பாஜகவில் இருந்து நடிகை காயத்ரி ரகுராம் நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். பாஜக நிர்வாகம் தன்னை புறக்கணிப்பதாக காயத்ரி ரகுராம் தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்த நிலையில் அவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு கலங்கம் விளைவிப்பதாக கூறி ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் கட்சியை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி தொடர்பாக தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அண்ணாமலையை நடவடிக்கையை ஏற்றுக் […]
Tag: ஆவேசம்
சங்கராந்தி ரிலீசில் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பொங்கல் அன்று தெலுங்கு படங்களைதான் வெளியிட வேண்டும் என்று தெலுங்கு திரையுலகினர் முடிவு செய்திருக்கிறார்கள். தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கைக்கு சீமான் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தற்போது இந்த பிரச்சனை குறித்து கஞ்சா கருப்பு ஆவேசமாக பேசியுள்ளார். உங்க படம் மட்டும் பாகுபலி தொடங்கி பரதேசி புலி வரை இங்க வந்திருக்கு. மரியாதையா வாரிசு படத்த ஓட்டுங்க. அதுதான் பெருமை என்று கோபமாக கூறியுள்ளார்.
டிக் டாக் பிரபலமான ஜி.பி முத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். தற்போது இவர் சன்னி லியோனுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்துள்ளார். அடுத்து அஜித் படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் டிக் டாக் ரவுடி பேபி சூர்யாவை சுத்தமாக பிடிக்காது என்று ஜிபி முத்து ஆவேசமாக பேசியுள்ளார். ஒரு காலத்தில் நட்புறவில் இருந்த இருவரும் திடீரென […]
பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவருமான அண்ணாமலை மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு எந்த அளவில் இருக்கிறது என்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு பதில் அளித்து பேசிய அவர் மதுரையில் நடைபெற்ற சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று வெளியானது. அதை நாம் எல்லோரும் பார்த்தோம். எதற்காக குற்றங்கள் அதிகரித்து வருகிறது என்றால் போதை பொருள் பழக்கம் தான் காரணம். இன்றைய காலகட்டத்தில் போதை பொருள் பழக்கம் என்பது […]
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக கட்சி அலுவலகத்தில் சசிகலா புஷ்பா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, நாடாளுமன்ற எம்பி ஆக இருந்தவர்களுடைய பதவிக்காலம் முடிந்த பின்னரும் எம்பிக்களுக்கு கோட்டா ஒன்று உள்ளது. வேண்டுமென்றால் என்னை ஒரு பெண் என்பதால் அடிக்க வதந்தியை பரப்ப வேண்டும் என்பதற்காக உள்நோக்கத்துடன் தவறான தகவல்களை சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகிறார்கள். பெண்கள் அரசியலுக்கு வந்தாலே தப்பாக சித்தரித்து போடுகின்றன. பெண்கள் அரசியலுக்கு வரவே கூடாதா என்று ஆவேசப்பட்டவர், எங்களுக்கும் குடும்பம் உள்ளது. […]
நடப்பு ஆண்டு தீபாவளி தினத்தையொட்டி டாஸ்மாக்கின் வியாபாரம் பற்றிய தகவல்கள் வெளியாகியது. தீபாவளி தினத்துக்கு முந்தைய நாள் டாஸ்மாக் வியாபாரம் தொடர்பாக தமிழ் தனியார் தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டது. இச்செய்தி உண்மைக்கு புறம்பான ஒன்று என்றும் தவறான தகவல் வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி நிறுவனம் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் “தீபாவளிக்கு முன்பு டாஸ்மாக் இலக்கு என்று உண்மைக்குப் […]
மதுரை விமானம் நிலையத்தில் செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது, தேவர் குருபூஜை-தங்ககவசம் விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவுபடி நடந்துகொள்வோம் என்று தெரிவித்து இருக்கிறார். மேலும் அவர் பேசியதாவது, இவ்வளவு பெரிய பாவத்தை செய்து அடுத்தவர்கள் மீது பழிபோடுவது ஏற்புடையதல்ல. ஊர்ந்துஊர்ந்து சென்று பதவிகளை வாங்கியவர்கள் யார் என்று மக்களுக்கே தெரியும் என தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலினை சந்தித்ததாக எடப்பாடி பழனிசாமி கூறியதற்கு ஓபிஎஸ் விளக்கம் அளித்தார். அதாவது அவ்வாறு முதலமைச்சரை சந்தித்தை நிரூபித்துவிட்டால் அரசியலிருந்து விலக தயார் எனவும் நிரூபிக்காவிட்டால் […]
