Categories
தேசிய செய்திகள்

போட்டி தேர்வுகள் ஹிந்தியில் மட்டும்தான் நடத்தப்படுமா?…. வெளிவரும் தகவல்கள்…. மத்திய அரசு விளக்கம்….!!!!

நாடு முழுவதும் இந்தி திணிப்புக்கு எதிராக பல புகார்கள் எழுந்து வருகிறது. அதுமட்டுமின்றி உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் குடியரசுத் தலைவரிடம் மத்திய அரசின் கல்வி நிலையங்கள் மற்றும் அலுவலக மொழியாக இந்தியை மாற்ற கோரிக்கை அனுப்பினார். அத்துடன் மத்திய அரசின் பணியாளர் தேர்வு வாரியங்கள் வாயிலாக நடத்தப்படும் தேர்வுகள் இனிமேல் இந்தியில் நடத்தப்படும் எனவும் தகவல் வெளியாகியது. இந்நிலையில் SSC-ன் வாயிலாக நடத்தப்படும் மத்திய அரசின் பணியாளர் நியமன தேர்வுகளுக்கு இந்திய அரசியலமைப்பின் 8-வது அட்டவணையிலுள்ள […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழை அழிக்க பார்த்தாங்க..! இந்தியை கொசுவை போல நசுக்கணும்… கர்ஜித்த வைரமுத்து ..!!

ஹிந்தி திணிப்பு எதிரான போராட்டத்தில் பேசிய கவிஞசர் வைரமுத்து,  தமிழை வாளின் முலையில் அழிக்க  பார்த்தார்கள். தமிழை அதிகாரத்தால் அழிக்க பார்த்தார்கள். தமிழை அந்நிய படையெடுப்பால் அழிக்க பார்த்தார்கள். தமிழை மதத்தால் அழிக்க பார்த்தார்கள். தமிழை சாஸ்திரத்தால் அழிக்க பார்த்தார்கள். இப்போது தமிழர்களே…  தமிழை சட்டத்தால் அழிக்க பார்க்கிறார்கள். இந்த மொழியை சாஸ்திரத்தால் அழிக்க முடியாது,  சட்டத்தாலும் அழிக்க முடியாது. இதற்கு முன்னால் இந்தி எதிர்ப்பு வந்திருக்கிறது. இந்தி திணிப்பு நடந்திருக்கிறது. அந்த இந்திய திணிப்பெல்லாம் கொசு […]

Categories
தேசிய செய்திகள்

“உத்திரபிரதேசத்தில் வரும் ஆண்டு முதல் இந்தி மொழியில் மருத்துவ படிப்புகள்”? முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் பேச்சு…!!!!!

மத்திய அரசின் உள்துறை மந்திரி ஆகவும் அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழு தலைவராகவும் இருக்கின்ற அமித்ஷா தலைமையிலான குழு சமீபத்தில் ஜனாதிபதியிடம் அளித்திருக்கின்ற அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தி மற்றும் பிராந்திய மொழிகள் கொண்டுவரப்படும் என கூறப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது அதிலும் குறிப்பாக தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநில மக்களுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக கூறி கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் முதன் […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே உஷாரா இருங்க…. இனி எம்.பி.பி.எஸ். படிப்பு எல்லாம் இந்தி தான்…. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!

முதல்முறையாக இந்தி மொழியில் மருத்துவ படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. நமது இந்தியாவில் உள்ள  மத்திய பிரதேசத்தில் இந்தி மொழியில் எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான பாடப்புத்தகங்களை நேற்று  மத்திய உள்துறை மந்திரி  வெளியிட்டார். இது குறித்து இந்திய மருத்துவ அகாடமியின் முதன்மை ஆய்வாளர் டாக்டர் நரேஷ் புரோகித் கூறியதாவது. நமது இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு. இதனால் தமிழ்நாடு, கேரளா என பல மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் இங்கு அமைந்துள்ள அரசு கல்லூரியில் மருத்துவம் படிக்க வருவார்கள். […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியில் பணிபுரியாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்… அமித்ஷா குழு பரிந்துரை.!!

இந்தியில் பணிபுரியாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது. அனைத்து ஒன்றிய அரசு அலுவலகங்களிலும், அனைத்து பணிகளும் இந்தியிலேயே நடைபெற வேண்டும் என்று அமித்ஷா குழு தெரிவித்துள்ளது. அதாவது, இந்தியில் பணிபுரியாத அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் எச்சரிக்கை விடுப்பதுடன் விளக்கம் அளிக்க நோட்டீஸ் தர வேண்டும். திருப்திகரமான பதில் தராத ஒன்றிய அரசு ஊழியர்களின் தனிப்பதிவேட்டில் இந்தியில் பணிபுரியவில்லை என்பதை பதிவு செய்ய பரிந்துரை செய்துள்ளது. மேலும் அரசு பணிக்கு தேர்ந்தெடுக்கும்போதே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் தமிழச்சி” இந்தியை மறுக்கிறேன்…. அதிரடி காட்டிய கஸ்தூரி…!!!!

