Categories
உலக செய்திகள்

குப்பையில் கிடந்த பொருட்களை வைத்து இசைக்கருவிகள் தயாரிப்பு.. பிரபலமாகி வரும் இசைக்குழுவினர்..!!

துருக்கி நாட்டைச் சேர்ந்த ஒரு இசைக்குழுவினர், குப்பைகளில் கிடக்கும் பொருட்களை சேமித்து அதனை இசைக்கருவிகளாக தயாரித்து நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்கள். இஸ்தான்புல் என்ற நகரத்தில் குப்பைகள் கொட்டி கிடக்கும் இடத்தில் இந்த குழுவினரின் இசை தேடல் தொடங்குகிறது. இவர்கள் குப்பைகளில் கிடந்த பிளாஸ்டிக் பொருட்கள், மரத்துண்டுகள், கயிறு போன்றவற்றை சேகரிக்கிறார்கள். அதன்பின்பு அதனை பாரம்பரிய வாத்தியங்களாக மாற்றி விடுகின்றனர். இசைக் கலைஞர்கள், பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்து இசைக்கருவிகள் தயாரிக்கும் இந்த வித்தியாசமான முயற்சிக்கு துருக்கியில் அதிகமாக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“இனியும் பாதிப்பை தாங்கும் சக்தி யாருக்கும் இல்லை”… இசை-நாடக கலைஞர்கள் கோரிக்கை மனு..!!

காரைக்குடியில் இசை, நாடக கலைஞர்கள் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தக்கோரி ஊர்வலமாக சென்றனர். காரைக்குடி 100 அடி சாலையில் உள்ள சங்க அலுவலகத்தில் நாடக, இசை சங்கத்தின் அவசர கூட்டம் நடைபெற்றது. இதற்கு பி.எல்.காந்தி தலைமை தாங்கினார். கூட்டத்தில் நாடக கலைஞர்கள், இசை, ஒலி, ஒளி அமைப்பாளர்கள், இத்தொழில் சார்ந்த தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் கொரனோ தொற்றால் அவசர நடவடிக்கைகளை அரசு அறிவித்துள்ளது. அதிலிருந்து நமது சங்கத்தினருக்கு தளர்வுகள் வழங்க வேண்டும். அதை அரசிடம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அனைவரும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளோம்… எங்களுக்கு அனுமதி குடுங்க… மாவட்ட ஆட்சியருக்கு மனு..!!

இரவு நேர நிகழ்ச்சிகள் கோவில் திருவிழாக்களில் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் நாட்டுப்புற இசைக் கலைஞர்கள் காளி வேடம் அணிந்து வந்து மனு கொடுத்தனர். அனைத்து நாட்டுப்புற, நாடக கலைஞர்கள் சிவகங்கை மாவட்ட நாட்டுப்புற இசை கலைஞர்கள் சங்க தலைவர் ஆல்பர்ட்ராஜ் தலைமையில் நூதன முறையில் காளி வேடம் அணிந்து நாதஸ்வரம், தவில் இசைத்து ஆட்டம் ஆடி வந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அப்போது அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளதாவது;- […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நிவாரண உதவி வழங்க கோரிக்கை – இசை கலைஞர்களுக்கு…!!

இசைக் கலைஞர்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 8 மாதங்களாக தொழில் இன்றி வறுமையில் வாடும் இசை கலைஞர்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என நாகர்கோவிலில் நடைபெற்ற மாவட்ட தமிழ் கிராமிய பாண்ட் வாத்திய இசை கலைஞர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தமிழக அரசை வலியுறுத்தி கோரிக்கை எழுப்பப்பட்டது. வடசேரியில்  நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழ் கிராமிய பாண்ட் வாத்திய குழுவை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |