யூரோ 2020 இறுதிப்போட்டியை பார்த்துவிட்டு, மறுநாள் பள்ளிகளுக்கும், அலுவலகங்களுக்கும் தாமதமாக வரலாம் என்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து, இத்தாலியை எதிர்கொள்ளும் யூரோ 2020 இறுதிப் போட்டி, ஞாயிற்று கிழமை அன்று நடக்கிறது. இதனை பலரும் ஆர்வமுடன் பார்ப்பார்கள். எனவே திங்கட்கிழமை அன்று சில பள்ளிகளும், வணிக நிறுவனங்களும் தங்கள் மாணவர்கள் மற்றும் ஊழியர்களை தாமதமாக வர அனுமதித்திருக்கிறது. அதாவது சுமார் 55 வருடங்களுக்கு பின்பு, தற்போது தான் இங்கிலாந்து அணி முதல் தடவையாக இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. […]
Tag: இங்கிலாந்து
கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவருடன் இளவரசி கேட் மிடில்டன் தொடர்பில் இருந்ததால் அவர் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவியான இளவரசி கேட் மிடில்டன் டென்னிஸ் விளையாட்டின் ரசிகை ஆவார். இந்நிலையில் இளவரசி கேட் மிடில்டன் சமீபத்தில் வாஷிங்டன் நகரில் நடைப்பெற்ற டென்னிஸ் போட்டியை காண சென்றுள்ளார். இதையெடுத்து அங்கு அவருடன் இருந்த ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மேலும் இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து நாட்டில் […]
இங்கிலாந்து இந்தியா அணிகளுக்கு இடையேயான 5 நாள் கொண்ட தொடர் போட்டியை காண்பதற்கு ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று வெளியிட்டார். இந்தியா- இங்கிலாந்து ஐந்தாவது ஒருநாள் போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்தப் போட்டியானது டிரன்ட்பிரிட்ஜ் என்ற பகுதியில் நடக்க உள்ளது. இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளதாவது: விளையாட்டுப்போட்டிகள், உள்அரங்குகள், மைதானங்கள் போன்றவற்றில் ரசிகர்கள் அமர்ந்து பார்ப்பதற்கான கட்டுப்பாடுகள் […]
இங்கிலாந்து ராணுவ தளபதி சர் நிகோலஸ் கார்ட்டரை சந்தித்த இந்திய ராணுவ தளபதி இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து கலந்து ஆலோசித்துள்ளார். இங்கிலாந்துக்கு இரண்டு நாட்கள் பயணம் சென்றிருந்த இந்திய ராணுவ தளபதி எம்.எம்.நரவனேக்கு இங்கிலாந்து ராணுவம் அணிவகுப்பு மரியாதை செலுத்தியுள்ளது. மேலும் இங்கிலாந்து ராணுவத்தின் படைப்பிரிவுகளை இந்திய ராணுவ தளபதி எம்.எம்.நரவனே ஆய்வு செய்துள்ளார். அதன் பிறகு இங்கிலாந்து ராணுவ தளபதி சர் நிகோலஸ் கார்ட்டரை சந்தித்த இந்திய ராணுவ தளபதி இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு […]
ஜூலை 19ஆம் தேதிக்குப் பிறகு இங்கிலாந்தில் தொடரும் மற்றும் நீக்கப்படும் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் ஜூலை 19ம் தேதிக்குப் பிறகு நாடு பழைய நிலைக்கு திரும்பும் என்று ஏற்கனவே அறிவித்துள்ளார். இந்த நிலையில் ஜூலை 19 ஆம் தேதிக்கு பிறகு 6 பேர் மட்டுமே கூட வேண்டும் என்ற விதி நீங்கி பொது இடங்களில் எத்தனை பேர் வேண்டுமானாலும் சந்தித்து பேசிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்படவுள்ளது. மேலும் […]
