உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக உக்ரைனில் பாதுகாப்பு நிலமை மோசமடைந்து வருவதால் உக்ரைனில் உள்ள மாணவர்கள் மற்றும் இந்திய குடிமக்கள் விரைவில் உக்ரைனை விட்டு வெளியேற அறிவுறுத்தப்படுகின்றார்கள் என இந்திய தூதரகம் கடந்த வாரம் அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையில் உக்ரைனில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேற உக்ரைன் எல்லையை கடக்க ஐந்து வழித்தடங்களை இந்திய தூதரகம் பகிர்ந்து இருக்கிறது. மேலும் இந்திய குடிமக்கள் உக்ரைன் எல்லையை கடக்க பின்வரும் ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. […]
Tag: இந்தியர்
இந்தியாவை சேர்ந்த ஹிமான்ஷு தேவ்கன் விமான பயணத்திற்காக தாய்லாந்து விமான நிலையத்திற்கு சென்று இருந்தார். அப்போது அங்குள்ள பூகேட் விமான நிலையத்தில் நடைபெற்ற வழக்கமான சோதனையில் ஒரு பகுதியாக இவரின் உடமைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது இவர் வைத்திருந்த குலாப் ஜாமுனை விமானத்தில் எடுத்துச் செல்ல அதிகாரிகள் தடை விதித்தனர். அதன் பிறகு தன்னிடம் இருந்த குலாப் ஜாமுனை அதிகாரிகளிடம் பகிர்ந்து கொள்ள அவர் விரும்பினார்.இதனை தொடர்ந்து அவர் விமான நிலையத்தில் அனைத்து […]
கல்கி எழுதிய நாவலை தழுவி மணிரத்னம் இயக்கியிருக்கின்ற பொன்னியின் செல்வன் திரைப்படம் வருகிற 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதில் நடிகர் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி போன்ற பலர் நடித்திருக்கின்றனர். இந்த நிலையில் பட குழுவினர் தற்போது ஒவ்வொரு மாநிலங்கக்குளும் சுற்றுப்பயணம் சென்று படத்தை விளம்பரப்படுத்தும் பாணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். அந்த வகையில் மும்பையில் நடைபெற்ற பிரமோஷன் நிகழ்ச்சியில் பொன்னியின் செல்வன் […]
போலந்தில், இந்தியரை ஐரோப்பாவை ஆக்கிரமிக்கும் ஒட்டுண்ணிகள் என்று கூறி அமெரிக்க சுற்றுலா பயணி இனவெறி தாக்குதல் நடத்திய வீடியோ இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், இனரீதியாக தாக்கப்படுவது சமீப காலங்களில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், போலந்து நாட்டிற்குச் சென்ற அமெரிக்காவை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர், ஒரு இந்தியரை பார்த்து, வீடியோ எடுத்துக்கொண்டே, எதற்காக போலந்து நாட்டில் நீங்கள் இருக்கிறீர்கள்? அமெரிக்க நாட்டிலும் பல பேர் இருக்கிறீர்கள், என்று கேட்டுள்ளார். மேலும், ஒட்டுண்ணி […]
அமெரிக்காவில் ஒரு இந்தியரே மற்றொரு இந்தியரை மத ரீதியாக புண்படுத்தும் வகையில் தாக்கி பேசியதால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய வம்சாவளியினரான கிருஷ்ணன் ஜெயராம் என்பவர் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஒரு உணவகத்திற்கு சாப்பிட சென்றிருக்கிறார். அப்போது அங்கிருந்த இந்தியரான தேஜிந்தர் சிங், ஜெயராமனை இனரீதியாக தாக்கி பேசியிருக்கிறார். இதனால், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், தேஜிந்தர் சிங் கோபமடைந்து, ஜெயராமை, நீங்கள் அசிங்கமாக இருக்கிறீர்கள். இது இந்தியா […]
கடந்த 1969 ஆம் வருடம் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா தனது அப்போலோ திட்டத்தின் மூலமாக நிலவுக்கு முதன்முறையாக மனிதர்களை அனுப்பி வரலாறு படைத்துள்ளது. அதன் பின் தற்போது மீண்டும் நிலவு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள நாசா முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த திட்டத்திற்கு ஆர்டெமிஸ் என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தின் படி நாசா நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பி பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கிறது. இந்த திட்டத்தின் மூத்த விஞ்ஞானியாக […]
