கேரளாவின் இடுக்கி அடுத்த வெள்ளியாமட்டம் பகுதியில் மது போதையில் இருந்த நபர் ஒருவர் அப்பகுதியில் உள்ள மின் கம்பத்தில் இருந்து ஃபியூஸை பிடுங்கி சென்றதால் மக்கள் ஒன்றரை மணி நேரம் கரண்ட் இல்லாமல் இருட்டில் தவித்தனர். நேற்றைய தினம் மாலை 6.30 மணியளவில் மது போதையில் இருந்த ஷாஜி என்ற நபர் அப்பகுதியில் உள்ள மின் கம்பத்தில் இருந்து பிடுங்கிக் கொண்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். இதைத்தொடர்ந்து ஊர் மக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்க, அவர்கள் […]
Tag: இடுக்கி
வாடகை கேட்ட உரிமையாளரை தந்தை, மகன் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உப்புத்துறை பகுதியை சேர்ந்த விவசாயி சன்னிக்கு சொந்தமான வீட்டில் அதே பகுதியை சேர்ந்த குஞ்சுமோன் ஜார்ஜ் மற்றும் அவரது மகன் சஞ்சய் ஆகியோர் வாடகைக்கு இருந்து வந்துள்ளனர். இவர்கள் கடந்த மூன்று மாதங்களாக வாடகை தராததால் வீட்டு உரிமையாளர் வாடகை தாருங்கள் இல்லையெனில் வீட்டை பூட்டி சாவியை தாருங்கள் என்று கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. […]
கேரளாவில் தொடர் கனமழை காரணமாக இடுக்கி அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் நீல எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த சில நாட்களாக கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனை தொடர்ந்து கேரளாவின் இடுக்கி அணையின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்த அணையின் முழு கொள்ளளவு 2403 அடி ஆகும். தற்போதைய நிலையில் நீர்மட்டம் 2390 புள்ளி 86 அடியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு நீல எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கடலோர பகுதி மக்கள் […]
கொரோனா கோரத் தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் கேரளாவில் ஒரு கிராமத்தில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பது ஆச்சரியமளிக்கும் விஷயமாக உள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. அதேபோல் கேரளா மாநிலத்திலும் நாளொன்றுக்கு 40 ஆயிரத்துக்கும் மேல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகின்றது. அப்படிப்பட்ட […]
இளையோர் ஒலிம்பிக் போட்டி தொடங்கி தேசிய பல்கலைக்கழக அளவிலான போட்டி வரை பதக்கங்களை குவித்த வீராங்கனைகள் கொரோனா காலத்தில் தினக்கூலியாக பணியாற்றி வருகின்றனர். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், இரட்டை ஆறு பகுதியை சேர்ந்த அஞ்சலி ஜோசப் கடந்த 2014ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற இளையோர் ஒலிம்பிக் போட்டியில் 400 கிலோ மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றவர். இதனை தொடர்ந்து அஞ்சலி ஜோசப் மற்றும் அவரது தோழிகளான ஆதிரா, சசி மற்றும் கீது மோகன் ஆகிய […]
மூணாறு ராஜமலை அருகேயிருக்கும் பெட்டிமுடி எனும் இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் 8 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில், ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் தென்மேற்குப் பருவமழை மிகவும் தீவிரமடைந்து பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக, இடுக்கி மாவட்டத்துக்கு ஆரஞ்சு நிற அலர்ட் விடப்பட்டுள்ளது. இந்தசூழலில் இடுக்கி மாவட்டம், மூணாறு பகுதியில் நேற்று நள்ளிரவில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. மூணாறு ராஜமலை அருகே இருக்கும் ‘பெட்டிமுடி’ எனும் இடத்தில் நிலச்சரிவு […]
கேரளாவில் ஒரு மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்துள்ளது. கேரளாவில் நேற்று பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. கனமழை காரணமாக கொச்சியின் பல்வேறு இடங்களில் குறிப்பாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல பாய்ந்தோடுகிறது. இதனால், மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதன் காரணமாக இடுக்கி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. கோட்டயம் ,எர்ணாகுளம், திரிசூர் மற்றும் பாலக்காடு ஆகிய மாவட்டங்களுக்கு “ஆரஞ்சு அலர்ட்” எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. மிக […]