தமிழகத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு ஐந்து வகை இனிப்புகள் மற்றும் ஒரு கார வகையை விற்பனை செய்வதற்கான பணியை ஆவின் தொடங்கியுள்ளது. அதன்படி நெய் பாதுஷா 250 கிராம் 190 ரூபாய், நைஸ் அல்வா 250 கிராம் 190 ரூபாய், ஸ்டஃப்டு மோதி பாக் 250 கிராம் 180 ரூபாய், காஜூ பிஸ்தா ரோல் 500 கிராம் 320 ரூபாய், காஜு கத்திலி 250 கிராம் 260 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. கலவை இனிப்புகள் அடங்கிய […]
Tag: ஆவின் நிர்வாகம்
ஆவின் நிர்வாகம் எதற்காக தனிநபர் விவரங்களை பால் அட்டைதாரர்களிடம் கேட்கின்றது என்று ஓபிஎஸ் கேள்வி எழுப்பினார். ஆவின் நிறுவனம் எதற்காக தனிநபர் விவரங்கள் அடங்கிய விண்ணப்பங்களை பால் அட்டைதாரர்கள் இடமிருந்து கேட்கின்றது என அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: ஆவின் நிர்வாகம், பால் அட்டை மூலம் பால் வாங்குபவர்கள் இடம் ஆவின் நிர்வாகம் அட்டைதாரர்களின் பெயர், முகவரி, கல்வித்தகுதி, தொழில், மாத சம்பளம், குடும்ப உறுப்பினர்கள், எவ்வளவு […]
தமிழகத்தில் 80ஆயிரம் பால் அட்டை தாரர்கள் குறிப்பிட்ட முகவரியில் வசிக்கவில்லை என்பதால் புதிய படிவம் வினியோகம் செய்யப்படுகிறது என ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. புதிய படிவத்தில் கல்வித்தகுதி, தொழில் விபரம், வருமானம், ஆதார் விவரங்களை குறிப்பிட தேவையில்லை. அடிப்படை விவரங்களை மட்டும் பூர்த்தி செய்தால் போதும். பால் அட்டை தாரர்களின் விபரங்களை சமர்பிக்க மேலும் 3 மாதம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுவதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நடமாடும் பால் விற்பனை நிலையங்கள் மூலம் நகரின் பிரதான பகுதிகளில் பால் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வழக்கம்போல் மாதாந்திர பால் அட்டை தாரர்களுக்கு பால் வினியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவின் பாலகங்கள் டெம்போக்களில் கூடுதலாக பால் பாக்கெட்டுகள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. நிவர் புயலின் போது ஏற்படக்கூடிய பால் தட்டுப்பாட்டை தவிர்க்கும் பொருட்டு சுமார் 20,000 கிலோ பால் பௌடர் பாக்கெட்டுகள் விற்பனை நிலையங்களில் […]
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே ஆவின் நிர்வாகத்தின் அலட்சிய போக்கை கண்டித்து 500 லிட்டர் பாலை சாலையில் கொட்டி உற்பத்தியாளர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். திருத்தணி அருகே தும்பிகுலம் கிராமத்தில் பால் கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. இக்கிராமத்தை சுற்றி உள்ள பல கிராமங்களில் இருந்து நாள்தோறும் 1300 லிட்டர் பாலை திருவள்ளூர் அருகே காக்கலூர் ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்திற்க்கு உற்பத்தியாளர்கள் அனுப்பி வருகின்றனர். வாரத்தில் இரண்டு நாட்கள் காலையில் அனுப்பும் 500 லிட்டர் பாலை […]
ஆவின் நிர்வாகம் பால் கொள்முதலை நிறுத்தியதைக் கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட பால் விவசாயிகள் பாலைக் கீழே ஊற்றியும் ஆவின் அலுவலகத்திற்கு பூட்டு போட்டும் போராட்டம் நடத்தினர். தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் பகுதியில் உள்ள சின்ன கவுண்டம்பட்டி பொம்பட்டியில் 150 பால் விவசாயிகள் உள்ளனர். தங்களது பகுதியில் உற்பத்தி செய்யும் பாலை கூட்டுறவு நிர்வாகம் மூலம் விற்பனை செய்து வந்தனர். கடந்த இரு தினங்களாக எந்த அறிவிப்பும் இன்றி திடீரென பால் கொள்முதலை ஆவின் நிர்வாகம் நிறுத்தி விட்டதாக […]
கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் காலை முதல் இரவு வரை ஆவின் பால் தட்டுபாடின்றி கிடைக்கும் என்பதால் பொது மக்கள் அச்சப்பட வேண்டிய தேவை இல்லை என ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆவின் பாலகங்களுக்கு சென்று பொதுமக்கள் நேரடியாக தேவையான பாலை வாங்கிக்கொள்ளலாம். ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பால் தங்கு தடையின்றி கிடைக்க […]