சிறுவனின் தொண்டைக்குள் பிளாஸ்டிக் பூ இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா நாட்டில் Marley Enjakovic என்று 8 வயது சிறுவன் வசித்து வருகிறான். இந்த சிறுவன் கடந்த 5 வருடங்களாக இருமலால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த சிறுவனுக்கு சாப்பிடும் போதும் தண்ணீர் குடிக்கும் போதும் மட்டும்தான் இருமல் வந்துள்ளது. இதனால் சிறுவனின் பெற்றோர்கள் மருத்துவமனைக்கு தன்னுடைய மகனை அழைத்து சென்ற போது மருத்துவர்கள் ஆஸ்துமா இருப்பதாக சிறுவனுக்கு கூறியுள்ளனர். இந்நிலையில் திடீரென சிறுவனுக்கு இருமல் அதிகமானதால் […]
Tag: #ஆஸ்திரேலியா
திடீரென நடந்த பயங்கர துப்பாக்கி சூட்டில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள போகி என்ற பகுதியில் கால்நடைகள் பண்ணை அமைந்துள்ளது. இங்கு திடீரென பயங்கரமான துப்பாக்கி சூடு நடந்துள்ளது. இந்த துப்பாக்கி சூட்டின் போது 3 பேரின் மீது குண்டு பாய்ந்தது. இதில் ஒருவர் ரத்த வெள்ளத்தில் மிதந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு […]
பிரபல நாட்டில் வானம் பிங்க் நிறத்தில் காட்சி அளித்ததை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள மில்துரா நகர் அமைந்துள்ளது. இங்கு நேற்று முன்தினம் வானம் பிங்க் நிறத்தில் காட்சி அளித்தது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், அந்நாட்டு மக்கள் வானத்தை ஆச்சரியத்துடனும் அதிர்ச்சியுடன் பார்த்தனர். இந்நிலையில் வானம் பிங்க் நிறத்தில் காட்சி அளித்ததற்கு காரணம் ஏலியன்கள் என்றும், அமானுஷ்யமாக ஏதோ நடக்கிறது என்றும் சிலர் கூறினர். ஆனால் இந்த […]
ஆஸ்திரேலியா மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் காலநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் விளைவால் ஒவ்வொரு நாளும் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிப்படைந்து வருவதாக குறிப்பிட்டிருக்கிறது. சுற்றுச்சூழல் முக்கியத்துவம் கொண்ட பகுதியாக அறியப்படும் ஆஸ்திரேலியாவில் அரிய வகை உயிரினங்கள் வாழ்கின்றன. சமீப காலமாக காலநிலை மாறுபாடு அதிகரித்து பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. எனவே வரலாறு காணாத வகையில் ஆஸ்திரேலியா பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலியா சுற்றுச்சூழல் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், காலநிலை மாற்றம் காரணமாக உயிரினங்கள் […]
கோரல் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பலில் பயணிகளிடையே கொரோனா நோய் தொற்று பரவியுள்ளது. ஆஸ்திரேலியா நாட்டில் குயின்ஸ்லாந்து என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்திலிருந்து கோரல் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பல் ஒன்று நியூ சவுத் வேல்ஸ் நோக்கி புறப்பட்டுள்ளது. இந்த கப்பலில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் உள்ளனர். இந்நிலையில், கப்பலில் உள்ள மாலுமிகளுக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள பயணிகளுக்கும் கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. […]
ஆஸ்திரேலியாவில் அதிகாரப்பூர்வமற்ற தேசம் நடனம் என்று நட்புஷ் நடனம் கூறப்படுகிறது. இந்த நடனம் ரெட் பாஷ் இசை திருவிழாவில் அனைவரும் கூடி மகிழ்ச்சியாக நடமாடினர். இந்நிகழ்ச்சியில் அமெரிக்க பாடகி டினர் டர்னரின் சுதந்திர பாடலுக்கு முல்லட், குட்டை பாவாடையான டூடஸ், டைனோசர் உள்ளிட்ட வேடம் அணிந்து மக்கள் நடனம் ஆடினர். இந்த நடனத்தில் 4,084 பேர் ஒரே இடத்தில் கூடி நடனமாடி உலக சாதனை படைத்துள்ளனர்.
