ஆஸ்திரேலியாவில் கொண்டாடப்பட்டு வரும் தேசிய அரவணைப்பு தினத்தை முன்னிட்டு 2 ஆண் யானை குட்டிகள் ஒன்றோடொன்று நெருக்கமாக தூங்கும் காட்சிகள் தொடர்புடைய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னியில் விலங்கியல் பூங்கா ஒன்று உள்ளது. இந்த பூங்காவில் அசோகா, கவி என்ற 2 ஆண் யானை குட்டிகள் வளர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த 2 ஆண் யானை குட்டிகளும் ஒன்றோடொன்று நெருக்கமாக உறங்கிக்கொண்டிருந்துள்ளது. இதனை பூங்காவின் உரிமையாளர்கள் வீடியோவாக பதிவு செய்துள்ளார்கள். இதனையடுத்து ஆஸ்திரேலியாவில் தற்போது கொண்டாடப்பட்டு வரும் […]
Tag: #ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தொடர்பான தடுப்பூசியை செலுத்தி கொள்ளாவிடில் அபராதம் விதிக்கப்படும் என்ற சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் இயற்றுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் மிக வேகமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு அதிரடியான மசோதா ஒன்றை நிறைவேற்ற தீர்மானம் செய்துள்ளது. அதாவது 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தொடர்பான தடுப்பூசியை கட்டாயமாக செலுத்திக் கொள்ள வேண்டுமென்ற மசோதா வாகும். இந்த மசோதாவின்படி தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டிய நபர்களுக்கு காவல்துறை அதிகாரிகள் […]
ஆஸ்திரேலிய நாட்டில் டென்னிஸ் வீரரான ஜோகோவிச்சின் விசா ரத்து செய்யப்பட்ட நிலையில், அது நிறுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய நாட்டின் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் பங்கேற்க மெல்போர்ன் நகருக்கு சென்ற டென்னிஸ் வீரரான ஜோகோவிச், தடுப்பூசி எடுத்துக்கொள்ளவில்லை. மேலும், அதற்கான சரியான ஆவணங்களை அவர் சமர்ப்பிக்கவில்லை. எனவே, அவரின் விசா ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அவர் விமான நிலையத்தில், சுமார் ஒன்பது மணி நேரங்களாக காத்திருந்த பின், அவரின் விசா ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், […]
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் ஆஸ்திரேலிய நாட்டின் அதிபர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்தியுள்ளார். சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலக நாடுகளுக்கு பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இதனை தடுக்க அனைத்து நாடுகளும் பல நடவடிக்கைகளை தங்கள் நாட்டிற்குள் மேற்கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய நாட்டின் அதிபரான கார்ல் நெஹாமர் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆகையினால் கார்ல் தன்னை வீட்டிலேயே தனிப்படுத்தி கொண்டுள்ளார். இதனையடுத்து அவர் தான் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
உலகின் நம்பர்-1 டென்னிஸ் வீரரான செர்பியாவை சேர்ந்த ஜோகோவிச் தங்கள் நாட்டிற்குள் நுழைய கூடாது என்று ஆஸ்திரேலிய அரசாங்கம் விமான நிலையத்தில் வைத்தே தடுத்து நிறுத்தியுள்ளது. செர்பியாவை சேர்ந்த ஜோகோவிச் உலகின் நம்பர்-1 டென்னிஸ் வீரராக திகழ்கிறார். இவர் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள ஓபனில் பங்கேற்க அந்நாட்டிற்கு வந்துள்ளார். ஆனால் இவரை ஆஸ்திரேலியாவின் எல்லை பாதுகாப்பு படையினர்கள் கொரோனா தொடர்பான எந்தவித ஆவணங்களும் இல்லை என்ற காரணத்தினால் விமான நிலையத்திலேயே தங்கள் நாட்டிற்குள் நுழைய கூடாது என்று […]
ஆஸ்திரேலியாவில் ஓமிக்ரான் மிக வேகமாக பரவி வரும் நிலையில் அந்நாட்டில் கொரோனா தொடர்பான புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த கொரோனாவிற்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஓமிக்ரான் உலக நாடுகள் முழுவதும் மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்கள். அதன்படி ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் ஓமிக்ரானை முன்னிட்டு சில கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது மதுபானம் மற்றும் இரவு நேர விடுதிகளில் பொது […]
ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு நடிகை, இந்த 2022-ஆம் வருடம் எனக்கு சிறப்பாக இல்லை என்று தெரிவித்திருக்கிறார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த அல்லி சிம்ப்சன் என்ற நடிகை, ஆழமில்லாத ஒரு குளத்தில் டைவ் அடித்திருக்கிறார். அப்போது, அவரின் கழுத்துப்பகுதியில் பயங்கரமாக அடிப்பட்டது. இதனால், அவரின் கழுத்து உடைந்தது. எனவே, தற்போது, குயின்ஸ்லாந்து நகரில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, “நான் தற்போது உயிரோடு இருப்பதே அதிர்ஷ்டம் தான், இன்னும் […]
ஆஸ்திரேலியாவை சேர்ந்த முதியவர் ஒருவர் முதல்முறையாக மூளையில் வைக்கப்பட்ட ‘சிப்’ உதவியுடன் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிலிப் (வயது 62) என்ற முதியவர் பல ஆண்டுகளாக முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு கடந்த 2015-ஆம் ஆண்டில் மூளையில் ‘மைக்ரோசிப்’ ஒன்று பொருத்தப்பட்டது. இதன் மூலம் அவருடைய சிந்தனைகள் தற்போது எழுத்து உருவம் பெற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மைக்ரோசிப் உதவியுடன் முதல்முறையாக பிலிப் தனது டுவிட்டர் […]
ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், தங்கள் நாட்டிற்குள் நுழைய டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சிற்கு அனுமதி இல்லை என்றும் அவரின் விசா ரத்து செய்யப்பட்டிருக்கிறது என்றும் கூறியிருக்கிறார். ஆஸ்திரேலிய நாட்டின் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் பங்கேற்க மெல்போர்ன் நகருக்கு சென்ற டென்னிஸ் வீரரான ஜோகோவிச், தடுப்பூசி எடுத்துக்கொள்ளவில்லை. மேலும், அதற்கான சரியான ஆவணங்களை அவர் சமர்ப்பிக்கவில்லை. எனவே, அவரின் விசா ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அவர் விமான நிலையத்தில், சுமார் ஒன்பது மணி நேரங்களாக காத்திருந்தார். […]
ஆஸ்திரேலியாவில் தென்பட்ட நடக்கும் திறன் கொண்ட மீன் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய நாட்டில் சுமார் 22 வருடங்கள் கழித்து pink hand fish என்ற துடுப்புகளை பயன்படுத்தி நடக்கக்கூடிய திறனுடைய அரியவகை மீன் மீண்டும் தென் பட்டிருக்கிறது. இதற்கு முன், கடந்த 1999-ஆம் வருடத்தில் தான் இந்த மீன் இறுதியாக காணப்பட்டிருக்கிறது. எனினும், கடந்த சில தினங்களுக்கு முன், டாஸ்மானியா என்னும் தீவின் கடற்கரை பகுதியில் இவை காணப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். முன்பு காலத்தில் இந்த மீன்கள் […]
ஆஸ்திரேலியாவில் மிக அரிய வகையான ‘நடக்கும் மீன்’ டாஸ்மானியா தீவின் கடற்கரையில் 22 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அழிந்து வரும் அரிய வகை உயிரினமான ‘நடக்கும் மீன்’ இனத்தை ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா தீவின் கடற்கரையில் 22 வருடங்களுக்குப் பிறகு கண்டதாக காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 1999-ஆம் ஆண்டில் தான் முதன்முதலாக இந்த பிங்க் நிற மீன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த அரிய வகை மீன் இனம் ஒரு […]
தென்னாப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த ஓமிக்ரான் பரவலை முன்னிட்டு ஆஸ்திரேலியாவில் மிக முக்கிய கட்டுப்பாடு ஒன்று போடப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த கொரோனாவிற்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஓமிக்ரான் தொற்று உலகின் அனைத்து நாடுகளுக்கும் மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவிலுள்ள நியூ சவுத் வேல்ஸ் என்னும் மாநிலம் ஓமிக்ரான் பரவலை முன்னிட்டு அதிரடியான கட்டுப்பாடு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது வருகின்ற வியாழக் கிழமையிலிருந்து பொது இடங்களில் இனி கட்டாயமாக அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று […]