இங்கிலாந்தில் ஜூலை 19ம் தேதிக்குப் பிறகு மாஸ்க் அணிவது கட்டாயமில்லை என அந்நாட்டு அமைச்சர் ராபர்ட் ஜென்ரிக் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்துவரும் நிலையில், படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து ஜூலை 19 முதல் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் முழுமையாக தளர்த்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், ஜூலை 19ம் தேதிக்குப் பிறகு மாஸ்க் அணிவது கட்டாயமில்லை என அந்நாட்டின் கேபினட் அமைச்சர் ராபர்ட் ஜென்ரிக் தெரிவித்துள்ளார். அதேநேரம் மாஸ்க் அணிவதில் இருந்து பொதுமக்கள் […]
இங்கிலாந்தில் ஒரு பெண் கல்லறைகள் மற்றும் நினைவுச்சின்னங்களை புகைப்படம் எடுப்பதை பொழுதுபோக்காக வைத்திருக்கிறார். இங்கிலாந்தில் உள்ள ஆங்கிலியாவில் இருக்கும் நோர்ஃபோக் மாகாணத்தில் வசிக்கும் லூ காக்கர்(48) என்ற பெண் வித்தியாசமான பொழுதுபோக்கை கொண்டிருக்கிறார். அதாவது அந்த மாகாணத்திலுள்ள கல்லறைகள் மற்றும் நினைவுச் சின்னங்கள் போன்றவற்றை புகைப்படமெடுத்து வருகிறார். இவர், நோர்ஃபோக் மாகாணத்தை சுற்றி அமைந்துள்ள 200க்கும் அதிகமான கல்லறைகளையும் தேவாலய பகுதிகளிலும் தற்போது வரை 2,20,000 கல்லறைகளையும் நினைவுச்சின்னங்களையும் புகைப்படம் எடுத்திருக்கிறார். தற்போது தினசரி இறப்பு எண்ணிக்கை […]
இங்கிலாந்தில் பெண் ஒருவரின் சடலம் பிரதான சாலையில் தலையில்லாமல் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5 மணி அளவில் இங்கிலாந்தில் உள்ள பிரபல சுற்றுலா தலமான சால்கோம்பில் காட்டு பகுதியில் உள்ள பிரதான சாலையில் பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக பொதுமக்களில் ஒருவர் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டெவோன் காவல்துறையினர் அந்த பெண்ணுடைய சடலத்தை மீட்டதோடு விசாரணை மேற்கொண்டனர். மேலும் சம்பவ […]
இங்கிலாந்தின் இளவரசர் சார்லஸ் இந்திய நாட்டின் சூரிய ஒளி மின் திட்டங்கள் உலகநாடுகளுக்கு முன்மாதிரியாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். பருவநிலை நடவடிக்கைகள் தொடர்பில் இந்திய உலகளாவிய மன்றத்தின் விவாதம், நேற்று நடந்துள்ளது. இதில் இங்கிலாந்து இளவரசரான சார்லஸ் பங்கேற்று உரையாற்றியுள்ளார். அப்போது அவர் பேசியதாவது, இந்திய நாட்டின் உலகளாவிய அணுகுமுறை, வலிமையான தனியார் துறையுடன் எங்களின் முயற்சிகளை துரிதப்படுத்துவதற்கும், நிலையான வருங்காலத்தை அமைப்பதற்கும் முக்கிய வழிகள் சில இருக்கின்றன என்று கருதுகிறேன். மாற்றத்தை ஆதரிப்பதற்காக தனியார் மூலதனத்தின் […]
கடந்த 1966 ஆம் ஆண்டிற்கு பிறகு இங்கிலாந்து அணி நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் ஜெர்மனியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது . யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று லண்டனில் நடைபெற்ற 2 வது சுற்றில் முன்னாள் சாம்பியனான ஜெர்மனி இங்கிலாந்துடன் மோதியது. இதில் இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இதில் 2 வது பாதி ஆட்டத்தில் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் இங்கிலாந்து அணி அதிரடி ஆட்டத்தை காட்டியது. இதில் 75 வது […]
ஆயுதப்படை தளபதிக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது . இங்கிலாந்து ராணுவத்தில் ஆயுதப்படை தளபதியாக இருப்பவர் நிக் கார்ட்டர் .இவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இருப்பது உறுதியானது . இதனால் தனிமைப்படுத்தப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .இந்த தொற்று உறுதி செய்யப்படுவதற்கு முன்பாக கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த மூத்த ராணுவ அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் ராணுவப் படைத் தளபதி நிக் கார்ட்டர் கலந்துகொண்டார் . இந்த ஆலோசனை […]
