கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் ஆஸ்திரேலியா தளங்களிலிருந்து செய்திகளை தங்களின் வலைத்தளங்களுக்கு வெளியிடுவதற்கு ராயல்டி செலுத்த வேண்டும் என்று புதிய சட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய சட்டத்துக்கு ஃபேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனம் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த சட்டத்தை திரும்ப பெறாவிட்டால் ஆஸ்திரேலியாவை விட்டு கூகுள் நிறுவனம் வெளியேற போவதாக அச்சுறுத்தியது. ஆனால் இந்த அச்சுறுத்தலுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம் என்று ஆஸ்திரேலியா பிரதமர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முன்னதாகவே ஆஸ்திரேலிய பொருளாளர் ஜோஷ் ஃப்ரைடென்பெர்க் […]
Tag: #ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவில் பிரதமர் ஸ்காட் மோரிசன் முதல் முதலாக இன்று கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை செலுத்திக் கொண்டார். ஆஸ்திரேலியா அரசு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை நாளை முதல் அதிகாரப்பூர்வமாக மக்களுக்கு செலுத்த முடிவெடுத்துள்ளது. இந்த வார இறுதிக்குள் குறைந்தது 60 ஆயிரம் டோஸ்கள் குடிமக்களுக்கு கட்டாயம் செலுத்த வேண்டும் என்று அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். இதற்கிடையில் நேற்று தலைநகர் மெல்போர்ன் சிட்னி உட்பட முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான கொரோனா தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் மக்களுக்கு தடுப்பூசியை செலுத்தக் கூடாது என்று கூறி […]
ஆஸ்திரேலிய பயனாளர்கள் இனி செய்திகளை படிக்க முடியாது என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியா பயனாளர்கள் சமூக வலைத்தளங்களில் செய்தியை படிக்க வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு பணம் செலுத்த வேண்டும் என்று ஆஸ்திரேலியாவில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆகையால் இன்று முதல் ஃபேஸ்புக்கில் எந்த ஒரு செய்தியையும் படிக்கவும், பகிரவும் ஆஸ்திரேலியா பயனர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா பத்திரிகையாளர்கள் ஃபேஸ்புக்கில் செய்திகளை வெளியிடலாம். ஆனால் அதன் லிங்குகள் மற்றும் பதிவுகளை ஆஸ்திரேலிய பயனர்களால் பார்க்கவும், […]
விண்வெளி கூட்டுறவை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் விரிவுபடுத்துவதற்காக இன்று புதிய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான விண்வெளி ஆராய்ச்சித் துறையில் ஒப்பந்தம் கையெழுத்தானது .கடந்த ஆண்டு இந்த ஒப்பந்தம் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் இடையில் பேச்சுவார்த்தைக்கு பின் மீண்டும் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் இரு நாட்டு தலைவர்களும் இரு நாடுகளுக்கிடையிலான விண்வெளி கூட்டுறவை மேலும் விரிவுபடுத்த இன்று […]
சக ஊழியரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டிய பெண்ணிடம் பிரதமர் ஸ்காட் மோரிசன் மன்னிப்பு கேட்டுள்ளார். ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பிரிட்டனி ஹிக்னிஸ் என்ற பெண் கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தனது சக ஊழியர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். பாதுகாப்பு அமைச்சர் லிண்டா ரெனோல்ட்ஸ் அலுவலகத்தில் ஸ்காட் மோரிசன் என்ற ஆளும் லிபரல் கட்சியில் பணியாற்றிய ஒருவரால் ஹிக்னிஸ் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் இப்பெண்ணிடம் பிரதமர் ஸ்காட் மோரிசன் […]
