கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குண்டல் பகுதியில் நேற்று நள்ளிரவு நேரத்தில் சொகுசு கார் வேகமாக சென்றது. அந்த காரில் இருந்த 5 வாலிபர்களும் மது அருந்திவிட்டு போதையில் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் வடக்கு குண்டல் பகுதியில் வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்த கார் ஒரு வீட்டு சுவர் மீது பயங்கரமாக மோதியது. இதனால் அச்சத்தில் 5 வாலிபர்களும் போலீசுக்கு பயந்து காரை அங்கேயே விட்டு சென்றனர். இந்த விபத்து குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று […]
Tag: இணையதளத்தில் வைரலாகும் வீடியோ
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பழையபேட்டை மேல் தெருவில் அசோக் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 11-ஆம் தேதி பழைய பேட்டை லட்சுமி நாராயணன் கோவில் அருகே வைத்து நண்பர்களுடன் இணைந்து வினோத்குமார் என்பவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து வினோத்குமார் கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதற்கிடையே அசோக் தனது சமூக வலைதள பக்கத்தில் நானும் ரவுடிதான் என மாஸ் காட்டுவது, புகைப்பிடிப்பது, போலீசாரை மிரட்டுவது உள்ளிட்ட வீடியோக்களுடன் அரசு பேருந்தை தீ வைத்து […]
தமிழகத்தில் இருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டால் தமிழ்த்தாய் வாழ்த்து கண்டிப்பாக பாட வேண்டும். முக்கியமாக இசை தட்டுகள் கொண்டு இசைக்கப்படுவதை தவிர்த்து பயிற்சி பெற்றவர்களால் வாய்ப்பாட்டாக பாட வேண்டும். அப்போது தவறாமல் அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என கடந்த ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் பூஜிய குறைபாடு, […]
தென்காசி மாவட்டத்தில் உள்ள பாவூர்சத்திரம் பகுதியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் வசித்து வருகிறான். அந்த சிறுவனுக்கு 3 வாலிபர்கள் சேர்ந்து போதைப்பொருள் கொடுத்து பயன்படுத்துமாறு கட்டாயப்படுத்துவது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுவனின் தாய் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், நாகல்குளம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து சிறுவனிடம் போதைபொருள் […]
கடலூர் மாவட்டத்தில் உள்ள ஏ.மரூர் கிராமத்தில் தே.மு.தி.க ஒன்றிய செயலாளரான சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி நீலாவதி ஊராட்சி மன்ற துணைத் தலைவியாக இருக்கிறார். இந்நிலையில் சேகருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சத்தியமூர்த்தி என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. சத்தியமூர்த்தி சிலருடன் இணைந்து கிராமத்திற்கு அருகே கிராவல் மண் கடத்தியதாக கிராம நிர்வாக அலுவலகத்திற்கு புகார்கள் சென்றது. இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் சத்தியமூர்த்தியை அழைத்து எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் கோபமடைந்த சத்தியமூர்த்தி, சேகர் தான் […]