நடிகை கஸ்தூரி சினிமா, அரசியல், விளையாட்டு, சின்னத்திரை என எல்லா டாபிக்கையும் பேசி துணிச்சலுடன் தனது கருத்துக்களை பதிவிட்டும் விவாத நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகின்றார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார். இந்நிலையில் மத்திய அரசின் இந்தி மொழி திணிப்பு குறித்து தொடந்து பல்வேறு ஊடகங்களில் விவாதங்கள் நடைபெற்று வருகின்ற நிலையில், நடிகை கஸ்தூரி இது குறித்து, “நான் இந்தியன். தமிழச்சி. தமிழ்பேசும் இந்தியனாக இருப்பதே பெருமை. இந்தியை மறுக்கிறேன், இந்தியாவை மறுக்கமாட்டேன். என் நாட்டின் இணைப்பு […]

Categories
தேசிய செய்திகள்

“உங்க முன்னாடி இந்தி பேசவே எனக்கு பயமா இருக்கு”… மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்….!!!!

பார்வையாளர்கள் முன்னால் இந்தியில் பேசும்போது நடுக்கம் ஏற்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் “மிகுந்த தயக்கத்துடன் தான் நான் இந்தி பேசுகிறேன். நான் பிறந்து வளர்ந்த காலக்கட்டத்தில் தமிழகத்தில் இந்திக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட வன்முறைகளை நான் பார்த்திருக்கிறேன்” என்று கூறினார். மேலும் காங்கிரஸ் ஆட்சியில் பொருளாதாரம் சரியான வழியில் செல்லவில்லை எனவும் வாஜ்பாய் மற்றும் மோடி ஆட்சியில் இந்தியாவின் உட்கட்டமைப்பு சிறந்தமுறையில் இருப்பதாகவும் தெரிவித்தார். ஏர்இந்தியா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தமிழ் வாழ்க என சொல்வது என் கடமை”… பிரபல நடிகர் பேச்சு…!!!!!!!

கமல் நடிப்பில் உருவான திரைப்படம் விக்ரம். இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ், ஜெயராம் போன்ற பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்த படத்தின் முதல் பாடலான பத்தல பத்தல பாடல் வெளியாகி ரசிகர்கள் […]

Categories
உலக செய்திகள்

ஐ.நா சபையில் இந்தி மொழியை ஊக்குவிக்க…. 6 கோடி நிதி வழங்கிய இந்திய அரசு…!!!

ஐநா சபையில் இந்தி மொழியை ஊக்குவிப்பதற்காக இந்தியா சார்பாக 8 லட்சம் அமெரிக்க டாலர்கள் நிதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஐநா சபையில் இந்தி மொழியை ஊக்குவிப்பதற்காக இந்தியா சார்பாக சுமார் 6.18 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நியூயார்க் நகரில் இருக்கும் ஐநா சபைக்கான இந்திய தூதரகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், கடந்த 2018 ஆம் வருடத்திலிருந்து ஐ.நா சபை செய்திகளை இந்தி மொழியில் மொழி பெயர்த்து, உலகநாடுகள் முழுக்க இந்தி பேசக்கூடிய லட்சக்கணக்கான மக்களிடம் கொண்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்தி படிப்போரை வெறுக்க மாட்டோம்…. ஆனால் திணிப்போரை ரசிக்க மாட்டோம்…. வைரமுத்து கருத்து…!!!!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியர் வைரமுத்து இந்தி பற்றிப் பதிவிட்டிருப்பது  சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மத்திய அரசு இந்தி மொழியை நாடு முழுவதும் திணிக்க முயற்சி செய்து வருவது குறித்து கடுமையான எதிர்ப்பு குரல் ஆங்காங்கே எழுந்து வருகின்றது. இந்த நிலையில் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அலுவல் மொழியாக மத்திய அரசு மாற்றம் செய்துள்ளது. மருத்துவமனை சார்பாக கொடுக்கப்படும் அனைத்து ஆவணங்களும் இந்தி மொழியில் கையாளத் தொடங்கியுள்ளது. இதற்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

இந்தி தெரியலனா நாட்டை விட்டு வெளியே போ…. அமைச்சர் சர்ச்சை பேச்சு….!!!!