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் ராஷ்டிரிய ஸ்வயசேவக் சங் அமைப்பின் தலைவர் திரு. மோகன் பகவத் அவர்கள், ஜாதி, வர்ணம் என்பவை எல்லாம் இறந்த கால விவகாரங்கள் என்றும், அவற்றை மறந்து விட்டு கடந்து செல்வோம் என்றும் கூறியுள்ளார். அவர் கூறுவது மிகப்பெரிய நகைப்புக்குரிய கேலிக்கூத்தாக இருக்கிறது. இதைவிட ஒரு நாடக அரசியல் வேறு எதுவும் இல்லை என்பதற்கு உதாரணமாக இருக்கிறது. இந்திய […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். இவர் தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு சாமானியன் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்தப் படத்தை மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன மற்றும் தம்பிக்கோட்டை போன்ற படங்களை இயக்கிய ராகேஷ் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக நக்சா சரண் நடிக்க, ராதாரவி, எம்எம் பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் சாமானியன் படத்தின் படக்குழுவினர் […]
நடிகை கஸ்தூரி சினிமா, அரசியல், விளையாட்டு, சின்னத்திரை என எல்லா டாபிக்கையும் பேசி துணிச்சலுடன் தனது கருத்துக்களை பதிவிட்டும் விவாத நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகின்றார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார். இந்நிலையில் கர்ப்பமாக இருப்பது போல் உள்ள போட்டோவை பகிர்ந்துள்ளார். இந்நிலையில் நடிகை கஸ்தூரியின் ட்விட்டர் கணக்கை டேக் செய்து, ஒரு நபர் இந்திய நிலப்பரப்பில் நடைபெறும் அத்தனை பிரச்சினைக்கும் காரணம் இந்த கைபர் கணவாய் தானே? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த கஸ்தூரி, […]
அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ரோகித்சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள அந்த அணியில் காயத்தால் விலகி இருந்த ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் போன்றோர் மீண்டும் திரும்பியுள்ளனர். இதற்கிடையில் ரவீந்திர ஜடேஜா காயத்தால் வெளியேறி இருக்கிறார். இந்த நிலையில் டி20 கிரிக்கெட்டில் அண்மை காலங்களில் சுமாரான பார்மில் உள்ள ரிஷப் பண்ட்டை மீண்டும் மீண்டும் தேர்வுசெய்து தேர்வுக்குழு அதே தவறை செய்து […]
பல இடங்களில் பெண்களுக்கு அங்கீகாரம் கிடைக்காமல் இருக்க ஈகோ பார்க்கும் ஆண்களே காரணம் என்று குஷ்பு தெரிவித்துள்ளார். வெள்ளித்திரை முதல் சின்னத்திரை வரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் நடிகை குஷ்பூ. தமிழகத்தில் முதல் முறையாக ஒரு நடிகைக்கு கோவில் கட்டப்பட்டது என்றால் அதுவும் இவருக்காக தான். அந்த அளவிற்கு பேரன்பு கொண்ட ரசிகர்களை பெற்று முன்னணியில் இருந்து வருகிறார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். இன்றைய இளைஞர்கள் சாதிக்க வேண்டும் […]
இலங்கையில் நடந்தது போல் இங்கும் நடக்கும் என்று ஜோதிமணி எம்பி தெரிவித்துள்ளார். மக்களை முட்டாளாக்கும் செயலை பாஜக செய்து வருகிறது. அப்படி செய்தால் இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் நிலை கூடிய விரைவில் இந்தியாவிலும் நடக்கும் என்று அவர் தெரிவித்தார். இலங்கை நிலவரம் தினசரி கலவரமாக மாறி வருகிறது. அங்கு மக்கள் அரசுக்கும் ஆட்சியாளருக்கும் எதிராக போராட்டத்தில் இறங்கியுள்ளனர். மேலும் அதிபர் கோத்தபய ராஜபக்சேவை பதவி விலக கோரி போராட்டங்கள் நடந்து வருகின்றது. இந்நிலையில் இந்தியாவிலும் இலங்கை போன்ற […]
தமிழகத்தில் இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதில் ஆளுநர் ஆர். என். ரவி உரையாற்றினார். அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் மீண்டும் தொடங்கியது. அப்போது பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதையடுத்து அம்மா உணவகத்தை மூட திமுக அரசு முயற்சிக்கிறது. ஒருவேளை மூடினால் அதற்கான தண்டனையை அனுபவிப்பீர் என்று ஈபிஎஸ் கூறினார். இதற்கு […]