தென்னாப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த ஓமிக்ரான் பரவலை கட்டுபடுத்த தங்கள் நாட்டிற்குள் பொதுமக்கள் போட தேவையில்லை என்று ஆஸ்திரேலியாவின் சுகாதார துறை அமைச்சரான கிரெக் ஹன்ட் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நெதர்லாந்து தங்கள் நாட்டில் பரவும் ஓமிக்ரான் வைரஸை கட்டுப்படுத்த புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் காலகட்டத்தில் மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனை சுட்டிக்காட்டி பேசிய ஆஸ்திரேலிய சுகாதார அமைச்சரான கிரெக் ஹன்ட் தங்கள் நாட்டிற்குள் ஓமிக்ரான் பரவலை தடுக்க பொது முடக்கம் தேவையில்லை என்று தெரிவித்துள்ளார். ஏனெனில் […]
ஆஸ்திரேலியாவில் சிறிய வகை சுற்றுலா விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உட்பட 4 நபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். ஆஸ்திரேலியாவில் இருக்கும் ரெட் கிளிஃப் நகரத்திற்கு அருகில் சிறிய விமானத்தை, 69 வயதுடைய விமானி இயக்கியிருக்கிறார். அந்த விமானத்தில், சதுப்புநில காடுகளுக்கு குழந்தைகள் 2 பேர் உட்பட மூன்று நபர்கள் சுற்றுலா சென்றுள்ளனர். இந்நிலையில் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென்று விமானம் கடலில் விழுந்து நொறுங்கிவிட்டது. இந்த பயங்கர விபத்தில், விமானி […]
ஆஸ்திரேலியாவில் பள்ளிக்கூடம் ஒன்றில் விளையாட்டு நிகழ்ச்சியின் போது ஐந்து குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் டெவன்போர்ட் என்ற பகுதியில் அமைந்துள்ள ஹில்ரெட்ஸ் தொடக்கப்பள்ளியில் நேற்று பரபரப்பாக விளையாட்டு நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தது. அதில் பலூன் மூலம் வீடு போன்ற அமைப்பு ஒன்று விளையாட்டு நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த வீடு போன்ற அமைப்பானது முற்றிலுமாக காற்று நிரப்பப்பட்டு குழந்தைகள் விளையாடுவதற்கு ஏற்றவாறு தயார் நிலையில் இருந்தது. அதேபோல் ஒரு பக்கம் குழந்தைகளுக்காக தண்ணீரில் […]
ஆஸ்திரேலியாவில் பள்ளியில் விளையாடிய போது விபத்து ஏற்பட்டு 32 அடி உயரத்திலிருந்து குழந்தைகள் நான்கு பேர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் இருக்கும் டாஸ்மேனியாவின் Devonport நகரத்தில் அமைந்துள்ள Hillcrest என்ற தொடக்கப்பள்ளியில், சிறுவர்கள், jumping castle-ல் விளையாடினர். அப்போது திடீரென்று, jumping castle காற்றில் பறந்திருக்கிறது. இதில் சுமார் 32 அடி உயரத்திலிருந்து குழந்தைகள் கீழே விழுந்ததில் 4 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். "This is a very tragic […]
பாம்பு கடித்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உலகில் அதிக விஷமுள்ளவைகளில் புலி பாம்பும் ஒன்றாகும். இந்த பாம்பு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஏழு வயது சிறுவனை கடித்துள்ளது. இதனையடுத்து அவன் உடனடியாக மீட்கப்பட்டு ஹெலிகாப்டர் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். மேலும் அவனுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது பாம்பு கடியிலிருந்து மீண்டு வருகிறான். குறிப்பாக ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு கடற்கரையில் அதிகமாக இவ்வகை பாம்புகள் அதிகளவில் காணப்படுகிறது. இது குறித்து அந்நாட்டின் புவியியல் […]
கிறிஸ்துமஸ் பண்டிகையின் காரணமாக மூடப்பட்டிருந்த எல்லைகள் திறக்கப்பட்டுள்ளன. டெல்டா என்னும் உருமாற்றம் அடைந்த தொற்றின் காரணமாக ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து எல்லை மாகாணங்கள் 5 மாதங்களாக மூடப்பட்டிருந்தது. மேலும் அருகே உள்ள விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்திற்கு செல்ல மக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் வருகையினால் பல மாகாணங்களில் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. அதிலும் தடுப்பூசி செலுத்தியவர்கள் அனைவரும் செல்லலாம் என்பதால் குயின்ஸ்லாந்து மாகாண எல்லைகள் திறந்து விடப்பட்டன. இதனால் […]
இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டி கடந்த 8-ஆம் தேதி தொடங்கியது. இதில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதில் முதல் டெஸ்டில் தோல்வியடைந்த இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் மோசமான சாதனையை படைத்துள்ளது. குறிப்பாக இங்கிலாந்து ,ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய மண்ணில் கடைசியாக விளையாடிய 11 டெஸ்ட் போட்டிகளில் ஒரு வெற்றி கூட பெறவில்லை .இதில் 10 […]
