ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே (வயது 52) மாரடைப்பால் காலமானார். இவர் தாய்லாந்தில் உள்ள சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அவரை சோதித்துப் பார்த்த மருத்துவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வார்னே 90-களில் உலக அளவில் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் தலை சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான […]
Tag: ஆஸ்திரேலிய பிரதமர்
ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், கல்வித்துறை அமைச்சர் மீது முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் அளித்த குற்றச்சாட்டின் பேரில் அவரை பதவி விலக அறிவுறுத்தியுள்ளார். ஓரிரு நாட்களுக்கு முன்பு பாலியல் துன்புறுத்தலால் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் பாதிக்கப்படுவதாக ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் முன்னாள் ஊழியரான ரச்சேல் மில்லர், கல்வித்துறை அமைச்சர் ஆலன் டட்ஜுடன் கடந்த 2017-ல் ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது தன்னை இடுப்பில் எட்டி உதைத்தாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். […]
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, குவாட் கூட்டமைப்பினுடைய உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள அமெரிக்கா சென்ற நிலையில், ஆஸ்திரேலியாவின் பிரதமர் மற்றும் ஜப்பான் பிரதமரை சந்தித்து கலந்தாலோசித்துள்ளார். அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளை இணைத்து உருவாக்கிய குவாட் என்ற நாற்கர கூட்டமைப்பினுடைய உச்சி மாநாடானது, இன்று வாஷிங்டனில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு, அமெரிக்க அதிபர், ஜோ பைடன் அழைப்பு விடுத்ததால், பிரதமர் மோடி, அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அப்போது அமெரிக்காவிற்கு சென்று, வாஷிங்டனில் ஆஸ்திரேலிய […]
உலக பணக்கார நாடுகளில் ஒன்றான ஆஸ்திரேலியாவிற்கு மிக எளிதில் கிடைக்கும் கொரோனா தடுப்பூசியை வினியோகம் செய்வதில் அந்நாடு ஆர்வம் காட்டாததால் தற்போது சில முக்கிய இடங்களில் தொற்று வேகமாக பரவியதையடுத்து ஆஸ்திரேலிய பிரதமர் பொதுமக்களிடம் வெளிப்படையாக மன்னிப்பு கோரியுள்ளார். உலக பணக்கார நாடுகளில் ஒன்றான ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமராக ஸ்காட் மோரிசன் இருந்து வருகிறார். இதனையடுத்து ஆத்திரேலியா பணக்கார நாடு என்பதால் கொரோனா குறித்த தடுப்பூசி மிக எளிதில் கிடைத்துள்ளது. இருப்பினும் அதனை வினியோகம் செய்வதில் அந்நாட்டு […]
ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், அபுதாபியின் பட்டத்து இளவரசரான மேதகு ஷேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யான் உடன் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளார். இருநாட்டு தலைவர்களும் கடந்த 25 ஆம் தேதி அன்று தொலைபேசியில், இரு நாட்டிற்கும் இடையேயான நட்புறவிற்கு பயனளிக்கக்கூடிய தகவல்களை பேசியதாக கூறப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் இரு நாடுகளிலும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் கட்டுப்பாடுகள் தொடர்பாகவும் விவாதித்துள்ளனர். மேலும் கொரோனா தொற்றால் அதிக பாதிப்படைந்த நாடுகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் செய்யப்படும் உதவிகள் மற்றும் நடவடிக்கைகள் […]
ஆஸ்திரேலியா தன் தேசியகீதத்தில் ஒரு வார்த்தையை மாற்றியுள்ளதற்கு மக்கள் கலவையான வரவேற்பை கொடுத்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் பிரதமரான ஸ்காட் மோரிசன் புத்தாண்டு தினத்தையொட்டி “Advance Australia fair” தேசிய கீதத்தின் இரண்டாம் வரியான “For we are young and free” என்பதை “For we are one and free” என்று மாற்றி உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த மாற்றமானது ஜனவரி 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. மேலும் இதுகுறித்து கூறிய பிரதமர், “ஆஸ்திரேலியா உலகில் […]
பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து கடிதம் அனுப்பியதற்கு சுரேஷ் ரெய்னா நன்றி தெரிவித்துள்ளார். தோனி மற்றும் ரெய்னா ஆகிய இருவரும் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி, சுதந்திர தினத்தை அடுத்து தங்களது ஓய்வை அறிவித்தனர். அதில் தோனி தனது 39 வயதில் ஓய்வு அறிவித்துள்ளார். ஆனால் சுரேஷ் ரெய்னா 33 வயதில் ஓய்வு அறிவித்து இருப்பது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் இருவருக்கும் கிரிக்கெட் உலகம் மட்டுமல்லாமல் பல்வேறு துறையை சேர்ந்த அனைவரும் பிரியாவிடை வாழ்த்துக்களை […]
உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய சுதந்திர தினத்தை இன்று உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர்களுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் வாழ்த்து கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” ஆஸ்திரேலியாவின் நீண்டகால நட்பு நாடு இந்தியா. இரு நாட்டின் உறவுகளும், நம்பிக்கை மற்றும் மரியாதையை அடித்தளமாகக் கொண்டு உருவாகியது. இந்த நட்புறவு மிகவும் ஆழமானது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் […]
இந்தியாவிற்கு ஆஸ்திரேலிய பிரதமர் வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைத்திருக்கிறார். இந்தியா – ஆஸ்திரேலியா மெய்நிகர் உச்சி மாட்டில் ஆஸ்திரேலிய பிரதமர் மோரிஸன்னுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் என்பது எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் நிலையில் இந்த மாநாடு நடைபெறுகின்றது. பொதுவாக நேரில்தான் இந்த மாநாடு நடக்கும், ஆனால் தற்போது காணொளி காட்சி மூலம் நடைபெறுகிறது. இதில் கொரோனா நிலைமை […]