Categories
விளையாட்டு

“முதல் 20 ஓவர் போட்டி”… இந்தியா VS இங்கிலாந்து நாளை (ஜூலை.7)…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!!

இந்தியாவுக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 378 ரன் இலக்கை எட்டிபிடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது. சென்ற வருடம் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்ட இந்த போட்டியானது பர்மிங்காமிலுள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் நடத்தப்பட்டது. இந்த வெற்றி வாயிலாக 5 போட்டி கொண்ட டெஸ்ட்தொடர் 2-2 என்ற கணக்கில் சம நிலையில் முடிந்தது. இதையடுத்து இருஅணிகள் இடையில் மூன்று 20 ஓவர் ஆட்டம் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்தியா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா VS இங்கிலாந்து : 5-வது டெஸ்ட் போட்டி எப்போது ….? வெளியான முக்கிய தகவல் ….!!!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது டெஸ்ட் போட்டி அடுத்த ஆண்டு நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது .இதில் 4 போட்டிகள் முடிந்த நிலையில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது .இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 5-வது டெஸ்ட் போட்டி நடைபெற இருந்தது. ஆனால் போட்டிக்கு முன்பாக இந்திய அணி பயிற்சியாளர்கள் , பிசியோதெரபிஸ்ட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS ENG 5-வது டெஸ்ட் விவகாரம் …. விராட்கோலி மீது …. முன்னாள் கேப்டன் குற்றச்சாட்டு ….!!!

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வந்தது .இதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது . இதையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 5-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற இருந்தது. ஆனால் இந்திய அணி  பயிற்சியாளர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் 5-வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது . இந்நிலையில் போட்டி ரத்து செய்யப்படுவதற்கு முந்தைய நாள் நள்ளிரவில் அணியின் கேப்டன் விராட் கோலி இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டெஸ்ட் போட்டியில் 100 விக்கெட் …. ஜஸ்மித் பும்ராவின் மாஸ் சாதனை ….!!!

இந்திய கிரிக்கெட் அணியின்  முன்னாள் வீரரும் ,கேப்டனுமான கபில்தேவ் 24 டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார் . இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது இதில் இங்கிலாந்து அணி தனது 2வது இன்னிங்சை விளையாடி கொண்டிருந்தது .அப்போது இங்கிலாந்து அணியின் ஒல்லி போப்பின் விக்கெட்டை  இந்திய அணியின் பந்துவீச்சாளர் பும்ரா அவுட் ஆக்கினார் .இது பும்ராவுக்கு 100 வது விக்கெட்டை ஆகும் .இதன் மூலமாக 24 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரவி சாஸ்திரியை தொடர்ந்து …. மேலும் இருவருக்கு கொரோன உறுதி ….!!!

இந்திய அணி பயிற்சியாளர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானதை தொடர்ந்து  அணி வீரர்களுக்கும் மீண்டும் ஒருமுறை கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளது . விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா  தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவருடன் தொடர்பில் இருந்த பந்துவீச்சு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

லண்டன் ஓவல் டெஸ்ட் : வரலாறு படைத்த இந்திய அணிக்கு …. பிரதமர் மோடி வாழ்த்து ….!!!

இங்கிலாந்துக்கு எதிரான லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த  டெஸ்ட் போட்டியில் 50 வருடங்களுக்கு  பிறகு  இந்தியா வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது . இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது .இப்போட்டியில் இந்தியா 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது .இந்த வெற்றியின் மூலமாக லண்டன் ஓவல் மைதானத்தில் 50 வருடங்களுக்கு பிறகு இந்தியா வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது . Great […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS ENG 4-வது டெஸ்ட் : இங்கிலாந்தை வீழ்த்தி …. வரலாற்று சாதனை படைத்தது இந்தியா ….!!!

இந்தியாவுக்கு எதிரான  5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 210 ரன்களில் தோல்வியடைந்தது . இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வந்தது. இதில்  டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 191 ரன்களும் இங்கிலாந்து அணி 290 ரன்கள் குவித்தது. இதனால் 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அரைசதத்தை தவறியதால் …. கடுப்பான விராட் கோலி …. வெளியான வீடியோ ….!!!

