அரசு பள்ளிகளில் உபரியாக பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் இடமாறுதலை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் உபரியாக பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் இடமாறுதலை வருகிற 14-ஆம் தேதி மேற்கொள்ள பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு இருக்கிறது. இது பற்றி முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளி கல்வித்துறை இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் அனைத்து பள்ளிகளும் கடந்த ஆண்டு ஆகஸ்டு 1ஆம் தேதி மாணவர்கள் எண்ணிக்கை நிலவரப்படி ஆசிரியர்கள் விகிதத்தை முடிவு செய்ய வேண்டும். இதன் […]
Tag: இடமாறுதல்
கடந்த கல்வியாண்டில் கொரோனா காரணமாக கவுன்சிலிங் நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு ஆன்லைன் வழியாக கவுன்சிலிங் துவங்கியுள்ளது. இதில் முதல்கட்டமாக அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு இடமாறுதல் பணிநிரவல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முடிந்துள்ளது. முதுநிலை ஆசிரியர்களுக்கான இடமாறுதல், கவுன்சிலிங் நீதிமன்ற வழக்கு மற்றும் நிர்வாக காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே பணிமாறுதல் பெற்ற ஆசிரியர்கள் வரும் 28ஆம் தேதி தாங்கள் பணிபுரியும் இடத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு மார்ச் 1-ஆம் தேதி […]
அரசு பள்ளி ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங்கில் திருத்தம் செய்யப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த இரண்டு வாரங்களாக அரசுப்பள்ளி ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது. இதில் தலைமை ஆசிரியர்களுக்கான இடமாறுதலில் மாற்றம் செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடமாறுதல் பெற விரும்பினால் தற்போது அவர்கள் பணிபுரியும் பள்ளியில் ஓராண்டை கடந்த பின்புதான் இடமாறுதல் அளிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.