லண்டனில் உள்ள ரயில்வே நிலையம் ஒன்றின் அருகே எதிர்பாராதவிதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள நியுவிங்டன் எனும் பகுதியில் அமைந்துள்ள எலிபண்ட் அன்ட் காசல் ரயில் நிலையத்தின் அருகே திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் அருகிலிருந்த 6 கார்கள், 3 வணிக வளாகங்கள், தொலைபேசி பெட்டி ஆகியவை முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற 100 தீயணைப்பு வீரர்களும், 15 தீயணைப்பு வண்டிகளும் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக […]
சிறுமி ஒருவர் தன்னுடைய 10 வயதில் கர்ப்பமாகி 30 வாரத்திற்கு பின் தற்போது ஒரு அழகான பிள்ளையைப் பெற்றெடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் வசித்து வரும் சிறுமி ஒருவர் தன்னுடைய 10 வயதில் கர்ப்பமாகியுள்ளார். இந்நிலையில் தற்போது 30 வாரங்களுக்கு பிறகு தன்னுடைய 11 ஆவது வயதில் ஒரு அழகான பிள்ளை பெற்றெடுத்துள்ளார். இதனையடுத்து சிறுமியினுடைய குடும்பத்தினர்கள் சிறுமி கர்ப்பமடைந்ததும், அழகான பிள்ளையை பெற்றெடுத்ததும் தங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்கள். இதனைத் தொடர்ந்து சிறுமியும், சிறுமியினுடைய […]
இங்கிலாந்தில் பிரசவத்தின்போது, 10 சதவீதம் பெண்கள் புகைபிடிப்பவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், தற்போது கர்ப்பிணி பெண்களுக்கு ஒரு புதுவித அறிவிப்பை NHS விடுத்துள்ளது. கர்ப்பிணி பெண்கள் புகைப்பிடிப்பதை நிறுத்துவதற்கு ஏதேனும் ஒரு நிதி சலுகை போன்றவற்றை அவர்களுக்கு கொடுத்தால் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று இங்கிலாந்து நாட்டின் சுகாதார துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் NHS கர்ப்பிணி பெண்கள் புகை பிடிப்பதை நிறுத்துவதற்காக சுமார் 400 பவுண்டு வரை மதிப்புடைய ஷாப்பிங் வவுச்சரை ஒவ்வொரு கர்ப்பிணி பெண்களுக்கும் […]
இங்கிலாந்தில் உடல் பருமன் மிகப்பெரிய அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது. 18 வயதை கடந்தவர்களில் 60 சதவீதம் பேர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை கட்டுப்படுத்த தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். இதில் ஒரு அங்கமாக அதிக இனிப்பு,கொழுப்பு மற்றும் உப்பு கொண்ட விரைவு உணவுகளின் விளம்பரங்கள் அடுத்த ஆண்டு இறுதிக்குள் காலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை ஒளிபரப்ப அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது.
யூரோ கால்பந்து போட்டிகளின் குரூப் சுற்று முடிவடைந்த நிலையில், நாக் அவுட் சுற்றுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 2014 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற ஜெர்மனி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. நடப்பு சாம்பியனான போர்ச்சுகல் உலக தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் பெல்ஜியத்தை எதிர்கொள்கிறது. உலக சாம்பியன் பிரான்ஸ் சுவிட்சர்லாந்தை எதிர்கொள்கிறது. நாக் அவுட் சுற்று வரும் 26ஆம் தேதி துவங்குகிறது.
இங்கிலாந்தில் புதிதாக கண்டறியப்பட்ட டெல்டா வகை வைரஸ் பரவ தொடங்கிய நிலையில் தடுப்பூசி, பலரின் உயிரை காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உருமாற்றம் அடைந்த டெல்டா வகை வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. எனவே ஊரடங்கு விதிமுறைகளில் தளர்வுகள், ஏற்படுத்துவது தொடர்பில் ஒரு மாதத்திற்கு பின்பு தான் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி பின்பு நேற்று அதிகமான தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி அதிகமான மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதால், சுமார் […]
இங்கிலாந்தில் 110 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர்களின் பாத சுவடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 110 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து மண்ணில் நடந்து சென்ற கடைசி டைனோசர்கள் இது. ஆறு வெவ்வேறு வகை டைனோசர்களின் கால்தடங்கள் கென்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று ஆராய்ச்சியாளர்களின் புதிய அறிக்கை கூறியுள்ளது. ஹேஸ்டிங்ஸ் மியூசியம் மற்றும் ஆர்ட் கேலரியின் கியூரேட்டர் மற்றும் போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழக விஞ்ஞானி ஒருவர் டைனோசர் கால்தடங்களை கண்டுபிடித்தது பிரிட்டனில் உள்ள டைனோசர்களின் கடைசி பதிவு. கென்ட்டில் உள்ள ஃபோக்ஸ்டோனில் உள்ள […]
போலந்து அரசு, இங்கிலாந்திலிருந்து வரும் மக்களுக்கு அதிக கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. போலந்தில் சமீபத்தில் கொரோனா தொற்று நன்றாக குறையத்தொடங்கியுள்ளது. எனவே ஊரடங்கு விதிமுறைகளில் தளர்வுகளும் ஏற்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் பழைய நிலைக்கு திரும்பி வருகிறார்கள். இந்நிலையில் புதிதாக கண்டறியப்பட்ட டெல்டா வகை வைரஸ் தற்போது பரவத் தொடங்கியிருக்கிறது. எனவே போலந்து அரசு, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் விமான போக்குவரத்தில் பல விதிமுறைகளை அறிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது, இங்கிலாந்து நாட்டிலிருந்து போலந்திற்கு, வரும் […]
இங்கிலாந்தில் ஆராய்ச்சியாளர்கள், 10 கோடி வருடங்களுக்கு முன் வாழ்ந்த டைனோசர்களின் காலடி தடத்தை கண்டறிந்துள்ளார்கள். இங்கிலாந்தில் உள்ள கென்ட் என்ற நகரத்தில் ஃபோல்க்ஸ்டோன் என்ற பகுதியில் மலைக் குன்றுகளிலும் கடற்கரையின் முன்புற பகுதிகளிலும் இந்த காலடித்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. டைனோசர்கள் தொடர்பில் ஆராய்ச்சி நடத்தி வரும் பேராசிரியர் டேவிட் மார்டில் இது தொடர்பில் தெரிவித்துள்ளதாவது, முதல்முறையாக இப்பகுதியில் டைனோசர்களின் காலடித்தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவை மொத்தமாக அழிவதற்கு முன்பாக இறுதியாக இந்த பகுதிகளில் சுற்றி திரிந்திருக்கும். அவை ஒன்றோடு ஒன்று […]
இங்கிலாந்தில் ஒரு பள்ளியின் ஆசிரியை, மாணவிகளிடம் கூறிய அறிவுரை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள Northumberland, Rothbury என்ற பகுதியில் Dr Thomlinson Church of England Middle School என்ற பள்ளி அமைந்துள்ளது. இங்கு 8 லிருந்து 13 வயது வரை உள்ள குழந்தைகள் பயில்கிறார்கள். இந்நிலையில் இப்பள்ளியில் உள்ள ஆசிரியை ஒருவர் சிறுமிகளிடம் உடற்கல்வி வகுப்பிற்காக ஷார்ட்ஸ் உடைக்கு பதிலாக பாவாடை அணிந்து வாருங்கள் என்று தெரிவித்திருக்கிறார். மேலும் சார்ட்ஸ் அணியும் போது பாலியல் […]
ஊரடங்கு தளர்வுகள் நீட்டிப்புக்கு இங்கிலாந்து பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் பரவி வரும் டெல்டா வகை கொரோனா வைரஸ் அங்கு வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் புதிய தொற்று பாதிப்பு எண்ணிக்கையில் 90 சதவீதம் டெல்டா வகை கொரோனா வைரஸ் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில் இங்கிலாந்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்த இதற்கு முன் பிறப்பிக்கப்பட்டிருந்த […]