முன்னாள் அமைச்சர் தங்கமணியின் வீட்டில் தக்காளி சாதம் போட்டதால் அதிமுகவினர் டென்ஷனாகி உள்ளார்களாம் திமுக ஆட்சி வந்த பிறகு ஸ்டாலின் சொன்னது போல முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை அடுத்தடுத்து சோதனை நடத்தி வருகிறது. அதன்படி எம் ஆர் விஜயபாஸ்கர், எஸ் பி வேலுமணி, கே சி வீரமணி, விஜயபாஸ்கர் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்திய நிலையில் அடுத்தது யார் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அந்த வகையில் […]
அதிமுக அலுவலகத்தில் தொண்டர்கள் தாக்கப்பட்டது ஒவ்வொரு தொண்டருக்கும் ஏற்பட்ட அவமானம் என்று சசிகலா தெரிவித்துள்ளார். அதிமுக தேர்தல் வேட்புமனு தாக்கல் நேற்று தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது வேட்புமனு வாங்க வந்த ஓமபொடி பிரசாந்த், ராஜேஷ் உள்ளிட்ட சில அதிமுக தொண்டர்களை நிர்வாகிகள் அடித்து துரத்திய தகவல் வெளியானது. இந்த சூழலில் அதிமுக தொண்டர்கள் தாக்கப்படுவது வெட்கப்படவேண்டிய வகையில் இருப்பதாகவும், இனிமேல் இதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது என்றும் சசிகலா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் […]
நான் ஊழல் செய்ததாக நிரூபித்தால் அப்போது தூக்கில் தொங்குவதற்கு தயார் என்று அபிஷேக் பானர்ஜி ஆவேசமாக கூறியுள்ளார். மேற்கு வங்கத்தில் நடந்த நிலக்கரி முறைகேடு தொடர்பாக சிபிஐயும், அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியின் சகோதரர் மகனும், திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவருமான அபிஷேக் பானர்ஜி தொடர்பு இருப்பதாக கூறி அமலாக்கத்துறை அபிஷேக் பானர்ஜிக்கு சம்மன் அனுப்பியுள்ளது. இது தொடர்பான விசாரணைக்கு டில்லியில் ஆஜராகுமாறு தெரிவித்திருந்தது. […]
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தில் ஐந்தாம் நாளில் முடிவடைந்தது. இந்த போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை 151 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 3வது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் டெய்ல் எண்டர் பேட்ஸ்மேனான ஆண்டர்சனுக்கு பும்ரா தொடர்ந்து பவுன்சர் பந்துகளை வீசி அச்சுறுத்தினார். இந்நிலையில் பவுன்சர் பந்துகளை எதிர்கொண்ட பின் […]
தமிழ்நாடு பாஜக போராடினாலும் மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் கூறிவரும் நிலையில் சுமூக தீர்வு காண மாவீரன் அண்ணாமலையை தூதுவராக அனுப்புவோம் என்று திமுக எம்பி தயாநிதி மாறன் கிண்டலாக சொல்லி இருக்கிறார். இதற்கு பதிலளித்து பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பதிவில், கொரோனா நோய்தொற்று பாதிப்பில் மக்கள் துன்புற்று இருந்தபோது T20 விளையாட்டுப் போட்டியை ரசித்துக்கொண்டு இருந்த தயாநிதி மாறன் அவர்கள்… மேகதாது அணை பற்றி கவலைப்பட்டமைக்கு மிக்க […]
தமிழகம் கர்நாடகம் இடையே காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக தொடர்ந்து பிரச்சினை இருந்து வருகின்றது. கர்நாடக மாநிலம் காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்ட முயற்சி செய்து வருகிறது. இதற்கு தமிழகம் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றது. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து இதுதொடர்பாக கடிதம் வழங்கப்பட்டது. இந்நிலையில் மேகதாது விவகாரத்தில் எங்கள் நிலைப்பாடு தெளிவாக உள்ளது என்று கர்நாடக பாஜக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்திருக்கிறார். […]
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து, மக்கள் நீதி மையம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. மக்கள் நீதி மையம் துணைத் தலைவர் மௌரியா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்ட கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். மக்கள் நீதி மையம் கட்சியின் துணைத் தலைவர் மெளரியா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, மத்திய, மாநில அரசுகளை பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு […]
