்மிடம் தற்போது உள்ள கல்வி முறையை பற்றி நாம் ஒரு மீள்பார்வை செய்ய வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : மற்ற 6 பேரையும் விடுவிக்க முயற்சி….. முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி…..!!!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்த உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இதைதொடர்ந்து பேரறிவாளன் விடுதலையானதற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்  முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக தலைமைச் செயலகத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த முதல்வர் முக ஸ்டாலின் உச்சநீதிமன்ற தீர்ப்பு பற்றி சட்ட ஆலோசனை நடத்தி மற்ற ஆறு பேரையும் விடுவிக்க முயற்சி எடுப்போம் என்று தெரிவித்துள்ளார். மேலும் மாநில அரசின் உரிமையானது பேரறிவாளனின் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUSTIN : 16ம் தேதி…. ஒரே மேடையில் ஆளுநரும், முதல்வரும்…. வெளியான தகவல்….!!!

மே 16ஆம் தேதி நடக்கும் சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ரவி மற்றும் முதல்வர் முக ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடக்கும் இந்த விழாவில் கலந்து கொள்ளும் ஆளுநரும் முதல்வரும் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளனர். இதில் ஆளுநரும் முதல்வரும் இணைந்து 931 பெயருக்கு பட்டங்களை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Categories
தேசிய செய்திகள்

“போட்டி அரசு நடத்துகிறார் ஆளுநர்”….. சிபிஐ மாநில செயலாளர் கருத்து…!!!!!!

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு, நீலகிரியில் வரும் 25, 26-ம்தேதிகளில் நடைபெறுகிறது. ஆளுநர் மாளிகை ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டை, ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைக்கிறார்.புதிய உலக சூழலில் இந்தியாவின் பங்கு, 2047-ம் ஆண்டு இந்தியா முன்னணி என்ற கருத்துகளை மையப்படுத்தி நடத்தப்படும் இந்த மாநாட்டில், யுஜிசி தலைவர் எம்.ஜெகதீஷ் குமார், ஜோஹோ கார்ப்பரேஷன் தலைமைச் செயல் அலுவலர் ஸ்ரீதர் வேம்பு ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர். இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி போட்டி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கவர்னர் உயிருக்கு ஆபத்து….. திமுக மீது நடவடிக்கை எடுங்கள்…..  ஜனாதிபதி, பிரதமரிடம் அதிமுக புகார் மனு….!!!!

ஆளுநர் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், திமுக அரசு மீது நடவடிக்கை எடுக்க கோரியும் ஜனாதிபதிக்கு அதிமுக புகார் மனு ஒன்றை அளித்துள்ளது. இந்த புகார் மனு தமிழக கவர்னர் ஆர் என் ரவி சமீபத்தில் மயிலாடுதுறைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அவருக்கு பாதுகாப்பு குறைவாக இருந்ததாகவும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள் புழக்கம், பெண்கள் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் ஆகியவற்றால் திமுக அரசின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக சட்ட ஆலோசனை குழு […]

Categories
மாநில செய்திகள்

“ஆளுநரின் பாதுகாப்பு”… எந்த சமரசமும் கிடையாது…. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…..!!!!!

ஆளுநர் பாதுகாப்பில் எந்தவிதமான சமரசமும் அரசு செய்துகொள்ளாதென தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூறினார். மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனவிழாவுக்குச் சென்று திரும்பும் வழியில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் வாகனம் சென்ற பகுதியில், அவருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருப்புக் கொடி காட்டினர். இதையடுத்து சாலையில் கருப்புக்கொடிகளை வீசினர். இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தில் கோஷம் எழுப்பிய அ.தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதன்பின் பாஜக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். அதனைதொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

இன்னும் 25 ஆண்டுகளில் இந்தியா ஆன்மீக வளர்ச்சியில் முதலிடம் பிடிக்கும்….!! ஆளுநர் கே.எம் ரவி பேச்சு…!!