ஆஸ்திரேலியாவில் கடந்த 3 நாட்களாக எரியும் புதர் தீயை கட்டுக்குள் கொண்டுவர சுமார் 100க்கும் மேலான தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள். ஆஸ்திரேலியாவில் மார்க்கரெட் ரிவர் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் கடந்த 3 நாட்களாக சுமார் 6,000 ஹெக்டர் பரப்பளவில் புதர் தீ எரிந்து வருகிறது. இந்த புதர் தீயினால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்துள்ளது. இதனையடுத்து கடந்த 3 நாட்களாக பற்றி எரியும் தீயினை கட்டுக்குள் கொண்டுவர சுமார் 100 க்கும் […]
மார்ரகேஷ் எனும் ஆடு ஆஸ்திரேலியாவில் இந்திய மதிப்பின்படி சுமார் 15.6 லட்சத்துக்கு ஆன்லைன் மூலம் ஏலம் விடப்பட்டுள்ளது. பல நாடுகளில் தங்களின் தேவைக்கு ஏற்ப அல்லது மக்கள் வளர்ப்பதற்கு விரும்பும் விலங்குகள் ஏலம் விடப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக சில முக்கிய பண்டிகையின்போது ஆடுகள் ஏலத்திற்கு வருவது வழக்கமாக இருக்கிறது. இந்நிலையில் மார்ரகேஷ் எனும் ஆடு ஆஸ்திரேலியாவில் 21,000 டாலருக்கு அதாவது இந்திய மதிப்பின்படி 15.6 லட்ச ரூபாய்க்கு ஆன்லைனில் ஏலம் விடப்பட்டு உள்ளது. இந்த ஏலமானது […]
ஆஸ்திரேலிய நாட்டின் நாடாளுமன்றத்தில் பணிபுரியும் இரண்டு பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய நாட்டின் பாராளுமன்றத்தில், 3 பெண்கள் பணியாற்றிவருகிறார்கள். அதில் இருவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த 2 பெண்களும் பாலியல் ரீதியாக துன்புறுத்துல்களை அனுபவித்துள்ளனர். இந்த தகவல், தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், நாட்டின் பிரதமரான ஸ்க்காட் மோரிசன், தற்போது தேர்தலை சந்திக்கவுள்ளார். இந்நிலையில், இந்த சம்பவம் அவருக்கும் நெருக்கடியை அதிகப்படுத்தியிருக்கிறது.
தென்னாப்பிரிக்காவிலிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலியாவிற்கு வந்த நபரை பரிசோதனை செய்ததில் அவருக்கு ஓமிக்ரான் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆஸ்திரேலியாவில் தற்போது உருமாற்றமடைந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமரான ஸ்காட் மோரிசன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது வருகின்ற டிசம்பர் 15 ஆம் தேதி வரை தளர்த்தப்பட்ட கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகளை நிறுத்தி வைப்பதற்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த நபர் ஒருவர் கடந்த 2015 ஆம் ஆண்டு பூங்காவிலிருந்து எடுத்துவந்த கிட்டத்தட்ட 4.6 பில்லியன் ஆண்டு காலத்தை சார்ந்த சுமார் 17 கிலோ எடை கொண்ட எரிகல்லை தன்னுடைய வீட்டில் வைத்து 6 ஆண்டுகளாக தங்கம் என்று நினைத்து பராமரித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் டேவிட் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 6 வருடங்களுக்கு முன்பாக பூங்கா ஒன்றிற்கு தங்கத்தை தேடி சென்றுள்ளார். அவ்வாறு தங்கத்தைத் தேடி சென்ற அவருக்கு சுமார் 4.6 பில்லியன் வருடத்தை […]
ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு குடியிருப்பில் பூனை ஒன்று தன் உரிமையாளரை காப்பாற்றியிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் உள்ள dartmoor என்ற பகுதியில் வசிக்கும், ரிக்கி ஓவன்ஸ் என்ற நபர், 2 நாட்களுக்கு முன்பு, தன் குடியிருப்பின் கதவுக்குள் ஏதோ புகுந்து செல்வதை பார்த்திருக்கிறார். ஆனால், அதனை பெரிதாக கண்டு கொள்ளாமல் மது விடுதிக்கு சென்று விட்டார். அதன்பின்பு அவர் குடியிருப்பிற்கு திரும்பியபோது, தன் பூனை வித்தியாசமாக செயல்படுவதைப் பார்த்து குழம்பியிருக்கிறார். அவரின் பூனை குளிர்சாதனப் பெட்டிக்கு அருகில் இருந்த பைகளை […]