ஆஸ்திரேலிய நாட்டில் தன் கண்களை நீல நிறமாக மாற்ற நினைத்த பெண்ணிற்கு பார்வை பறிபோன சம்பவம் நடந்திருக்கிறது. ஆஸ்திரேலிய நாட்டில் வசிக்கும் ஆம்பர் லூக் என்ற 27 வயதான என்ற பெண் டாட்டூ போட்டுக் கொள்வதில் அதிக ஆர்வத்துடன் இருந்திருக்கிறார். எனவே தன் உடல் முழுக்க சுமார் 600 டாட்டுக்குள் போட்டிருக்கிறார். தன் 16 வயதிலிருந்து உடலில் டாட்டூக்களை போட்டு வரும் அந்த பெண் அதோடு இல்லாமல், தன் கண்களில் டாட்டூ போட்டிருக்கிறார். அதாவது நீல நிறமாக […]
காரில் சென்ற மூதாட்டி வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா நாட்டிலுள்ள நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடுமையான மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இங்கு காரில் சென்று கொண்டிருந்த ஒரு 72 வயது மூதாட்டி திடீரென வெள்ளத்தில் சிக்கிக்கொண்டார். இந்த நாள் பதில் போன மூதாட்டி உடனடியாக அவசர சேவை மையத்திற்கு தொடர்பு கொண்டார். அந்த தகவலின் படி சமூக இடத்திற்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படை வீரர்கள் காருக்குள் இருந்த மூதாட்டியை […]
கப்பல் எஞ்சின் பழுதாகியதால் கரைக்கு செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய நாட்டில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இங்குள்ள சிட்னி கடற்கரையிலிருந்து சரக்கு கப்பல் ஒன்று கிளம்பியது. இதில் 21 பணியாளர்கள் இருக்கின்றனர். இந்த கப்பலின் எஞ்சின் திடீரென பழுதாகி கடலில் நிற்கிறது. இந்நிலையில் பலத்த காற்று வீசுவதால் கப்பல் மீண்டும் கரைக்கு அடித்துச் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கப்பலை மீட்கும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
உலக நாடு முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான முறையான சிகிச்சை முறைகளும் கண்டறியப்படவில்லை. இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு பின்னான நீண்ட கால பாதிப்புகளை பற்றியும் பல நாட்டு நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன. அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவை சேர்ந்த நியூகேசில் பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியர் மற்றும் சுவாச நிபுணரான பீட்டர் வார்க் […]
ஆஸ்திரேலியா கோடீஸ்வரர் ஒருவர் தன் மகளுக்குக் கொடுத்த டாஸ்க் தான் தற்போது வைரலாக வருகிறது. அதாவது 12 மில்லியன் டாலர் இந்திய மதிப்பில் ரூ.90 கோடிக்கு சொந்தக்காரரான தன் தந்தை தன் மகளான கிளாரா ப்ரெளனுக்கு சொத்தை எழுதி வைத்துவிட்டு ஒரு கண்டிஷன் போட்டுள்ளார். அது என்னவென்றால் கிளாரா ஒரு நிரந்தர வேலையை தேடிக்கொள்ள வேண்டும். தனது கடைசி ஆசையை நிறைவேற்றினால் மட்டுமே தன்னுடைய சொத்துக்களை கிளாராவுக்கு போகும்படி எழுதி வைத்து விட்டு இறந்து விட்டார். இந்நிலையில் […]
இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இலங்கை நாட்டைச் சேர்ந்த 41 பேர் ஆஸ்திரேலியா நாட்டிற்கு சட்டவிரோதமான முறையில் கப்பலில் செல்ல முயற்சி செய்துள்ளனர். இவர்களில் 35 பேர் பெரியவர்களும், மீதம் இருப்பவர்கள் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஆவார். இவர்களை ஆஸ்திரேலிய கரையோர பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். அதன்பிறகு கிறிஸ்மஸ் தீவில் வைத்து மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளனர். இவர்களுடன் சேர்ந்து 100-க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியா பாதுகாப்பு வீரர்கள் கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு வந்துள்ளனர். இவர்களை […]