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டில் 2-வது இன்னிங்சில் கேப்டன் விராட் கோலி அரைசத வாய்ப்பை தவறவிட்டார் . இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து  வருகிறது. இதில் இந்தியா முதல் இன்னிங்சில்191 ரன்களும், இங்கிலாந்து 290 ரன்களும் எடுத்தது. இதனால் 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி சிறப்பாக விளையாடியது. இதில் 2-வது இன்னிங்சில் பொறுப்புடன் விளையாடிய கேப்டன் விராட் கோலி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS ENG 4-வது டெஸ்ட் : ரிஷப், ஷர்துல் அதிரடி ஆட்டம் …. இங்கிலாந்துக்கு 368 ரன்கள் இலக்கு ….!!!

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டில் 2-வது இன்னிங்ஸில் ரிஷப் பண்ட் – ஷர்துல் தாகூர் ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் . இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 191 ரன்களும் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 290 ரன்களும் குவித்தது .இதன் பின்னர் 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது .இதில் மூன்றாம் நாள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய அணியின் பயிற்சியாளர் …. ரவிசாஸ்திரிக்கு கொரோனா தொற்று …!!!

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான  ரவிசாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . இந்திய  அணியின் பயிற்சியாளரான முன்னாள் வீரர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று  பாதிப்பு  உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவருடன் தொடர்பில் இருந்த பந்துவீச்சு பயிற்சியாளராக அருண் ,பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் மற்றும் நிதின் படேல் ஆகியோர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளன . இந்நிலையில் இந்திய வீரர்கள் அனைவருக்கும் இரண்டு முறை பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இல்லை என ‘நெகடிவ் ‘ முடிவு வந்ததால் இன்றைய  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS ENG 4-வது டெஸ்ட் : ஹிட்மேன் ரோகித் அசத்தல் சதம் …. வலுவான நிலையில் இந்தியா ….!!!

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டில் 2-வது இன்னிங்ஸில் இந்திய அணி 171 ரன்கள் முன்னிலையில் உள்ளது . இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 192 ரன்கள் சுருண்டது. இதையடுத்து இங்கிலாந்து அணி 290 ரன்கள் குவித்தது .இதனால் 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது. இதில் 2-ம் நாள் ஆட்ட முடிவில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS ENG 4-வது டெஸ்ட் :2-ம் நாள் ஆட்ட முடிவில் …. இந்திய அணி 43 ரன்கள் குவிப்பு ….!!!

இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் முதல்  இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி  அனைத்து விக்கெட் இழப்புக்கு  290 ரன்கள் குவித்துள்ளது. இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது .இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி  பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்  செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு  191 ரன்களில் சுருண்டது. இதில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“மீண்டும் களமிறங்கிய சேட்டை மன்னன் ஜார்வோ” ….! வைரலான வீடியோ ….!!!

லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியிலும்  மீண்டும் ஜார்வோ மைதானத்துக்குள் அத்துமீறி நுழைந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது .  இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் இரு அணிகளுக்கிடையேயான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது .இந்நிலையில் ஆட்டத்தின்போது ஜார்வோ என்ற நபர் மைதானத்துக்குள் நுழைந்து சேட்டை செய்வதை வழக்கமாக வைத்துள்ளார் .இதற்கு முன்பு நடந்த டெஸ்ட் போட்டியிலும்  திடீரென்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS ENG 4-வது டெஸ்ட் : முதல் நாள் ஆட்ட முடிவில் …. 191 ரன்களில் சுருண்டது இந்தியா …!!!

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 191 ரன்களில் சுருண்டது . இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது .இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 191 ரன்களில் சுருண்டது .இதில் அதிகபட்சமாக ஷர்துல் தாகூர் 57 ரன்களும் கேப்டன் விராட் கோலி 50 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS ENG 4-வது டெஸ்ட் : டாஸ் வென்ற இங்கிலாந்து …. பந்துவீச்சு தேர்வு ….!!!

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது .இதில் மூன்று போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 1-1 என்ற கணக்கில் சமனில்  உள்ளது . இந்நிலையில் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற அணி இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது . பிளேயிங்  லெவேன் : இந்திய அணி: ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS ENG 4-வது டெஸ்ட் போட்டி …. இந்திய அணியின் இளம் வீரர் சேர்ப்பு ….!!!

இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின்  வேகப்பந்து வீச்சாளரான பிரஷித் கிருஷ்ணா  இடம் பெற்றுள்ளார். இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது .இதில் 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனில்  உள்ளது . இந்நிலையில் 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. இப்போட்டியில் இந்திய அணியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மருத்துவமனையில் ஜடேஜா …. மீதமுள்ள போட்டியில் விளையாடுவாரா ….?

இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஜடேஜா காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதில் வெற்றி பெற்ற இங்கிலாந்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்  செய்தது . இதில் நடந்து முடிந்த 2 ஆட்டங்களிலும் இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் இடம்பெறாது  ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவருக்கு பதிலாக அணியில் 3 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கேப்டன்சியில் முதலிடம் பிடித்து …. சாதனை படைத்த கேப்டன் ஜோ ரூட் ….!!!

இந்திய அணிக்கு  எதிரான 3-வது  டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக இங்கிலாந்து அணியின் கேப்டனான ஜோ ரூட் புதிய சாதனையை படைத்துள்ளார் . இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை இன்னிங்சில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது .இதன் மூலம் கேப்டன் ஜோ ரூட் புதிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்.இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனான ஜோ ரூட் அதிக போட்டிகளில் வெற்றி பெற்றவர் என்ற  பெருமைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் .இந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

எங்க தோல்விக்கு காரணம் இதுதான்…. நிச்சயம் மீண்டு வருவோம்…. விராட் ஓபன் டாக்….!!!

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.  இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான  3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இதுகுறித்து கேப்டன் விராட் கோலி  கூறும்போது, “இந்த டெஸ்ட் போட்டியில் நாங்கள் முடிந்தவரை போராடினோம். 2-வது இன்னிங்சில் மீண்டு வருவதற்கு எங்களுக்கு சில பார்ட்னர்ஷிப்கள் அமைந்தது .ஆனால் நாங்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை .எங்களுடைய பேட்டிங் சிறப்பாக இருந்தாலும், இங்கிலாந்து பவுலர்களின்  அதிக அழுத்தத்தால் எங்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS ENG 3-வது டெஸ்ட் : இந்தியாவை பழி தீர்த்தது இங்கிலாந்து ….! இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி ….!!!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.   இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்றது .இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 40.4 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 78 ரன்களில் ஆட்டமிழந்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 432 ரன்கள் குவித்தது. இதையடுத்து இந்திய அணி தனது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இப்படி செய்வதை நிறுத்துங்க ஜார்வோ …. கடுப்பான அஸ்வின் …!!!

 இங்கிலாந்து ரசிகர்  ஜார்வோ மீண்டும் மைதானத்துக்குள் நுழைந்த காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.  இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் இரண்டு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் தற்போது 3-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது .ஆனால் இதற்கு முன் நடந்த 2 போட்டியிலும் அஸ்வின்  இடம்பெறவில்லை. இதனால் இது ஒரு பக்கம் சர்ச்சையாக வருகிறது. இதில் 3-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் சொதப்பிய இந்தியா தற்போது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS ENG 3-வது டெஸ்ட் : மாஸ் காட்டும் புஜாரா ….! 3-ம் நாள் முடிவில் இந்தியா 215 ரன்கள் குவிப்பு ….!!!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில்  மூன்றாம் நாள் ஆட்ட முடிவில்  இந்திய அணி 215 ரன்கள் குவித்துள்ளது . இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 3-வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 78 ரன்களில் சுருண்டது. இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் கிரேக் ஓவர்டான் தலா 3 விக்கெட்டும் , ராபின்சன், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS ENG 3-வது டெஸ்ட் : 2-ம் நாள் முடிவில் …. இங்கிலாந்து 345 ரன்கள் முன்னிலை ….!!!

இந்திய அணிக்கு எதிரான 3-வது டெஸ்டில்  இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 432 ரன்கள் குவித்துள்ளது . இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 3-வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியால் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது . முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர் .இதனால் 40.4 ஓவர்களில் அனைத்து விக்கெட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS ENG 3-வது டெஸ்ட் : முதல் நாள் ஆட்ட முடிவில்…. இங்கிலாந்து 120 ரன்கள் குவிப்பு ….!!!

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் இருவரும் அரைசதம் அடிக்க இங்கிலாந்து 42 ரன்கள் முன்னிலையில் உள்ளது . இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நேற்று தொடங்கியது .இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதில் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா – கே.எல்.ராகுல் ஜோடி களமிறங்கினார். இதில்  இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசிய 5-வது பந்தில் கே.எல்.ராகுல் டக் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS ENG 3-வது டெஸ்ட் : சீட்டு கட்டாய் சரிந்த விக்கெட்டுகள் …. 78 ரன்களில் சுருண்டது இந்தியா ….!!!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்டில் முதல் இன்னிங்சில் இந்திய 78 ரன்களில் சுருண்டது . இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி லீட்ஸ்  மைதானத்தில் இன்று தொடங்கியது . இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது . அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா -கே.எல் .ராகுல் ஜோடி களமிறங்கினர். இதில் கே .எல்.ராகுல் டக் அவுட்  அதிர்ச்சி அளித்தார் .இதன் பிறகு களமிறங்கிய வீரர்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS ENG 3-வது டெஸ்ட் : டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு ….!!!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 3-வது டெஸ்ட் போட்டி லீட்சில் உள்ள  ஹெட்டிங்லே மைதானத்தில் தொடங்குகிறது. இதற்கு முன் லண்டன் லார்ட்சில்  நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள்  வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடறில் முன்னிலையில் உள்ளது . இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3 டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகிறது .இதில் டாஸ் வென்ற இந்திய அணி தேர்வு பேட்டிங்கை செய்தது. பிளேயிங் லெவேன் : […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

3-வது டெஸ்டில் அஸ்வின் இடம் பெறுவாரா …? கேப்டன் விராட் கோலியின் பதில்…!!!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது . இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இதுவரை நடந்து முடிந்த 2 டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது . இதில் முதல் டெஸ்ட் போட்டி மழையால் டிரா ஆனது .இதையடுத்து நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS ENG : ஆதிக்கம் செலுத்துமா இந்தியா…? 3-வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம் …!!!

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையே இன்று தொடங்க உள்ள 3-வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்துமா என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது .   இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின்  இறுதி நாளில் இந்தியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருந்தும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் அந்த போட்டி டிராவில் முடிந்தது. இதையடுத்து லண்டன் லார்ட்ஸில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

லார்ட்ஸ் வெற்றி : இந்திய அணிக்கு ஜாம்பவான் சச்சின் பாராட்டு ….!!!

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்டில் வெற்றியை ருசித்த இந்திய அணிக்கு  முன்னாள் வீரர்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர் . இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்டில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியில் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய அணிக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS ENG : கபில் தேவுக்கு அடுத்ததாக …. லார்ட்ஸில் சாதனை படைத்த சிராஜ் ….!!!

இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கு இடையான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதில் முதல் இன்னிங்சில் இந்திய அணி அபாரமாக விளையாடியது. ஆனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் இந்தியாவை விட 27 ரன்கள் முன்னிலையில் இருந்து நிலையில், 2-வது இன்னிங்சில் இறுதிக்கட்டத்தில் ஷமி – பும்ரா ஜோடியின்  அதிரடி ஆட்டத்தால் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

60 ஓவர்களில் இங்கிலாந்தை வீழ்த்தியது ஸ்பெஷல்தான் ….! விராட் கோலி ஓபன் டாக் ….!!!

இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில் 151 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது . இங்கிலாந்துக்கு எதிரான லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் இங்கிலாந்து அணியை 120 ரன்களுக்குள் இந்திய அணிஆல் அவுட் செய்தது . இதில் முகமது சிராஜ் 4 விக்கெட்டும் ,பும்ரா 3 விக்கெட்டும் ,இஷாந்த் ஷர்மா 2 விக்கெட்டும் ஷமி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS ENG 2-வது டெஸ்ட் : இங்கிலாந்தை பந்தாடிய இந்தியா …. 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி….!!!