ஆஸ்திரேலியாவில் ஒரு நபர் தன் செல்ல நாய், ஆவியாக வந்த நாயோடு விளையாடியதாக கூறியதோடு, அது தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஜேக் டிமார்கோ, தனது செல்லப்பிராணி, ஆவியாக வந்த நாயுடன் விளையாடியதாக கூறியுள்ளார். மேலும் தன் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோ, 7 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது. எனினும், சிலர் அது ஆவியாக வந்த நாய் இல்லை, என்றும், இது வதந்தி என்றும் […]
ஆஸ்திரேலியாவில் ஒரு காட்டு ஆட்டுக்கிடாய் 11.25 லட்ச ரூபாய்க்கு வாங்கப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியா நாட்டில் இருக்கும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வசிக்கும் ஆண்ட்ரூ மோஸ்லி காட்டு ஆடுகளை வளர்த்து விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் இவர், அம்மாநிலத்தின் கோபார் நகரில் மரக்கேஷ் என்ற ஆட்டுக்கிடாயை சுமார் 11.25 லட்ச ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார். அந்நாட்டில், இதற்கு முன்பு ஒரு ஆடு, 12000 ஆஸ்திரேலிய டாலர் மதிப்பில் விற்பனை செய்யப்பட்டது தான் சாதனையாக இருந்தது. தற்போது, அந்த சாதனை முறியடிக்கப்பட்டிருக்கிறது. […]
ஆஸ்திரேலிய அரசு, 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்ட மக்கள், அடுத்த மாதத்திலிருந்து தங்கள் நாட்டிற்கு வரலாம் என்று தெரிவித்திருக்கிறது. உலக நாடுகளில், கொரோனா பரவியதால் பல்வேறு நாடுகள், போக்குவரத்தில் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. அதேபோன்று, ஆஸ்திரேலியாவிலும் பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 2 டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட மக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பில், அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறுகையில், இரண்டு தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்ட மக்கள் வரும் டிசம்பர் மாதம் முதல் தேதியிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு […]
ஆஸ்திரேலிய நாட்டின் மெல்போர்ன் நகரத்தில் ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு நான்கு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் ஒரு வீட்டில் தீப்பற்றி எரிவதாக காவல்துறையினருக்கு நள்ளிரவு நேரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, சுமார் 10 நிமிடங்களில் தீயணைப்பு துறையினரும், மீட்பு குழுவினரும் சம்பவ இடத்திற்கு சென்றனர். ஆனால், அதற்குள் அந்த வீடு முழுவதும் தீ பரவி மளமளவென எரிந்துள்ளது. அதன்பின்பு, வீடு மொத்தமாக சேதமடைந்து விட்டது. […]
உலக நாடுகள் முழுவதும் கொரோணா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதில் ஜெர்மனி, பெல்ஜியம் ஆகிய நாடுகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் ஆஸ்திரேலியாவிலும் பாதிப்பு அதிகமாகி உள்ளது. ஆஸ்திரேலியாவில் இதுவரை 4 அலைகளாக கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், ஐந்தாவது அலையும் உருவாகலாம் என அஞ்சப்படுகிறது. எனவே தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வருகின்ற திங்கட்கிழமை(நவம்பர் 22) […]
உயிர்தொழில்நுட்பம் கொண்ட குண்டு துளைக்காத ஆடையை இலங்கையைச் சேர்ந்த மாணவி கண்டுபிடித்துள்ளார். இலங்கைகையச் சேர்ந்த பிரபானி ரணவீர என்ற மாணவி கொழும்பிலுள்ள மியூசியஸ் கல்லூரியில் கல்வி கற்றார். இதன் பின்பு கொழும்பில் உள்ள சைதாமா பல்கலைக்கழகத்தில் சிவில் பொறியியல் பாடத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். இதனையடுத்து தனது முதுகலைப் படிப்பிற்காக ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வருகிறார்கள். மேலும் இவரின் முதுகலை ஆராய்ச்சிக்காக உயிர்த்தொழில் நுட்பம் கொண்ட குண்டு துளைக்காத ஆடை ஒன்றை வடிவமைத்துள்ளார் […]