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதினம் 27 வது குருமகாசன்னிதானம் திருஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் ஞான ரத யாத்திரையை ஆளுநர் கே.என் ரவி துவங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது, “கொரோனா, பூகம்பம் கார்கில் போர் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களின் போது தருமபுரம் ஆதீனம் மக்களுக்கு பல்வேறு உதவிகளை புரிந்துள்ளார். இன்னும் 25 ஆண்டுகளில் கல்வி, அறிவியல் மட்டுமன்றி ஆன்மீக வளர்ச்சியில் இந்தியா முதலிடத்தில் இருக்கும். உலகில் ஆங்காங்கே போர் நடைபெறுவதற்கும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வதற்கும் காரணம் அறியாமை தான் […]

Categories
மாநில செய்திகள்

ஆளுநர் அவசரமாக டெல்லி பயணம்….. தமிழக அரசியலில் பரபரப்பு…!!!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மயிலாடுதுறை மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக இன்று சென்றிருந்தார். அப்போது அவரது வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களில் ஒருசிலர், ஆளுநர் ஆர்.என்.ரவியின் பாதுகாப்பு வாகனங்கள் மீது கருப்புக் கொடி மற்றும் பதாகைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை டெல்லி செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

‘தாமதிக்கப்பட்ட நீதி என்பது மறுக்கப்பட்ட நீதி’…. அதை தெரிந்தும் புரிந்தும் செயல்படுங்க….. ஆளுநரை விமர்சிக்கும் முரசொலி…..!!!

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவியை கண்டித்து மீண்டும் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு முரசொலியில் “கொக்கென்று நினைத்தாரோ தமிழக ஆளுநர் ரவி’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியானது. அந்த கட்டுரையில் ஆளுநரின் குடியரசு தின வாழ்த்து செய்தியை மையமாக வைத்து கடுமையான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அதில் ‘தனக்கு இருக்கும் கடமையை செய்யாமல் ,அவசியமற்ற அரசியல் செய்து […]

Categories
மாநில செய்திகள்

சித்த மருத்துவ கல்லூரி: ஆளுநர் ஒப்புதல்…. அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்….!!!

தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைகழகம் அமைப்பதற்காக ஆளுநரிடம் ஒப்புதல் பெறுவதற்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில், தற்போது அதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் சித்த மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு மாதவரம் பால்பண்ணை அருகே 19.3 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது என்று கூறினார். தமிழகத்தில் பல இடங்களில் படிப்படியாக சித்த மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்றும், […]

Categories
அரசியல்

“டீ பில்” வரட்டும்….. வெய்ட் பண்ணி பார்ப்போம்….. அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த பிடிஆர்….!!!

ஆளுநர் நடத்திய தேநீர் விருந்துக்கான பில் வரட்டும் காத்திருப்போம் என்று நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். தமிழ் புத்தாண்டு, தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி தேனீர் விருந்து நடத்தினார். இதற்கு அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விருந்து நிகழ்ச்சியை திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்த நிலையில் பாஜக மற்றும் அதிமுக கட்சிகள் மட்டுமே இந்த தேநீர் விருந்தில் கலந்துகொண்டனர். இந்த தேநீர் விருந்து வைத்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : ஆளுநருக்கு முதல்வர் கடிதம்….. எதற்காக தெரியுமா?….!!!!

குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறும் வகையில் நீட் விலக்கு மசோதாவை மத்திய அரசுக்கு விரைந்து அனுப்பக் கோரி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இருமுறை நீட் மசோதா நிறைவேற்றப்பட்டும், மத்திய அரசுக்கு ஆளுநர் அனுப்பி வைக்காதது வேதனையை தருகிறது. நீட் மசோதா தொடர்பாக அமைச்சர்கள் சந்தித்தபோது ஆளுநர் உறுதியான பதில் அளிக்காததால் தேநீர் விடுதியில் கலந்துகொள்ளவில்லை என்று தெரிவித்தார்.

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாண ஆளுநர் பதவி நீக்கம்…. வெளியான தகவல்…!!!!

