மறைந்த திமுகவின் மூத்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, சமீபத்தில் 29 வயது ஒரு இளைஞன். அந்த குடும்பத்தில் அவனை படிக்க வைத்திருக்கிறார்கள். ஒரு இன்ஜினியர் பட்டதாரி. இந்த ஆன்லைன் ரம்மியால அந்த இளைஞர் தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார். இதை தடை செய்ய வேண்டும் என்று தான் கேட்கிறோம். இதற்கு கூட கவர்னர் அனுமதிக்க மாட்டாரா ? எத்தனை முறை தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அமைச்சர், […]
Tag: ஆளுநர் ஆர் என் ரவி
சுதந்திர போராட்டத்தில் பங்குபெற்றதற்கான பெருமை காங்கிரசுக்கு மட்டும் சொந்தமானது இல்லை என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சுட்டிக்காட்டி இருக்கிறார். பள்ளிகளில் மாணவர்களுக்கு சுதந்திரப்போராட்டம் குறித்த பாடங்களில், அது காங்கிரஸ் இயக்கத்துடன் மட்டுமே தொடர்புடையது என போதிக்கக்கூடாது எனவும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். காந்தி ஒரு சிறந்த தலைவர் என்பதில் சந்தேகம் கிடையாது. மேலும் சுதந்திரப் போராட்டத்தை பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்பிப்பது காங்கிரஸுடன் மட்டும் இருக்கக்கூடாது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி திருச்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்தார். […]
சட்ட மேதை அம்பேத்கரின் 66-வது நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதை முன்னிட்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணி மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவருடைய திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோர் ஆட்சி காலத்தில் எல்லாம் ஆளுநர்கள் இருந்த இடம் கூட தெரியாமல் இருந்து வந்தனர். ஆனால் இன்று […]
ஆன்லைன் ரம்மி தடை மசோதா தொடர்பாக ஆளுநர் கேட்ட விளக்கத்திற்கு கடிதம் மூலமாக பதில் அளித்துள்ளது தமிழக அரசு. ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்காக தமிழக அரசு சட்டப்பேரவையில் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி சட்ட மசோதாவை நிறைவற்றி ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது. இந்த நிலையில் ஆளுநர் இது தொடர்பாக சில விளக்கங்களை கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்த நிலையில் தான் தமிழக அரசு அதற்கு உரிய சட்ட விளக்கங்களுடன் ஆளுநருக்கு […]
தமிழக சட்டப்பேரவையில் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி ஆன்லைன் ரம்மி தடை மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஆர்.என் ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சட்ட மசோதாவின் காலம் வரும் 27ஆம் தேதி முடிவடையும் நிலையில், தமிழக அரசிடம் இது குறித்து விளக்கம் கேட்டிருந்தார் ஆளுநர் ரவி. இந்நிலையில் தற்போது தமிழக அரசு ஆளுநர் கேட்ட விளக்கத்திற்கு கடிதம் மூலமாக பதில் அளித்துள்ளது. மசோதாவில் கூறப்பட்டுள்ள தண்டனை விதிப்பது தொடர்பான அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளதா என ஆளுநர் […]
ஆன்லைன் ரம்மி தடை மசோதா தொடர்பாக விளக்கம் கேட்டு ஆளுநர் ஆர்.என் ரவி தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.. தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த அக்டோபர் மாதம் 19ஆம் தேதி ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது மற்றும் ஒழுங்குபடுத்துவது தொடர்பான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஆர்.என் ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.. அவசர சட்டத்திற்கு 6 மாதங்களும், சட்ட மசோதாவிற்கு 6 வாரத்திற்கும் ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற நிலையில், ஆன்லைன் […]
ஆன்லைன் ரம்மி தடை மசோதா தொடர்பாக விளக்கம் கேட்டு ஆளுநர் ஆர்.என் ரவி தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். சட்ட மசோதாவின் காலம் 27 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், ஆளுநர் விளக்கம் கேட்டுள்ளார். ஆளுநரின் கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று மாலைக்குள் விளக்கம் அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த அக்டோபர் 19ஆம் தேதி சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி தடை மசூதா நிறைவேற்றப்பட்டது. ஆன்லைன் விளையாட்டு அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் தந்த […]
வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. இந்த விழா மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சர் துரைமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, பொதுமக்கள் வாங்கிய கடனை எல்லாம் தள்ளுபடி செய்து விட்டால் அரசாங்கம் எப்படி இயங்கும். மாற்றுத்திறனாளிகள் கடன், பயிர் கடன், கால்நடைகள் கடன் என ஒவ்வொரு கடனையும் அரசாங்கத்தால் எப்படி தள்ளுபடி […]
செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலியில் ஸ்ரீ கோகுலம் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழ்நாடு வித்யா பாரதி அமைப்பு சார்பில் தேசிய கல்விக் கொள்கை 2020 செயல்படுத்துதல் என்ற கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த கருத்தரங்கத்திற்கு வித்யா பாரதி அமைப்பின் தலைவர் கிருஷ்ணசெட்டி தலைமை தாங்க, 48 தனியார் பள்ளிகளை சேர்ந்த முதல்வர்கள், தாளாளர்கள், ஆசிரியர்கள் என 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த கருத்தரகத்தின் போது […]
சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட மசோதா குறித்த ஆளுநரின் கேள்விகளுக்கு தமிழக அரசு விரைவில் பதில் அளிக்க உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தமிழகத்தில் ஏற்படுத்துவதற்கான சட்ட மசோதாவை மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தாக்கல் செய்து, நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.. அதில், சித்த மருத்துவ பல்கலைக்கழக் வேந்தராக தமிழக முதல்வர் ஸ்டாலின் இருப்பார் என்று அந்த சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டது.. அதுமட்டுமல்லாமல் பல்கலைக்கழகங்களில் […]
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பூலித்தேவனின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மாமன்னர் பூலித்தேவனின் 307 ஆவது பிறந்தநாள் விழா இன்று செப்டம்பர் 1ஆம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் நெற்கட்டும்செவலில் இருக்கும் பூலித்தேவன் வெண்கல சிலைக்கு தமிழக அரசு சார்பிலும், பல்வேறு அரசியல் கட்சி சார்பிலும், பல்வேறு இயக்கங்கள் சார்பிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பலரும் சுதந்திர போராட்ட வீரர் […]
தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை மரியாதை நிமித்தமாக நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவனுக்கு நடிகர் ரஜினிகாந்த் சென்றுள்ளார். அங்கு ஆளுநர் ஆர். என் ரவியை சந்தித்து பேசியுள்ளார்.. மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றது என்று ஆளுநர் மாளிகை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியில வந்து செய்தியாளர்களை சந்தித்தால் தான் எதற்காக சந்தித்தார் என்று தெரியும்.. நடிகர் ரஜினிகாந்த் இரண்டு நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பிற்காக டெல்லி சென்று வந்தார்.. தமிழக […]
அவசரப் பயணமாக தமிழக ஆளுநர் ஆர் என் ரவி நாளை டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை காலை 8 மணி அளவில் தமிழக ஆளுநர் டெல்லி செல்ல உள்ளார். இன்று செல்வதாக இருந்த அவரது பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், நாளை காலை செல்லும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் பயணமாக நாளை செல்லும் ஆளுநர் நாளை மறுநாள் மீண்டும் சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது.
மயிலாடுதுறை சம்பவம் தொடர்பாக ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி விஸ்வேஷ் சாஸ்திரி தமிழக டிஜிபிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். தருமபுரம் ஆதீனத்திற்கு மயிலாடுதுறை வழியாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்றபோதுபல்வேறு இயக்கத்தினரும் அரசியல் கட்சிகளும் கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆளுநர் சென்ற வாகனத்தின் மீது கற்கள் மற்றும் கொடிகள் வீசி தாக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதற்கு தமிழக காவல்துறையில் மறுத்தது. மயிலாடுதுறையில் தமிழக ஆளுநரின் வாகனம் மீது ஆர்ப்பாட்டகாரர்கள் கற்கள் மற்றும் கொடிகளை வீசியதாக கூறப்படுவதில் […]
நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு வழங்க கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் நீட்தேர்வு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் காலதாமதம் செய்து வந்த நிலையில், நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டிய தமிழக அரசின் சட்ட மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். இந்நிலையில் நீட் விலக்கு மசோதா தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து தமிழக சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. அப்போது […]
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்காக தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. பின்னர் தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக அந்த தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசுக்கு அந்த மசோதாவை அனுப்ப கால தாமதப்படுத்தி வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி நீட் தேர்வு விலக்கு கோரி அனுப்பப்பட்ட மசோதாவை மீண்டும் தமிழக அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும் ஆளுநர் ஆர்.என்.ரவி, “தமிழக அரசு அமைத்துள்ள நீட் உயர்மட்ட குழு அறிக்கை மற்றும் அதனை அடிப்படையாக கொண்டு இயற்றப்பட்ட […]
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அனைத்து கட்சிகளும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பி தமிழக மக்களையும், தமிழ்நாடு சட்டப் பேரவையையும் அவமதித்துள்ளார். அவரை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். இனியும் ஆர்.என். ரவி ஆளுநர் பதவியில் நீடிப்பது முறை அல்ல. எனவே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு உடனடியாக திரும்ப […]
பல்கலைக்கழக துணைவேந்தர்கள் உடன் ஆளுநர் ஆர்.என்.ரவி காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனை மேற்கொண்டார். சென்னையில் , பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். பல்கலைக்கழகங்களின் வளர்ச்சி, ஆராய்ச்சி& மேம்பாடு, கற்றல் அடைவு திறன் மேம்பாடு, உலகளாவிய தரவரிசை பட்டியலில் இடம்பிடித்தல், தேசிய கல்வி கொள்கை அமலாக்கம் குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகை இந்தியா வழிநடத்த தேசிய கல்வி கொள்கை உதவும் என்று தமிழக ஆளுநர் ஆர் என் ரவி தெரிவித்துள்ளார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 37 வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர் ஆர் என் ரவி தலைமை தாங்கி மாணவ மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: “நாட்டின் சுதந்திரத்திற்காக எண்ணிலடங்காதோர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். பலர் கொலை செய்யப்பட்டனர். அவர்களில் பலர் தற்போது வரையிலும் அடையாளம் காணப்படவில்லை. பாரதிதாசன் […]