பல்கலை கழகங்களில் துணை வேந்தரை நியமிக்கும் முடிவை மாநில அரசே எடுக்க வேண்டும். வேந்தராக மாநில முதலமைச்சர் இருக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசினார். சட்டம் இப்போது நிறைவேற்றப்பட்டது. சபாநாயகர் அதை அறிவித்திருக்கிறார். குரல் வாக்கெடுப்பில் இந்த சட்டம் நிறைவேற்றப்படுகிறது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக அதேபோல பாரதிய ஜனதா கட்சி இரண்டு பேருமே வெளிநடப்பு செய்த நிலையில் இந்த சட்டம் நிறைவேற்றப்படுகிறது. இதேபோல வேறு சில மாநிலங்களிலும் இந்த நடைமுறை […]
Tag: ஆளுநர் நியமனம்
8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி கர்நாடக மாநில ஆளுநராக தாவர்சந்த் கெலாட், மத்திய பிரதேச ஆளுநராக மங்குபாய் சகன்பாய் பட்டேல், மிசோரம் ஆளுநராக ஹரிபாபு, இமாச்சல ஆளுநராக ராஜேந்திரன் விஸ்வநாத், கோவா ஆளுநராக ஸ்ரீதரன் பிள்ளை, திரிபுரா ஆளுநராக சத்தியதேவ் நாராயணன் ஆர்யாவை குடியரசுத் தலைவர் நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் 2021 சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்து. புதுச்சேரியில் அடுத்தடுத்து அமைச்சர்கள் ராஜினாமா செய்து வருவதால் நாராயணசாமி தலைமையிலான ஆளும் காங்கிரஸ் கட்சி கவிழும் நிலையில் உள்ளது. இந்நிலையில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்று ஜனாதிபதி அறிவித்துள்ளார். புதுச்சேரி அரசுக்கும், கிரண்பேடிக்கும் இடையே மோதல் நிலவி […]