ஆஸ்திரேலியாவில் சித்திரவதை அனுபவித்த தமிழ் பெண் எட்டு வருடங்களுக்கு மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் சேர்ந்த தம்பதியினர் தமிழகத்தை சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க பெண்மணியை வீட்டு வேலைக்கு அழைத்துச் சென்று 2007 முதல் 2015ஆம் ஆண்டு வரை அடிமையாக வைத்திருந்தனர். ஆறுமாதம் டூரிஸ்ட் விசாவில் சென்ற அந்த பெண்ணை குழந்தைகளின் தம்பதியினரின் பராமரிப்பதற்காக வேலைக்கு அழைத்து சென்றுள்ளனர், அந்த பெண் அப்போது 40 கிலோ எடையுடன் இருந்திருக்கிறார். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட […]
கொரோனாவின் தோற்றம் பற்றிய தகவல்களை உலக சுகாதார அமைப்பிடம் ஒப்படைக்க சீனா மறுத்து விட்டது என அக்குழுவில் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். உலக சுகாதார அமைப்பின் ஆய்வுக்குழு சீன அரசாங்கத்திடம், 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதம் வூஹான் நகரில் முதலில் கண்டறிந்த 174 கொரோனா பற்றிய முக்கிய தகவல்களை பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டது. ஆனால், சீனா முக்கிய தகவல்களை கொடுக்க மறுத்து விட்டதாகவும் முதல் பாதிப்பு பற்றிய சுருக்கமான செய்தியை மட்டுமே கொடுத்துள்ளதாகவும் WHO குழுவின் உறுப்பினராக […]
தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 2007ஆம் வருடம் சுற்றுலா விசா மூலமாக ஆஸ்திரேலியா நாட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அந்த நாட்டை சேர்ந்த தம்பதி ஒருவர் தன்னுடைய மூன்று குழந்தைகளை பராமரித்து கொள்ளவும் அவர்களின் வீட்டு வேலை செய்யவும் ஆள் தேவை என்று கூறியதை அடுத்து அங்கு தங்கியிருந்து பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். முதலில் அந்த பெண்ணை அந்த குடும்பத்தினர் நல்லபடியாக நடத்தியுள்ளனர். பின்னர் அந்த பெண்ணை அடிமை போன்று நடத்தியதாக கூறப்படுகிறது. யாரிடமும் பேசக்கூடாது என்று […]
நள்ளிரவில் தென்பசிபிக் கடலுக்கடியில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு அமெரிக்க ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது . அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தென்பசிபிக் கடலுக்கு அடியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கடற்கரைப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை செய்துள்ளது. நேற்று நள்ளிரவு ஆஸ்திரேலியா கடற்பரப்பிற்கு அருகே தென்பசிபிக் பகுதியில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது . அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவுகோல் 7.7 ஆக பதிவாகி உள்ளதாக […]
ஆஸ்திரியாவின் பொறுப்பற்ற செயலுக்கு எல்லை கட்டுப்பாடுகளை கடுமையாக்க ஜெர்மன் முடிவெடுத்துள்ளது. கடந்த திங்கள் கிழமையன்று ஆஸ்திரியா பொது முடக்க விதிகளை தளர்த்தியது. இதனால் ஆஸ்திரியா பொறுப்பற்று நடந்து கொள்வதாக கூறி ஆஸ்திரியா-ஜெர்மனி கிடையேயான எல்லைகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து CSU கட்சிப் பொதுச் செயலாளரான மார்கஸ் ப்ளூம் தெரிவித்ததாவது, கொரோனா பரவிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஆஸ்திரியா பொது முடக்க விதிகளை தளர்த்தி உள்ளது. இப்போது பரவி கொண்டிருக்கும் கொரோனா அலை எல்லை வழியாக ஜெர்மனிக்குள் […]
ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ தீவிரமாக பரவி வருவதால் பல வீடுகள் தீயில் கருகி சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் வடகிழக்கு பகுதிகளில் இருக்கும் பெர்த் என்ற நகரில் காட்டுத்தீ தீவிரமாக பரவி வருவதால் அதைச் சுற்றியுள்ள சுமார் 80 கிலோமீட்டர் பகுதிகள் முழுவதும் எரிந்து சாம்பலாகியுள்ளது. மேலும் இந்த காட்டுத்தீ கடந்த 4 தினங்களாக பரவி வருவதால் தற்போது வரை சுமார் 70க்கும் அதிகமான வீடுகள் எரிந்து அனைத்தும் சாம்பலாகியுள்ளது. இதனிடையே தற்போது காற்றின் வேகமும் […]
ஆஸ்திரேலியாவில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத் தீயினால் இதுவரை 70க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பலான நிலையில் மேலும் 1000 வீடுகளுக்கு தீ பரவும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள பெர்த் நகரத்தில் கட்டுக்கடங்காமல் பரவிவரும் காட்டுத் தீ சுமார் 80 மீட்டர் சுற்றளவுக்கு பரவியுள்ளது. இதனால் தற்போது வரை 70 க்கும் மேற்பட்ட வீடுகள் முழுவதுமாக எரிந்து சாம்பலானது. தற்போது காற்றின் வேகம் மிகவும் அதிகரித்துள்ளதால் மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் […]
ஆஸ்திரேலியாவில் மீண்டும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதால் மக்களிடையே பெரும் அச்சம் நிலவியுள்ளது. ஆஸ்திரேலியாவில் கடந்த வருடம் ஏற்கனவே ஏற்பட்ட காட்டுத் தீயினால் பல்லாயிரக்கணக்கான விலங்குகளும் சில மனிதர்களும் உயிரிழந்தன.ர் இப்போது மீண்டும் புதர்களில் காட்டுத்தீ பரவி உள்ளதால் அபாய நிலை உருவாகியுள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியாவில் பெர்த் பகுதியில் பலமான காற்று வீசி வருவதன் காரணமாக தீ வேகமாக பரவி வரும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது .இதனால் அந்த பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கானோர் வெளியேறியுள்ளனர். இதையடுத்து பெர்த் […]
ஆஸ்திரேலியாவில் இரண்டு 15 வயது சிறுமிகளை பத்து பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் 4 பேர் மீது 160 வழக்குகள் பதிவு செய்து கைது செய்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் தேதி, 15 வயது நிரம்பிய இரண்டு சிறுமிகள் Snap Chat-ல் பழக்கமான நண்பரை நேரில் சந்திப்பதற்காக பிரிஸ்பேன் நகரில் உள்ள Calmvale District பூங்காவிற்கு சென்றுள்ளனர். அங்கு Snap Chat-ல் பழக்கமான நபர் உட்பட பத்து […]
குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பள்ளிக்கூடத்தில் விழுந்த விண்கல்லை ஆய்வு செய்யச் சென்ற நாசா விஞ்ஞானிகள் ஏமாற்றம் அடைந்து முகம் சிவந்து திரும்பினர். ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ் லாந்து மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு பள்ளியின் வளாகத்தில் விண்கல் ஒன்று விழுந்துள்ள படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. விண்கல் தொடர்பாக விசாரிக்க நாசா விஞ்ஞானிகள் அப்பள்ளியின் தலைமை ஆசிரியரான மார்க் ஆலனை சந்தித்தனர். ஆசிரியர் அளித்த பதிலை கேட்டு விஞ்ஞானிகள் முகம் சிவந்து போனது. ஏனென்றால் படத்தில் இருந்த விண்கல் […]
ஆஸ்திரேலியாவில் 90 வயது முதியவர் தன் சொத்திலிருந்து 2 மில்லியன் யூரோக்கை கிராமத்திற்கு நன்கொடையாக அளித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் 90 வயதான எரிக் ஸ்வாம் என்பவர் கடந்த டிசம்பர் 25ஆம் தேதி உயிரிழந்தார். அதன்பின் அவர் எழுதி வைத்திருந்த உயிரைப் படித்தனர். அதில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது, 1943இல் இரண்டாம் போரின்போது நாஜிகளிடம் இருந்து நானும் எனது குடும்பமும் பிரான்ஸில் உள்ள லூ சாம்பன் சுர் லிக்னன் என்ற கிராமத்தில் அப்பகுதி மக்களால் பாதுகாக்கப்பட்டு மறைத்து […]
உலக அளவில் கொரோனோ பரவலை கட்டுப்படுத்தும் விதத்தில் சிறப்பாக செயல்பட்ட நாடுகளின் பட்டியலில் நியூசிலாந்து முதலிடத்தை பெற்றுள்ளது. சீனாவில் முதன் முதலில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பல லட்சம் உயிர்களை பலி வாங்கியுள்ளது. இதனால் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் சிட்னியை தலைமையிடமாக கொண்ட லோவி என்ற நிறுவனம் உலக அளவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் சிறப்பான […]
ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு வெற்றி பெற்ற ஆறு இளம் வீரர்களுக்கு மகேந்திரா “தார் “கார் பரிசாக வழங்கப்படும். இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. முன்னணி வீரர்கள் இல்லாத போதிலும் இளம் வீரர்கள் ஆஸ்திரேலியாவை எதிர்த்து வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளனர். நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர். அதன்பின் ஆஸ்திரேலியாவிலிருந்து நாடு திரும்பிய இந்திய வீரர்களுக்கு அவர்களின் குடும்பத்தார்,உறவினர்கள்,நண்பர்கள்,பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து […]
ஆஸ்திரேலியாவை 32 ஆண்டுகளாக எந்த அணியும் வென்றதில்லை என்ற சாதனையை இன்று இந்திய அணி முறியடித்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது இந்திய அணி. பிரிஸ்பேன் கப்பா மைதானத்தில் நடைபெற்ற 4 வது டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது. 328 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சாளர்களை சிதற அடித்து 7 விக்கெட்டுகள் இழந்து 329 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். […]
இந்திய அணி தனது அசத்தலான ஆட்டத்தின் மூலம் ஆஸ்திரேலியா மைதானத்தில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது இந்திய அணி. பிரிஸ்பேன் கப்பா மைதானத்தில் நடைபெற்ற 4 வது டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது. 328 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சாளர்களை சிதற அடித்து 7 விக்கெட்டுகள் இழந்து 329 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி […]
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று இந்திய அணியின் மிகப்பெரிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது இந்திய அணி. பிரிஸ்பேன் கப்பா மைதானத்தில் நடைபெற்ற 4 வது டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது. 328 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சாளர்களை சிதற அடித்து 7 விக்கெட்டுகள் இழந்து 329 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். இந்தியாவின் […]
வரலாற்றுத் டெஸ்ட் தொடரை வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது இந்திய அணி. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. தொடர்ந்து இரண்டாவது முறையாக பார்டர்-கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றி இந்திய அணி சாதனைப் படைத்துள்ளது. இந்திய அணியின் வீரர் ரிஷாப் பந்த் 80 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்து வைத்தார். அறிமுக வீரரான வாஷிங்டன் சுந்தர் 29 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார. அதிகபட்சமாக […]
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இளம் இந்திய அணி வீரர்களுக்கு சத்குரு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று, பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ள இந்திய அணிக்கு பல்வேறு பிரபலங்களும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். முன்னணி வீரர்கள் யாரும் இல்லாமல் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வென்று இந்திய அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் […]
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்க வந்த 3 வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவின் ஓபன் டென்னிஸ் தொடரானது வருடத்தின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடராக நடைபெற்று வருவது வழக்கமாகும். அதே போன்று இந்த வருடத்திற்கான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரானது கொரோனா தாக்கத்திற்கு இடையில் வரும் பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரையில் மெல்போர்னில் நடக்கவிருக்கிறது. எனவே இதற்காக உலகின் பல நட்சத்திர டென்னிஸ் வீரர்களும் பல்வேறு இடங்களிலிருந்து […]