மேற்கு ஆஸ்திரேலியாவில் நீருக்கடியில் வளரும் உலகின் மிகப்பெரிய தாவரத்தை ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டுபிடித்திருக்கின்றனர். ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள விரிகுடாவில் இது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த தாவரம் சுமார் 200 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் விரிந்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இது விரிந்திருக்கும் மேற்பரப்பு கிளாஸ்கோ நகரத்தை விட சற்றே பெரியது எனவும் மன்ஹாட்டன் தீவை விட மூன்று மடங்கு பெரியது எனவும் கூறப்பட்டுள்ளது. Our researchers have discovered the world's largest plant in […]
ஆஸ்திரேலிய நாட்டின் கிழக்கு மற்றும் தென் பகுதிகளில் அதிக பனிப்பொழிவு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய நாட்டில் குளிர்காலம் வந்தவுடன் பலமான காற்று வீசுவதுடன் அதிக பனிப்பொழிவு ஏற்பட்டிருக்கிறது. எனவே அந்நாட்டின் டாஸ்மேனியா மற்றும் விக்டோரியா போன்ற பகுதிகளின் சாலைகள் மற்றும் வீடுகளின் மேல் பனி பொழிந்து போர்வை போர்த்தப்பட்டிருப்பது போன்று காணப்படுகிறது. இனிவரும் காலங்களில் பனிப்பொழிவு மேலும் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. ஆனால், அந்நாட்டு மக்கள் அந்த பனிச்சறுக்குகளில் உற்சாகமாக விளையாடி […]
பனி மூட்டத்திற்கு நடுவில் வானுயர்ந்த கட்டிடங்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் காட்சியளித்த மக்களை பிரம்மிக்க வைக்கிறது. ஆஸ்திரேலிய நாட்டில் சிட்னி என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் நேற்று அதிகாலையிலிருந்து கடுமையான மூடுப்பனி நிலவி வருகிறது. இந்நிலையில் வாகனங்கள் மற்றும் கட்டிடங்கள் மீது பனிபடர்ந்து காணப்படுகின்றன. இங்கு கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் வானுயர்ந்த பிரமாண்ட கட்டிடங்கள் மற்றும் துறைமுகப் பாலம் மற்றும் சிட்னி ஓபரா ஹவுஸ் போன்ற நினைவு சின்னங்களும் பனியால் மூடப்பட்டுள்ளது. இங்கே அடர்ந்த […]
ஆஸ்திரேலிய நாட்டு மக்கள் போராட்டத்தால், இலங்கையைச் சேர்ந்த தமிழ் குடும்பத்திற்கு குடியேற்ற அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இலங்கை தமிழர்களான நடேஷ் முருகப்பர், பிரியா நடராஜா ஆகிய இருவரும் கடந்த 2012ம் வருடத்தில் ஆஸ்திரேலியா நாட்டிற்கு சென்றிருக்கிறார்கள். அங்கு, குடியேற்ற உரிமைக்காக அரசாங்கத்திடம் விண்ணப்பித்துள்ளனர். எனவே, தற்காலிக பாதுகாப்பு அவர்களுக்கு அளிக்கப்பட்டது. இருவரும் காதல் திருமணம் செய்த நிலையில், அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் இவர்களது குடியேற்ற விண்ணப்பங்கள் பல வருடங்களாக பரிசீலனை செய்யப்பட்டு இறுதியில் […]
ஆஸ்திரேலியாவில் ஒரு குழந்தை எப்போதும் சிரித்துக்கொண்டிருப்பது போன்ற முக அமைப்புடன் பிறந்திருக்கிறது. உலக நாடுகளில் ஒவ்வொரு நாளும் எங்கோ ஒரு பகுதியில் அதிசயங்கள் நடந்துகொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் பிறந்த ஒரு குழந்தை சிரித்த முகத்துடன் பிறந்திருக்கிறது. அதாவது, அந்த குழந்தையின் வாய் பகுதியின் ஒரங்கள் ஒட்டாமல் இருக்கிறது. எனவே, அந்த குழந்தை எந்த நேரமும் சிரித்துக் கொண்டே இருப்பது போன்ற வகையில் முகம் அமைந்திருக்கிறது. இவ்வாறு அதிசயமான முகத்துடன் பிறந்திருக்கும் இந்த குழந்தையின் […]