கனடா நாட்டில் சில இளைஞர்களை பழி வாங்குவதற்காக சாலை விபத்தை உண்டாக்கிய இந்தியாவை சேர்ந்த நபருக்கு பகல் ஜாமீன் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடா நாட்டில் Saskatchewan என்னும் நகரில் கடந்த 2018 ஆம் வருடம் ஏப்ரல் மாதத்தில் இந்தியாவை சேர்ந்த Jaskirat Singh Sidhu என்ற நபர் தான் இயக்கி சென்ற ட்ரக்கை ஒரு பேருந்து மீது மோதியிருக்கிறார். இதில், அந்த பேருந்தில் இருந்த ஹாக்கி அணியை சேர்ந்த இளைஞர்கள் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் […]
சிங்கப்பூரில் மலேசியாவை சேர்ந்த இந்திய வம்சாவளியான கல்வந்த் சிங் கடந்த 2013ஆம் ஆண்டு போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கினார். அப்போது அவரிடம் 60.15 கிராம் டைமார்பின் உள்ளிட்ட 120.9 கிராம் போதைப் பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு 2016ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதன்படி அவர் ஜூலை 7ஆம் தேதி தூக்கில் போட படுவார் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கல்வந்த் சிங்கை தூக்கில் போடுவதில் இருந்து தடுப்பதற்கு […]
அபுதாபியில் இந்தியாவை சேர்ந்த ஒரு நபருக்கு பிக் டிக்கெட் லாட்டரியில் மிகப்பெரிய பரிசுத் தொகை கிடைத்திருக்கிறது. இந்தியாவை சேர்ந்த தாரிக் ஷேக் அபுதாபியில் வசித்து வருகிறார். இவருக்கு பிக் டிக்கெட் அபுதாபி வாராந்திர டிராவில் மிகப்பெரிய பரிசுத்தொகையாக 3,00,000 திர்காம் கிடைத்திருக்கிறது. அதிர்ஷ்ட குலுக்கலில் இவரின் டிக்கெட் எண்ணான 108475 எடுக்கப்பட்டிருக்கிறது. இவர் நண்பர்களுடன் சேர்ந்து அந்த டிக்கெட்டை வாங்கியிருக்கிறார். கிடைத்த பணத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வார் என்று கூறப்பட்டிருக்கிறது. இதுபற்றி அவர் தெரிவித்ததாவது, என் மகனுக்கு […]
இந்தியாவை சேர்ந்த ஒரு நபர் வெளிநாட்டில் குடியேற ஆசைப்பட்ட நிலையில் அவரின் மனைவி மறுத்ததால் வீட்டை விட்டு வெளியே அனுப்பியிருக்கிறார். குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண், கடந்த 2018 ஆம் வருடத்தில் மும்பையை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்திருக்கிறார். அதனைத்தொடர்ந்து கடந்த 2019-ஆம் வருடத்தில் இவர்களுக்கு குழந்தைகள் பிறந்திருக்கிறது. அந்த நபர் 2020 ஆம் வருடத்தில் நாம் அமெரிக்காவில் குடியேறலாம் என்று மனைவியிடம் தெரிவித்துள்ளார். குழந்தை பிறந்து மூன்று மாதங்களே ஆனதால், தன்னால் பயணம் மேற்கொள்ள […]
ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உடல் உறுப்புகள் பாதிப்படைந்து அவசர சிகிச்சை பிரிவில் இருந்த இந்தியர் உயிர் பிழைத்த சம்பவம் பிரம்மிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கேரளாவைச் சேர்ந்த 32 வயதான அருண்குமார் நாயர் என்பவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் கொரோனா பிரிவில் பணிபுரிந்து வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த வருடம் ஜூலை மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவரின் உடல்நிலை மோசமடைந்ததால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு ஜூலை மாதம் 31-ஆம் […]
இந்திய வம்சாவளியினரை இன ரீதியாக விமர்சனம் செய்த இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினரை அந்நாட்டின் காவல்துறை அதிகாரிகள் விசாரணைக்குட்படுத்தியுள்ளார்கள். மெனாக்கா நாட்டிற்கு 2 குழுவினர்கள் கடந்த 2019ஆம் ஆண்டு தனித் தனியாக சொகுசு படகுகளில் சுற்றுலா சென்றுள்ளார்கள். அவ்வாறு சுற்றுலா சென்ற சொகுசு படகுகளில் ஒன்று கன்சர்வேட்டிவ் கட்சியின் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினரான michelle க்கு சொந்தமானது ஆகும். இதனை சுற்றுலாக்கு சென்ற மற்றொன்று படகு மோதியுள்ளது. இந்த விபத்தில் சிக்கி இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினருக்கு சொந்தமான படகிலிருந்த […]