இங்கிலாந்து அணிக்கு  எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது . இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 364 ரன்கள் குவித்தது. இதையடுத்து முதல் இன்னிங்சில் தொடங்கிய இங்கிலாந்து அணி 391 ரன்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS ENG : மாஸ் காட்டிய ஷமி – பும்ரா ஜோடி ….! இங்கிலாந்துக்கு 272 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இந்தியா ….!!!

இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது  டெஸ்டில் 2-வது இன்னிங்ஸில் ஷமி – பும்ரா ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா 298 ரன்கள் குவித்துள்ளது . இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது  டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் குவித்தது. இதன் பிறகு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS ENG 2-வது டெஸ்ட் : 4-ம்  நாள் ஆட்ட நேர முடிவில் …. இந்தியா 181 ரன்கள் குவிப்பு ….!!!

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 4-ம்  நாள் ஆட்ட நேர  முடிவில் இந்திய அணி 181 ரன்கள் குவித்துள்ளது . இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது . இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 364 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது . இதில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 83 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS ENG : 3-ம் நாள் ஆட்ட முடிவில் …. இங்கிலாந்து 391 ரன்கள் குவிப்பு ….!!!

இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 391 ரன்கள் குவித்துள்ளது . இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய  இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் குவித்தது. இதில் ரோகித் சர்மா 83 ரன்களில் ஆட்டமிழக்க ,கே.எல். ராகுல் 129 ரன்னில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS ENG : 2-ம் நாள் ஆட்ட முடிவில் ….இங்கிலாந்து 119 ரன்கள் குவிப்பு ….!!!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் குவித்துள்ளது . இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று முந்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா – கே.எல்.ராகுல் களமிறங்கினர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS ENG 2-வது டெஸ்ட் : ஆண்டர்சன் அசத்தல் பந்துவீச்சு ….! இந்தியா 364 ரன்கள் குவிப்பு …!!!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி பந்துவீச்சாளர் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார் .   இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது .இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மாவும், கே.ல்.ராகுலும் களமிறங்கினர். இதில் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ரோகித்-ராகுல் ஜோடி வலுவான தொடக்கத்தைக் கொடுத்தது .இந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS ENG : சதமடித்து அசத்திய கே.எல்.ராகுல் …. கெத்து காட்டும் இந்தியா ….!!!

இங்கிலாந்துக்கு எதிரான  2-வது டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுல் சதமடித்து  அசத்தியுள்ளார் . இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது .இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணியில் ரோகித் சர்மா -கேஎல் ராகுல் ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் இந்திய அணி 18.4 ஓவர்களில் 46 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS ENG : மாஸ் காட்டிய ரோகித் சர்மா….! இந்திய அணி அசத்தல் ஆட்டம் ….!!!

இங்கிலாந்துக்கு எதிரான  லார்ட்ஸில் நடந்து வரும்  டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 83 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார் . இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி முதலில் பேட்  செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா – கே.எல்.ராகுல் ஜோடி களமிறங்கினர். இந்நிலையில் 18.4 ஓவர்களில் இந்தியா 46 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS ENG : டாஸ் வென்ற இங்கிலாந்து அணி …. பந்துவீச்சு தேர்வு….!!!

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது . இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி  பந்துவீச்சு தேர்வு செய்தது. பிளேயிங் லெவன் : இங்கிலாந்து அணி : ரோரி பர்ன்ஸ், டொமினிக் சிப்லி, […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS ENG : 2-வது டெஸ்ட் போட்டி …. லண்டனில் இன்று தொடங்குகிறது ….!!!

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான  இரண்டாவது டெஸ்ட் போட்டி  லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்நிலையில் இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. எனவே இப்போட்டியில் இருஅணிகளும் முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் நாட்டிங்காமில்  நடந்த முதல் டெஸ்ட் போட்டியின்போது நிர்ணயிக்கப்பட்ட […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS ENG டெஸ்ட் தொடர் : இங்கிலாந்து அணியில் இணைந்தார் மொயீன் அலி…!!!

இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான  2-வது டெஸ்ட் போட்டி வருகிற 12-ஆம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் கடந்த 4-ஆம் தேதி தொடங்கி 8-ஆம் தேதி வரை நடைபெற்றது. ஆனால் கடைசி நாள் ஆட்டம் மழையால் ரத்தானதால் போட்டி டிரா ஆனது. இதைதொடர்ந்து  இரு அணிகளுக்கிடையே 2-வது டெஸ்ட் போட்டி வருகிற  12-ஆம் தேதி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆட்டம் ரத்தானது வருத்தமளிக்கிறது – கேப்டன் விராட்கோலி…!!!

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் கடைசி ஆட்டம்  மழையால் ரத்தானது . இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்றைய கடைசி நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டு  போட்டி டிராவில் முடிந்தது.  இதனால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு மழையால் பறிபோனது. மேலும் இந்திய அணி வெற்றி பெற 157 ரன்களும் ,கைவசம் 9 விக்கெட்டுகள் இருந்த நிலையில் மழையால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS ENG முதல் டெஸ்ட் : மழையால் பறிபோன வெற்றி வாய்ப்பு …. ரசிகர்கள் ஏமாற்றம் ….!!!

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிரா ஆனது . இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்று வருகிறது .இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 183 ரன்களில் சுருண்டது. இதன் பிறகு களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 278 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு 95 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ஜோ ரூட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS ENG : அதிரடி காட்டிய பும்ரா ….. இந்தியா வெற்றி பெற 157 தேவை ….!!!

இந்தியாவுக்கு  எதிரான முதல் டெஸ்ட் போட்டியில்2-வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 303  ரன்கள் எடுத்துள்ளது . இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது .  அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது. இதன் பிறகு விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS ENG : கே.ல்.ராகுல், ஜடேஜா அசத்தல் …. இந்தியா 95 ரன்கள் முன்னிலை….!!!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இந்திய அணி அனைத்து விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் எடுத்துள்ளது.   இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நடந்து வருகிறது .இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து . அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 183 ரன்களில் சுருண்டது. இதன்பிறகு  முதல் இன்னிங்சை தொடங்கிய  இந்திய அணி  2-ம் நாள் ஆட்ட முடிவில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS ENG : முதல் பந்திலேயே நடையை கட்டிய கோலி …. அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா ….!!!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராட் கோலி முதல் பந்திலேயே அட்டமிழந்து அதிர்ச்சியளித்தார் . இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் நேற்று நாட்டிங்ஹாமில் தொடங்கியது .இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது .அதன்படி முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட் இழப்பிற்கு 183 ரன்களுக்குள் சுருண்டது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ஜோ ரூட் அரைசதம் அடித்தார் .இந்தியா சார்பில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS ENG : முதல் டெஸ்ட் போட்டி …. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு ….!!!

இந்தியா – இங்கிலாந்து  அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது . இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இந்தியா – இங்கிலாந்து  அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் இன்று தொடங்குகிறது .இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது . பிளேயிங் லெவேன் : இந்திய அணி :  ரோகித் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா VS இங்கிலாந்து டெஸ்ட் தொடர் …. இன்று முதல் தொடக்கம் ….!!!

இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று   தொடங்குகிறது .  இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி  நாட்டிங்ஹாம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் இந்திய அணியில் மயங்க அகர்வாலுக்கு பயிற்சியின் போது காயம் ஏற்பட்டதால் அவருக்கு பதிலாக கே.எல் ராகுல், ஹனுமா விஹாரி மற்றும் அபிமன்யு ஈஸ்வரன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா VS இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டி …. நாளை தொடங்குகிறது …!!!

இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை  தொடங்குகிறது.  விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுகிறது. இதில் சமீபத்தில் நடந்த ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது . இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும் முதல் டெஸ்ட் போட்டி நாளை நாட்டிங்காமில்  டிரென்ட்பிரிட்ஜ் […]

Categories

Tech |