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனிலுள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 324 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி ஐந்தாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. இதில் ரோஹித் சர்மா 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளிதார். அதன்பின் ஜோடி சேர்ந்த சுப்மன் கில் – புஜாரா இணை அணியின் ஸ்கோரை உயர்த்தியது. […]
இந்தியா-ஆஸ்திரேலியாவிற்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பையின் டெஸ்ட் தொடரின் நான்காம் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பையின் டெஸ்ட் தொடரின் 4-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் – மார்கஸ் ஹாரிஸ் இணை தொடக்கத்தில், இன்னிங்ஸின் முதல் ஓவரை வீசிய முகமது சிராஜ், டேவிட் வார்னரின் விக்கெட்டை கைப்பற்றினார். பின்பு மறுமுனையில் நிதானமாக விளையாடிய […]
பந்தைய புறா ஒன்று பல மைல் தூரம் கடந்து சென்று திருப்பிய நிலையில் அதிகாரிகள் அதிரடி முடிவு எடுத்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் புறா பந்தயம் ஒன்று நடைபெற்றுள்ளது. அதில் ஜோ என்ற பெயருடைய பந்தய புறா ஒன்று கடந்த வருடம் அக்டோபர் மாதம் 29 ஆம் தேதியில் அமெரிக்காவின் oregon என்ற இடத்திலிருந்து புறப்பட்டுள்ளது. அதன்பின்பு அந்த புறா மாயமாகியுள்ளது. இந்நிலையில் கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் என்ற இடத்தில் உள்ள தோட்டம் ஒன்றில் […]
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பெரும்பாலான வீரர்கள் காயம் அடைந்துள்ளதால் இந்திய அணிக்காக மீண்டும் களமிறங்க தயார் என விரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் முடிந்த நிலையில் ஒன்றுக்கு ஒன்று என இந்த தொடர் சமநிலையில் உள்ளது. இது தொடரின் ஆரம்பம் முதலே இந்திய வீரர்களை காயம் விடாமல் துரத்தி வருகிறது. குறிப்பாக முகமது ஷமி, உமேஷ் யாதவ், கேஎல் ராகுல், ஜடேஜா, விகாரி போன்ற முன்னணி வீரர்கள் காயம் காரணமாக […]
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி போராடி டிரா செய்திருக்கிறது. முன்னதாக இந்திய அணி 200 ரன்களைக் கூட தொடாது என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியிருந்தார். அதற்கு சமூக வலைத்தளத்தில் சேவாக் பதிலடி கொடுத்திருந்தார். இந்த நிலையில் அழுத்தமான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய வீரர்கள் 5 விக்கெட்டுக்கு மேல் இழக்காமல் இந்த போட்டியை டிரா செய்திருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி போராடி டிரா செய்து […]
ஆஸ்திரேலியா அணியின் தலைமை பயிற்சியாளர் சிட்னியில் நடந்த இனவெறி சர்ச்சை குறித்து வருத்தம் அடைந்துள்ளார். இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் நான்காம் நாள் ஆட்டத்தின் போது மைதானத்தில் இருந்த முகமது சிராஜை இனரீதியாக இழிவுபடுத்திய 6ரசிகர்களை மைதானத்திலிருந்து மைதான பாதுகாப்பு ஊழியர்கள் வெளியேற்றினர். இந்த விவகாரம் உலகளவில் பேசு பொருளாகியுள்ளது. மேலும் இது போன்ற இனவெறி செயலில் ஈடுபட்டவர்கள் குறித்து, ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டிங் லங்கர் கடும் கண்டனம் […]
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜாவின் கையில் காயம் ஏற்பட்டதால் அவர் ஆறு வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இன்னிங்ஷின் போது மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்தில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா காயமடைந்தார். அவரை பரிசோதிக்க களத்திற்கு வந்த மருத்துவர்கள் ஜடேஜாவை ஸ்கேன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதால் இரண்டாவது இன்னிங்சில் அவரால் பந்து வீச முடியாமல் போனது. பிசிசிஐ […]