ஆஸ்திரேலியா நாட்டின் பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக பொது தேர்தல் கடந்த 21ஆம் தேதி நடைபெற்றது. அப்போது லிபரல் கட்சித் தலைவர் மோரிசன் மற்றும் தொழிலாளர் கட்சித் தலைவர் அந்தோணி நார்மன் அல்பேனீஸ் இடையில் கடுமையான போட்டி நடைபெற்றது. இதில் அதிக இடங்களில் வெற்றி பெற்று நார்மன் பிரதமராக தேர்வானார். ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக அந்தோணி நார்மல் அல்பேனீஸ் முறைப்படி நகரில் உள்ள அரசு இல்லத்தில் இன்று காலை பதிவேற்றம் செய்து கொண்டார். இவர் ஆஸ்திரேலியாவின் 31ஆவது பிரதமராவார். அவருடன் […]
ஆஸ்திரேலியாவில் ஒரு நபர் தண்ணீருக்கு அடியில் தன்னை தாக்கிய முதலையுடன் சண்டையிட்டு உயிர் தப்பியிருக்கிறார். ஆஸ்திரேலிய நாட்டின் குயின்ஸ்லாந்தில் வசிக்கும் 40 வயதுடைய ஒரு நபர், தன் நண்பர்களோடு இருசக்கர வாகனத்தில் சுற்றுபயணம் சென்றிருக்கிறார். அந்த சமயத்தில், தண்ணீரின் அடியில் மறைந்திருந்த ஒரு முதலை அவரின் கையை கவ்விவிட்டது. வலி தாங்க முடியாமல் கதறிய அவர் துணிச்சலுடன் முதலையை தாக்க தொடங்கினார். ஆனால், முதலை அவரின் கையை விடவில்லை. இதனால் மற்றொரு கையை வைத்து முதலையை முடிந்தளவு […]
ஆஸ்திரேலியா, சீன நாட்டின் உளவு கப்பல், தங்களது கடல் எல்லைக்கு அருகில் அத்துமீறி நுழைந்ததாக தெரிவித்திருக்கிறது. ஆஸ்திரேலிய நாட்டின் மேற்கு பகுதியில் இருக்கும் புரூம் நகரத்திற்கு அருகில் கடல் பகுதியில் சீன நாட்டின் உளவு கப்பல் புகுந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலிய அரசு இதற்கு கடுமையாக கண்டனம் தெரிவித்திருக்கிறது. இதுபற்றி, ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமரான ஸ்காட் மாரிசன் தெரிவித்திருப்பதாவது, சீன நாட்டின் கப்பல் தங்கள் நாட்டு கடல் எல்லைப் பகுதிக்குள் வரவில்லை. ஆனால், உளவு பார்க்கும் நோக்கத்தோடு தான் […]
ஆஸ்திரேலியாவின் குவாண்டாஸ் விமான சேவை நிறுவனமானது, 12 A350-1000 ஏர்பஸ் விமானங்களை வாங்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அரசாங்கமானது, தொலைதூரத்தில் பயணங்கள் செய்வதற்காக 12 ஏர்பஸ் விமானங்களை வாங்க தயாராகிறது. வரும் 2025ம் வருட கடைசியில் சிட்னியிலிருந்து லண்டன் வரை 20 மணி நேரத்தில் 10 ஆயிரம் கிமீ தொலைவிற்கு இடைவிடாமல் செல்லக்கூடிய விமான சேவை அறிமுகமாகவிருக்கிறது. இதற்கென்று குவாண்டஸ் நிறுவனமானது, நெதர்லாந்து நாட்டின் Airbus SE நிறுவனத்திடம் 33,600 கோடி ரூபாய்க்கு 12 வகை A350-1000 விமானங்களை […]
வாக்களிப்பது என்பது நம் நாட்டில் குடி மகனாக பிறந்த ஒவ்வொருவரின் கடமையாக பார்க்கப்படுகிறது. நமது நாட்டில் நடைபெறும் தேர்தல்களில் வாக்குப்பதிவு எண்ணிக்கையானது மிகவும் குறைந்த அளவே பதிவாகி வருகிறது. ஒவ்வொரு முறையும் 100 சதவீதத்தை இலக்காகக் கொண்டு தேர்தல் ஆணையம் செயல்பட்டாலும், தேர்தலில் வாக்குப்பதிவு குறைவாக பதிவாகி வருவது பின்னடைவை ஏற்படுத்துகின்றது. உலகத்தில் அதிக உயரத்தில் உள்ள வாக்குச்சாவடியும், பள்ளத்தாக்கில் உள்ள வாக்குச்சாவடியில் இந்தியாவில்தான் உள்ளது. இந்தியாவில் தேர்தலின் பொழுது மக்கள் அதனை பொது விடுமுறையாக எண்ணி […]
இந்திய முறைப்படி தயார் செய்த உணவை சுவைத்து பார்த்த ஆஸ்திரேலிய சிறுமியின் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்தியாவில் இருக்கின்ற பல்வேறு வகையான நில அமைப்புகள், வேறுபட்ட மொழிகள், கலாச்சாரங்கள், உணவு பழக்கவழக்கங்கள் போன்றவை காரணமாக இந்தியாவை துணைக்கண்டம் என்று அழைக்கின்றனர். இவை எல்லாம் தாண்டி பொதுவாக நாம் இந்தியர் என்று அடையாளப் படுத்தப்படுவது போல் நம்மிடையே நமது உணவு பழக்க வழக்கங்களும் பொதுவாக இருக்கிறது. இந்தியர்கள் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரிவரை உள்ள மக்கள் அனைவரும் […]