ஆஸ்திரேலிய நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தியதால் பக்க விளைவுகள் ஏற்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் அரசிடம் இழப்பீடு கேட்டிருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் தடுப்பூசி குறித்த பிரச்சனைகளுக்காக 50 மில்லியன் டாலர் நிதி அளிக்க வேண்டிய காட்டாயத்தில் அரசு இருக்கிறது. நாட்டில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி செலுத்திய 10,000-த்திற்கும் அதிகமான மக்கள், அரசிடம் இழப்பீடு கேட்டிருக்கிறார்கள். அதாவது, தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் பக்க விளைவுகள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் வருமானத்தை இழந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5000 ஆஸ்திரேலிய டாலர் […]
ஆஸ்திரேலியாவிலுள்ள Rottnest என்னும் தீவின் அருகில் கடலில் இறந்த திமிங்கலத்தை உண்பதற்காக சுறா மீன்கள் வட்டமிட்டதால் கடற்கரைகள் அடைக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவிலுள்ள Rottnest என்னும் தீவின் அருகில் திமிங்கலம் ஒன்று இறந்து மிதந்துள்ளது. அதை உண்பதற்காக சுமார் 30 சுறா மீன்கள் அதனைச்சுற்றி வட்டமிட்டிருக்கிறது. முதலில் திமிங்கலம் கடற்கரையிலிருந்து, அதிகமான தூரத்தில் தான் கடலில் மிதந்திருக்கிறது. அதன்பின்பு மக்கள் நடமாடக்கூடிய கடற்கரையிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் மிதந்ததாக கூறப்பட்டிருக்கிறது. அதன் பின்பு கடற்கரையிலிருந்து, 3 கிலோமீட்டர் தொலைவிற்கு […]
இந்தியாவின் 75-வது சுதந்திரதினத்திற்காக ஆஸ்திரேலியாவிற்கு பரிசளிக்கப்பட்ட மகாத்மா காந்தி சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய நாட்டின் மெல்போர்ன் நகரத்தில் ரோவில்லே என்ற புறநகர்ப்பகுதியில் அமைந்திருக்கும் ஆஸ்திரேலிய-இந்திய சமூக மையத்திற்கு, இந்திய நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்திற்காக மகாத்மா காந்தியின் உருவ சிலை பரிசளிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரீசன் இந்தியாவின் சார்பில் பரிசளிக்கப்பட்ட காந்தியின் உருவச்சிலையை கடந்த 12-ஆம் தேதியன்று திறந்து வைத்துள்ளார். இந்நிலையில், சிலை திறக்கப்பட்ட சில மணி […]
ஆஸ்திரேலியாவில் கட்டாய தடுப்பூசியை எதிர்த்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆஸ்திரேலிய நாட்டில் கட்டிட பணியாளர்களுக்கு கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த சில கட்டுப்பாடுகளையும் அரசு அறிவித்தது. இந்நிலையில், அரசின் இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து விக்டோரியா மாகாணத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். கட்டாயமாக தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு சர்வாதிகாரம் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசை எதிர்த்து முழக்கமிட்டனர். மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் எவரும் […]
ஆஸ்திரேலியாவில் நடுவானில் பறந்த போது, விமானத்தின் என்ஜினில் பழுது ஏற்பட்டு கடலுக்குள் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் இருக்கும் perth என்னும் நகரத்தின் கடலில் தான் விமானம் விழுந்திருக்கிறது. சிறிய வகை விமானத்தில் இரண்டு நபர்கள் பயணித்துள்ளனர். அப்போது, விமானம் நடு வானத்தில் பறந்து கொண்டிருந்த சமயத்தில், என்ஜினில் பழுது ஏற்பட்டிருக்கிறது. எனவே, விமானி, உடனடியாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். அதன்பின்பு விமானம், விமானியின் கட்டுப்பாட்டை இழந்துவிட்டது. அதனையடுத்து, விமானம் கடலில் விழுந்து […]
Icelandair வெளியிட்ட இரக்கமுள்ள நாடுகள் பட்டியலில் கனடா மூன்றாம் இடத்தை பெற்றிருக்கிறது. உலக நாடுகளிலேயே இரக்கம் அதிகம் உள்ள நாடுகள் என்ற அடிப்படையில் ஒரு தரவரிசைப் பட்டியல் Icelandair என்ற விமான நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. அதில் முதலிடத்தில் நியூசிலாந்தும், இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியாவும், மூன்றாவது இடத்தில் கனடாவும் இருக்கிறது. அதாவது ஒரு நாட்டில் இருக்கும் மருத்துவ சேவை, குறைவான சம்பளம், அந்நாட்டில் வாழும் பிற நாட்டவர்கள் எதிர்கொள்ளக்கூடிய அனுபவங்கள் மற்றும் உலக சமாதான தரவரிசைப் பட்டியலில் பெற்றுள்ள […]
