உக்ரைன் நாட்டில் வெடிகுண்டு வீசப்பட்டு சேதமடைந்த கட்டிடத்தில் நின்றுகொண்டு மாணவர்களும் மாணவிகளும் எடுத்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. உக்ரைன் நாட்டில் ரஷ்யா 110 நாட்களை கடந்து தீவிரமாக போர்தொடுத்து கொண்டிருக்கிறது. இதனால் உக்ரைன் மக்கள் தங்கள் குடியிருப்புகளையும், குடும்பத்தினரையும் இழந்து தவித்து வருக்கிறார்கள். இந்நிலையில், வெடி குண்டு வீசப்பட்டதில் சேதமடைந்த கட்டிடத்தில் நின்றுகொண்டு மாணவர்களும் மாணவிகளும் சேர்ந்து புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். அந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. போரில் நிலைகுலைந்து போன […]
Tag: இடிந்த கட்டிடம்
பெல்ஜியமில் வருகின்ற செப்டம்பர் மாதம் திறக்கப்படுவதாக இருந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெல்ஜியம் நாட்டில் உள்ள ஆண்ட்வெர்ப் நகரில் புதிதாக கட்டப்பட்டு வந்த தொடக்கப்பள்ளியானது வருகின்ற செப்டம்பர் மாதம் திறக்கப்படவிருந்ததால் அங்கு கட்டுமானப் பணியும் முழுவீச்சில் நடைபெற்று வந்தது. மேலும் அங்கு கட்டுமான பணிகள் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வழக்கம் போல் நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. அதில் தொழிலாளர்கள் […]
ராஜஸ்தான் மாநிலத்தில் கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருந்தபோது கட்டிடம் இடிந்து விழுந்ததால் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ராஜஸ்தான் மாநிலத்தில் ஜோத்பூர் என்ற பகுதியில் நேற்று கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. அந்தக் கட்டிடத்தின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்ததால் பணியில் ஈடுபட்டிருந்த 14 பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். அவர்களில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காயம் அடைந்த 6 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் […]