இந்தி பேச முடியாவிட்டால் நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று உத்தர பிரதேச மாநில பாஜக அமைச்சர் சஞ்சய் நிஷாத் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நீங்கள் இந்தியாவில் வசிக்கிறீர்கள் என்றால் இந்தியை நேசிக்க வேண்டும், இல்லையெனில் நீங்கள் வெளிநாட்டவராக கருதப்படுவீர்கள் என்று அவர் பேசியுள்ளார். உ.பி.யில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், நாட்டில் மாநில பிராந்திய மொழியும் மதிக்கப்படுகிறது. ஆனால் முதலில் இந்தி. அதன் பிறகுதான் பிராந்திய மொழி என கூறியதுடன் நீங்கள் இந்தியாவில் வசிக்கிறீர்கள் என்றால் […]

Categories
அரசியல்

ஸ்டாலினை விமர்சித்த ஓபிஎஸ்…. பதிலடி கொடுத்த திமுக அமைச்சர் தங்கம்தென்னரசு…!!!!!

ஓபிஎஸ்ஸுக்கு பதிலடி தரும்  வகையில் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தன்னை அதிமுகவில் முன்னிலைப்படுத்தி பிரபலப்படுத்தி கொள்ள அவர் எடுக்கும் இத்தகைய பகீரதப் பிரயத்தனங்கள் குறித்து எங்களுக்கு எதுவும் கவலை இல்லை. ஆனால் இன்றைக்கு இந்திய திரு நாட்டில் உள்ள முதலமைச்சர்களின் முதன்மையானவர் என பல்வேறு அரசியல் தலைவர்களும் ஊடகங்களும் இந்திய அரசியலை உன்னிப்பாக கவனித்து வரும் அரசியல் நோக்கர்களும் நம்முடைய முதலமைச்சரை போற்றுவதே கண்டு மனம் பொறுக்காமல் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல பாலிவுட் நடிகை திடீர் மரணம்…. திரையுலகினர் இரங்கல்…!!!!!!

பிரபல பாலிவுட் நடிகையான மஞ்சு சிங் திடீரென காலமானார். இந்தி தொலைக்காட்சி சேனல்களில் பல்வேறு டிவி நிகழ்ச்சிகளை தயாரித்து, தொகுத்து வழங்கியவர் மஞ்சு  சிங். இவர் குழந்தைகள் நிகழ்ச்சியான khel khilone எனும் நிகழ்ச்சியை 7 ஆண்டுகளாக தொகுத்து வழங்கியிருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே இருந்தது. இதனால் ரசிகர்களால் திதி எனவும்  அழைக்கப்படும் வந்தார் மஞ்சு சிங். மேலும் தனது நிகழ்ச்சிகளின் மூலமாக சமூகம் சார்ந்த பிரச்சினைகளை பேசி வந்தார். மஞ்சு சிங்கின் திறமையை […]

Categories
தேசிய செய்திகள்

வடகிழக்கு மாகாணத்தில் இந்தி கட்டாய பாடமா…? உள்துறை மந்திரிக்கு கடிதம்….!!!!!

அமித் ஷா, 10-ம் வகுப்பு வரை இந்தியை கட்டாயமாக்க அனைத்து வடகிழக்கு மாநிலங்களும் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறியுள்ளார். டெல்லியில் கடந்த 7-ந் தேதி நாடாளுமன்ற அலுவல் மொழி கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, 10 ஆம் வகுப்பு வரை இந்தியை கட்டாயமாக அனைத்து வடகிழக்கு மாநிலங்களும் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் இது வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. இதற்கு எதிராக வடகிழக்கு மாணவர் அமைப்பு போர்க்கொடி உயர்த்தி மத்திய உள்துறை […]

Categories
தேசிய செய்திகள்

10ம் வகுப்பு வரை இந்தி பாடம் கட்டாயம்?…. எதிர்க்கும் மாணவர்கள் அமைப்பு…..!!!!!

இந்தியாவின் வடக்கு, கிழக்கு மாநிலங்களில் 10-ம் வகுப்பு வரை இந்தியைக் கட்டாயப் பாடமாக்குவதற்கான மத்திய அரசின் முடிவுக்கு வட கிழக்கு மாணவர்கள் அமைப்புகளிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தலைநகர் புது டெல்லியில் ஏப்ரல் 7 ஆம் தேதி அன்று நாடாளுமன்ற அலுவல் மொழிக்குழு கூட்டம் நடந்தது. அப்போது பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா “அனைத்து வடகிழக்கு மாநிலங்களும் அங்குள்ள பள்ளிகளில் 10ஆம் வகுப்பு வரை இந்தி மொழியை கட்டாயமாக்க ஒப்புக்கொண்டு இருப்பதாக” தெரிவித்தார். இந்நிலையில் 10ம் […]

Categories
மாநில செய்திகள்

8 மாநிலங்களில் இந்தி தாய்மொழி….36 மாநிலங்களில் இணைப்பு மொழி…. இது எப்படி நியாயம்…?