துபாயில் இந்தியர் ஒருவருக்கு புத்தாண்டை முன்னிட்டு வாங்கிய லாட்டரி சீட்டில் 50 கோடி ரூபாய் பரிசு தொகை விழுந்துள்ளது. இந்தியாவிலுள்ள கேரளா தான் ஹரி தாஸ் என்பவரின் பிறப்பிடமாக உள்ளது. ஆனால் இவர் கடந்த 10 வருடங்களாக துபாயில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் புத்தாண்டை முன்னிட்டு துபாயில் விற்பனை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார். இதனையடுத்து ஹரிதாஸ் வாங்கிய அந்த லாட்டரி சீட்டுக்கு தற்போது ரூபாய் 50 கோடி பரிசுத்தொகை விழுந்துள்ளது. இதுகுறித்து […]
கடந்த 1992 ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்தால் உளவு பார்த்ததாகக் கூறி கைது செய்யப்பட்டு 29 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த இந்தியர் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீரிலுள்ள மெக்வால் என்னும் கிராமத்தில் குல்தீப் சிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 1992 ஆம் ஆண்டு உளவு பார்த்ததாக கூறி பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் 29 ஆண்டுகள் லாகூரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது அவருடைய […]
அமெரிக்காவில் வங்கிக்கு சென்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த நபரை மர்மநபர் சுட்டு கொலை செய்துவிட்டு அவர் வைத்திருந்த பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் ஜார்ஜியா என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் 45 வயதாகும் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமித் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தன்னுடைய கேஸ் நிரப்பும் நிலையத்திற்கு அருகிலிருக்கும் வங்கிக்கு பணம் டெபாசிட் செய்வதற்காக சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர் அமித் […]
அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்ரீவத்சவா என்பவர் சிப்ரியான் போயாஸ் விருது வழங்கப்படுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஸ்ரீவத்சவா என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார். அதோடு மட்டுமின்றி ஸ்ரீவத்சவா உலகளவில் தீர்க்கமுடியாத பலவகையான கணித புதிர்களுக்கு தன்னுடைய அறிவால் விடையை கண்டறிந்துள்ளார். இந்நிலையில் இவர் சிப்ரியன் போயாஸ் என்ற மிகவும் உயரிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த விருதினை […]
பிரான்சை சேர்ந்த பணக்கார பெண் இந்தியர் ஒருவரை காதலித்து பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துள்ளார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மேரி லோரி ஹெரால் எனும் இளம்பெண் பாரிஸில் தொழிலதிபராக உள்ளார். இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ் என்ற சுற்றுலா வழிகாட்டியை சந்தித்து அவருடன் காதல் வயப்பட்டிருகிறார். பின்னர் மேரி பாரிஸ் சென்றபிறகு செல்போன் மூலம் இருவரும் தங்கள் காதலை வளர்த்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மேரி ராகேசை […]
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 22 வருடங்கள் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தியரான அனில் கில்லும் அவரின் மனைவி ரஞ்சித் கில்லும், இங்கிலாந்தில் இருக்கும் ஷரி மாகாணத்தின் மில்டன் கினிஸ் நகரத்தில் இருக்கும் தாமஸ் வேலி என்ற பகுதியில் வாழ்ந்து வந்துள்ளனர். இத்தம்பதிக்கு மதுப்பழக்கமும் போதைப் பழக்கமும் இருந்ததால், அடிக்கடி இருவருக்குமிடையே மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 31-ஆம் தேதி அன்று ரஞ்சித் கில், தனக்கு போதை பொருள் விற்பவருடன் […]