இந்திய வீரர்களிடம் ஆஸ்திரேலியா கிரிக்கெட் பாதுகாப்பு தலைவர் சீன் கரோல் மன்னிப்பு தெரிவித்துள்ளார். இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் நான்காம் நாள் ஆட்டத்தின் போது மைதானத்தில் இருந்த முகமது சிராஜை இனரீதியாக இழிவுபடுத்திய ரசிகர்களை மைதானத்திலிருந்து மைதான பாதுகாப்பு ஊழியர்கள் வெளியேற்றினர். மேலும் இச்சம்பவம் குறித்து இந்திய வீரர்களிடம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மன்னிப்பு கூறியுள்ளது. சிட்னி டெஸ்ட் போட்டியின் போது ரசிகர்களின் இச்செயலுக்கு இந்திய வீரர்களிடம் நாங்கள் மன்னிப்புக் கேட்டுக் […]
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் போட்டியில் இனவெறி சர்ச்சையை தொடர்ந்து ஏற்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியில் இன்றும் இனவெறி சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்திய வீரர்களை ஆஸ்திரேலிய ரசிகர்கள் 6 பேர் இனவெறியை தூண்டுவது போல கிண்டல் செய்துள்ளனர். இந்த பிரச்சனையை இந்திய கேப்டன் ரஹானே நடுவர்களிடம் கொண்டு சென்றார். இதனையடுத்து இனவெறியை தூண்டும் வகையில் பேசிய பார்வையாளர்கள் ஆறு பேரும் மைதானத்தை விட்டு வெளியே அனுப்பப்பட்டனர். நேற்று பும்ரா, சிராஜ் மீது […]
சிட்னியில் நடைபெற்று வரும் இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் இந்தியா வீரர்களை இனரீதியாக திட்டியதாக ஆஸ்திரேலியா ரசிகர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் 338 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 244 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்துள்ளது. மூன்றாம் நாள் ஆட்டத்தின்போது […]
சமூக வலைதளங்களில் கடந்த சில ஆண்டுகளாக மிகவும் பிரபலமாக பேசப்பட்டுவருபவர் நித்யானந்தா. அவர் நீதிமன்றத்தில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வரை தலைமறைவாக இருந்து வருகிறார். கைலாச என்ற நாட்டை உருவாக்கி இருப்பதாக அவர் அவ்வப்போது சமூக வலைத் தளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வருவார். அது எங்கு உள்ளது என்று இதுவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சர்வதேச காவல்துறையினரும் நித்யானந்தாவை தேடிவருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவுக்கு வந்து விட்டால் அங்கிருந்து கருடா என்ற விமானம் […]
பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்து வரும் தொடரின் நான்காவது மற்றும் இரண்டாவது டெஸ்டில் விளையாட இந்தியா தயக்கம் காட்டுவதாக தகவல் வெளிவந்துள்ளது. வீரர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட காரணத்தால் பிரிஸ்பேன் இருக்கு பயணிக்க இந்தியர்கள் ஆர்வம் காட்டவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து குயின்ஸ்லாந்தின் சுகாதார அமைச்சர் ரோஸி பாக்ஸ் ஸ்போட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் “இந்தியர்கள் விதியின்படி, விளையாட விரும்பவில்லை என்றால் அவர்கள் வர வேண்டாம்” என்று கூறியுள்ளனர். குயின்ஸ்லாந்து விளையாட்டு மந்திரி இதுகுறித்து கூறும்போது […]
ஆற்றிலிருந்து 2 சடலங்கள் தேடுதல் குழுவினரால் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள blue mountain என்ற பள்ளத்தாக்கில் உள்ள ஆற்றில் கடந்த சனிக்கிழமை அன்று தேடல் குழு மூலம் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. அப்போது இறந்தவர்களில் ஒரு பெண் நியூ சவுத் வேல்ஸ் சீனியர் கான்ஸ்டபிள் கெல்லி போஸ்டர் என்பதை அறிந்ததும் காவல் துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சடலமாக மீட்கப்பட்டுள்ள மற்றொரு பெண் ஆஸ்திரேலியாவில் உள்ள சிஸ்விக் என்ற நகரத்தில் படித்து வரும் […]