குற்றாவாளி திருமணம் செய்து கொள்வதற்கு சிறை நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இயக்குனரான ஜூலியன் அசாஞ்சே விக்கிலீக்ஸ் நிறுவனத்தை நிறுவினார். இவர் அமெரிக்க நாட்டின் ராணுவ தகவல்களை உளவு பார்த்து வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு கடந்த 2019ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதிலும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இவரை கைது செய்ய வேண்டும் என்று அமெரிக்க அரசு தீவிர முனைப்பு காட்டி வருகிறது. இதற்கு எதிராக இவர் போராடி வருகிறார். இந்த நிலையில் இவர் தன்னுடைய காதலரான […]
ஆஸ்திரேலியாவில் ஒரு குழந்தை 18 நாட்களாக ஒரு வீட்டில் கடத்தி வைக்கப்பட்டிருந்த வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் நான்கு வயதுடைய Cleo Smith என்ற குழந்தை பெற்றோருடன் வெளியில் சென்றபோது காணாமல் போனது. காவல்துறையினர் சுமார் 18 நாட்களாக குழந்தையை தீவிரமாக தேடி வந்த நிலையில், Carnarvon நகரத்தின் ஒரு குடியிருப்பில் குழந்தை கடத்தி வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. எனவே, அந்த குடியிருப்பிற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், அடைக்கப்பட்டிருந்த வீட்டிற்குள் இருந்து குழந்தையை […]
தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஆஸ்திரேலியா பெண் மில்லியன் டாலர் வாக்ஸ் லாட்டரியை வென்றுள்ளார். ஆஸ்திரேலியாவில் 25 வயதான ஜோன் ஜு என்பவர் கொரோனா தடுப்பூசியை செலுத்தியுள்ளார். இதனை அடுத்து இவருக்கு மில்லியன் டாலர் வாக்ஸ் லாட்டரியை வெல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் ஜோன் ஒரே இரவில் பல மில்லியன் டாலருக்கு சொந்தக்காரர் ஆனார். அதாவது தடுப்பூசி விகிதங்களை அதிகரிப்பதற்காக தன்னார்வலர்கள் மற்றும் சில நிறுவனங்களால் மில்லியன் டாலர் வாக்ஸ் என்ற லாட்டரிச்சீட்டு உருவாக்கப்பட்டது. இதில் ஏராளமான ஆஸ்திரேலியா […]
தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டதை எதிர்த்து மக்கள் அமைதியான முறையில் ஊர்வலம் நடத்தினர். உலக அளவில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போன் மாகாணத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருந்தது. இதன் காரணமாக ஒன்பது மாதகாலமாக அங்கு ஊரடங்கு அமல்ப்படுத்தப்பட்டது. இதனை அடுத்து அங்கு வசிக்கும் 80% மக்களுக்கு இரு தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு பின்பு தான் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில் தற்பொழுது உணவகங்கள், அரங்கங்கள், பணி புரியும் அலுவலகங்களில் கொரோனா தடுப்பூசி […]
சுறா மீன்களால் தாக்கப்பட்ட நபரை போலீசார் படகுகள் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் நகரில் போர்ட் பீச் அமைந்துள்ளது. இந்த கடலில் ஒருவர் நீச்சல் அடித்துக் கொண்டிருந்துள்ளார். அந்த சமயத்தில் இரண்டு சுறாமீன்கள் அவரை தாக்கியுள்ளது. மேலும் இதனை அருகில் இருந்த படகில் உள்ளவர்கள் கவனித்துள்ளனர். உடனே அவர்கள் அந்த நபரிடம் கரைக்கு திரும்பும்படி கூச்சலிட்டுள்ளனர். மேலும் கரைக்கு திரும்புவதற்கு முன்பாக அவரை சுறாமீன்கள் தாக்கியது. இதனையடுத்து சுறாமீன்களால் தாக்குதலுக்குள்ளான […]
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 10 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றாலும் அரையிறுதி வாய்ப்பை இழந்தது. டி20 உலக கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றுப் போட்டிகள் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது .இதில் 12 அணிகள் ‘குரூப்-1’ , ‘குரூப்-2’ என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு முறையும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் […]
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியுற்றது. இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு 70 விழுக்காடு உறுதியானது. சார்ஜா மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் குவித்தது. […]