தமிழில் இயக்குனர் சசி இயக்கிய ஐந்து ஐந்து ஐந்து படத்தில் பரத் ஜோடியாக நடித்தவர் நடிகை எரிக்கா பெர்ணான்டஸ். அதன் பிறகு விரட்டு விழித்திரு ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழில் சரியான வாய்ப்புகள் இல்லாததால் பாலிவுட் பக்கம் சென்றார். அங்கு முன்னணி சின்னத்திரை நடிகை ஆகி விட்டார். வெப் தொடர்களில் சரியான கதைகள் இல்லாமல் வெறும் சம்பாதிக்கும் நோக்கத்திலேயே ஆபாச வெப் தொடர்களை உருவாக்கி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். போல்ட் எனும் பெயரில் தேவையில்லாத காட்சிகளை கமர்ஷியல், […]
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திக்கு பிரபல நடிகை கௌரி கிஷன் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர் ஆன்லைன் வகுப்பின் போது மாணவிகளிடம் பாலியல் தொடர்பான அத்துமீறலில் ஈடுபட்ட விவகாரம் தற்போது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து 40ற்கும் மேற்பட்ட மாணவிகள் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது புகார் அளித்து வருகின்றனர். இதற்கிடையில் இது குறித்து பல திரை பிரபலங்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் 96 படத்தின் மூலம் […]
பிரதமர் மோடியின் ஆட்சி முடியும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தலைவர் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் கடந்த 100 நாட்களாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெரும் வரையில் […]
தனது அதிகார வெறியால் தோற்க்கப்போவது பழனிசாமி தான் என்று திமுக தலைவர் ஸ்டாலின் ஆவேசமாக கூறியுள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. தங்கள் ஆட்சி தமிழகத்தில் […]
கூவத்தூரில் எங்களுக்கு டிடிவி தான் ஊத்தி கொடுத்தார் என்று அமைச்சர் சிவி சண்முகம் ஆவேசமாக பேசியுள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு […]
பிரபல நடிகை நிகிதா நிர்வாண படங்கள் கோவிலில் இருக்கும் சிற்பக்கலை போன்றது என்று கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரபல மராத்தி நடிகை நிகிதா கோகலே நிர்வாண புகைப்படங்களை சமூக வலைத் தளங்களில் பதிவேற்றி வந்துள்ளார். அதனால் அவரது இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டது. அதனால் ஆத்திரமடைந்த அவர், கோபத்தில் கோவில்களில் இருக்கும் சிற்பங்கள் போன்றதுதான் நிர்வாண கலை. பைத்தியக்காரத்தனமான புகைப்படங்களை அனுமதிக்கும் சமூக வலைத்தளம், கலைநயமிக்க புகைப்படங்களை வெளியிட மறுப்பது வியப்பாக உள்ளது. ஆபாசத்திற்கு நிர்வாணத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் […]
ட்ரம்ப் தனது பதவிக்குரிய வேலையை செய்யாமல் புலம்புவதிலும் புகார் செய்வதிலும் மட்டுமே அதிக நேரத்தை செலவிடுகிறார் என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். எனவே வருகின்ற 20ஆம் தேதி அமெரிக்காவில் 46 ஆவது ஜனாதிபதியாக பதவி ஏற்க இருக்கிறார். ஆனால் டிரம்ப் இன்னும் தனது தோல்வியை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கிறார். எந்த ஆதாரங்களும் இல்லாமல் தேர்தலில் முறைகேடு நடந்து இருப்பதாக குற்றம் கூறி வருகிறார். இந்நிலையில் ஜார்ஜியா மாகாணத்தில் […]
டெல்லியில் விவசாயிகள் சுற்றுலா சென்றுள்ளதாக பாஜக முன்னாள் அமைச்சர் விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். டெல்லியில் கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் 38 வது நாளாக விவசாயிகள் போராடி வருகிறார்கள். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் […]
தங்கள் போராட்டம் வெல்லும் வரை புத்தாண்டை கொண்டாட போவதில்லை என்று விவசாயிகள் அனைவரும் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 40 அமைப்புகளை சேர்ந்த விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்றுடன் 37வது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் […]
எனது நாட்டின் விவசாயிகளுக்கு நான் துரோகம் இழைக்க முடியாது என்று கூறி வேளாண் சட்ட நகலை சட்டப்பேரவையில் முதல்வர் கெஜ்ரிவால் கிழித்தார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு […]
தமிழகத்தில் இந்த தேர்தலில் சட்டப் போராட்டம் நடத்தியாவது டார்ச்லைட் சின்னத்தை மீட்போம் என கமல்ஹாசன் அதிரடியாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு இழந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் சின்னத்தை தேர்தல் ஆணையம் […]
