இன்டர்நெட் வசதி இல்லாத தீவிற்கு எலன் மஸ்க் மீண்டும் இன்டர்நெட் வசதியை ஏற்படுத்திக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு தீவு நாடு டோங்கோ. சுமார் 1.5 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்நாட்டில் உள்ள ஒரு தீவில் ஹுங்கா டோங்கோ எனும் எரிமலை கடலுக்கடியில் இருக்கிறது. இந்த எரிமலை கடந்த ஜனவரி 15ம் தேதியன்று திடீரென வெடித்து சிதறியது. இதனால் கடலில் சுனாமி அலை சுமார் 15 மீட்டர் உயரத்துக்கு தோன்றியது. இதில் […]
Tag: இணையதள வசதி
PF கணக்கு வைத்திருக்கும் சுமார் 22.55 கோடி பேருக்கு 2021- 2022 -ஆம் வருடத்திற்கான வைப்பு நிதி திட்டம் செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சுமார் 8.50 சதவிகிதம் வட்டி தொகை செலுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021-2022 நிதியாண்டுக்கான பிஎப் சந்தாதாரர்களுக்கு 8.50% வட்டி தொகையை செலுத்துவதற்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அனுமதி அளித்திருந்தது. இதன்படி தற்போது வட்டி தொகை செலுத்தபட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. EPFO என்ற இணையதளத்தில் […]
தென் மாவட்ட ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் அதனை இணையதளத்தில் தெரிந்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களிலிருந்து மதுரை வழியாக பல்வேறு பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்ற நிலையில், ஒரு சில ரயில் நிலையங்களில் ரயில் புறப்படும் நேரத்தை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.கடந்த 1ஆம் தேதி முதல் தென்மாவட்ட ரயில் போக்குவரத்து நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் மதுரை-கொல்லம், அனந்தபுரி எக்ஸ்பிரஸ், தாம்பரம் -நாகர்கோவில், மதுரை- புனலூர், கன்னியாகுமரி- ராமேஸ்வரம், திருச்சி- திருவனந்தபுரம் இன்டர்சிட்டி, கோவை- […]
விவசாயிகள் நேரடியாக நெல் கொள்முதல் செய்ய ஏற்றவாறு இணையத்தில் பதிவு செய்து கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்யலாம். அதற்காக இணையதள வசதி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களுடைய பெயர், ஆதார் எண், சர்வே எண், வங்கி கணக்கு எண், போன்ற விவரங்களை எளிய முறையில் இணையத்தில் பதிவேற்றம் செய்யலாம். அதன்பின் கொள்முதல் செய்ய வேண்டிய தேதியினை முன்பதிவு செய்ய ஏற்றவாறு அதில் சில வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி WWW.TNCSC.TN.GOV.IN மற்றும் WWW.TNCSC-EDPC.IN போன்ற இணையதளத்தில் பதிவு […]
தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கான காலிப் படுக்கைகளின் விவரங்களை தமிழக அரசின் பிரத்யேக இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம். இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரம் எடுத்து பரவி வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இது ஒருபுறமிருக்க இந்தியா முழுவதும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் காலி படுக்கைகளை கண்டறிய பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர் கொள்கின்றனர். பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் […]
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தகட்டூர் அஞ்சலகத்தில் வாடிக்கையாளர்கள் இணைய தள வசதி முடங்கியதால் அவதி அடைந்தனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தகட்டூர் கடைத்தெருவில் அஞ்சலகம் ஒன்று உள்ளது. அந்த அஞ்சலகத்தை சுற்றுவட்டார பகுதிகளான அண்ணாப்பேட்டை, வாய்மேடு, மருதூர் தெற்கு, வண்டுவாஞ்சேரி, பஞ்சநதிக்குளம் மேற்கு ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த அஞ்சலகத்தில் காப்பீட்டு திட்ட வரவு செலவுகளும், சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சேமிப்பு கணக்குகளும், ஆர்.டி கணக்குகளும் உள்ளது. கடந்த 15 நாட்களுக்கும் […]
புதுச்சேரியில் புதிய மின் இணைப்பை பெறுவதற்கு இணையதள வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மின்துறை கண்காணிப்பு பொறியாளர் கூறியுள்ளார். புதுச்சேரி மின்துறை கண்காணிப்பு பொறியாளர் முரளி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது: “புதுச்சேரி மின் நுகர்வோர்கள், புதிய மின் இணைப்பை விரைவாக பெறுவதற்கு இணையதள வாயிலாக விண்ணப்பிக்கும் முறையை புதுவை அரசு நேற்று முதல் அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதியை மின் துறை செயலாளர் தேவேஷ் அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மின்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். […]