பாகிஸ்தான் அரசு பஞ்சாப் மாகாண ஆளுநரை காரணம் கூறாமல் திடீரென  பதவியிலிருந்து நீக்கி இருக்கிறது. இம்ரான்கான் அரசு மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் வாக்கெடுப்புக்கு சில மணி நேரங்களுக்கு முன் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. பஞ்சாப் ஆளுநர் பதவி நீக்கம் குறித்த தகவல் அறிவித்த செய்தி துறை அமைச்சர் பாவத் சவுத்ரி எதற்காக பதவி நீக்கம் என்பது குறித்து தகவலையும் வெளியிடவில்லை. மேலும் புதிய ஆளுநர் யார் என பின் அறிவிக்கப்படும், என்றும் அதுவரை பஞ்சாப் […]

Categories
தேசிய செய்திகள்

மதுரைக்கு வந்த ஆளுநர்….. சொன்ன இனிப்பான செய்தி… அது என்ன தெரியுமா..??

காரைக்குடி கம்பன் கழக விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த தெலுங்கானா ஆளுனர்  தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து உள்ளார். உலகிலேயே சில நாடுகளில் மட்டுமே குழந்தைகளுக்கான தடுப்பூசி செலுத்த ஆரம்பித்திருக்கிறது. ஆனால் இந்தியாவில் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இதில்  குழந்தை தடுப்பூசி செலுத்துவதில் மிகப்பெரிய சாதனை படைத்த பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், எனவும் தடுப்பூசி செலுத்துவதன் மூலம் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பார்கள். மேலும் கொரோனா குறைந்தால் தடுப்பூசி போட வேண்டாம் என்பது […]

Categories
மாநில செய்திகள்

கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு… பிரபல ரவுடி என்கவுண்டர்…!!!!

சட்டம் ஒழுங்கு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்ட ஓரிரு நாளில் என்கவுன்டர் சம்பவம் நடைபெற்றுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் திமுக அரசு மீது வைத்து குற்றச்சாட்டுகளில் ஒன்று சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என்பது தான். இது தொடர்பாக ஆளுநர் ஆர்.என் ரவியை அதிமுக பாஜக நிர்வாகிகள் தனித்தனியாக சந்தித்து புகார் தெரிவித்துள்ளனர். ஆட்சி மீது எந்தவிதமான புகார் வந்தாலும் அது பற்றி உடனடியாக நடவடிக்கை எடுத்துவரும் ஸ்டாலின் […]

Categories
அரசியல்

விமானம் மூலம் திருச்சி வந்த ஆளுநர்…!! எதற்காக தெரியுமா….??

தஞ்சாவூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெறும் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தார். அவரை வரவேற்பதற்காக திருச்சி மாநகராட்சி காவல் ஆணையர் கார்த்திகேயன், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார்,திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் உள்ளிட்டோர் விமான நிலையம் வந்தனர். திருச்சியிலிருந்து காரில் தஞ்சாவூர் புறப்பட உள்ள ஆளுநர் ஆர். என் ரவி இன்று மாலை தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் மற்றும் சரஸ்வதி […]

Categories
அரசியல்

“கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் மீண்டும் போராட்டம் வெடிக்கும்…!!” மேகலாயா ஆளுநர் எச்சரிக்கை…!!

மேகலாயா மாநில ஆளுநர் சத்யபால் மாலிக்,ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “மத்திய அரசுக்கு நான் ஒரு எச்சரிக்கை விடுக்கிறேன் விவசாயிகளிடம் மட்டும் மோதி பார்க்காதீர்கள். அவர்கள் நீங்கள் நினைப்பதை விட மிகவும் ஆபத்தானவர்கள். அவர்களுக்கு என்ன தேவையோ அதைப் பெறுவதற்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள், எதையும் எடுத்துக் கொள்வார்கள். போராட்டத்தின் மூலம் பெற முடியாததை விவசாயிகளால் வன்முறை மூலம் பெற முடியும் என்பதை மத்திய அரசு ஒருபோதும் […]

Categories
அரசியல்

“அவசரப்பட்டடீங்களே ஸ்டாலின்… எனக்கு மனசு கஷ்டமா போச்சு…!!” ஆளுநர் பேச்சு…!!