இந்தியாவிற்கு  சற்றும் சம்பந்தம் இல்லாத அரபு, பெர்சியம் என பல மொழிகளிலிருந்து இரவல் வாங்கப்பட்ட வார்த்தைகள், மொழி உருக்களால் உருவான இந்தி மொழி, இந்தியாவின் 8 மாநிலங்களில் மட்டுமே அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாக இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் இந்தியாவின் 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களுக்கு இந்த மொழியை இணைப்பு மொழியாக்குவோம் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுவது எந்த வகையில் நியாயம் என்று மொழி வல்லுனர்கள் கேட்கின்றார்கள். இந்தியாவின் தேசிய மொழி இந்தி, இந்தியாவின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஸ்வரூபம் எடுக்கும் இந்தி திணிப்பு எதிர்ப்பு…. ஏ ஆர் ரகுமானின் சூப்பர் பதிலடி…. வைரலாகும் புகைப்படம்….!!!!!!

நாடாளுமன்ற அலுவல் மொழி கமிட்டியின் 37வது கூட்டம் அதன் தலைவரும், உள்துறை மந்திரியுமான அமித்ஷா  தலைமையில் நடைபெற்றது. இதில் துணை தலைவர் அழகிரி மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில்  அமித்ஷா பேசியது மிகப்பெரிய சர்ச்சையை எழுப்பியுள்ளது. நாட்டின் ஒற்றுமையின்  முக்கிய அங்கமாக அலுவல் மொழியை உருவாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. பிற மொழிகளைப் பேசும் மாநில குடிமக்கள் தங்களுக்குள்ளே உரையாடும் மொழி இந்திய மொழியாகவே இருக்க வேண்டும். மேலும் இந்தியை  ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும் […]

Categories
அரசியல்

“இந்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கல!”… இந்திய திணிக்குறீங்களே அத தா எதிர்க்கிறோம்….. மு.க. ஸ்டாலின் காட்டம்….!!!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை இந்தி திணிப்பிற்கு தான் எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்று கூறியிருக்கிறார். தி.மு.க. வின் மாணவரணி சார்பாக மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாளுக்கான பொதுக்கூட்டம் காணொலிக் காட்சி மூலமாக நடந்திருக்கிறது. இதில் கலந்து கொண்ட முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்ததாவது, மொழிப்போர் தியாகிகளது, தியாகத்தினால் தான் தமிழ் இனம் முன்னேற்றம் அடைந்திருக்கிறது. “தமிழ் தமிழ்” என்று கூறுவது குறுகிய மனப்பான்மை கிடையாது. நாங்கள் இந்தி போன்ற எந்த […]

Categories
அரசியல்

இந்தி மொழி பற்றி பேசினால் மாணவர்களை மிரட்டுவதா….! எம்பி ஆதங்கம்…..!!!

மொழி பாகுபாட்டை நீக்க சொன்னால் மாணவர்களை மிரட்டுவதா என வெங்கடேசன் ஆதங்கமாக கேள்வி எழுப்பியுள்ளார். சி.எம்.ஏ (இண்டர்) தேர்வு விதிமுறை எண் 13 இன் படி இந்தி வழி மாணவர்கள் பிரிவு B,C, D யில் உள்ள கேள்விகளுக்கு எழுத்து அல்லது தட்டச்சு மூலம் பதில் அளிக்க முடியும். ஆனால் இந்தி வழி அல்லாத மாணவர்களுக்கு தட்டச்சு மட்டுமே செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. இது இந்தி வழி அல்லாத மாணவர்களுக்கு தேர்வில் விடை அளிக்க […]

Categories
சினிமா

ஹிந்தியில் மாஸ்டர் ரீமேக்….?  இரு முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை…. ஹிட் கொடுக்குமா?….!!!!

விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் கடந்த பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த திரைப்படத்தை பார்த்த இந்தி நடிகர் சல்மான் கானுக்கு இந்த திரைப்படம் மிகவும் பிடித்து விட்டதாகவும் இதனை இந்தியில் ரீ-மேக் செய்யவிருப்பதாகவும் பல தகவல்கள் வெளியாகின. ஆனால் சில காரணங்களுக்காக இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்வது சில காலங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது மாஸ்டர் படத்தை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“எந்தத் காலத்திலும், இந்திக்கு தமிழ்நாட்டில் இடம் கொடுக்க கூடாது”… வைகோ ஆவேசம்… அதுக்கு இதுதான் காரணம்…!!!