ஆஸ்திரேலியாவில் மதுபான கடை ஒன்றில் திடீரென கங்காரு நுழையும் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. ஆஸ்திரேலியாவை பூர்வீகமாகக் கொண்ட விலங்கு கங்காரு. அவை ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்காகும். எனவே பொது இடங்களில் மக்கள் மத்தியில் கங்காருக்கள் வருகை புரிவது அங்கு இயல்பானதாகும். ஆனால், இது கொஞ்சம் புதிதானது. அதாவது கங்காரு மதுபானக் கடைக்கு வருகை புரிந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியில் உள்ள மதுபானக் கடைக்கு அழையா விருந்தாளியாக கங்காரு ஒன்று வருகை புரிந்ததுள்ளது. வாடிக்கையாளர் வரிசையில் […]
நியூசிலாந்தில் விலைவாசி உயர்வால் மக்கள் அன்றாட தேவைக்கான அத்தியாவசிய பொருட்களை ஆஸ்திரேலிய நாட்டில் ஆர்டர் செய்து வாங்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. நியூசிலாந்தில் பண வீக்கம் ஏற்பட்டிருக்கிறது. உணவு பொருட்களுக்கான விலை அதற்கு முந்தைய வருடத்தை காட்டிலும் 7.6% அதிகரித்திருக்கிறது. கடந்த பத்து வருடங்களில் இல்லாத வகையில் அதிகரித்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை 18% அதிகரித்திருக்கிறது. எரிபொருளின் விலையும் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த மக்கள், தங்களுக்கு தேவையான பொருட்களை ஆஸ்திரேலியாவிலிருந்து ஆர்டல் […]
ஆஸ்திரேலியாவில் மதுபோதையில் தன் மகள் காரில் சிக்கியது கூட தெரியாமல் தாயொருவர் வேகமாக கார் ஓட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி மாகாணம் காரிங்பக் பகுதியை சேர்ந்த பெண் டெல் பல்மர் (வயது 58). இவர் கணவர் வாரன் பல்மர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அதில் ஒருவர் கெலி பெனித் (27). மதுக்குடிக்கும் பழக்கமுடைய டெல் பல்மரை அவரது மகள்கள் கண்டித்துள்ளனர். இந்தநிலையில் கடந்த மே 2 ம் தேதி மாலை மதுபான […]
ரஷ்ய நாட்டிற்குரிய 14 நிறுவனங்களின் மீது பொருளாதார தடை அறிவிப்பதாக ஆஸ்திரேலியா தெரிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி அன்று போர்தொடுக்க தொடங்கியது. எனவே ரஷ்ய நாட்டின் மீது பல நாடுகள் பொருளாதார தடைகளை அறிவித்திருக்கின்றன. இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத்துறை அமைச்சரான பேய்ன், தங்கள் நாட்டில் இருக்கும் ரஷ்ய நாட்டிற்குரிய பாதுகாப்பு துறைக்கான போக்குவரத்து நிறுவனம், கப்பல் கட்டும் நிறுவனம் போன்ற 14 நிறுவனங்களின் மீது பொருளாதார தடை […]
ஆஸ்திரேலிய நாட்டில் பொதுத்தேர்தல் அடுத்த மாதத்தில் நடக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் வரும் மே மாதம் 21-ஆம் தேதியன்று பொதுத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதனை அந்நாட்டின் பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தியிருக்கிறது. பிரதமர் ஸ்காட் மோரிசனின் கூட்டணி கட்சி ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொள்ளுமா அல்லது அந்தோணி அல்பானீஸ் தலைமையில் புதிய ஆட்சியைப் பிடிக்குமா என்பதை தீர்மானிக்க அடுத்த மாதம் தேர்தல் நடக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் கடந்த 2018 ஆம் வருடத்திலிருந்து ஸ்காட் மோரிசன் பிரதமராக இருக்கிறார். […]
சிட்னி நகரில் பெய்து வரும் கன மழையால் சாலைகள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. ஆஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 1,200 மில்லி லிட்டர் மழை பெய்து வந்துள்ள நிலையில், கடந்த மூன்று மாதங்கள் அதைவிட கூடுதலாக 1,227 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. இந்த நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் நீண்ட கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்க தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்.