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர், முகநூல் இணையதளத்தை தான் பயன்படுத்தும்போது தன்னை அடிப்பதற்காக ஒரு இளம்பெண்ணை நியமித்திருக்கிறார். அமெரிக்காவில் வாழ்ந்து வரும் மனீஷ் சேதி, என்ற இந்தியர் பாவ்லோக் நிறுவனத்தின் நிறுவராக இருக்கிறார். இவர் ஒரு இளம்பெண்ணை, வேலை வாய்ப்பு இணையதளத்திலிருந்து தேர்ந்தெடுத்து பணிக்கு அமர்த்தியுள்ளார். காரா என்ற அந்த பெண்ணிற்கு, மனீஷ் ஒரு மணி நேரத்திற்கு 500 ரூபாய் சம்பளம் கொடுக்கிறார். அதாவது, தான் எப்போது முகநூல் பக்கத்திற்கு சென்றாலும், தன்னை கன்னத்தில் அடிப்பதற்காக அந்த இளம்பெண்ணை […]
அமெரிக்காவில் 10 மில்லியன் டாலர் மோசடி செய்த இந்தியருக்கு அமெரிக்க நீதிமன்றம் 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத்தில் போலியான “கால் சென்டர்” வைத்து நடத்தி வந்த ஷெஷத்கான் பதான் (40) என்பவரும், அவருடன் இருந்தவர்களும் தானியங்கி அழைப்புகள் வாயிலாக அமெரிக்கர்கள் பலரை தொடர்பு கொண்டு நம்பிக்கையூட்டும் வகையில் பேசி போலி கடன் திட்டங்களை அவர்களிடம் அறிவித்துள்ளனர். மேலும் அவர்கள் அறிமுகப்படுத்தியுள்ள திட்டங்களில் முதல் தவணை மட்டும் செலுத்தினால் உடனடியாக கடன் […]
இந்தியாவைச் சேர்ந்த நபருக்கு லாட்டரி குலுக்கலில் 20 மில்லியன் திர்ஹாம் பரிசுத் தொகையாக கிடைத்துள்ளது. இந்தியாவில் உள்ள கேரளாவில் சோமராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 2008ஆம் ஆண்டு துபாய் நாட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து துபாயிலுள்ள பல நிறுவனங்களில் டிரைவர் வேலையை பார்த்துள்ளார். இவர் சமீபத்தில் லாட்டரி டிக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார். இதற்கான லாட்டரி குலுக்கலில் முதல் பரிசு தொகையாக 20 மில்லியன் திர்ஹாமும், 2 ஆம் பரிசு தொகையாக 3 மில்லியன் திர்ஹாமும், 3 […]
துபாயில் பணிபுரிந்து வரும் இந்தியாவைச் சேர்ந்த ஒருவருக்கு லாட்டரியின் மூலம் 20 மில்லியன் திர்ஹாம் கிடைத்துள்ளது. இந்தியாவிலுள்ள கேரளாவில் சோமராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2008ஆம் ஆண்டு தன்னுடைய குடும்பத்துடன் துபாயில் கார் டிரைவராக பணிபுரிவதற்கு சென்றுள்ளார். இதனையடுத்து இவர் சமீபத்தில் லாட்டரி டிக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த லாட்டரி டிக்கெட் குழுக்களின் முதல் பரிசாக 20 மில்லியன் திர்ஹாமும், 2 ஆவது பரிசாக 3 மில்லியன் திர்ஹாமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சோமராஜன் வாங்கிய […]
உளவு பார்த்ததாக கூறி கைது செய்யப்பட்ட இந்திய கடற்படையினுடைய முன்னாள் அதிகாரியின் வழக்கு தொடர்பான விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. பாகிஸ்தானில் உளவு பார்த்ததாகக் கூறி, இந்திய கப்பற்படையின் முன்னாள் அதிகாரியான குல்பூஷனை அந்நாட்டு ராணுவத்தினர்கள் கைது செய்துள்ளனர். மேலும் பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் குல்பூஷனுக்கு 2017ஆம் ஆண்டு மரண தண்டனையை விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்தியா, பாகிஸ்தானிலிருக்கும் சர்வதேச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டை தாக்கல் செய்துள்ளது. இதற்கு சர்வதேச நீதிமன்றம் குல்பூஷனிண் மரண தண்டனையை நிறுத்தி வைத்ததோடு […]
கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரை ஒரு கோடியே 90 லட்சம் இந்தியர்கள் வேலையை இழந்துள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் ஆய்வறிக்கை கூறியுள்ளது. இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் வேலை இழப்பு குறித்து ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கொரோனா தொற்று நோயால் ஊரடங்கு காரணமாக கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரை குறைந்தது ஒரு கோடியே 90 லட்சம் இந்தியர்கள் வேலை இழந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலையிழப்பில் சுயதொழில் செய்பவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் […]
