விழுப்புரம் காவல் நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஆவணங்கள் சேதமடைந்தன. விழுப்புரம் மாவட்டத்தில் நகரில் போக்குவரத்து காவல்துறை பல வருடங்களாக செயல்பட்டு வருகின்றது. மேற்கு போலீஸ் நிலையம், நகர போலீஸ் நிலையம், தாலுகா போலீஸ் நிலையம் உள்ளிட்டவை சொந்த கட்டிடங்களில் இயங்கி வருகின்ற நிலையில் போக்குவரத்து காவல்துறைக்கு மட்டும் சொந்த கட்டிடம் கட்டிக் கொடுக்காமல் தற்காலிக இடங்களில் செயல்பட்டு வருகின்றது. தற்போது விழுப்புரம் நான்கு முனை சந்திப்பு அருகே இருக்கும் பழைய கட்டிடத்தில் போக்குவரத்து காவல் நிலையம் […]
Tag: இடிந்து விழுந்த மேற்கூரை
சிவகங்கை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி என ஒட்டுமொத்த தென் தமிழகத்துக்கும் மருத்துவ தலைநகரமாக விளங்கக்கூடியது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை. இந்த கட்டிடம் 1984-ல் கட்டப்பட்டது. சில வருடங்களாக கட்டிடத்தின் சுவர் பகுதிகளில் ஆங்காங்கே விரிசல் விட்டு காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பெய்த மழையால் மதுரை அரசு மருத்துவமனையில் புற்றுநோய் அறுவை சிகிச்சை பிரிவு 90-வது வார்டின் ஆப்பரேஷன் தியேட்டர் மேற்கூரையின் சிமென்ட் பெயர்ந்து விழுந்தது. இதனால் ஆப்பரேஷன் […]
நாகை மாவட்டத்திலுள்ள வேதாரண்யம் அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவ வார்டு கட்டிடத்தின் வாராண்டாவில் காங்கிரீட் காரை பெயர்ந்து விழுந்தது. இதில் ரேவதி என்ற பெண்ணுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. வேதாரண்யம் அடுத்த தென்னடார் கிராமத்தில் இருந்து சசிகலா என்ற பெண் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அவருக்கு உதவியாளராக அதே பகுதியை சேர்ந்த உறவினர் ரேவதி பிரசவ அறைக்கு வெளியிலுள்ள வரண்டாவில் படுத்திருந்த போது கட்டிடத்தின் மேற்கூரை காரை பெயர்ந்து விழுந்தது. இதனால் ரேவதி […]
ஆப்கானிஸ்தானில் பள்ளிக்கூடம் ஒன்றில் வகுப்பறையின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தகார் மாகாணத்தில் ‘ஹம்சா அல் நோரியா மதராசா’ என்ற பெயரில் பழைய வீடு ஒன்றில் பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் அந்த பள்ளிக்கூடத்தில் வழக்கம் போல் வகுப்பறைகள் செயல்பட்டு கொண்டிருந்த வேளையில் திடீரென ஒரு வகுப்பறையின் மேற்கூரை எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்துள்ளது. இந்த பயங்கர […]
அடுக்குமாடி குடியிருப்பின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் மூதாட்டி படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள தாராநல்லூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் பழமையான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் இரவு நேரத்தில் கட்டிடத்தின் மேற்கூரை சுவர் திடீரென்று இடிந்து விழுந்ததால் வீட்டிற்குள் இருந்து வெளியே வர முடியாமல் அங்கிருந்தவர்கள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிந்து விழுந்த சுவரை அப்புறப்படுத்தியுள்ளனர். அதன்பின் படுகாயமடைந்த […]