பிரிட்டனை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுலா சென்ற போது, தந்தை மற்றும் மகன் பாறைச்சரிவில் மாட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பிரிட்டனிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு 5 பேர் கொண்ட குடும்பத்தினர் சுற்றுலா வந்துள்ளனர். அப்போது, ப்ளூ மவுண்டன்ஸ் தேசிய பூங்காவில் திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த சமயத்தில் நடைபாதையில் சென்று கொண்டிருந்த அந்த குடும்பத்தை சேர்ந்த ஒரு நபரும் அவரின் 9 வயது மகனும் பாறைச்சரிவில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், அதே […]
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா அணியும், ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணிக்கும் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 போட்டி லாகூரில் நேற்று நடந்தது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கி விளையாடிய பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர் முஹம்மது ரிஸ்வான் 23 ரன்கள் அடித்தார். கேப்டன் பாபர் ஆசம் 46 […]
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்றிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சிட்னியை அடுத்த புளூ மவுண்டேயென் தேசிய பூங்கா பகுதியில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் 9 வயது மகனும், தந்தையும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதையடுத்து பலத்த காயங்களுடன் தாய் மற்றும் மற்றொரு மகனை காவல்துறையினர் ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்டுள்ளனர். அதேபோல் இந்த சம்பவத்தில் அதே குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
90 ஆயிரத்திற்கும் அதிகமான இந்திய மாணவர்கள் உயர்கல்வி படிக்க தங்கள் நாட்டிற்கு வருவதாக வர்த்தக மற்றும் முதலீட்டு ஆணையத்தின் ஆணையர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா நாட்டில் உயர்கல்விக்காக சேரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்று அந்நாட்டின் வர்த்தக மற்றும் முதலீட்டு ஆணையத்தின் ஆணையர் டாக்டர் மோனிகா தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் உள்ள உயர்கல்விக்கான வாய்ப்புகள் குறித்து சென்னையிலுள்ள நுங்கம்பாக்கத்தில் வைத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது “எங்கள் நாட்டில் 90 ஆயிரத்திற்கும் அதிகமான இந்திய […]
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் உள்ள கடற்கரையில் அடையாளம் தெரியாத உயிரினம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளது. ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் உள்ள கடற்கரையில் நீண்ட நகங்களுடன் அடையாளம் தெரியாத ஜந்து இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளது. இதனை அந்த பகுதியில் உள்ள ஒருவர் வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த வேற்றுகிரகவாசியாக இருக்குமோ என பலரும் கமெண்ட் செய்துள்ளனர்.
சீன கோர்ட்டில் கதவுகளை மூடிக்கொண்டு ஆஸ்திரேலியா செய்தி நிபுணரிடம் ரகசிய விசாரணை நடைபெற்று வருகிறது. சீனாவில் அரசு ஊடகமான ‘சி.ஜி.டி.என்’ செய்தி நிறுவனத்தில் வேலை பார்ப்பவர் சீன பெண்ணான செங் லீ . இவர் கடந்த 2020ஆம் ஆண்டு சீன காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். இவர் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது அரசின் ரகசியங்களை சட்ட விரோதமாக வினியோகித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா அவரது கைது நடவடிக்கையில் நீதியின்அடிப்படை தர நிலைகள் நிறைவேற்ற […]
ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் 4வது ‘டோஸ்’ தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படுகிறது. நமது நாட்டில் கொரோனாவுக்கு எதிராக தற்போது 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பு ஊசி முன்னெச்சரிக்கை தடுப்பூசி என்னும் பெயரில் போடப்படுகிறது. இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியாவில் குளிர் காலத்திற்கு முன்னதாக பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு நான்காவது டோஸ் கொரோனா தடுப்பூசியை போடுவதற்கு மருத்துவர் கட்டுப்பாட்டாளர்கள் ஒப்புதல் அளித்து இருக்கிறார்கள். இது இரண்டாவது பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசி ஆகும். 65 வயதிற்கு […]