ஆஸ்திரேலியா தன் தேசியகீதத்தில் ஒரு வார்த்தையை மாற்றியுள்ளதற்கு மக்கள் கலவையான வரவேற்பை கொடுத்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் பிரதமரான ஸ்காட் மோரிசன் புத்தாண்டு தினத்தையொட்டி “Advance Australia fair” தேசிய கீதத்தின் இரண்டாம் வரியான “For we are young and free” என்பதை “For we are one and free” என்று மாற்றி உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த மாற்றமானது ஜனவரி 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. மேலும் இதுகுறித்து கூறிய பிரதமர், “ஆஸ்திரேலியா உலகில் […]
சிறுமிகள் புத்தாண்டு கொண்டாட சென்ற போது கடுமையாக துன்புறுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள surfers paradise என்ற ரிசார்ட்டில் இருக்கும் கடற்கரைக்கு 15 வயதுடைய சிறுமிகள் மூவர் புத்தாண்டை கொண்டாடுவதற்காக சென்றுள்ளனர். அப்போது இந்த சிறுமிகளுக்கு 22 வயதுடைய மூன்று இளைஞர்கள் அறிமுகமாகியுள்ளனர். இதனையடுத்து சிறிது நேரத்திற்குள் அந்த இளைஞர்கள் சிறுமிகளிடம் நண்பர்களாக பழகியுள்ளனர். இதனைத்தொடர்ந்து அவர்களை நம்பிய சிறுமிகள் மூவரும் அந்த ரிசார்ட் இருக்கும் அறைக்கு அவர்களுடன் புத்தாண்டை கொண்டாட சென்றுள்ளனர். அங்கு மதுபானங்களுடன் பார்ட்டி […]
உலகிலேயே முதன் முதலில் நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்துள்ளதை மக்கள் ஆரவாரமாக வரவேற்றுள்ளனர். உலகிலேயே நியூசிலாந்தில் தான் முதல் முதலாக 2021 ஆம் வருடம் பிறந்துள்ளது. மேலும் இந்தியாவின் நேரப்படி 4:20 மணியளவில் ஆக்லாந்தில் மக்கள் புத்தாண்டை வரவேற்று வாணவேடிக்கைகளுடன் மகிழ்ச்சியாக கொண்டாடி உள்ளனர். மேலும் இரவு நேரங்களில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்த சாலையில் பொதுமக்களின் ஆடல், பாடல் என்று உற்சாகத்துடன் காணப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து தற்போது ஆஸ்திரேலியாவிலும் புத்தாண்டு பிறந்துள்ளது. இதனையும் பொது மக்கள் உற்சாகத்துடன் […]
பெண் ஒருவர் உள்ளாடை அணிந்து உணவகத்திற்கு வந்ததால் வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள North bondi என்ற பகுதியில் உள்ள உணவகம் north bondi fish. இந்த உணவகத்தில் சுற்றுலா பயணியான Martina corradi என்ற பெண் தன் காதலனுடன் சென்றுள்ளார். அப்போது அந்த உணவகத்தை விட்டு பலர் முன்னிலையில் தான் வெளியேற்றப்பட்டுள்ளதாக தனது முகநூல் பக்கத்தில் வேதனையுடன் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் அந்த உணவகத்தின் மேலாளர், Martina corradi யிடம் மன்னிப்பு கூறுவதாக […]
நான்கு மாற்றங்களுடன் மெல்போர்ன் நகரில் நடைபெறும் பாக்ஸிங் டே டெஸ்டில் இந்திய அணி களமிறங்கவுள்ளது. பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கும் 11 பேர் அடங்கிய இந்திய வீரர்கள் யார் என்பதை பிசிசிஐ வெளியிட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் தொடங்கும் டெஸ்ட் போட்டி பாக்ஸிங் போட்டி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டில் ஆஸ்திரேலியா – இந்தியா, தென் ஆப்பரிக்கா – இலங்கை, நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகள் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகின்றன. இதையடுத்து […]
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான, அடிலெய்ட் முதல் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பாடம் புகட்டும் வகையில் இந்திய அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். மெல்போர்ன் நகரில் நாளை (டிச.26) நடைபெறும் இந்தப் போட்டியில் இந்திய அணியை கேப்டனாக அஜிங்கியா ரஹானே வழிநடத்துகிறார். புஜாரா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தனது மகனை காண விராத் கோலி சென்றுள்ளதாக, அவர் போட்டியில் ஆடமாட்டார். அதேபோல் முகம்மது சமியும் போட்டியில் பங்கேற்பது சந்தேகமே!