மத்திய அரசாக உள்ள பாஜக தான் ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து மாநில அரசுகளுக்கு குடைச்சல் கொடுத்து வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. குறிப்பாக கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் போன்ற மாநிலத்தில் ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையே பனிப்போர் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஏனெனில் இந்த மாநிலங்கள் அனைத்தும் மத்திய அரசையும் ஆளுநரையும் முழுமூச்சாக எதிர்த்து வருகின்றன. அந்தவகையில் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும் ஆளுநர் ஜெகதீஸ் தங்கருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. […]

Categories
அரசியல்

“சட்டையை கிழித்துக் கொண்டு ஓடிய ஸ்டாலின்…!!” அண்ணாமலை பரபரப்பு பேச்சு…!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பழனியில் நடைபெற்ற வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உரையாற்றினார். அதில் அவர் பேசியதாவது, “திமுகவின் ஆட்சி தற்போது தரமானதாக இல்லை. அதற்கு பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்பட்ட தரமற்ற பொருட்களை சிறந்த உதாரணம். இப்போது ஆளும் கட்சியாக உள்ள திமுக எங்களுக்கு கவர்னர் தேவையில்லை என கூறுகிறது. ஆனால் ஒரு காலத்தில் திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது மு க ஸ்டாலின் சட்டசபையில் தன்னுடைய சட்டையை […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு விலக்கு…. மீண்டும் செக் வைக்க தமிழக ஆளுநர்…. ஷாக்கான ஸ்டாலின்….!!!!

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 8-ஆம் தேதி மீண்டும் நீட் தேர்வு விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது. மேலும் அந்த நீட் விலக்கு மசோதா ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தமுறை காலதாமதம் செய்யாமல் ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு நீட் விலக்கு மசோதாவை அனுப்பி வைப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். நீட் தேர்வு விலக்கு விவகாரத்தில் திமுகவின் எதிர்பார்ப்புக்கு மீண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி செக் வைப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது ஆளுநர் ஒரு சட்ட […]

Categories
தேசிய செய்திகள்

போடு ரகிட ரகிட…! இனி மதிய உணவில் இதுவும்…. மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி…!!!!

புது முயற்சியாக புதுச்சேரி துணை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் மதிய உணவில் தானியங்களை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். புதுச்சேரி துணை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் மதிய உணவில் தானியங்களை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அச்செய்தியில் “புதுச்சேரியில் உள்ள பள்ளிக்கூடங்களில் வகுப்பறைகள் கணினி மயமாக்கப்பட்டு  டிஜிட்டல் முறையில் கற்றுக் கொள்வதற்கும்,  பள்ளிகளில் உள்ள கழிப்பறைகளையும் மேம்படுத்தவும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைப்பதற்கு வழிவகை செய்யவும், மதிய உணவில் நவதானியங்களையும், கருப்பட்டி, வேர்க்கடலை, வாழைப்பழம் போன்ற […]

Categories
மாநில செய்திகள்

நீட் மசோதாவை திருப்பி அனுப்பியதற்கு காரணம் இது தானாம்….!! ஆளுநர் மாளிகை விளக்கம்…!!

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரி திமுக சார்பில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநர் இந்த தீர்மானத்தை பல நாட்களாக கிடப்பில் போட்டு பின்னர் அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் தமிழக அரசுக்கே மீண்டும் திருப்பி அனுப்பி வைத்தார். தற்போது ஆளுநர் இந்த தீர்மானத்தை திருப்பி அனுப்பி வைத்ததற்கான காரணம் குறித்து ஆளுநர் மாளிகை சார்பில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ஆளுநரின் டெல்லி பயணம்…. திடீர் ரத்து…!! காரணம் என்ன..?

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தீர்மானத்தை தமிழக ஆளுநர் கே.என் ரவி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் மீண்டும் தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தார். இதனையடுத்து மீண்டும் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டம் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் கூட்டப்பட்டு மீண்டும் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவ்வாறான பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக […]

Categories
அரசியல்

“முடியாதுன்னு சொல்றதுக்கு எதுக்கு பா 142 நாள்…? மு.க ஸ்டாலின் காட்டம்…!!

கடந்த 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இப்போது திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. இதனை தொடர்ந்து மு.க ஸ்டாலின் ஆட்சி அமைத்தவுடன் இதுகுறித்த நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட்டு வந்தன.அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டு நீட் தேர்வுக்கு எதிராக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த தீர்மானம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி […]

Categories

Tech |