இங்கிலாந்தில் பள்ளிச் சிறுவன் நண்பனால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள பாஸ்டன் என்ற நகரத்தில் வனப்பகுதி ஒன்று உள்ளது. அங்கு கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் ராபர்ட்ஸ் பன்சிஸ் என்ற 12 வயது சிறுவனின் உடல் கண்டறியப்பட்டது. அவரது மார்பு, வயிறு, கழுத்து மற்றும் தலை பகுதிகளில் பலமாக கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் ராபர்ட்ஸின் நண்பனான, 16 வயதுடைய சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட […]
இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட 150 மில்லியன் வருடங்கள் பழைமையான புதைப்படிவம் சுறாக்கள் குடும்பத்தை சேர்ந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் தெற்கு கடற்கரை பகுதியில் சுமார் 150 மில்லியன் வருட பழமை வாய்ந்த புதைபடிவம் ஒன்று கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இங்கிலாந்தில் இருக்கும் கிம்மெரிட்ஜ் என்ற பகுதியில் எட்சஸ் கலெக்சன் மியூசியம் ஆஃப் ஜூராஸிக் மெரைன் லைஃப்ன் என்ற அருங்காட்சியகத்தில் தற்போது வைக்கப்பட்டிருக்கிறது. ஆராய்ச்சியாளர்கள், இது சுறாமீன் குடும்பத்தை சேர்ந்தது என்று கண்டுபிடித்துள்ளனர். அரிதான இந்த […]
இங்கிலாந்தில் தற்போது கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால், ஜூலை 19 ஆம் தேதியிலிருந்து முழு ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்ற அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது. இங்கிலாந்தில் கடந்த திங்கட்கிழமையிலிருந்து கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த தட்டுப்பாட்டிற்கான காரணம் என்னவென்றால், அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை செலுத்தி கொண்டவர்களுக்கு பின்விளைவு ஏற்படுவதால், 40 வயதிற்குட்பட்டவர்களுக்கு இதனை செலுத்துவதை தவிர்த்துவிட்டு பைசர் மற்றும் மெடெர்னா தடுப்பூசிகளை வழங்குவதால் தான் இங்கிலாந்தில் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் ஜூலை 19 ஆம் தேதிக்குள் […]
இங்கிலாந்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் 4 வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார் . இங்கிலாந்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது அங்கு பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் பரவி வரும் டெல்டா வகை கொரோனா வைரஸ் இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக 21 ஆம் தேதி முடிவுக்கு வரவிருந்த ஊரடங்கு தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. […]
பிரிட்டனில் பிரபலமான கடற்கரையில், ஒரு பெண் சுமார் 150 அடி உயரத்திலிருந்து பாறையில் விழுந்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் மிக பிரபலமடைந்த டர்டில் டோர் என்ற சுற்றுலாத்தலம் இருக்கும் டோர்செட் என்ற இடத்தில் Man o’ War கடற்கரைக்கு அருகே செங்குத்தான மலை குன்று உள்ளது. அங்கு கடந்த திங்கட்கிழமை அன்று ஒரு பெண், கீழே இருக்கும் ஒரு நபரிடம், “இதோ வருகிறேன்” என்று சத்தமாக கூறிக்கொண்டே செங்குத்தான மலையில் இறங்கிவந்துள்ளார். எனவே அங்கிருந்த […]
உலகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான நாடுகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில நாடுகளில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது இங்கிலாந்தில் […]
உலகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் ஏற்படும் பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த அந்தந்த நாட்டு அரசுகள் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. அதன்பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு […]
உலகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் ஏற்படும் பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த அந்தந்த நாட்டு அரசுகள் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. அதன்பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு […]
இங்கிலாந்து சார்பில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள வீரர்களுக்காக மனநல ஆலோசகர் குழு ஒன்று அனுப்பி வைக்கப்பட உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக சென்ற வருடம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டி இந்த வருடம் தள்ளிவைக்கப்பட்டதோடு, ஜூலை 23-ஆம் தேதி ஆரம்பமாகி ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் ஆகஸ்ட் 24-ஆம் தேதி தொடங்கும் பாராலிம்பிக் போட்டிகள் செப்டம்பர் 5-ஆம் தேதி வரை நடைபெறும் […]
உலகம் முழுவதுமாக பல நாடுகளிலும் கொரோனாவை முற்றிலுமாக ஒழிக்க தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆனால் மக்களிடையே தடுப்பூசி போடுவதற்கு பயமும் ஒருவித குழப்பமும் நீடித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக ஒரு சிலர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இதனால் மக்களிடையே தடுப்பூசி போட்டுக் கொள்வதை ஆர்வப்படுத்தும் விதமாக ஒவ்வொரு நாட்டிலும் வித்தியாசமான முறையில் பரிசளித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்தில் 75 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். […]
இங்கிலாந்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு அந்நாட்டு மக்கள் இன்னும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இங்கிலாந்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் சரியாக அனைத்தும் பின்பற்றபட்டால் ஜூன் 21-ஆம் தேதி ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் நிறைவுக்கு வரும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்திருந்தார். இந்நிலையில் உருமாறிய பி.1.617 வைரஸ் இங்கிலாந்து மக்களிடையே பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது ஊரடங்கில் சில […]
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும், அவரது நீண்ட நாள் காதலி கேரி சைமன்ட்ஸுக்கும் ரகசிய திருமணம் நடைபெற்றுள்ளது. கடைசி நிமிடத்தில் நெருங்கிய விருந்தினர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், போரிஸ் ஜான்சனின் அலுவலகத்தில் பணிபுரியும் மூத்த அதிகாரிகளுக்குக் கூட விஷயம் முன்கூட்டியே தெரியாது என்றும் அந்நாட்டு செய்தித் தாள்களும் ஊடகங்களும் தகவல் தெரிவிக்கின்றன. கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் 30 பேருக்கு மட்டுமே திருமண நிகழ்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஈரானில் திரைப்பட இயக்குனரை அவரின் பெற்றோரே கொலை செய்து உடலை துண்டுகளாக வெட்டி சூட்கேசில் போட்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரானில் உள்ள தெஹ்ரான் நகரில் வசிக்கும் பாபக் ஹரோம்தின். இயக்குனரான இவர் இங்கிலாந்தில் தங்கியிருந்து குறும்படங்களையும், திரைப்படங்களையும் இயக்கி வந்துள்ளார். 47 வயதாகியும் திருமணமாகததால், ஈரானில் இருக்கும் அவரின் பெற்றோர் தொலைபேசியில் பேசும்போதெல்லாம் திருமணம் செய்ய அவரை கட்டாயப்படுத்தி வந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அவர் சில வருடங்களுக்கு முன் சொந்த நாடு திரும்பி, தன் பெற்றோருடன் […]
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலும் விளையாட உள்ளது. இந்த போட்டியில் பங்கு பெறுவதற்காக இந்திய அணி வருகின்ற ஜூன் மாதம் 18ஆம் தேதி இங்கிலாந்திற்கு செல்ல உள்ளது. இந்த போட்டியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ சில தினங்களுக்கு முன் வெளியிட்டது. இந்திய வீரர்கள் இங்கிலாந்து செல்வதற்கு முன், மும்பையில் தனிமைப்படுத்தப்பட்ட உள்ளனர். கிட்டத்தட்ட மூன்றரை மாதம் நீண்ட தொடராக […]