“கோலி இல்லாத நிலையில், இதுபோன்ற தோல்விக்குப் பிறகு இந்திய அணியை மீட்க யாரும் இல்லை” என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். கோலி இல்லாத இந்திய அணி இந்த டெஸ்ட் தொடரில் ஒய்ட்- வாஷ் ஆவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங். முதல் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்திருப்பது அவர்களை உளவியல் ரீதியாகக் கடுமையாக பாதிக்கும் என்றும் கூறியிருக்கிறார். அடிலெய்டில் நடந்த ஆஸ்திரேலிய அணியுடனான பகல் […]
இலவசமாக கைலாசா செல்ல விருப்பம் உள்ள நபர்கள் தங்கள் முழு விவரங்களை கைலாசா மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள் என நித்யானந்தா கூறியுள்ளார். நித்யானந்தா கைலாசம் என்னும் தனி நாட்டை உருவாக்கி விட்டதாக அறிவித்த நாள் முதல் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. அதற்கு தகுந்தவாறு அவரும் சர்ச்சையை கிளப்பும் வகையில் புதுப்புது அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். இதுவரை இவரது கைலாச நாடு எங்கு உள்ளது என்பதை யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை. இது மர்மமாகவே உள்ளது. ஆனால் கைலாசாவிற்கு என்று […]
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 9.30 மணிக்கு அடிலெய்ட் மைதானத்தில் தொடங்க உள்ளது. இந்த நிலையில் அந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடிக்கும் முனைப்பில் இந்திய கேப்டன் விராட் கோலி களமிறங்க உள்ளார். பாண்டிங் மற்றும் கோலி ஆகிய இருவரும் கேப்டனாக 41 சதங்கள் அடித்து சமநிலையில் உள்ள நிலையில், கோலி சதம் அடித்து பாண்டிங் சாதனையை முறியடிப்பார் என்று […]
இந்தியா ஆஸ்திரேலியா மோதும் பகல் இரவு டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. கேப்டன் கோலி தலைமையிலான இந்திய அணியில், பிரத்வி ஷா, மயங்க் அகர்வால், புஜாரா, ரகானே, ஹனுமா விகாரி, சஹா, அஸ்வின், உமேஷ் யாதவ், மொகமத் சஷி, பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் பிங்க் பந்தில் டெஸ்ட் போட்டியை சந்திக்க உள்ளது இதுவே முதல் முறை. ஏற்கனவே நடந்த ஒருநாள் தொடரை 2 க்கு 1 என்ற […]
இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளில் வேகமாக பரவி வரும் புதிய கொரோனோ வைரஸ் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் புதியதாக மற்றுமொறு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது மிகவும் வேகமாகப் பரவக்கூடியது என்று பிரிட்டனின் சுகாதார செயலர் போட் மண்ட் ஹான்காக் கூறியுள்ளார் . இந்நிலையில் இந்த புதிய கொரோனா வைரஸ் இங்கிலாந்தில் மட்டுமின்றி வேல்ஸ்,ஸ்காட்லாந்து போன்ற பகுதிகளிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதேபோல் பிரிட்டனுக்கு வெளியே உள்ள ஆஸ்திரேலியா டென்மார்க் பகுதிகளிலும் அதே வகையான புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. […]
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் அடிலெய்ட் மைதானத்தில் தொடங்க உள்ளது. இந்த நிலையில் அந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடிக்கும் முனைப்பில் இந்திய கேப்டன் விராட் கோலி களமிறங்க உள்ளார். பாண்டிங் மற்றும் கோலி ஆகிய இருவரும் கேப்டனாக 41 சதங்கள் அடித்து சமநிலையில் உள்ள நிலையில், கோலி சதம் அடித்து பாண்டிங் சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தலையில்லாத பாம்பு ஒன்று தன்னை தாக்குபவரை தேடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியாவில் நபர் ஒருவர் கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு தலையில்லாத பாம்பு ஒன்று கிடப்பதை பார்த்துள்ளார். இதை பார்த்த அவர் jakonoble என்ற பெயரில் வீடியோவாக சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். வீடியோவில் அந்த நபர் தன்னிடம் இருந்த டென்னிஸ் மட்டையால், தலையில்லாத பாம்பை அசைத்து பார்த்துள்ளார். இறந்து கிடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த பாம்பு தலை இல்லாத […]