தலீபான்கள் ஆட்சிக்கு வந்த பின் முதல் தடவையாக காபூல் நகரில் கால்பந்து போட்டி நடைபெற்றிருக்கிறது. ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் நடைபெறவிருந்த ஒரு டெஸ்ட் போட்டியையும் ரத்து செய்துவிட்டது. அதே சமயத்தில், காபூல் நகரில் கால்பந்து தொடர் போட்டி நடைபெற்றுள்ளது. அதாவது, மகளிர் கிரிக்கெட் போட்டிகளுக்கு தலிபான் அரசு அனுமதி வழங்கவில்லை. இதனை எதிர்க்கும் விதமாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கம், வரும் 27ஆம் தேதியன்று ஆப்கானிஸ்தான் அணியுடன் நடைபெற இருந்த ஒரே ஒரு டெஸ்ட் போட்டியை ரத்து […]
ஆஸ்திரேலியாவில் 18 நாட்களுக்கு முன்பு காணாமல் போன 4 வயது சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவின் கார்னர்வோன் நகரில் கடந்த 16 ஆம் தேதி, முகாம் ஒன்றில் காணாமல் போன கிளியோ சுமித் (4) என்ற சிறுமியை தேடி பெரிய தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. மேலும், சிறுமியை பற்றி தகவல் அளிப்போருக்கு 7.5 லட்சம் அமெரிக்க டாலர் ரொக்கப்பரிசு வழங்குவதாக அதிகாரிகள் அறிவித்தனர். இந்த நிலையில், 18 நாட்கள் கழித்து ஒரு வீட்டில் சிறுமி பூட்டி வைத்திருப்பதாக […]
தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பயணக் கட்டுப்பாடுகளில் ஆஸ்திரேலியா அரசு தளர்வுகளை அளித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 20 மாதங்களாக சர்வதேச விமான சேவைகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கொரோனா தொற்று படிப்படியாக குறையத் தொடங்கியதை அடுத்து சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆஸ்திரேலியாவிற்கு வரும் சர்வதேச பயணிகளுக்கும் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. அதாவது இந்தியாவின் கோவாக்சின் மற்றும் சீனாவின் பிபிஐபிபீ-கோர்வி ஆகிய தடுப்பூசிகளை செலுத்திக் கொண்ட பயணிகளுக்கு எந்தவொரு கட்டுப்பாடுகளும் இன்றி ஆஸ்திரேலியாவிற்கு […]
அனைத்து நாடுகளிலும் கொரோனாவை கட்டுப்படுத்த மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தியவர்கள் எவ்வித கட்டுப்பாடும் இன்றி ஆஸ்திரேலியாவிற்கு பயணிக்க அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பாக ஆஸ்திரேலிய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,” ஆஸ்திரேலியா வரும் சர்வதேச பயணம் செய்பவர்கள் கோவாக்சின் மற்றும் பிபிஐபிபி-கார்வ் வி தடுப்பூசிகள் போட்டிருந்தால், அவர்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்துக்கொண்டவர்களாக ஏற்கப்படுகின்றனர். அந்த அங்கீகாரம் அவர்களுக்கு தரப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக சீனா, இந்தியா மற்றும் […]
ஆஸ்திரேலிய அரசாங்கம் கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு சர்வதேச பயணிகளுக்கு போட்டிருந்த கட்டுப்பாடுகளில் பல தளர்வுகளை கொண்டு வந்துள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவை தடுக்கும் பொருட்டு அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் பல கட்டுப்பாடுகளை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இதனையடுத்து தற்போது அனைத்து நாடுகளும் கொரோனா குறைய தொடங்கியுள்ளதால் தங்கள் நாட்டிற்குள் அதற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறது. அதன்படி ஆஸ்திரேலிய அரசாங்கமும் சர்வதேச பயணிகளுக்காக கொரோனாவை தடுக்கும் பொருட்டு போட்டிருந்த கட்டுப்பாடுகளில் பலவித தளர்வுகளை கொண்டு […]
ஆஸ்திரேலிய நாட்டில் சுமார் 600 நாட்களுக்குப்பின் சர்வதேச எல்லைகள் திறக்கப்பட்டிருப்பதால் சிட்னி விமான நிலையத்தில் மக்கள் உணர்வுபூர்வமாக தங்கள் உறவினர்களை வரவேற்றிருக்கிறார்கள். கொரோனா தொற்றால் கடந்த வருடம் மார்ச் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் சர்வதேச எல்லைகள் அடைக்கப்பட்டது. மேலும், பயண விதிமுறைகளும், கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டது. உலக அளவில் கடுமையான விதிமுறைகளை நடைமுறைப்படுத்திய நாடுகளில் ஆஸ்திரேலியா முன்னிலையில் இருக்கிறது. இது மட்டுமல்லாமல் நாட்டு மக்கள், தங்கள் பக்கத்து மாநிலங்களுக்கு செல்வதற்கும், தங்களின் குடும்பத்தினரை சந்திப்பதற்கும் முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் […]