ரஷ்யா நடத்தும் போரில் பதில் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆஸ்திரேலியா ஏவுகணைகளை அனுப்பியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 12 ஆம் நாள் ஆக கடுமையாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டின் பல நகரங்களை ரஷ்ய படைகள் ஆக்கிரமித்திருப்பதோடு தலைநகரை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது. எனவே உக்ரைன் படைகள் ரஷ்ய படைகளை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கின்றன. இந்தப் போரை நிறுத்த வேண்டும் என்று பல நாடுகளும் முயற்சி […]
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வரலாறு காணாத கன மழை பெய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக நியூசவுத்வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த கன மழையால் குயின்ஸ்லேன்ட் மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தலைநகர் பிரிஸ்பேன் மற்றும் பல நகரங்களில் கடந்த 22ஆம் தேதி முதல் கனமழை பெய்து வருவதால் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. இந்த கனமழையால் சுமார் 18 ஆயிரம் வீடுகள் வெள்ளத்தில் […]
கடற்பகுதியை கண்காணிக்கும் விமானத்தை சீனா போர் கப்பலிலிருந்து லேசர் தாக்குதல் நடத்தயுள்ள சம்பவம் பரபரப்பை எற்படுத்தயுள்ளது. ஆஸ்திரேலியா நாட்டில் இருக்கும் சிறப்பு பொருளாதார மண்டல கடற்பகுதியை கண்காணிப்பு விமானம் கண்காணித்துக் கொண்டு இருந்துள்ளது. அப்போது சீனா போர் கப்பலிலிருந்து அந்த விமானத்தை நோக்கி லேசர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த தாக்குதல் குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறுகையில் “இந்த தாக்குதல் ஒரு தீவிரமான பாதுகாப்பு பிரச்சினை என்றும் அபாயகரமானது. மேலும் தொழில் முறையிலான […]
ஆஸ்திரேலியாவிற்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட இந்தியர்கள் சுற்றுலா வர அனுமதி அளித்துள்ளது. நாடு முழுவதும் தற்போது கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருவதையடுத்து, ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியா வெளிநாட்டு பயணிகளுக்கு சுற்றுலா வர அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு முன்னர் மாணவர்கள், பணியாளர்கள், ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றவர்களுக்கு மட்டும் தனிமைபடுத்துதலில் இருந்து விலக்கு அளித்து அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட இந்தியர்களுக்கு ஆஸ்திரேலிய நாட்டிற்குள் […]
ஆஸ்திரேலியாவில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்ததால் தடுப்பூசி எடுத்துக் கொண்ட பிற நாட்டு பயணிகள் நாட்டிற்குள் வர அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் தற்போது கொரோனோ தொற்று குறைந்திருக்கிறது. எனவே, அந்நாட்டு அரசு தடுப்பூசி எடுத்துக்கொண்ட பிற நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் தங்கள் நாட்டிற்கு வரலாம் என்று அனுமதி வழங்கியிருக்கிறது. இதனைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோர் ஆஸ்திரேலியாவிற்கு சென்று கொண்டிருக்கிறார்கள். ஏறக்குறைய இரண்டு வருடங்கள் கழித்து தங்கள் உறவினர்களை சந்தித்ததாக பலர் ஆனந்த கண்ணீருடன் தெரிவித்துள்ளனர். சிட்னி […]
ஆஸ்திரேலியா, தங்கள் கடற்படை விமானத்தை சீனா லேசர் மூலமாக குறிவைத்தற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சீனா, தென் சீன கடல் பகுதி முழுக்க தங்களுக்குரியது என்று கூறுவதோடு, பிற நாடுகளின் போர்க் கப்பல்களையும், கப்பல்களையும் எல்லை பகுதிக்குள் வர விடாமல் தடை செய்திருக்கிறது. அதனை மீறி எல்லைப் பகுதிக்கு வரும் கப்பல்களை தங்கள் போர்க் கப்பல்கள் மூலமாக தடுத்துக் கொண்டிருக்கிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், அமெரிக்கா தங்களின் விமானம் தாங்கி கப்பல்கள், போர்க்கப்பல்கள் போன்றவற்றை தென்சீனக் […]
வான்வெளியில் ஏலியன்கள் எனப்படும் வேற்று கிரகவாசிகள் யாரும் இல்லை என ஆஸ்திரேலியா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கலிபோர்னியாவில் உள்ள SETI அமைப்பின் ஆய்வாளர்கள், மேற்கு ஆஸ்திரேலிய பாலைவனத்தில் உள்ள முர்ச்சிசன் வைட்பீல்ட் அரே என்ற உலகின் மிக உணர் திறன் வாய்ந்த ரேடியோ தொலைநோக்கி மூலம் வான்வெளியை ஆராய்ச்சி செய்தனர்.அதன் பின்னர் 144 கோள்களையும்,ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களையும் ஆராய்ச்சி செய்தனர். சுமார் 7 மணி நேரம் நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில் நட்சத்திரங்கள் மற்றும் ஏனைய கோள்களில் இருந்து எந்த அதிர்வெண்ணும் […]