ஹிந்தி தெரிந்தால் தான் இந்தியர் என்ற நிலை எப்போதிலிருந்து உருவானது என்று அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பியிருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இன்று விமான நிலையத்தில் சிஐஎஸ்எஃப் அதிகாரி ஒருவர் இருந்தார். அவரிடம் எனக்கு ஹிந்தி தெரியாததால் தமிழ் அல்லது ஆங்கிலம் மொழியில் பேசும்படி கூறினேன். அதற்கு அவர் என்னை பார்த்து, “நீங்கள் இந்தியரா?” என்று கூறியபடி வினாவினார். ஹிந்தி தெரிந்தால் தான் இந்தியர் என்ற நிலை உருவானது […]
ஏழை தொழிலாளியின் மருத்துவ செலவை தன்னார்வலரின் வேண்டுகோளை ஏற்று மருத்துவமனை மொத்தமாக ரத்து செய்தது அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது தெலுங்கானாவை சேர்ந்த ராஜேஷ் என்பவர் துபாயில் கட்டுமான தொழிலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது மனைவி தெலுங்கானாவில் விவசாயமும் துணி துவைக்கும் பணியும் செய்துவந்த நிலையில் இத்தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜேஷ் கடந்த ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அங்கிருக்கும் வளைகுடா தொழிலாளர் பாதுகாப்பு சங்கத்தின் தலைவரான நரசிம்மா ராஜேஷை […]
தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மற்ற தளங்களில் பகிர்வதால் இந்தியர்கள் தனது பக்கத்தில் இணைய வேண்டாமென ஆபாச படம் நடிகை காட்டமாக தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலியாவை சேர்ந்த கார் பந்தய வீராங்கனையான கிரேசி 2015ல் கார் பந்தயத்தில் மிக உயர்ந்த இடத்தில் இருந்தவர். தற்போது கொரோனாவால் கார் பந்தயங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் வருமானம் இன்றி தவித்து வந்துள்ளார் கிரேசி. இந்நிலையில் அவருக்கு ஆபாச பட வாய்ப்புகள் வர தொடங்கின முதலில் தயக்கம் கட்டிய கிரேசி குடும்பத்தின் சூழ்நிலையை கருத்தில் […]
இந்தியரை கொலை செய்த குற்றவாளி 7 வருடங்களுக்குப்பின் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சவுத் லேக் தஹோ நகரில் வசித்து வந்தவர் மன்பிரீத் குமன் சிங் (வயது 27). பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர. இவர் ஒரு கியாஸ் நிலையத்தில் கணக்காளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்டு 6-ந்தேதி மன்பிரீத் குமன் சிங் பணியில் இருந்த சமயம் முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் கியாஸ் நிலையத்துக்கு வந்து மன்பிரீத் குமன் சிங்கை துப்பாக்கியால் […]
அமெரிக்காவில் ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசிய பொருட்களை விலை உயர்த்தி விற்பனை செய்த குற்றத்திற்கு இந்தியர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது அமெரிக்காவில் கொரோனா தொற்று பரவலை தடுக்க நாட்டின் பல்வேறு இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி உள்ளனர். இந்நிலையில் கலிபோர்னியா மாகாணத்தில் இந்தியரான ராஜிந்தர் சிங் என்பவர் அப்னா பஜார் என்ற பெயரில் மளிகை கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதை பயன்படுத்தி பொருட்களை 200% விலைகளை உயர்த்தி மக்களிடம் விற்பனை […]
தேசிய அறிவியல் வாரியத்திற்கு உறுப்பினராக இந்திய அமெரிக்கரை அதிபர் டிரம்ப் நியமித்துள்ளார். அமெரிக்காவின் தேசிய அறிவியல் வாரியத்திற்கு இந்திய அமெரிக்கரான சுதர்சனம் பாபு என்பவரை உறுப்பினராக அதிபர் டிரம்ப் நியமியத்துள்ளார். இதனைத்தொடர்ந்து அவர் 6 வருடங்கள் அப்பதவியில் நீடிக்க முடியும். 1986ஆம் ஆண்டு கோவையில் இருக்கும் பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரியில் பொறியியல் படிப்பை முடித்து, 1988ஆம் ஆண்டு சென்னையில் உள்ள ஐஐடியில் முதுநிலை தொழில்நுட்பம் பிரிவில் பட்டம் பெற்று, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார் சுதர்சனம் பாபு. […]