இங்கிலாந்தில் குழந்தையுடன் தனியாக சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் ஒருவர் குழந்தையை பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் மாநிலத்தில் இருக்கும் Dudley என்ற நகரின் சாலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பெண் ஒருவர் தன் குழந்தையுடன் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென்று ஒரு மர்ம நபர் அவரை தடுத்து குழந்தையை விலைக்கு தருமாறு கேட்டுள்ளார். அதன் பின்பு குழந்தையை தூக்கவும் முயன்றுள்ளார். இதனால் பதறிய அந்த பெண் அந்த நபரை […]
இங்கிலாந்தில் கால்பந்து பயிற்சி மேற்கொண்டிருந்த சிறுவன், மின்னல் தாக்கி பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்திலுள்ள லங்காஷயர் என்ற மாகாணத்தில் இருக்கும் பிளாக்பூல் என்ற நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மாலை 5 மணிக்கு திறந்த வெளி மைதானத்தில் 9 வயது சிறுவன் ஒருவன் தனியார் கால்பந்து பயிற்சியில் பங்கேற்றிருக்கிறார். அப்போது திடீரென்று சிறுவன் மீது இடி மின்னல் தாக்கியுள்ளது. UPDATE: A nine-year-old boy has sadly died following an incident on […]
இங்கிலாந்தில் உள்ள போல்டன் நகரில் இந்தியாவில் மாறுபாடு அடைந்த கொரோனா வைரஸ் பாதிப்பு இரு மடங்காக அதிகரித்து வருவதால் அந்த நகரம் இந்திய வைரசுக்கான “ஹாட்ஸ்பாட்” என்று அழைக்கப்படுகிறது. இங்கிலாந்தில் உள்ள போல்டன் நகரம் இந்தியாவில் மாறுபாடு அடைந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து அதிக அளவிலான பரிசோதனையை முன்னெடுத்து வருகிறது. அதனைத் தொடர்ந்து நகரத்தின் கொரோனா தடுப்பூசி திட்டம் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சராசரியாக 100,000-க்கு 20.6 பேர் இங்கிலாந்தில் கொரோனா […]
மீதமுள்ள ஐபில் போட்டிகளை ,இங்கிலாந்தில் நடத்தலாம் என்று, இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் கருத்து தெரிவித்துள்ளார் 14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டிகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே ஐபிஎல் தொடரில் பங்கு பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்கள் நாடு திரும்புவதற்கான பணிகளை பிசிசிஐ மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் மீதமுள்ள 31 போட்டிகளை நடத்த […]
இந்தியாவை நினைக்கும்போது இதயம் வலிக்கிறது என்று இங்கிலாந்தின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் வேதனை தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது மட்டுமில்லாமல் பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, தடுப்பூசி, படுக்கை வசதி போதுமான அளவு இல்லாத காரணமாக பல நோயாளிகள் உயிரிழந்து வருகின்றன. இதை தொடர்ந்து பல நிறுவனங்களும் இந்தியாவிற்கு உதவி செய்ய முன்வந்துள்ளன. […]
இங்கிலாந்து ஐகோர்ட்டில் பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடி நாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய அனுமதி கோரி மேல்முறையீடு செய்துள்ளார். இந்தியாவை சேர்ந்த பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடி மீது 11 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணம் மோசடி செய்ததாக குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் இவர் வங்கிகளில் வாங்கிய கடன் தொகையையும் திருப்பி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து நிரவ் மோடி கைது செய்யப்பட்டு […]
பிரிட்டனில் கொரோனா பரப்பும் விகிதத்தை குறிக்கக்கூடிய R எண் மதிப்பு அதிகரித்திருப்பதாக இங்கிலாந்து சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா தீவிரமாகி நேருகிறது. இந்நிலையில் பிரிட்டனில் கடந்த வாரத்தில் R எண் 0.8 லிருந்து 1.0 வரை இருந்தது. அதாவது சராசரியாக கொரோனா ஏற்பட்ட ஒவ்வொரு பத்து நபர்களும் 8 லிருந்து 10 நபர்களுக்கு தொற்றை ஏற்படுத்தினார்கள் என்று அர்த்தம். அது தற்போது 0.8 லிருந்து 1.1 ஆக அதிகரித்திருக்கிறது. இதனை இங்கிலாந்து பொது சுகாதாரத் […]
கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் ரத்த உறைவு பிரச்சனையால் இந்த வயதினர் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவலை MHRA நிறுவனம் வெளியிட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகில் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே கொரோனா தடுப்பூசிகள் பல ரத்தக்கட்டி பிரச்சினைகளை உருவாக்குகிறது என […]
இங்கிலாந்தில் உள்ள குறிப்பிட்ட 5 பகுதிகளில் கொரோனா தொற்று மிகத்தீவிரமாக பரவிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் கொரோனா தீவிரமாக பரவிய போதும் தடுப்பூசி செலுத்த தயக்கம் காட்டினர். அந்த சமயத்தில் பிரிட்டன் முதன்முதலாக அவசரகால தடுப்பூசியை அறிவித்து அதனை செயல்படுத்தியது. இதனால் தற்போது பிரிட்டனில் கொரோனா பரவல் மற்றும் உயிரிழப்புகளும் குறைய தொடங்கியுள்ளது. எனினும் “Public Health England” தெரிவித்த தகவல்களின் அடிப்படையில், இங்கிலாந்தில் உள்ள சில பகுதிகளில் கொரோனா தீவிரமாக பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் […]
நான்காயிரம் பேர் பங்கேற்கவிருக்கும் நிகழ்ச்சியில் முகக் கவசம் அணிய தேவையில்லை என்று அரசு தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் வருகின்ற மே 11ம் தேதி மிகவும் பிரபலமான ‘பிரிட்’ இசை விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சி லண்டனில் உள்ள ‘ஓ2’ என்ற அரியானாவில் நடைபெற உள்ளது. இதில் 4000 பேர் கலந்து கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. அப்படி கலந்து கொள்பவர்கள் முகக்கவசம் அணிய தேவையில்லை என்றும் சமூக இடைவெளியை பின்பற்ற அவசியமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரங்கத்திற்கு […]
சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி பெரும்பாலான நாடுகளில் கோரோனோ இரண்டாவது பரவ தொடங்கியுள்ளது. அதனால் […]
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்படுவதால் கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது அதனை சரி செய்வதற்கு இங்கிலாந்து அரசு உதவி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருவதால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளும் போதுமான அளவில் மருந்து உபகரணங்களும் இல்லாததால் இந்தியாவில் நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகையால் பல்வேறு சர்வதேச நாடுகள் இந்தியாவிற்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன. அந்தவகையில் அமெரிக்கா நியூயார்க் நகரிலிருந்து சுமார் […]
இங்கிலாந்தில் 33.6 மில்லியனுக்கு மேற்பட்ட மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். இந்தியாவைப் போலவே கடந்த ஆண்டு இங்கிலாந்திலும் புதிய உருவாக்கம் கொண்ட கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகமாகவே காணப்பட்டது. தற்போது இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே 1,712 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் இங்கிலாந்தில் மக்களுக்கு தீவிரமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான பணியும் தீவிரமாக பட்டது. இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து இருப்பதாக கூறியுள்ளனர். கடந்த […]
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி உலக நாடுகள் முழுவதிலும் போடப்பட்டு வருகிறது. ஆனால் முதலில் குறைந்த கொரோனா பாதிப்பு, தற்போது மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. பெரும்பாலான நாடுகளில் கொரோனா கோரத் தாண்டவம் ஆடுகிறது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பு […]