ஆஸ்திரேலியாவில் பெர்த் நகர் அருகே மூன்று பகுதிகளில் புதர் தீ ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதிகளில் அவசர எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேறிய நிலையில் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதற்கிடையே வீட்டில் பற்றிய தீயை அணைக்க முயற்சித்த நபர்கள் சிலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து 200-க்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஆஸ்திரேலியா தூதரகத்தில் பெண்கள் கழிவறையில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா தூதரகம் தாய்லாந்து நகரிலுள்ள பாங்காங்கில் அமைந்துள்ளது. இந்த தூதரகத்தில் பெண்கள் கழிவறைகளில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் ஆஸ்திரேலிய தூதரகத்தின் முன்னால் பணியாளர் ராயல் தாய் மீது வழக்கு தொடுக்கப்பட்டு அவரை கடந்த மாதம் கைது செய்திருப்பதாக ஆஸ்திரேலிய வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறை உறுதிப்படுத்தியுள்ளது. இது குறித்து வெளிவுறவு துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில், தங்களுக்கு அனைத்து ஊழியர்களின் […]
ஆஸ்திரேலியாவில் இலங்கையைச் சேர்ந்த ஒரு நபர் தன் பிள்ளைகளை கொன்று விட்டு தற்கொலை செய்த சம்பவம் குறித்து பல அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. அமெரிக்காவில் உள்ள Huntingdale என்னும் பகுதியில் வசித்த இலங்கையைச் சேர்ந்த இந்திகா குணத்திலகா என்ற 40 வயது நபர் தன் மகன் மற்றும் மகளை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்தார். எனவே, இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், குணத்திலகா பற்றி பல தகவல்கள் தெரியவந்திருக்கிறது. இவர் ஆஸ்திரேலியாவிற்கு […]
ஆஸ்திரேலியா அமெரிக்காவின் பைசர் நிறுவனம் கொரோனாவுக்கு எதிராக தயாரிக்கும் தடுப்பூசியை பூஸ்டர் டோஸ்ஸாக 16 முதல் 17 வயதுக்குட்பட்டவர்களுக்கு செலுத்த அனுமதி அளித்துள்ளது. ஆஸ்திரேலிய நாட்டில் கொரோனாவுக்கு எதிராக பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி 18 வயதுக்கு மேற்பட்ட 93 சதவீதம் பேர் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை முழுமையாக பெற்றுக் கொண்டுள்ளார்கள். இந்நிலையில் ஆஸ்திரேலிய அரசு அதிரடி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது 16 முதல் 17 வயதுக்குட்பட்ட நபர்களுக்கு கொரோனாவுக்கு […]
விண்வெளியில் சுழலக்கூடிய பொருள் ஒன்றிலிருந்து 18 நிமிடங்களுக்கு ஒரு தடவை ரேடியோ சிக்னல் வெளியேறுவதாக விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள். கடந்த 2018 ஆம் வருடத்தில் விண்வெளியில் சுழலக்கூடிய ஒரு பொருள் கண்டறியப்பட்டது. இந்த பொருளில் இருந்து ஒரு மணி நேரத்திற்கு மூன்று தடவை கதிர்வீச்சு வெளிப்பட்டது என்று ஆய்வாளர்கள் கூறினர். அந்த சமயங்களில், அந்த பொருளிலிருந்து வெளியேறக்கூடிய ரேடியோ சிக்னல் தெளிவாக உள்ளது என்றும் கூறினார்கள். இந்நிலையில், தற்போது 18 நிமிடங்களுக்கு ஒரு தடவை அதிலிருந்து, ரேடியோ சிக்னல் […]
எரிமலை வெடிப்பால் நில அதிர்வு மற்றும் சுனாமி போன்ற பேரழிவை எதிர்கொண்ட டோங்கா நாட்டிற்கு ஆஸ்திரேலிய அரசு நிவாரண பொருட்கள் அனுப்பியிருக்கிறது. டோங்கா என்ற பசிபிக் தீவு நாட்டில் கடலுக்கு அடியில் இருந்த எரிமலை வெடித்து சிதறியதில் சுனாமி உருவாகி பெரும் அழிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் பாதிப்படைந்தனர். மேலும், பல்வேறு பகுதிகள் கடும் சேதமடைந்தது. இதனால் ஏற்பட்ட சாம்பல் விமான நிலைய ஓடுபாதை முழுக்க படர்ந்து காணப்பட்டது. அது தற்போதுதான் நீக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் […]
ஆஸ்திரேலியாவில் கொரோனாவால் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஆஸ்திரேலிய நாடு நேற்று கொரோனாவால் மிகப்பெரிய பலி எண்ணிக்கையை சந்தித்துள்ளது. அந்த வகையில் நேற்று மட்டும் ஆஸ்திரேலியாவில் 80 பேர் கொரோனாவால் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதற்கு முன்பு கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அதிகப்படியான பலி எண்ணிக்கை 78-ஆக இருந்தது. ஆனால் ஆஸ்திரேலியாவில் கொரோனா தொற்று பரவத் தொடங்கிய காலத்தில் பலி எண்ணிக்கை மூவாயிரத்துக்குள் தான் இருந்தது என்று கூறப்படுகிறது.