தமிழகத்தில் கூட்டணி பற்றி யாரையும் ரகசியமாக சந்திக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்று கமல்ஹாசன் ஆவேசமாக கூறியுள்ளார். தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு இழந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் சின்னத்தை தேர்தல் […]
வேளாண் சட்டத்தை திரும்ப பெறவில்லை என்றால் ஒட்டுமொத்த விவசாயிகளும் அழிந்து போவார்கள் என்று அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதனால் பல்வேறு இடங்களில் விவசாயிகளின் போராட்டத்தை தடுக்க போலீசார் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் நடைமுறைக்கு ஒத்து வராத புதிய வேளாண் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறவில்லை என்றால் ஒட்டுமொத்த விவசாயிகளும் அழிந்து போவார்கள் என்று அய்யாக்கண்ணு பேட்டியில் […]
தமிழக முதல்வர் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது நிபுணர் எழுப்பிய வார்த்தையைக் கேட்டு ஆவேசமடைந்து பதிலளித்தார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் நீட் தேர்வு, மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், 10 முதல் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பற்றி பல கேள்விகள் கேட்கப்பட்டன. அப்போது நீட் தேர்வில் தமிழக அரசு மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு பற்றி முதல்வர் விளக்கிக் கொண்டிருந்தபோது, ஒரு நிபுணர் நீட் தேர்வுக்கு 7.5 சதவீதம் […]
விஜய் சேதுபதியின் குடும்பத்தை பற்றி சமூக வலைத்தளங்களில் பரவிக் கொண்டிருக்கும் ஆபாச விமர்சனங்களால் அவரின் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் நேற்று நடிகர் விஜய் சேதுபதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அவரின் தாயார் மறைவுக்கு ஆறுதல் கூறினார். அதன் பிறகு 800 திரைப்படம் பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “நன்றி, வணக்கம்” எல்லாம் முடிந்து விட்டதாக அர்த்தம், இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை என்று பதிலளித்தார். […]
பாரதிய ஜனதா ஆட்சியை பிடிப்பதில் மட்டும் ஆர்வம் காட்டுவதால், அதற்காக வன்முறையைத் தூண்ட முயற்சி செய்வதாக முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார். கொல்கத்தாவில் பாரதிய ஜனதா நடத்திய பேரணியில் கடந்த சில நாட்களுக்கு முன் வன்முறை வெடித்தது. இந்த நிலையில் நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பத்திரிக்கை நிகழ்ச்சியில், முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பேசுகையில், “நாட்டை ஒருபுறம் கொரோனா மற்றும் டெங்கு தாக்கி வருகிறது. மறுபுறம் மிகப்பெரிய பெருந்தொற்று பாரதிய ஜனதா தாக்கிக் கொண்டிருக்கிறது. […]
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு செவி சாய்க்காமல் அவர்கள் மீதே அரசு பழி சுமத்துகிறது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார். மாநிலங்களுக்கு ஏற்பட்டுள்ள ஜிஎஸ்டி வருவாய் இழப்பை ஈடுகட்டுவதற்கான இழப்பீட்டை மத்திய அரசு தற்போது வரை வழங்கவில்லை. கொரோனா காலகட்டத்தில் நிதி இல்லாத காரணத்தால் ரிசர்வ் வங்கியிடம் கடன் வாங்கிக் கொள்ளுமாறு மாநிலங்களுக்கு இரண்டு கடன் திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதனை பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்கள் மற்றும் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவான […]
பெய்ரூட் வெடி விபத்திற்கு அதிகாரிகளின் அலட்சிய போக்கே காரணம் என்று மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெய்ரூட் துறைமுகத்தில் ஏற்பட்ட வெடி விபத்திற்கு அதிகாரிகளின் ஊழல் மற்றும் அலட்சிய போக்கே காரணம் என்று குற்றம் கூறி பொதுமக்கள் அனைவரும் கற்களை வீசி ஆர்ப்பாட்டத்தில் இறங்கினார். அதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுக சரக்கு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட் தீப்பிடித்து எரிந்ததால் துறைமுகம் […]