இந்திக்கு தமிழ்நாட்டில் இடம் கொடுத்து விடக் கூடாது என்றும், அமித்ஷா பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற ஆட்சிமொழி மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய உள்துறை மந்திரி ‘அமித் ஷா இந்தி தான் இந்தியாவின் ஆட்சி மொழி, நான் என் தாய் மொழியை விட அதிகமாக இந்தியை நேசிக்கிறேன்’ என்று கூறியுள்ளார். அமைச்சகத்தின் ஒரு கோப்பு கூட இப்போது ஆங்கிலத்தில் […]

Categories
மாநில செய்திகள்

இந்தியே தேசிய மொழி… மூடநம்பிக்கை நிறைய பேரை பிடித்தாட்டுகிறது… ம.நீ.ம தலைவர் கமல் ட்விட்!!

இந்தியே தேசிய மொழி என்ற மூடநம்பிக்கை நிறைய பேரை பிடித்தாட்டுகிறது என்று ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.. இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியா பல மொழிகளின் நாடு. அரசியலமைப்புச் சட்டத்தின்படி, நமக்கு தேசிய மொழி என்று எதுவும் இல்லை. என்றாலும் இந்தியே தேசிய மொழி என்ற மூடநம்பிக்கை நிறைய பேரை பிடித்தாட்டுகிறது. தெளிவுபடுத்த வேண்டியது நடுவண் அரசின் கடமை.” என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியா பல மொழிகளின் நாடு. […]

Categories
மாநில செய்திகள்

தமிழக தேர்வு மையங்களில் இந்தியில் அறிவிப்பு…. தேர்வர்கள் அவதி….!!!!

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட 24 குடிமை பணிகளுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் ஆன யுபிஎஸ்சி மூலம் தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது. அதில் முதல் நிலை, முதன்மை மற்றும் நேர்காணல் என்று மூன்று விதமான தேர்வுகள் மூலமாக மாணவர்கள் இந்த பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி நடப்பாண்டில் 712 காலி பணியிடங்களை நிரப்புவதற்கு யுபிஎஸ்சி கடந்த மார்ச் மாதம் அறிவிப்பை வெளியிட்டது. முதல்நிலைத் தேர்வு ஜூன் 27ஆம் தேதி நடைபெறும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தனக்கும் இந்தி தெரியாது…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!!!!

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.ஞானசேகரன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், புதுவையில் நியமன எம்எல்ஏக்கள் தொடர்பான தகவல்களை மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்திடம் கேட்டதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால், மத்திய உள்துறை அமைச்சகம், தான் அனுப்பிய கேள்வி மனுவை திருப்பி அனுப்பியதுடன், இந்தியில் பதிலளித்ததாகவும் தெரிவித்திருந்தார். தனக்கு அந்த மொழி தெரியாது என்றும், தனக்கு தமிழ் மற்றும் ஆங்கில மொழிகள் மட்டுமே தெரியும் என்றும், எனவே, இந்தியில் வழங்கிய […]

Categories
மாநில செய்திகள்

ATM – ல் பணம் எடுத்தால் இந்தியில் ஒப்புகை சீட்டு… குழப்பத்தில் மக்கள்…!!!

கோவை ஹோப் காலேஜ் மசக்காளிபாளையம் சாலையில் உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம்மில் பணம் எடுத்த பின் வரும் ஒப்புகைச் சீட்டை இந்தியில் இருப்பதைக் கண்டு வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஹிந்தி தெரியாதவர்களுக்கு தங்களது கணக்கில் பணம் எவ்வளவு உள்ளது என்ற விவரம் தெரிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் பணம் டெபாசிட் செய்யும் இயந்திரத்திலும் இந்தியில் தான் உள்ளது என்று வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றன. இதனால் தங்களது வங்கி இருப்பு நிலையை அறிந்து கொள்வதற்கு […]

Categories
மாநில செய்திகள்

இந்தி, ஆங்கிலம் மட்டும் ஏன்? – டிடிவி தினகரன் கண்டனம்…!!

மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி தமிழக பள்ளிக் கல்வித் துறை வழியாக நடத்தப்பட்ட புதிர் போட்டியில் தமிழை தவிர்த்துவிட்டு ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே கேள்விகள் கேட்கப் பட்டதற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் திரு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் திரு டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை வழியாக நடத்தப்பட்ட தமிழக மாணவர்களுக்கான புதிர் போட்டியில் தமிழை […]

Categories

Tech |